மாமூலனின் 'இனப்படுகொலை நாட்களில் (குரலற்ற கனடாப்பத்தி எழுத்துக்கள்)மாமூலன்அண்மையில் 'நாளை பதிப்பகம்' (கனடா) வெளியிட்ட மாமூலனின் 'இனப்படுகொலை நாட்களில் (குரலற்ற கனடாப்பத்தி எழுத்துக்கள்)' நூலை வாசித்துக் கொண்டிருந்தபொழுது அதிலுள்ள சில கட்டுரைகள் கவனத்தைக் கவர்ந்தன. அவை நாடு கடந்த அரசு பற்றிய கட்டுரைகள். அவற்றிலும் குறிப்பாக என்னைக் கவர்ந்த கட்டுரை 'நாடு கடந்த நாடு வினாவிடை (Transnational State: A short introduction for dummies) ' என்னும் கட்டுரை. கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகச் சமூகவியற் பேராசிரியரான வில்லியம் ஐ. ராபின்சன் (William I.Robinson) அவர்கள் அரசியற் பொருளாதாரம், உலகமயமாதல் , இலத்தீன் அமெரிக்கா மற்றும் வரலாற்றுப்பொருள்முதல்வாதம் ஆகிய துறைகளை மையமாக வைத்து ஆய்வு செய்பவர். இவர் கிரேக்கப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் கருத்துகளைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் கட்டுரை.

அந்நேர்காணலில் வில்லியம் ஐ. ராபின்சன் தெரிவித்துள்ள கருத்துகளைச் சுருக்கமாக வழங்கும் மாமூலனின் கருத்துகளைச் சுருக்கி இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. புதிய முதலாளித்துவம் 'நாடு கடந்த மூலதன'ங்களைக் கொண்டது. அத்துடன் உலகலாவியரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடு கடந்த உற்பத்தி முறையும், பொருளாதார ஒழுங்கமைவும் உள்ளன.

2. நாடு கடந்த உற்பத்தி முறையானது ஓர் இடத்தை மையமாகக் கொண்ட உற்பத்தி முறை அல்ல. அதாவது பொருளொன்றின் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளில் செய்யப்பட்டு இன்னுமொரு நாட்டில் ஒன்றாக்கப்பட்டுச் சந்தைக்கு
வருகின்றன.

3. தேசியப்பொருளாதாரங்கள் உலகமயமாதலால் மீள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நாடு கடந்த உற்பத்தி என்பதும் உலகம் தழுவிய இப்பொருளாதாரத்தின் விளைவே.

4. மூலதனமானது தேசிய , உள்ளூர் மூலதனங்கள், நாடு கடந்த உலகலாவிய மூலதனம் எனப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் நாடு கடந்த மூலதனமே ஆதிக்கம் செலுத்துவதாகவுள்ளது.

5. நாடு கடந்த அளவிலான முதலாளித்துவ முதலீடு செய்யும் குழுக்கள் இன்று உலகளாவியரீதியிலுள்ளன. இவையே உலகத்தின் ஏனைய அதிகார, ஆளும் வர்க்கங்களின் மீது மிகப்பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

6. உள்ளூர் மற்றும் தேசிய மூலதனங்கள் நாடு கடந்த வலிமையான மூலதனத்துடன் போட்டி போட முடியாத நிலை தோன்றியுள்ளது. ஆனால் அவையும் இப்போட்டியில் பங்கேற்க விரும்பினால் நாடு கடந்த மூலதனத்துடன் தொடர்புகளைப்பேணுவதுடன் அதன் ஆதிக்கத்தின் கீழும் இருக்க வேண்டும்.

7. தொழிற்சாலைகள், பண்ணைகள் , பணிமனைகளில் எனப் பல்வேறிடங்களில் பணி புரியும் ஓர் உலகத்தொழிலாளர் இனமொன்று உருவாகியுள்ளது. இத்தொழிலாளர் வர்க்கமானது இனம், மொழி, பால், தேசியம் என்று பிரிந்து கிடக்கின்றன.

8. இச்சூழலினால் நாடு கடந்த அதிகார அமைப்பொன்று உருவாகியுள்ளது. இந்த இடத்தில்தான் நாடு கடந்த அரசொன்றின் தேவை ஏற்படுகின்றது. இதுவே இன்றைய யுகத்தின் புதிய கூறாக இருக்கப்போகின்றது. இப்புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் இப்புதிய அரசானது எவ்விதம தன் அதிகாரத்தைப் பயன் படுத்தப்போகின்றது? தற்போதுள்ள தேச-அரசுகளின் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதனூடாக இது சாத்தியப்படப்போகின்றது; சாத்தியமாகியுமுள்ளது. மேலும் சர்வதேச நிறுவனங்களின்
(ஐக்கிய நாடுகள் சபை போன்ற) நிலை மாற்றத்தினூடாகவும் இது சாத்தியமாகின்றது.

வில்லியம் ஐ. ராபின்சன் (William I.Robinson)

- வில்லியம் ஐ. ராபின்சன் -

9. நாடு கடந்த பொருளாதாரமானது தேச -அரசுகளின் கட்டமைப்புகளைப்பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் கட்டமைப்புகளையும் தன் நலன்களுக்கேற்ப மாற்ற முயற்சி செய்யும். உதாரணமாக உலக வணிக அமைப்பானது ஏனைய நாடுகளின் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த முனைவதுடன் பல கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றது.

10. நாடு கடந்த முதலாளித்துவப்பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கு நாடு கடந்த செயற் திட்டமொன்று இருக்க வேண்டும். நாடு கடந்த தொழிலாளர்களை இணைத்த நாடு கடந்த தொழிற்சங்க நிலைப்பாடொன்று இருக்க வேண்டும். சமூக நீதியை வலியுறுத்தும் நாடு கடந்த சமூக, இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவை இருக்க வேண்டும்.

மேற்படி நூலின் இன்னுமொரு கட்டுரையான ஒரு நாடு கடந்த நாட்டின் உதயம் என்னும் கட்டுரையில் சமுகவியலறிஞரான வில்லியம் ஐ, ரொபின்சனே முதன் முதலில் நாடு கடந்த அரசு என்னும் சொல்லாடலைப்பாவித்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது 'A Theory of Global Capitalism: Production, Class, and State in a Transnational World' என்னும் நூலிலேயே மேற்படி சொல்லாடல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் மாமுலனின் இயற்பெயர் வின்சென்ட் பால். இவர் ரஃபேல் என்னும் பெயரிலும் எழுதுபவர். ரஃபேலின் 'அம்பர்தோ எகோ' என்னும் சிறு நூல் தமிழ் இலக்கிய உலகில் வெளியான மொழிபெயர்ப்பு நூல்களில் கவனத்துக்குரிய நூல்களிலொன்று.

பின்நவீனத்துவ எழுத்தாளர்களிலொருவரும், மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான அம்பர்தோ எகோவின் நேர்காணல்கள் சிலவற்றின் தமிழாக்கம் அச்சிறு புத்தகம். எழுத்தாளர் மாமூலன் மேலும் மொழிபெயர்ப்புத்துறையில் இவை போன்ற ஆக்கங்களை வழங்குவதில் கவனத்தைச் செலுத்த வேண்டும். அக்கவனம் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகுந்த பயன்தருவதாகவிருக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R