கவிஞர் தம்பி தில்லை முகிலன்கவிஞர் தம்பி தில்லை முகிலனைப்பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச்சேர்ந்த இவரது அகால மரணம் பற்றிய நண்பர் சிவா முருகுப்பிள்ளையின் முகநூற் பதிவின் பின்னரே இவரைப்பற்றி அறிந்து கொண்டேன். இவரது மறைவைப்பற்றிய பாலசிங்கம் சுகுமார் அவர்களின் முகநூற் பதிவு இவரது கலை, உலக மற்றும் சமூக, அரசியற் செயற்பாடுகளை நினைவுகூர்ந்திருந்தது. இவரது முகநூலுக்குச் சென்று பார்த்தேன். கலாபூஷணம் விருதினைபெற்ற இவருடனான நேர்காணல்கள் வெளியான பத்திரிகைகளின் புகைப்படங்களைப் பார்த்தேன். அதன் பின்னர் இவரது அண்மையப் பதிவுகளைப் பார்த்தேன். மார்ச் 30 எழுதிய பதிவில் பின்வரும் கவிதையினைப் பதிவு செய்திருந்தார்:

"வாதம் நிதம் வளம் காண
தினம் மோதலாகத் தொடரட்டும்.
பேதமழிக்க யாவரும்
பொதுமை காண ,
மனிதர் இனிமை காண,
வாதம் நிதம் தொடரட்டும்."


மானுட சமுதாயத்தில் பேதங்கள் நீங்க, பொதுமை காண (பொதுமைக்குப் பல கருத்துகளுள: இனிமை, பொதுவுடமை என) வாதம் நிதம் மோதலாகவாவது தொடரட்டும் என்று அறை கூவல் விடுக்கின்றார். இதனை எழுதியபோது மணி காலை 8.20.

இவ்விதம் மானுட சமுதாய முன்னேற்றத்துக்காக அறை கூவல் விடுத்த கவிஞர் தம்பி தில்லை முகிலன் , மார்ச் 31 இரவு 10.02 மணிக்கான இரு பதிவுகளில் பின்வருமாறு எழுதுகின்றார்:

பதிவு ஒன்று: "இருப்பதற்கு விருப்பமில்லை என் இருப்பை என்னவர் என்போரும் விரும்பவில்லை ஏன் இருப்பான் என்பதில் எழும் கேள்விக்குப் பதில் இறப்பதே சரி ஆகவே எனக்காக யாரும் கவலைப்படாதீர். ஒருவன் சொன்னதைச் சொன்னேன் சரியா பிழையா சொல்வீர். ஒருவர் இல்லை இன்று பத்தில் எட்டுப்பேர் சொல்வது தான். பற்றும் பாசமும் அற்றுப்போன காலமிது. செத்துப் போனால் என்ன? நடமாடும் பிணமாகத்தானே நாளும் பலர் இங்கு வாழ்கிறார்? பிறப்பைவிட இறப்பே இப்போ பெரிது. விடுதலை."

பதிவு இரண்டு: "செல்கின்றேன் கவலைப் படாதீர்கள். போதுமானது வாழ்கை. பிறருக்கு வாழ்வதே பிறவிப்பயன் என்பார். என்னால் பிறருக்கு வாழமுடியாது உள்ளது. உயிர்தான் உள்ளது. அதனால் எவருக்கும் ஒன்றும் செய்ய முடியாது. என்னை என்நிலை அறிந்தவர் செத்துப்போ என்றும் சொல்வதும் உண்டு. அது பற்றின் காரணம். இப்போ பற்றும் பாசமும் இடையூறாய் இருப்பது உண்மைதானே. அதனால் இறப்பை நாமே தேடுவது சரியா? பிழையா? என்நிலையில் சரியே."

இவ்விதமிட்ட கவிஞரின் முகநூற் பதிவானது அவரது முகநூல் நண்பர்கள் மத்தியில் திகைப்பினை ஏற்படுத்தியதை இப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பர்களின் எதிர்வினைகளிலிருந்து தெரிய வருகின்றது.

நண்பர் பாலசிங்கம் சுகுமார்: "என்ன"

Jasothsrabanu Shekar என்பவரும் பதிவு புரியாமல் கேட்கின்றார்: "என்ன?'

நாகசோதி தங்கவேல் என்னும் நண்பருக்கு விடயம் புரிந்திருக்கின்றது. எனவே அவர் கவிஞருக்கு ஆறுதலும், ஆரோக்கியமான ஆலோசனையும் கூறுகின்றார்: "சொல்பவர்கள் சொல்லட்டும் எல்லோர் விருப்பத்திற்கும் வாழ விரும்பினால் எம்மால் வாழ முடியாது, நீங்கள் இன்னும்பல ஆண்டுகள் தமிழுடனும் கவியுடனும் ஆரோக்யமாக வாழவேண்டும் இறைவன் துணையிருப்பார்."

ஏரம்பு சோதிலிங்கம் கூறுகின்றார்: "தவறு.தவறு.தவறு. பிறருடைய அழுத்தங்கள் நாம் எடுக்கும் முடிவிற்கு காரணமாகக் கூடாது"

Jasothsrabanu Shekar மீண்டும் வந்து கவிஞருக்கு வாழ்த்துக்கூறுகின்றார்: "வாழ்க தமிழின் செல்வப் புதல்வன் பல்லாண்டு"

மீண்டும் Jasothsrabanu Shekar கூறுகின்றார்: "யாரது சொன்ன வயசாச்சி என்டு. பஞ்ச பசங்க."

பதம்நாதன் நடராஜ கூறுகின்றார்: " தவறான முடிவு கவியே நீங்கள் பல்லாண்டு வாழனும்"

JJ Joy Joseph கூறுகின்றார்: " Your decision is wrong "

செல்வராஜா புவனஜோதி கூறுகின்றார்: "மக்கள் பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்? ஏதாவது பேசட்டும். தொடருங்கள்"

T.Ilangky Mannan கூறுகின்றார்: "நாம் பிறந்தது நாம் வாழத்தான் .அவ்வாழ்வால் ஏற்படுத்தப்படும் நன்மை , தீமைகளுக்கு நாமே பொறுப்பு . நம்மால் முடிந்தால், சிறிது , மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்கின்றோம். முடியாவிடில் அதற்க்கு நாம் பொறுப்பல்ல . ஆனால் நமது வாழ்க்கைக் காலத்தை கடப்பது நம் பொறுப்பு . அது தானாக முடியும் வரை, அதை வாழ்வதுதான் நியதி . அதை இடை நிறுத்தும் பொறுப்பு எமக்குக் கொடுக்கப்படவில்லை "

Vethanayaki Guna கூறுகின்றார்: "பிறப்பும் நாம் தேடியது அல்ல. இறப்பையும் நாம் தேடக்கூடாது. மற்றவர்கள் சொல்வதைச் சொல்லட்டும். வாழத்தான் பிறந்தோம் . வாழ்க."

Arul Ganesh கூறுகின்றார்: "கலக்கப்பட்டாலும் கலங்காத மனம் படைத்த நீங்கள் கவிகளிலே யதார்த்தங்களை வடித்த நீங்கள் இப்படியான அடிமட்ட சிந்தனைக்கு ஆளாக்கூடாது."

Sasitharan Kandiah கூறுகின்றார்: "ஐயா தயவு செய்து கொஞ்சம் நிதானியுங்கள். வேறு இடம் மாறி பார்க்கலாமே. நான் உதவ முடியும்"

Thamilthasan Muthusamy கூறுகின்றார்: " ஐயா...இறப்பு இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது.. ஆனால் இங்கு எழும் எண்ணம் ..நீங்கள் வாழும் சூழ்நிலையால் ஏற்படுத்தப்படுகிறது..சூழலை மாற்றுங்கள் உங்கள் எண்ணங்களும் மாறிவிடும்... உங்கள் சூழ்நிலையை தனிப்பட்டரீதியில் எனக்கு பதிவிடுங்கள்.. என்றாலும் என்னாலும் முடியும் என்ற மனநிலையில் இருக்கிறேன்..ஐயா...என்னை உங்களுக்கு நன்றாக தெரியும்"

Jude Rooshalya கூறுகின்றார்: "சொன்னவர்கள் எல்லாம் சாதித்தது இல்லை நீங்கள்எல்லாம் தமிழின் சொத்துகள்"

கவிஞரின் நண்பர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள். கவிஞரின் மனநிலையினை உணர்ந்து ஆறுதல் கூறுகின்றார்கள்; உதவுவதாகக் கூறுகின்றார்கள். ஆரோக்கியமான நட்பின் வெளிப்பாடு. ஆனால் இவர்களின் அறிவுரைகளையோ, கருத்துகளையோ கேட்கும் நிலையில் கவிஞர் இல்லையென்பதை அடுத்த சில மணி நேரத்தில் அவர் எடுத்த முடிவு தெரிவிக்கின்றது. அவர் தன்னிருப்பிடத்துக்குத் தீயிட்டுத் தன்னை மாய்த்துக்கொண்டார் என்பதைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாள் மானுடரின் பொதுமைக்காகப் பாடிய கவிஞனை மறு நாள் இந்நிலைக்குத் தள்ளியது தான் எது? தள்ளியவைதாம் எவை?

மன அழுத்தம் மிகவும் பொல்லாத நோய். உடனடியாக மருத்துவ உதவியைப்பெற வேண்டியதொரு நோய். மானுட விடுதலைக்காகப் பாடிய கவிஞனைக்கூட அது விட்டு வைக்கவில்லை. கவிஞர் தம்பி தில்லை முகிலன் இந்த முடிவினை எடுத்திருக்க வேண்டாமேயென்று தோன்றுகின்றது. அதற்குப் பதில் மருத்துவ உதவியினை மன அழுத்த நோய்க்கு நாடியிருந்திருக்கலாமே என்று தோன்றுகின்றது. மன அழுத்தம் உள்ளவர்களை அவர்களுடன் நெருங்கிப்பழகுபவர்கள் கூட அறிந்திருப்பதில்லை என்பதையே கவிஞரின் இறுதிப்பதிவிலுள்ள கீழ்வரும் கூற்று வெளிப்படுத்துகின்றது:

"என்னை என்நிலை அறிந்தவர் செத்துப்போ என்றும் சொல்வதும் உண்டு. அது பற்றின் காரணம்"

முகநூலில் இதற்கான எதிர்வினைகள்:

1. Vadakovy Varatha Rajan அறியாத கவிஞனின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்து காரணத்தை கண்டு பிடித்துளீர்கள். சோகம்தான் என்றாலும் உங்கள் ஆய்வுக்கு பாராட்டுக்கள்.

2. Navaratnam Uthayakumar இவரின் இறப்பைப்பற்றி அறிய ஆவலாகத்தான் இருந்தேன். இங்கே விபரமா அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

3. Punniyamoorthy Visvanathar தமிழனின் சொத்து.

4. ஏ. பகலவன் நெஞ்சு கனக்கிறது. உடலும், உள்ளமும் உருகி எரிகிறது. நான் அறியாத மனிதரை அவரின் மரணம் அறிமுகப்படுத்தியது. வயோதிபம், வருத்தம் வறுமை கொடியது கொடியதிலும் கொடியதென்று நிரூபித்து விட்டார் கவிஞ்ஞர்.
சொன்று வா தோழனே.

5. Kokula Ruban மனிதம் இறந்து போகும் மண்ணில் மனிதத்தைச் சுமந்து வாழ்பவன் சதா இறந்து கொண்டே இருக்கிறான். கவிஞரின் இறப்பு எல்லோரினதும் இறப்பே

6. Malini Mala மிக வேதனையான விடயம் ஆழ்ந்த இரங்கல்கள். நீங்கள் பதிவிட்ட அவரது பதிவுகள் தொடராக மனவழுத்தத்தைப் பிரதி பலித்துக் கெண்டே இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் மனிதர்கள் முகநூல் நட்புகலோடுகூட அல்ல முகநூலோடு தான் அதிகம் பேசிக்கொள்கிறார்கள்.அவர்களது உணர்வுகளை தொடராக அதிலே தான் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.அதிலும் எழுத்துப் புலமை உள்ளவர்கள் என்றால் மிக நாசுக்காக வெளிப்படுத்துகிறார்கள கூர்ந்து பார்த்தல் மன அழுத்தம் புரியும் அவர்களை புரிந்த நெருங்கியவர்கள் கூட அதன் ஆழத்தை புரிவதில்லை கிண்டல் ஸ்மைலி விருப்புக்குறிஇட்டுக் கடக்கிறார்கள். அடுத்தநாள் அவர்கள் இறந்த செய்தி வருகிறது. நான் கண்டு இது முதல் செய்தி அல்ல. இந்தப் பதிவுகளை புரிந்து கொள்வோர் நெருங்கும் தூரத்தில் இருந்தால் அவர்கள் தனிமையை தவிர்த்து விடல் நல்லது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R