லண்டனில் எஸ்.அகஸ்தியரின் 20 ஆம் ஆண்டு நிறைவும் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச்சிதறல்’ நூல் வெளியீடும்‘இலங்கையிலும்;, அகஸ்தியர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து வந்ததின் பின்னரும் அவருடன்  மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்ததையும்; தனது ‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்’ என்ற தனது நூலுக்கு அகஸ்தியர் அணிந்துரை வழங்கி அதனை நூலாக்கம் பெறுவதற்கு உதவினார் என்றும்’ லண்டன் ஹரோ நகராட்சி  மன்ற உறுப்பினர் மண்டபத்தில் இடம்பெற்ற ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் அகஸ்தியரின் 20ஆம் ஆண்டு நிறைவும், நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ நூல் வெளியீட்டில் உரையாற்றும்போது லண்டன்; புதினம் ராஜகோபால் அவர்கள் தெரிவித்தார். அகஸ்தியரின் துணைவியான நவமணியின் பிரசன்னம் தன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவதாயும், அகஸ்தியரின் முற்போக்கு எழுத்துக்களுக்கு நவமணி பக்கபலமாகத் திகழ்ந்தாகவும், அவரின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வத்துடன் செயல்படுவதாகவும்’ மேலும் அவர் தெரிவித்தார்.

‘20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அகஸ்தியர் போன்ற சமூக சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு இலங்கையின் தேசிய பத்திரிகைகள் தயக்கம் காட்டின என்றும் ஆனால் அகஸ்தியர் அவர்கள் தனது பொதுவுடமைக் கொள்கையிலிருந்து தளராமல், பேனாவை வலிமை மிகுந்த ஒரு ஆயுதமாகக்கருதி, மக்களோடு  பின்னிப்பிணைந்த தத்துவங்களை படைப்புகளாக்கி, தொடர்ந்த அவரது எழுத்தாற்றலால் மிகுந்த செல்வாக்கை பெற்றார்’ என்று மூத்த பத்திரிகையாளர் பொன் பாலசுந்தரம் அவர்கள் அகஸ்தியர் பற்றிப்பேசுகையில் தெரிவித்தார். புரட்சிகர எண்ணங்களால் ஆகர்ஷிக்கப்பட்ட அகஸ்தியர் மக்களின் அபிலாசைகளை கருப்பொருளாகக் கொண்ட படைப்புக்களால் ஒரு புதிய மக்கள் யுகத்தை அமைக்க முடியும்; என்பதை வாழ்நாள் பணியாகக் கருதியவர் அகஸ்தியர்’ என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

முற்போக்கு எழுத்தாளரும் மிருதங்கக் கலைஞருமான அகஸ்தியரின் நினைவு விழாவின்போது அவரது பேரனான செல்வன் அகஸ்ரி ஜோகரட்னத்தின் மிருதங்க இசையுடன் செல்வன் பிரவீன் பிரதாபனின் புல்லாங்குழல் இசையும் இணைந்து டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் பல பாடல்களை இசைத்து சபையோயோரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று, மறைந்த கலைஞர்களை நினைவு கூர்ந்தமை இவ்விழாவுக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது.

‘பத்திரிகைக் கடிதம் மூலம் ஏற்பட்ட நவஜோதியின் அறிமுகம் தமது 50 ஆவது திருமண ஆண்டுவிழா விழா தமது குடும்பத்துடன் இடம்பெற்றவேளை தனது சொந்த மகள்போல் வந்து சிறப்புரை ஆற்றிருந்தார். லண்டன் ஜிரிவி தொலைக்காட்சியிலும், வானொலியிலும் தனது சேவைகள் குறித்து நேர்காணல்களை மேற்கொண்ட நவஜோதி துடிதுடிக்கும் ஒரு பெண்ணியல் வாதியாவார். ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த  நூல்மூலம் லண்டன் வாழ் 3;0 பெண் சாதனையாளர்களை ஒரே மேடையில் ஏற்றியுள்ள சாதனையும் அவரின் திறமையையும் ஆளுமையையும் வெள்ளிட மலையாய் எடுத்துக்காட்டுகின்றன’ என்று பேராசியர் கோபன் மகாதேவா தனது வாழ்த்துரையில்; குறிப்பிட்டுப் பேசினார்.  அவரது  தந்தை எஸ்.அகஸ்தியர் குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைப் பத்திரிகையில் தான் ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையை எழுதி மிகுந்த வரவேற்பைப்; பெற்றதையும் அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

லண்டனில் எஸ்.அகஸ்தியரின் 20 ஆம் ஆண்டு நிறைவும் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச்சிதறல்’ நூல் வெளியீடும்

 

‘பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாமுகம், குயு வுஏ யில் இடம்பெற்றுவரும் மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியின் மூலம் 400 வரையான நேர்காணல்களை மேற்கொண்டிருந்தார். அதில் 33 பெண்களின் ஆளுமைகளைத் தொகுத்து லண்டன் வாழ் பெண்களின் வரலாற்றுத் தொகுப்பாக 300 பக்கங்களில் வெளியிட்டமை தனிச்சிறப்பாகும். மண்டபம் நிறைந்த பத்திரிகையாளர்கள், ஓவியர்கள் இசை நடனக்; கலைஞர்கள், எழுத்தாளர்கள், வைத்தியர்கள் போன்ற அறிஞர்கள் இவரது கவிதை மற்றும் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஒன்று கூடியமை புதிய நிகழ்வாகும்’ என்று ஊடகவியலாளர் திரு நடாமோகன் தனது சிறப்புரையில் தெரிவித்தார். லண்டனின் முதல் தமிழ் வானொலியான ‘சண்றைஸ்’ மூலமாக செய்திகளை வாசிக்க ஆரம்பித்த நவஜோதி தற்போதைய இணையத் தொலைக்காட்சிவரை பாரிய சவால்களை எதிர்கொண்டு அயராது உழைப்பவர்’ என மேலும் தெரிவித்தார்.

‘லண்டன் கீழைத்தேச நுண்கலை அமைப்பின் பட்டமளிப்பு விழாக்களில் மேடை அறிவிப்பாளராக தன்னை வெளிக்காட்டிய நவஜோதி அந்த அமைப்பின் பரீட்சைகளின்போது மேற்பார்வைப் பணிகளுடன் ஈடுபடுவதுடன், இவ்வருடம் இத்தாலியின் ‘பலர்மோ’ நகரில் இடம்பெற்ற கலைவிழாவில் எமது அமைப்பின் சார்பில் நவஜோதி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்’ என்று ழுநுடீடு அமைப்பின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் தனதுரையில் தெரிவித்தார்.

‘சிறுவயது முதல்; திரு. அகஸ்தியரின் எழுத்துக்களையும், அவரது புரட்சிகர கருத்துக்களையும் அவதானித்து வந்ததையும், சமூக சீர்திருத்தத்தில் அவர் கொண்ட ஈடுபாடுகளையும், போராட்டங்களையும் நினைவுபடுத்தி இன்று அவரது மகள் நவஜோதி ‘மகரந்தச் சிதறல்’ நூலை வெளியிடுவது பெருமைக்குரியதென’ என்று அகஸ்தியர் பிறந்த இடமான ஆனைக்கோட்டையைப்; பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் சுரேஷ் துரைரட்னம் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.

 செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம்  மிருதங்கம் , செல்வன்  பிரவீன் பிரதாபன் புல்லாங்குழல் இசையின் போது

[- செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம்  மிருதங்கம் , செல்வன் பிரவீன் பிரதாபன் புல்லாங்குழல் இசையின் போது -]

‘ஹரோ நகரில் கடந்த 20 ஆண்டுகாலமாக வாழ்ந்து பலவிதத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்திய நவஜோதியை 2015 ஆம் ஆண்டு ஹரோ நகராட்சி மன்றம் அவரை கௌரவித்து விருது வழங்கியபோது, அவ்வாண்டு ஹரோ நகர மேயராக இருந்த எனக்கு பெருமையாக இருந்தது’ என்று திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்தார்.

‘தன்னலம் கருதாமல் பொதுநலம் விரும்பி 33 லண்டன்வாழ் பெண்களின் நேர்காணல்களை நூலாக்கியிருப்பது மெச்சத்தக்க விடயம். எமது ‘கலா அஞ்சலிக் கலை’க்குழுவை பாராட்டுவதிலும் நவஜோதி முன்நிற்பவர்’ என்று முன்னாள் ஆங்கில பாடசாலையின் ஆசிரியரும், ஹரோவில் தமிழ் பாடசாலைகளை ஆரம்பித்தவர்களில் ஒருவரான புனிதா பேரின்பராஜா தெரிவித்தார்.

‘புதிய வடிவில் புதிய உத்திகளுடன் இந்த நூலை நவஜோதி வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. முன்னுரையில் நவஜோதி குறிப்பிட்டது போன்று பிரபல அமெரிக்க எழுத்தாளர் ‘மார்க் ருவைன்’ இன் கருத்துப்படி பேசப்படும் வார்த்தை என்பது ஒன்று, எழுதப்படும் வார்த்தை என்பது பிறிதொன்று. பேசப்படும் ஒன்றிற்கு அச்சு ஊடகம் பொருந்தி வராது என்ற கருத்தை முன்வைத்து நவஜோதி பல சிரமங்களுக்கிடையில் இந்நேர்காணல்களை எழுத்து வடிவில்  ஆக்கியது லண்டனில் முதல் தமிழ் பெண் ஆற்றிய புதிய முயற்சி’ என்று நாழிகை ஆசிரியர் மகாலிங்கசிவம் அவர்கள் தனது வெளியீட்டுரையில் தெரிவித்தார்.

‘33 வண்ண மலர்களான பெண்களின் ஆளுமைகளை கண்ணூடாக வெளிப்படுத்தும் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னத்தின் கைவண்ணத்தில் அமைந்த அட்டைப்படம் பாராட்டுக்குரியது. ஒரு தசாப்தத்துக்குரிய வரலாற்றுப்பதிவாக இந்நூலைப்பார்க்கமுடிகிறது’ என்று நூலை பல கோணங்களிலிருந்த சிறப்பாக விமர்சித்த திருவேணி சதீஸ்குமார் தெரிவித்தார்.

செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் செல்வன் மிருதங்கம்ää  பிரவீன் பிரதாபன் புல்லாங்குழல் இசையின் போது

பெண்கள் யாவரும் ஆளுமை படைத்தவர்கள். ஆனால் வாழ்வின் துன்பியல்களால் வௌ;வேறு  வழிகளில் தம்மை ஈடுபடுத்தி ஆளுமை மிக்கவர்களாகின்றனர். தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா, நிர்மலா ராஜசிங்கம், மீனாள் நித்தியானந்தன், உதயகுமாரி பரமலிங்கம் (நிலா), மாதவி சிவலீலன், ராஜேஸ்வரி சிவம் போன்ற இந்நூலின் 33 பெண்கள் பற்றிய முயற்சிகள் போன்றுதற்குரியது என்று’ தோழர் வேலு தனது விமர்சன உரையில் குறிப்பிட்டிருந்தார்.

‘ வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் நேர்காணல்கள் செய்யும்போது சுவையான அனுபவங்களும், சிக்கலான  அனுபவங்களும் ஏற்படுவதுண்டு. ‘மகரந்தச் சிதறல்’ நூலில்  நவஜோதி பற்றி அல்லாமல் லண்டன் வாழ் 33 பெண் ஆளுமைகளை வெளிக் கொண்டுவந்து சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய முயற்சி’ என்று இவ்விழாவிற்கு தலைமை வகுத்த பிரபல ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா தனது தலைமையுரையில் தெரிவித்தார். நிகழ்ச்சி அறிவிப்புக்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் முன்னாள் ஊடகவிலாளரும் வழக்குரைஞருமான திரு. பீற்றர் யேசுதாசன் நிகழ்த்தியிருந்தார். அகஸ்தியரின் பேத்தியான செல்வி சுஜீறா நவஜீவா வரவேற்புப் பாடலை வழங்கியிருந்தார்.

நூலாசிரியர் நவஜோதி ஜோகரட்னம் தனது தந்தை அகஸ்தியரை நினைவிலிருத்தி தனது தாயாரான நவமணி அஸ்தியரை வாழ்த்தி ஏற்புரையை வழங்கியதோடு, திரு. ஜோகரட்னம் சிறப்புடன் நன்றியுரையை வழங்கியிருந்தார். லண்டனின் பல்வேறு நிகழ்வுகளின் மத்தியில், மண்டபம் நிறைந்த பல்கலை அறிஞர்களுடன் பெண் ஆளுமைகள் பலர் கூடுதலாக வருகை தந்திருந்தமை மிகச் சிறப்பாகக் காட்சியளித்தது.

20.12.2016


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R