ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியங்களோடு செவ்விலக்கியமாகப் போற்றுமளவுக்கு சிறப்புடயது முத்தொள்ளாயிரம். வெண்பா யாப்பில் மூவேந்தர்களின் புகழினைப் பாடுவதற்கென்று எழுந்த நூலாகும். இந்நூல் சேர சோழ பாண்டியர்களின் புகழினைப்பாடும் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகவும் இந்நூலில் மூவேந்தர்களை பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர் சுட்டிப் பாடாமல் வேந்தர்களும் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்து கூறப்படுகின்றது. இந்நூல் புறத்திரட்டு என்ற தொகுப்பிலிருந்து 108 வெண்பாக்கள் மூவேந்தர்களை ஒவ்வொருவரையும் கூறப்படுவதால் இந்நூல் முத்தோள்ளாயிரம் என்ற பெயர் பெற்றது எனலாம். முத்தொள்ளாயிரத்தின் கால வரையறை மற்றும் பாடல் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடு உண்டு. புறத்திரட்டைப் பதிப்பித்தப் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை இதன் காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு என்று முன் வைக்கிறார். இதனை பல்வேறு அறிஞர்கள் பலரும் பல்வேறு தரப்பில் உரைக்கின்றனர். இதை

கா.கோ. வேங்கடராமன்    - கி.பி. 5ஆம் நூற்றாண்டு
வையாபுரிப்பிள்ளை    - கி.பி. 9ஆம் நூற்றாண்டு
வி. செல்வநாயகம்    - கி.பி. 6ஆம் நூற்றாண்டு
நாராயண வேலுப்பிள்ளை    - கி.பி. 5ஆம் நூற்றாண்டு
என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் முத்தொள்ளாயிரக் காலத்தைக் குறிப்பிடுகின்றனர்.

முத்தொள்ளாயிரம் சங்ககாலத்தின் பிற்பகுதியில் ஒட்டி எழுந்த நூலாகக் கருதப்படுகிறது. பல தனிப்பாடல்களின் தொகுதியாக அமைகின்றது. சங்க அக மரபு செல்வாக்கை இந்நூல் பெற்று திகழ்கிறது. இன்று முத்தொள்ளாயிர பாடல்கள் 108 பாடல்களே கிடைக்கின்றன. இதனுடன் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என் யூகத்தில் சிலர் சேர்க்கப்பட்டு 130 பாடல்களை முத்தொள்ளாயிரப் பாடல்களாக சேது ரகுநாதன் பின்பு எழுதி கதிர்முருகு போன்றோரால் அடையாளங் காணப்பட்டுள்ளது. முத்தொள்ளாயிர பதிப்புகளை இனங்கண்டு இறுதியாக 109 பாடல்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இதனை சேதுரகுநாதன் மட்டும் சைவசித்தாந்த பதிப்பின் வழியாக 130 பாடல்கள் உடையது என்ற கருத்தை முன்மொழிகிறார். மேலும் பிறர் ஆசிரியர்களின் நூற்பாக்களின் எண்ணிக்கையில் வேறுபட்டு 130 நூற்பாக்களை (பாடல்கள்) உடையது இதனை நோக்கும்போது முத்தொள்ளாயிரத்தின் வளர்ச்சி என்றே எண்ணத்தக்கது கிடைக்கப்பெற்ற 108 பாடல்களில் அகத்திணையின் ஓரே திணை கைக்கிளையில் மட்டும் 65 பாடல்கள் அமைந்ததோடல்லாமல் சங்க அக இலக்கிய மரபின்று பெரும் மாற்றுத்தினைப் பெற்றிருக்கின்றது.

யாப்பு மாற்றம்
தொல்காப்பியர் அகப்பாடல்களை கலிஇ பரி என்னும் யாப்பில் புனைவதே தகவடைத்து என்பர். பின்னர் எழுந்த சங்க இலக்கியம் கலித்தொகை, பரிப்பாடல் என்னும் இரு அகப்பொருண்மை பொருந்திய நூல்களைத் தந்திருப்பினும் அகவற்பா வடிவத்தில் பெரும்பாண்மையான நூல்களைத் தந்துள்ளது. முத்தொள்ளாயிரம் முழுக்க திருக்குறள் மரபை பின்பற்றி வெண்பா யாப்பில் புனையப்பட்ட இலக்கியமாகும். வெண்பா யாப்பு நீதிக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு எழுந்த வடிவமாகும். இதே போன்று முத்தொள்ளாயிர வெண்பா ஒவ்வொன்றும் ஒரு கருத்து என்ற அடிப்படையில் எழுந்த தனிப்பாடலாகும். ஒரு மன்னனைப் பற்றிய கருத்தாக்கம் என்ற நிலையில் தொடர்நிலைச் செய்யுளாகவும் கருத முடியும். இதனை தொடர்ந்து நளவெண்பாஇ அரிச்சரிந்திர வெண்பா போன்ற நூல்கள் முத்தொள்ளாயிர மரபை பின்பற்றி எழுந்த நூலாகும். இதே யாப்புநிலையில் எழுந்த் மிக சிறந்த முன்னேற்றம் அல்லது மாற்றம் என்று கருத வாய்ப்புள்ளது.

கைக்கிளைக்கு முதன்மை இடம்
அன்பின் ஐந்திணைப் பாடல்களான சங்க இலக்கியத்தில் அதிகபடியாக கை;கிளைப் பற்றி செய்தி இடம்பெறவில்லை. மேலும் கலித்தொகை நெய்தற்கலியில் நல்லந்துவனார் எழுதிய 10 பாடல்கள் கைக்கிளை மரபில் அமைந்துள்ளது. நற்றிணையில் இரண்டும் (39,94) குறுந்தொகையில் ஒன்றும் (78) கலித்தொகையில் நான்கும் (56,57,58.109) பரிப்பாடலில் (11) ஒன்றுமாகக் கைக்கிளை மரபில் அமைகின்றன. கைக்கிளைத் திணைப்பாடல்களாக அமையும் எட்டு பாடல்களும் தலைவனின் ஒருதலைக் காதலைச் சுட்டுவதோடு அனைத்தும் ஆண்பாற் கைகிளையாக மட்டும் அமைந்துள்ளன. சங்க இலக்கியத்தை தொடர்ந்து திருக்குறளில் தகையணங் குறுத்தல், குறிப்பறிதல் என்னும் அதிகாரங்களில் இக்கைக்கிளைக் குறிப்பின் அடிப்படையில் இடம்பெறுகிறது.

முத்தொள்ளாயிரம் அகமும் புறமும் நிறைந்தவையாகும் இது கைக்கிளை என்ற கோட்பாட்டின்படி அமைந்த இலக்கியம் ஆகும். இவற்றில் இடம்பெற்நுள்ள கைக்கிளைப்; பாடல்களின் தன்மை தனிச்சிறப்புகள் கொண்டது. “முத்தொள்ளாயிரத்தில் காணலாகும் கைக்கிளை எனப்பெயரிய பாடல்களில் குறித்த செய்திகள் தொல்காப்பியர் கூறும் அகக்கைக்கிளை இலக்கணத்திற்கு இயைபுடையன அல்ல. இக்காதல் ஆண்பாலரிடத்து நிகழும் என உணரும் வகையில் தொல்காப்பியர் விளக்கம் செய்திருக்கிறார். முத்தொள்ளாயிரத்தில் காதல் பாடல்கள் அனைத்தும் தலைவி தன்னுள் கிளந்தும், வெளிப்பட மொழிந்தும் இனப்பெயர் கட்டியும் வந்த கைக்கிளைக் காதலைக்கூறும் நெறியுடையவை. பெண்பாலாரிடத்து நிகழ்கின்ற கைக்கிளைக் காதலை விளக்குபவை. முத்தொள்ளாயிரக் காதல் பாடல்களாக அமைந்த கைக்கிளைப் பாடல்கள் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் கூறுகின்ற கைக்கிளைப் பாடத்திற்குப் பொருந்துவனவும் அல்ல. தொல்காப்பியர் அகத்திணையியலில் கூறுகின்ற கைக்கிளையாகக் கூறி அதனை ஆண்பாற் கூற்று கைக்கிளை எனவும், பெண்பாற் கூற்றுக் கைக்கிளை எனவும் பிரித்துக் கூறியுள்ளார்” என்று மு. மணிவேல் கூறுகிறார். (மு. மணிவேல், தமிழ் இலக்கிய அகப்பொருள் மரபுகள்இ பக்.129-130)

பெண்பாற் கைக்கிளை

பெண்பாற் கைக்கிளையின் விளக்கமாக,

“தண்டாக் காதல் தளரியல் தலைவன்
வண்தார் விரும்பிய வகையுரைத்தன்னு”   

(போ.வே. சோமசுந்தரனார்இ புறப்பொருள் வெண்பாமாலை, நூ.9-45)

என்று பாடாண் படலத்தில் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. ஒரு பெண் ஒருதலையாக ஆணை கண்டு காமுறுதல் தமிழ் மரபு இல்லை என்னும் நோக்கத்தில் பெண்பாற் கைக்கிளையாக அமைந்த நக்கண்ணையாரின் (புறம். 84,85) மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. புறநானூற்றினை அடுத்து மன்னனைக் கண்டு காமுறும் பெண்மையின் உள்ளத்தை இலக்கியத்தில் படைக்கும் விரிந்த மரபானது முத்தொள்ளாயிரத்தில் துவக்கம் பெறுகின்றது. மன்னனின் வீரச்சிரப்பு கொடை போன்று பெண்ணின் ஒருதலைக் காதலும் அவனுக்கு புகழ் சேர்க்கும் என்ற புலவரின் கருத்தாக்கம் பெண்பாற் கைக்கிளை உருவாக்கத்திற்குக் காரணியாகின்றது.

ஆண்பாற் கைக்கிளை களவிற்கு முன்னதாக அமைகின்றது என்றும், தொல்காப்பிய மரபினை ஒட்டியே பிற்காலப் பாடல்களும் அமைகின்றன. முத்தொள்ளாயிரக் கைக்கிளை களவு கற்பு என்று தொடராமல் ஒரு கற்பனை ஊற்றாக மட்டுமே அமைகின்றது. இத்துறைப் பாடல்களே பிற்கால இறைப்பாடல்களில் கைக்கிளை பாடல்கள் தோற்றம் பெறுவதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்; எனலாம். மேலும் புறப்பொருள் வெண்பாமாலை, கைக்கிளையினைத் தனிப்படலமாக்கிப் புறத்திணைக்கு உட்படுத்திப் பேசுவதும், வீரசோழியம் கைக்கிளை பெருந்திணைகளை அகப்புறமரபாகக் கூறியதும் இக்கருத்திற்கு ஏற்புடையதாகிறது. முத்தொள்ளாயிரத்தில் மன்னனைக் கண்டு காதலுறும் இக்காதற் பாடல்களே பிற்காலத்தில் உலா, கோவை, தூது, கலம்பகம் மற்றம் குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. கைக்கிளை என்னும் தலைப்பில் இப்பாடல்கள் அமையினும் சில மன்னனைப் பெற்று மகிழ்ந்த பெண்ணின் உரையாகவும் சில அமைகின்றன.

“யானூடத்தா ணுணர்த்த யானுணரா விட்டதற்பின்
தானூட யானுணர்த்த தானுணராள் - தேனூறு
கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம்
எய்தர் திராக்கழிந்த வாறு”    (முத். 115)

என்பதில் பண்டியனிடம் நெடுநேரம் ஊடலில் ஈடுபட்டதால் இரவு வீணாகக் கழிந்தது என்று தோழியிடம் தலைவி கூறுவது எண்ணத்தக்கது. இதே போன்று மற்றோரு பாடலில், தலைவன் இன்பம் துய்க்க் விழையும்போது புலந்து, நானி மயங்கியத் தலைவியை,

“ஊடல் என ஒன்று தோன்றி அலகுறூஉங்
கூடல இழந்தேன் கொடியன்னாய்” (முத். 61:1-2)

இப்பாடலின் வழி சோழனிடம் தலைவி புணர்ந்த ஊடலை உணரதக்கது. மேலும் இதே பகுதியில் தலைவன் அனுப்பியத் தூதாக வண்டு வந்தமையும் இப்பகுதியின் கீழ் சுட்டப்படுகின்றது.

“நாம நெடுவேல் நலங்கிள்ளி சோனாட்டுத்
தாமரையும் நீலமுந் தைவந்து - யாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பணிவாடாய்
பண்டன்று பட்டினங் காப்பு”    ( முத்.65)

இப்பாடலில் வரும் செயல் கனவில் அல்லது கற்பனை மயக்கத்தில் இச்செயல் நிகழந்ததாகக் கொண்டாலும் தலைவி கூற்று நிகழிடங்களில் இவை புதிய துறைகளாக அமைகின்றன. இது கைக்கிளை துறையில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றம் என்றே கருதலாம்.

பெயர் சுட்டா மரபு
தொல்காப்பியர், கூறிய ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்’ என்று அகப்பொருள் இலக்கிய மரபின் தொடர்ச்சியாக் கீழ்க்கணக்கு நூல்களிலம் தொடர முத்தொள்ளாயிரத்தில் இம்மரபு மாற்றம் பெற்றதைக் காண்கிறோம். சங்க இலக்கிய அகவொழுக்க நூல்களிலும், திருக்குறள் காமத்துப்பாலிலும் தலைவி, தலைவன், தோழி, புலவன் முதலியோரின் கூற்றாக இக்காதலொழுக்கம் கூறப்படுகிறது. முத்தொள்ளாயிரத்தில் சேர, சோழ, பாண்டியர்களின் வீரத்தைக் கூறுவதோடு தலைவன் காதலை முன்னிலை வைத்து கைக்கிளைத் தன்மையில் வைத்துப் பாடல்கள் வரும் போக்கினைக் காண்கிறோம். மன்னன் என்ற சொல்லும் சேர சோழ பாண்டியன் என்னும் குல மரபும் இவ்விலக்கியத்தில் புதிய மரபாக தோற்றம் பெற்றதை காணமுடிகிறது.

தலைவியின் காதல்

தொல்காப்பியத்தில் தலைவியானவன் தன்காதலினை எவ்விடத்திலும் கூறவில்லை அத்தகைய கூறா மரபினை

“குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வலினான்” (தொல். களவு. 17.3-4)

என்னும் நூற்பாவின் வழி அறிகின்றோம். மேலும் தலைவனிடம் தனது வேட்கையைக் கூட மட்பாண்டத்தில் வைக்கப் பெற்றப் புதுநீர் போல வெளிப்படுத்துவான் என்றும் அறத்தொடு நிற்றல் நிலையில் மட்டுமே தன் காதலினை வெளிப்படுத்தும் பாங்கினையும் காணமுடிகிறது. ஆனால் முத்தொள்ளாயிரத்தில் பெண் தன் காதலினையும், விரக தாபங்களைத் தோழி மற்றும் பலர் முன்னிலையில் உரைக்கும் போக்கு கால மாற்றமாக காணப்படுகிறது.

இற்செறிப்பு
இற்செறிப்பு பற்றி முத்தொள்ளாயிரத்தில் மட்டுமில்லாமல் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது. தலைவியின் பருவமாற்றம் கண்ட செவிலி இற்செறிப்பாள் அல்லது களவு காலத்தில் காதல் வெளிப்பட நேரும்போது அம்பல் அலராக மாறும்போது ஊராரின் பேச்சினைக் கேட்ட செவிலித்தாய் தலைவியை இற்செறிப்பாளர் இவ்விரு நிலையினை தொல்காப்பியம்

“மனைப்பட்டடு கலங்கினும் பெற்றவழி மலிலினும்
நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் (தொல்.களவு 20.12-13)

என்று தலைவி கூற்று நிகழிடங்கள் கூறப்படுகின்றது. தொல்காப்பியத்தை தொடர்ந்து நம்பியகப்பொருளும் தலைமகள் அறத்தோடு நிற்கும் நிலையை கூறும்போது ‘மனைவியின் செறிப்பவும்’ என்று கூறுகிறது. அவ்வாறிருக்கத் தொல்காப்பியம் நம்பியகப்பொருளுக்கும் இடையில் தோன்றிய இலக்கியமான முத்தொள்ளாயிரம், இத்துறையில் நான்கு பாடல்களை தருகிறது. காதல் வயப்பட்ட தன் மகளின் உடல் வேறுபாட்டைக் கண்ட தாய் மற்றும் செவிலித்தாய் ஆகியோர் அவளை வெளியே செல்லாது வீட்டில் அடைத்து வைத்துக் காப்பது இற்செறிப்பு எனப்படும். இற்செறிப்புக் குறித்த செய்தி முத்தொள்ளாயிரத்தில் அமைந்துள்ளது. சேரனுக்குரிய பாடலாக,

“தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே”    (முத். 10)

என்று வருகிறது. மேலும் பாண்டியனுக்குரிய பாடலில், காதல் உள்ளம் படைத்த பெண், சேரன் உலா வருகின்ற சூழலில் காணத்துடிதடித்துக் கதவைத் திறந்து பார்க்கிறாள். தாயார் தம் மகள் பார்க்கா வண்ணம் அடைத்து விடுகிறாள். இவ்வணம் திறப்பதனால் சென்று மீளும் வாயிற்கதவின் குமிழ்கள் இங்கும் அங்கும் அலைதலினால் தேய்கின்றன இந்நிகழ்வினை,

“காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் - மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம்; துளைதொட்டார்க்
கென்னைகொல்; கைம்மாறினி”    (முத். 117)

என்று குறிப்பிடுகிறது. இவ்வாறு தன் மகள் காதல் கொண்டால் பழி வந்து சேரும் என்பதற்கு தாய் காத்துநிற்பதனால் இற்செறிப்பு அனைத்தும் தாயரால் காட்சி மறுக்கப்படும் நுட்பம் உணர்த்தப்படுகிறது.

தாயின் இரக்கம்
தலைவி; உடன்போக்கினை மேற்கொண்ட பிறகு செவிலியும் நற்றாயும் மகளின் விளையாட்டு பொருட்களைக் கண்டு வருந்தும் நிலையும் பின் தேடிச் செல்லும் நிலையும் இளமையை நினைந்து வருந்தும் நிலையும் மகட்போக்கிய தாயர் என்னும் துறையில் தொல்காப்பியத்தில் விளக்கப்படும். மேலும் செவிலி தலைவியின் விரகத்தினை நினைத்து வருந்தும் போக்கை,

“திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடில் ஏதந்தான் என்னாம் - உறந்தயர்கோன்
கண்ணார மார்பின் தமிழர் பெருமானை
கண்ணார்க் காணக் கதவு”    ( முத். 47)

காண்கின்றோம். தோழனின் காமம். தாங்குமதி காமம் தாங்குமதி என்ற கூற்றுக்கத் தலைவன், தன்விரகதாபத்தின் எல்லையனை வெளிப்படுத்தும் நிலையினையும் அது கேட்ட பாங்கன் அவனின் ஆற்றாமை கண்டு வருந்துதலையும் தொல்காப்பியமும் அதற்கு பின் வந்த சங்க இலக்கியமும் பகிர்ந்திட, மகள் படும் காதல் ஏக்கதினையினை கண்டு வருந்தும் செவிலியின் மனிநிலை அகமரபு மாற்றமாகிறது. இந்நிலை மரபானது பின்பு வந்த நந்திக்கலம்பகத்தில் தொடர்வதைக் காணலாம்.

கூடல் இழைத்தல்

தொல்காப்பியத்தல் சுட்டாத துறைமரபு ‘கூடலிழைத்தல்’ எனும் துறையாகுமம். கலித்தொகையில் காணப்படும் இம்மரபினை முத்தொள்ளரியரமானது,

“கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப்பெறுவேனல் கூடு என்ற - கூடல்
இழைப்பாற் போல் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பல் பிழைபாக் கறிந்து”    (முத். 99)

என்று எடுத்துரைக்கிறது. இம்மரபானது ஒரு புதிய மரபாக தோன்றி அகமரபு மாற்றத்திற்கு காரணம் எனலாம். கம்பரும் இம்மரபினை அடியொட்டி,

மின் நரு மணிவிரல் தேய வீழ் கணீர்
துன்ன அரும் பெருஞ்சுழி அழிப்பஇ சோர்வினோடு
இன்நகை நுழைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னை அம் பொதும்பரும் புக்குஇ நோக்கினான்
(வீ.பி. அடை. படலம்)

இராமன் சோலையில் நுளைச்சியா வரைந்த ஆழிவட்டத்தைக் காண்பதாகக் கூறுவர் என்பதில் ‘கூடல் இழைத்தல் துறை’ என்பது மரபு வளர்ச்சியை குறிப்பிடுகிறது.

வெறியாட்டு எடுத்தல்

இலக்கியத்திற்கு கோட்பாடுகளை வகுத்துள்ள தொல்காப்பியம்,

“வெறியறி சிறப்பின் செவ்வாய் வேலன்
வெறியாட்டாயர்ந்த காந்தகளும்”

என்று வெறியாட்டிற்கு இலக்கணம் கூறுகிறது. தொல்காப்பியம் முதல் நம்பியகப்பொருள் வரை குறிப்பிடுகின்ற அறத்தொடு நிற்கும் நம்பியகப்பொருள் வரை குறிப்பிடுகின்ற அறத்தொடு நிற்கும் முறைமையிலிருந்து மாறுபட்டு அன்னையிடம் நேரிடையாகத் தலைவி நிற்கும் நிலையினை முத்தொள்ளாயிரம்,

“காராட்டுதிரம் தூஉய் அன்னை களன்கிழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்கும்மா? – பாராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேர் கோதைக்கென்
நெஞ்சங் களங்கொண்ட மூநாள்!” (முத். 20)

என்ற பாடலில் சேரமன்னன் மீது காதல் கொண்ட தலைவிக்கு தாய் வெறியாட்டு எடுக்கின்றாள். தலைவி தோழியிடம் தாயின் அறியாமை கூறி நகைக்கின்றாள். இதன் மூலம் தாய் வெள்ளாட்டினைப் பலியிட்டு வெறியாட்டு நிகழ்த்திய செய்தி கூறப்படுகிறது. இதன்மூலம் தலைவி நேரிடையாக பதில் சொல்லும் நிலை ஏற்பட்டது என்பது ஒரு புதிய மரபு மாற்றமாகும்.

 முத்தொள்ளாயிரம் முழுக்க முழுக்க அகமும் புறமும் கலந்து கைக்கிளைத் தன்மையில் அமைந்ததே ஒரு மரபு மாற்றம் எனப்படுகிறது. கலி பரி என்ற யாப்பினின்று வெண்பா யாப்பில் எழுந்ததே இதனின் முன்னேற்றம். சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார் என்னும் அகமரபு மாற்றம் பெறுகிறது. சங்க இலக்கியத் தொகுப்புகளில் அகம் புறம் தழுவியதாகப் பரிபாடல் அமையினும் புறக்கூறு இறைமீது பாடியதாக அமைவது. முத்தொள்ளரியரத்தில் முதன்முதலாக கள்ளி கோதை பாண்டியன் வளவன் என்று குலப்பெயர் மற்றும் பொதுபெயர் அகப்பாடல்களில் சுட்டப்படும் மரபு வளர்ச்சியடைந்தது.

 தலைவி தன் காதலை வெளிப்படையாகக் கூறும் மரபு தொல்காப்பியத்திலோ அதனைத் தொடர்ந்த சங்க இலக்கியத்திலோ யாண்டும் குறிக்கவில்லை. ஆனால் முத்தொள்ளாயிரத்தில் அம்மரபுத் தோற்றம் பெற்றது. தாயரின் இற்செறிப்புக்குக் காரணமாக ஊராரின் அம்பல் அலிரினைத் தொல்காப்பியம் கூற காட்சியே மையலுக்குக் காரணமென்று தொடக்கத்திலே இற்செறிப்பு நிகழ்த்தும் தாயரை முத்தொள்ளாயிரத்தில்காணமுடிகிறது. மகட்போக்கிய தாய் மரபினை மாற்றி தன் மகள் காதலக்குகாக தாய் வருந்தும் சூழல் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெறுகிறது. கூடலழைத்தல் எனும் துறை தனிப்பாடல் என்னும் வகையில் முத்தொள்ளாயிர மரபின் தொடக்கமாக அமைகிறது. அறத்தொடு நிலையில் தலைவி தாயிடம் நேரிடையாக நிற்கும் முறைமையில் மரபு மாற்றம் பெறுகின்றது. முத்தொள்ளாயிரம். கால மாறுதலக்கு ஏற்ப முத்தொள்ளாயிரத்திலும் ஒவ்வொரு அகமரபும் மாற்றம் பெற்றதை காணமுடிகிறது.

பார்வை நூல்

1. கதிர் முருகு. முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் சாரதா பதிப்பகம், சென்னை முதற்பதிப்பு – 2007
2. இளம்பூரணர் உரை (உ.ஆ), தொல்காப்பியம் (பொருளதிகாரம்) சாரதா பதிப்பகம், சென்னை – 600 014 முதற்பதிப்பு – 2005
3. சிவகாமி ச. முத்தொள்ளரியரம் வரலாற்றுத் திருப்புமுனை, மின் தமிழ் இணைய தமிழி, 2004.
4. பொ.வே. சோமசுந்தரனார்இ புறப்பொருள் வெண்பாமாலை, கதிர் பதிப்பகம் திருவையாறு முதற்பதிப்பு – 2012.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - வே. பூர்ணா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 11 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R