எழுத்தாளர் தேவகாந்தன்நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனுடன் இன்று மாலை சிறிது நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது தான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவலான 'மேகலை கதா' என்பது பற்றிக் குறிப்பிட்டார். அது பற்றிய குறிப்பொன்றினையும் தனது வலைப்பூவிலும் , முகநூலிலும் வெளியிட்டிருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ்க்காப்பியங்களில் எனக்குச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மிகவும் பிடித்தவை. குறிப்பாக மாதவி , மணிமேகலை ஆகிய பாத்திரங்கள் எனக்குப்பிடித்த பெண் பாத்திரங்கள். இவர்களிலும் மணிமேகலை என்னை மிகவும் ஆழமாக ஈர்த்த பாத்திரமென்பேன்.

சாத்தனாரின் 'மணிமேகலை'யைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்தபோது அக்காவியம் முழுவதும் தத்துவத்தர்க்கங்களால் நிறைந்திருந்ததை அவதானித்தேன். ஆச்சரியமாகவிருந்தது. அறிவுத்தாகமெடுத்து அலையும் எனக்குக் குடிப்பதற்கு நிறையத் தண்ணீரை உள்ளடக்கிய காப்பியம் மணிமேகலை.

மணிமேகலையை மையமாக வைத்துத் தமிழ்த்திரைப்படங்கள் பல வெளியாகியுள்ளன. டி.ஆர்.மகாலிங்கம், பி.பானுமதி நடிப்பில் 'மணிமேகலை' என்னுமொரு தமிழ்த்திரைப்படம் வெளியாகியுள்ளது. அண்மையில் கூடச் சிங்களப்படமான 'பத்தினி'யில் மணிமேகலையின் பிறப்பு , இளம் பருவத்துக் காட்சிகள் உள்வாங்கப்பட்டிருந்தன.

மணிமேகலையை மையமாக வைத்து யாராவது நாவலொன்றினை எழுத மாட்டார்களா என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு. அக்குறையை விரைவில் தேவகாந்தன் அவர்கள் தீர்க்கவிருப்பது மகிழ்ச்சியளிப்பது. நாவல் தொடராக வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பவர்களீல் நானும் ஒருவன். வாழ்த்துகள் தேவகாந்தன்.

எழுத்தாளர் தேவகாந்தன் தனது அடுத்த நாவலான 'மேகலை கதா' பற்றிய குறிப்பொன்றினை அவரது வலைப்பதிவினில் வெளியிட்டுள்ளார். அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


'மேகலை கதா'பற்றிய ஓர் அறிவிப்பு!   - தேவகாந்தன் -

புனைவின் வழியில் நான் உணர்ந்ததைப் படைப்பாக்கிய ‘கதா காலம்’ (2004), ‘லங்காபுரம்’ (2008) ஆகிய நாவல்களுக்குப் பிறகு காலம் நீளக் கடந்துபோய் இருக்கிறது. இப்போது அதே வழியில் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தை நாவலாக்கும் முயற்சியிலிருக்கின்றேன்.

புத்த ஜாதகக் கதைகள் என் சிறுவயதுப் பழக்கம். அதுவே கௌதம புத்தர் வரலாற்றினுள்ளும், புத்த மத வரலாற்றினுள்ளும் புகும் வேட்கையை எனக்குத் தந்தது. இலங்கையிலுள்ள எண்ணிறந்த விகாரைகளும், தாதுகோபுரங்களும், சிகிரியாபோன்ற கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் இவ்வார்வங்களுக்கும் முயற்சிகளுக்கும் உத்வேகம் தந்திருக்க முடியும். எல்லாவற்றையும் உள்வாங்கியிருந்தபோது மணிமேகலை காப்பியப் பிரவேசம் பெரும் புனைவு வெளியை என்னுள் உண்டாக்கிற்று. நினைவின் பரப்பெங்கும் அது முதல் ஒரு புத்த பெண் துறவியின் இடையறாச் சஞ்சாரம் இருந்துகொண்டு இருந்துவிட்டது. ஒரு வாய்ப்பான சமயத்துக்காக நான் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பால் மணிமேகலையின் சஞ்சாரம் மனத்துள் வார்த்தைகளை ஒரு தருணத்தில் பிதுக்கத் துவங்கிவிட்டது. இதை நான் தவறவிடக்கூடாத ஒரு சமயமென எண்ணினேன். அதனால் எழுதத் தொடங்க தீர்மானித்தேன்.

அது அத்தனை சுலபத்தில் முடிந்துவிடக் கூடியதாய் இருக்கவில்லை. அதற்காக என்னை நான் நிறையத் தயார்படுத்தவேண்டி இருந்தது. அதனால் மறுபடியும் ‘மணிமேகலை’க்குள் புகுந்தேன். இந்திரவிழாவும், கண்ணகி- கோவலன் வரலாறும் காண சிலப்பதிகாரத்தின் புனர் வாசிப்பும் அவசியமாயிற்று. பௌத்த தத்தவங்களை மீள படிக்கவும் நேர்ந்தது. அத்தனை வாசிப்பு, ஆய்வு முயற்சிகளுக்குப் பிறகும் இடைஞ்சல் இருந்தது.

பௌத்த தத்துவத்தை ஆழப் புரிந்துகொள்ளல் அத்தனை சுலபத்தில் கைகூடவில்லை. அது ஒரு நூலிழை தவறினாலும் பிற மத தத்துவங்களோடு, குறிப்பாக சமண மதத்தோடும், இந்து மதத்தோடும் ஊடாட்டம் கொள்வதாய் இருந்தது. புத்தர் வாழ்ந்த காலத்தின் சமய நிலை, அவரது போதனைகளை பிற்காலத்தில் எழுதியோரது மனநிலையென இந்த உராய்தலுக்கான காரணங்களை விளங்க முயன்றேன். ஆயினும் நண்பர்களுடன் உரையாடினேன். ஆய்வு நூல்களை மேலும் விளக்கம் பெறும்வரை கற்றேன். ஒரு தெளிவு பிறந்ததான நம்பிக்கை வந்தது.

 

அப்போதும் அறவாழித் துறவியான மணிமேகலையிலிருந்தல்ல, மணிபல்லவத் தீவகத்து மணிமேகலா தெய்வத்திலிருந்தே கதையைத் துவக்கினேன். அந்த முறை பல நுட்பங்களுக்கு இடங்கொடுக்கக் கூடியதாய்த் தோன்றியது. பெரும் பெரும் அறக் காரியங்கள் செய்த மணிமேகலையைவிட, அவளை அந்த நெறியில் சாதுர்யமாகப் புகுத்திய அவளது குலதெய்வமான மணிமேகலா தெய்வம் கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாயும் எனக்குப் பட்டது. மேலும் முற்பிறப்புரைக்க, வருபொருள் கூறவென காப்பியத்தில் எங்கெங்கும் அம்மாதிரித் தெய்வங்கள் நிறையத் தோன்றிக்கொண்டே இருக்கும். இவற்றுள் எனக்கு மணிகேலா முதன்மையானதாய்த் தென்பட்டது. அதனால் நாவலும் ‘மேகலை கதா’ ஆனது.

எவ்வளவு தூரத்திற்கு நாவலை விரிப்பது, எத்தனை பக்கங்கள் எழுதுவதென்ற முன்தீர்மானமேதும் எப்போதும்போல் என்னிடமில்லை. எழுதத் துவங்கியிருக்கிறேன். அவ்வளவுதான். அதுவும் வரும் ஜுலையிலிருந்து இல் அத்தியாயம் அத்தியாயமாய்ப் பதிவிடும் எண்ணமும் உண்டு. வாசகர்களை காக்க வைக்காதபடி பதிவேற்றுவேன் என்பது தவிர, எவ்வளவு விரைவு விரைவாக அதைச் செய்வேனென்றும் எனக்குச் சொல்லமுடியவில்லை.

வாசகர்களும் நண்பர்களும் வாசித்து பின்னூட்டமிடவேண்டும். அது என்னை மேலும் ஊக்குவிக்கும். ஐயங்கள், விரிவான கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரியிலும் பரிமாறிக்கொள்ள முடியும். நன்றி.

அன்புடன்,
தேவகாந்தன்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R