பிரமிள்

"வேலணை.காம்" (கனடா) இன் நிதி அனுசரணையில் "தட்டுங்கள்.காம்" (கனடா) இன் ஊடக பங்களிப்புடன் "மகுடம்" கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் ஆண்டு தோறும் வழங்கவிருக்கும் "பிரமிள் விருது"ம் பிரமிள் நினைவுப் பேருரைத் தொடரும். 20-04-2019 இல் அமுத விழா காணும் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு பின் மிகப் பெரும் இலக்கிய ஆளுமையாக கருதப்படும் உலகம் போற்றும் தமிழ் கவிஞர் பிரமிள் என அழைக்கப்படும் தர்மு சிவராம் நினைவாக கவிதைக்கு வழங்கப்படவிருக்கும் " பிரமிள் விருது" தொடர்பான அறிவிப்பும் நிபந்தனைகளும்.

# உலகெங்கும் வாழும் தமிழ் கவிஞர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்கு பற்ற முடியும்.
# இவ் விருதுக்காக கவிஞர்கள் 01-01-2018 தொடக்கம் 31-12-2018 வரையான காலப் பகுதியில் வெளியிட்ட தமது கவிதை நூலை/நூல்களை சமர்ப்பிக்கலாம்.
# போட்டிக்கு கவிதை நூலின் மூன்று (3) பிரதிகள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
# ஒருவர் குறித்த காலப் பகுதியில் வெளியிட்ட எத்தனை கவிதை நூல்களையும் போட்டிக்கு அனுப்பலாம்.ஆனால் ஒவ்வொரு நூலிலும் தனித்தனியே மூன்று பிரதிகள் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
# கவிஞர்கள் சார்பாக பதிப்பகங்களும் கவிதை நூல்களை விருது தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.ஆனால் பரிசு கவிஞருக்கே வழங்கப்படும்.
# போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் நூல்/நூல்கள் குறித்த (2018) ஆண்டில் முதல் பதிப்பு கண்ட நூலாக இருக்க வேண்டும்.
# கவிதைகள் தமிழில் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.மொழிபெயர்ப்பு ,பிற மொழி தழுவல்,பல கவிஞர்களின் தொகுப்பாக இருக்கக்கூடாது.
# போட்டி இறுதித் திகதி 05-03-2019. இத் திகதிக்கு பின்னர் கிடைக்கும் நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
# முடிவுகள் அனைத்தும் 10-04-2019 அன்று அறிவிக்கப்படும்.
# நூல்கள் வந்து சேரவேண்டிய தபால் முகவரி :

w.michael Collin
The Editor of Magudam
90, Bar Road,
Batticaloa,
Sri Lanka.

Phone: 0774338878
E.mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


# தேர்வான கவிதை நூலுக்கு விருதும் ,பணப்பரிசாக இலங்கை ரூபா 40000/= மும் , சான்றிதழும் சிறப்புப் பரிசாக பத்து(10) கவிதை நூல்களுக்கு சான்றிழும் 20-04-2019 அன்று நடைபெறவிருக்கும் பிரமிள் விருது விழா நிகழ்வில் வழங்கப்படும்.

# ஆசிரியர் - மகுடம்

தகவல்: மைக்கல் கொலின்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R