மாமல்லபுரச்சிற்பங்கள்பல்லவர் வேந்தராக ஆட்சி புரிந்து வீழ்ந்த பின்னும் அவர்கள் இரண்டாம் அதிகார நிலை மன்னர்களாக தொண்டை மண்டலத்தின் சில இடங்களில் ஒரே காலத்தில் ஆண்டுள்ளனர். குறிப்பாக காடுவெட்டி பல்லவன் நல்லசித்தன், காடுவெட்டி கோப்பெருஞ்சிங்கர், தொண்டைமான்கள், கண்ட கோபாலன்  என்போர். இவர்கள் 3 -ஆம் குலோத்துங்கன் காலத்தில் அவனுக்கு கீழ்ப்படிந்து ஆட்சிபுரிந்துள்ளனர். கோப்பெருஞ் சிங்கனும், கண்ட கோபாலனும் சோழர் வீழ்ச்சிக்கு பின் வேந்தர்களாகி விட்டனர்.   நான்காம்  அதிகார  நிலையான நாடு கிழவன் நிலையிலும்  புழல் கோட்டத்தில் அடங்கிய நாடு ஒன்றுக்கு கருமாணிக்கப் பல்லவரையன் இருந்துள்ளான். இப்படி நான்கு அதிகார நிலையிலும் பல்லவர் இருந்துள்ளனர். இனி நல்லசித்த மகாராசன் பற்றிய கல்வெட்டு கீழே:

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநசக்கரவத்திகள்  ஸ்ரீ விசையகண்ட கோபால தேவர்க்கு யாண்டு 17 [ஆவது] கற்கடக நாயற்று பூப்  பக்ஷத்து தசமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற  உத்திராட[த்]து நாள் செயங்கொண்ட சோழ ம / ண்டலத்து  எயிற்க்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்து திருவத்தியூர் நின்றருளின அருளாளப் பெருமாளுக்கு அநேகபூண்தை  மஹாராஜாதிராஜ பரமேஸ்வர  பரமவம் ஸோக்பவ  ---- சமஸ்கிரித வரிகள் - - - -/ விஜயாதித்ய முக்க [ண்டி] காடுவெட்டி வம்சாவதார - - - - தானவமுராரி - - - - ராஹுத்தராய   நல்லசித்தராஸநேந்    வைத்த பெருமாளுக்கு வைத்த திருநன்தா விளக்கு ரு (5) ம் பெரியபிராட்டியார்க்கு வை  / த்த திநுநன்தா விளக்கு ரு (5) ம்   ஆக விளக்கு ய (10) ம் இவ்விளக்கு பத்துக்கும் விட்ட பால்பசுவும்  கன்றுப்பசுவும் பொலிமுறை நாகும் உள்பட உரு 300 ம் இஷபம் [30] ஆக உரு 330 ம் இவ்உரு முன்னூற்று மு[ப்]பதும் இவ்வாண்டின் / ஆடிமாத முதல் நாள் ஒன்றுக்கு அரியென்ன வல்லான் நாழியால் அளக்கும் நெய் இருநாழி உரியும் மதுவற்கத்துக்கு அளக்கும் தயிர் அமுது குறுணி இருநாழியும் திருநாள் தேவைகளும் கோயில் தேவைகளும் / - - - - சந்திராதித்ய வரை செலுத்தக் கடவோமாக கைக்கொண்டோம்  கரண[த்]தோம் இவ்விளக்கு கைக்கொண்டான் திருவிளக்கு குடிகள் - - - -க்கோன் செங்கழுநீரான துவாரபதிவேளான்  / கைக்கொண்ட விளக்கு ரு (5) ம் இவன் உள்ளிட்டார் கைக்கொண்ட விளக்கு ரு (5) ம் ஆக  விளக்கு ய (10) ம் இவ்விளக்கு பத்தும் கைக்கொண்டமைக்கு இப்படிக்கு இவை கோயிற்[க்]கணக்கு  உத்தரன் மேருருடையான் திரு / புவன சோழனான ஆனைமே[ல்] அழகியான் எழுத்து.

விளக்கம்: முக்கண்டி காடுவெட்டி குடும்பத்தவன், பல்லவகுலத்திலகம், பாரத்வாஜ கோத்திரத்தை சார்ந்தவன் என கூறிக்கொண்டு நல்லசித்தரசன் அருளாளப் பெருமாளுக்கு (வரதராசர்) 5 விளக்கும், பெருந்தேவித் தாயாரான  பெரிய பிராட்டிக்கு 5 விளக்கும் திருநந்தா விளக்கு வைக்க 300 பசுவும் 30 காளையும் ஆக 330 மாடுகளை அளித்துள்ளான். இம்மாடுகள்  வாயிலாக பெறப்படும் நெய்யில் அரியென்னவல்லான் நாழியால் இருநாழியும், தயிர் சோறு குறுணி இருநாழியும் நாள்தோறும்,, திருவிழா நாள்க;ளிலும்  வழங்கிட  வழிவகை செய்துள்ளான்.

கல்வெட்டில் இக்காலத்தில் உள்ளது போல அக்காலத்தேயும் எண்களை  சொல்லாகவும், எண் குறியாகவும் எழுதி உள்ளனர். விளக்கை கைக்கொண்டது  வேளாளர்கள் என்பது கோயில் கரணத்தவர்களாக வேளாளர்கள் இருந்துள்ளனர் என்பதை காட்டுகிறது.. இரண்டாம்  தொகுதி நூலில் அதிக பசுக்களை ஈந்தவன் இந்த நல்லசித்தரசன் தான். எனக்கு உள்ள ஐயம் யாதெனில். இவ்வளவு பெருந்தொகை பசுக்களில் இருந்து வரும் பேரளவு நெய் விளக்கு எரிக்கவா? என்பது தான்.  இது எதோ வேள்வி, ஓமமாக இருக்குமோ?

(காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2, 2011,பக்கம் 277-278) 

200 தேவரடியளுக்கு 3 -ஆம் குலோத்துங்கன் நிலம் ஒதுக்க ஆணை இட்ட போது அதை ஆதரித்து நல்லசித்தரசன், தொண்டைமான் வழிமொழிந்து கையெழுத்திட்டனர் . அந்த கல்வெட்டு கீழே:

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் மதுரையும் ஈழமும்  கருவூரும் பாண்டியன் முடி / த்தலையும் கொண்டு வீரர் அபிஷேகமும் விஜையர் அவிஷேகமும் பண்ணி அருளின திரிபுவனவீ / ரதேவற்கு யாண்டு 34 ஆவது திருமுகப்படி திரிபுவன சக்ரவத்திகள்  கோநேரின்மை கொண்டான் / ஜயங்கொண்ட சோழமண்டலத்து அத்தியூர் அருளாளப்பெருமாள் கோயில் வயிஷ்ணவக்கண்காணி / செய்வார்களுக்கு இவ்வாழ்வாரைச் சேவிக்கைக்கு திரிபுவனவீரந் பதியிலாரென்று இருநூறு பேர்முத / ல்[கொ]ள்ளவும் இவர்களுக்கு இவ்வாழ்வார் திருமடைவிளாகத்திலே மனை இடவும் தேவதானமாக ஊர் / களில் எயிற்கோட்டத்து சிறுகச்சிப்பேடு நீங்கல் நீக்கி   நிலம் இருநூற்று நாற்[ப]த்திரண்டரையும் நிலச்சீவிதமா / க  அடைக்கவும் கடைவதாகப் பெறவேணுமென்று நந்திபன்மன் நமக்குச் சொல்லிவரக் காட்டினவாரே இப் / படிசெய்யக் கடவதாகச் சொன்னோம் இப்படி செய்யப்பண்ணுக எழுதினான் திருமந்திரஓலை மீனவன் மூ / வேந்தவேளான் இவை வில்லவராயனெழுத்து இவை விழிஞத்தரையனெழுத்து இவை சிங்களராயனெழுத்து இவை சித்தராயனெழுத்து / இவை சேதிகுலராயனெழுத்து இவை சிங்களராயனெழுத்து  இவை மூவேந்தரையனெழுத்து யாண்டு 35 னா / ன் வாரு இவை தொண்டைமானெழுத்து.

சோழர், பாண்டியர், சேரர், சம்புவராயர் ஆகியன எப்படி ஒரு ஆள்குடிப் பெயரோ அப்படிப்பட்ட ஒரு ஆள்குடிப் பெயர் தான் கண்டகோபாலன் என்பதும். இவர்கள் பொதுவாக தெலுங்கு சோழர் என்று அறியப்பட்டாலும் கீழ்வரும் கல்வெட்டு இவர்களை பல்லவர் என்றே அறிமுகப்படுத்துகிறது. அதில் பல்லவர்கள் பார்த்தியர் (Parthiyans) பாரத்துவாஜ கோத்திரத்தார் என்று கூறக்கிடக்கிறது. தெலுங்கு பல்லவர்களான இவர்களில் திருக்காளத்திதேவன் கண்டகோபாலன், விஜய கண்டகோபாலன், வீர கண்டகோபாலன் என்போர் சிலர். இவர்கள் சோழருக்கு அடங்கினமையாலேயே சோழன் என்ற பெயரைக் கொண்டதாகத் தெரிகிறது. இனி கல்வெட்டு பாடம்:

ஸ்வஸ்திஸ்ரீ பார்த்தியர் தம்மிற் பாரத்துவாரக் கோத்திரம் விளக்க [யி] - - - / லைமகள் வயிற்றில் நிலைபெறத் தோன்றி மெய்ம்மொழி நாள் முத - - - / ணன் மாமகன்துய்ய மாதவத்தின் தராதலங்கு காக்கந் தன்மையனாகி - - - / [ப்] பல்லவர் திருக்குலத் திசைதோறும் விளக்கும் விசையபூபதி கா -- - - / - - அருளாள நாதனருள் பெரியவன் திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ வீர கண்ட - - - / டு ச (4) வது முதல் திருவத்தியூர் நின்றருளிய அருளாளப்பெருமாள் கோயிலில் - - - / மக்க[ளை]க்  கோயிலில் [அ]ந்தராயபேறு கொள்ளுங் கடமை உள்ளிட்ட  - - - / - - றாகச் சந்திராதித்த வரை திருநந்தாவிளக்கும் நெய்யமுது தையிரமுது - - - / திருநாள் தேவைகளும் இவருளாளப் பெருமாளுக்குச் செலுத்தக் கடவ - - -/ ரோதம் பண்ணினவன் கெங்கைக்கரையில் காராம்பசுவை வதித்தான் - - - .

விளக்கம்: கல்வெட்டின் வலது ஓரம் சிதைந்துள்ளதால் முழு விளக்கம் பெறமுடியவில்லை. கல்வெட்டு வீர கண்டகோபாலனின் 4 ஆவது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டு அவனது மெய்கீர்த்தியை முதலில் கூறுமிடத்து அவனை பார்த்தியன், பல்லவர் குலத்தவன் என்கிறது. நந்தா விளக்கு எரிக்கவும் தயிரமுது நெய்யமுது ஆகியன திருநாள்களில் தரப்பட வேண்டும் என்று குறிக்கிறது..

பார்த்தியர் என்போர் மேலை ஆசியாவில், ஈரானில் ஆட்சி புரிந்த ஆரிய மன்னர் ஆவர். இவர்கள் மௌரியர் ஆட்சித்  தொடக்கத்தில் இந்தியா வந்து ஆந்திரத்தில் ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டு பின்பு காஞ்சியை ஆளத்தொடங்கியவர்கள். அது தொடர்பான சில ஆய்வுத் தொடுப்புகள்
http://www.thehindu.com/ todays-paper/tp-features/tp- metroplus/The-Pallavas-and- the-Pahlavas/article15376550. ece
http://www.cais-so as.com/CAIS/History/ashkanian/ parthian_colony.htm

தொண்டைமான் மனைவி கல்வெட்டில் இருந்து இந்தப் பல்லவர்கள் தொண்டை நாட்டில் வேளாள மக்களில் கலந்து விட்டதாகத் தெரிகிறது. இன்று இவர்கள் துளுவ வேளாள மக்கள் ஆவர்.

ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு  யாண்டு நாற்பத்துமூந்று ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து திருவத்தி  / யூராழ்[வா]ர்க்கு சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டு திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி உடையான் வேளாண் கருணாகரநாந தொண்டைமானார் / தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.

நூல்:   காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், 2011, தொகுதி 2, எண் :5, பக் - 10, காஞ்சி வரதர் (அருளாள பெருமாள்) கோயில்

அதே நேரம், கோப்பெருஞ்சிங்கர் வழிவந்தோம் என்று வன்னியரும்  கூறிக்கொள்கின்றனர். அத்தனை வன்னிய உட்பிரிவு சாதிகளும் பல்லவர் என்று கூற முடியாவிட்டாலும் படையாட்சிகளும் வன்னிய ரெட்டியாரும் இதில் அடங்கத் தகுதிஉடையவர். ஏனென்றால் இவர்கள் நிலக் கிழார்கள். காஞ்சிபுரம் அருளாளர் (வரதராஜ)பெருமாள் கோயிலில் உள்ள 360 கல்வெட்டுகளில் இந்த 4 நான்கு கல்வெட்டுகள் பல்லவர் பற்றி அறிய உதவுவது போல நெல்லூர் முதல் தென்பெண்ணை ஆறு வரை உள்ள தொண்டைமண்டலக் கோயில்களில் உள்ள அத்தனை கல்வெட்டுகளையும் தொகுத்து ஆராய்ந்தால் பல்லவர் குறித்து மேலும் அதிக சான்றுகள் கிட்டும்.   


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R