செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று 'நந்திக்கடல்' . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் 'அன்பு புத்தகசாலை'யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்சப்பறவைகள்'. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே 'நந்திக்கடல்' யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: 'தற்போது நூலகத்தில் 'நந்திக்கடல்' நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக 'நூலகம்' தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( 'மறுமலர்ச்சி', 'கலைச்செல்வி' இதழ்கள் உட்பட).

இவ்விதமாக 'நூலகம்' தளமானது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஆவணச்சுரங்கமாக உருமாறிக்கொண்டிருக்கின்றது. இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் கல்வி கற்கும் பட்டப்படிப்பு மாணவர்களை அவர்களை வழி நடாத்தும் பேராசிரியர்கள் 'நூலகம்' போன்ற தளங்களைப்பாவித்து, ஈழத்துத்தமிழ்ப்படைப்பாளிகள் பற்றி, ஈழத்தில் வெளியான தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் பற்றி ஆய்வுகளைச்செய்யத்தூண்ட வேண்டும். அவ்விதம் செய்யப்படும் ஆய்வுகளை நூலாக வெளியிட வேண்டும். அவ்விதம் செய்தால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த வளம் சேர்த்ததாக அவ்வாய்வுகள் அமையும்.

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நூலினைக் கீழுள்ள இணைப்பினில் வாசிக்கலாம்:
http://noolaham.net/project/172/17152/17152.pdf

'நந்திக்கடல்' நாவலை இலேசாகப்புரட்டியபோது அதனொரு பக்கத்திலிருந்த கீழுள்ள வசனங்கள் ஒருகணம் நெஞ்சினை அதிர வைத்தன:

"இக்கடலுக்கு நந்திக்கடல் என்று பெயர்! நந்தி போன்று மிகவும் அமைதியான கடல்... குமுறலற்ற கடல்.. ஆனால் , சில காலங்களில் வெறி கொண்டது போல குமுறத்தொடங்கும்... அக்காலங்களில் இம்மாளிகையின் அடித்தளம் வரை கடலலைகள் தவழ்வதுண்டு." (பக்கம் 25)

அண்மையில் நந்திக்கடலில் முடிவுற்ற ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம்தான் ஒரு கணம் நினைவுக்கு வந்தது.

நந்திக்கடல்.. எவ்வளவு பொருத்தமான பெயர். இன்னுமொரு விடயம்: நாவலில் மேற்படி கூற்றுக்குச்சொந்தக்காரன் காக்கை வன்னியன்.


ஆச்சி வீட்டுப் பரணும், பால்ய காலத்து வாசிப்பனுபவமும்..

உறவுக்கு அப்பால்' - ந.பாலேஸ்வரிந.பாலேஸ்வரிஅமரர் ந.பாலேஸ்வரி இலங்கையின் இங்கையின் லக்சுமி என்று கூறலாம். ஜனரஞ்சக நடையிலான இவரது தொடர்கதைகள் பல இலங்கைத்தமிழ் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. வீரகேசரி பிரசுரங்களாக 'பூஜைக்கு வந்த மலர்', 'உறவுக்கு அப்பால்' ஆகிய நாவல்கள் வெளியாகியுள்ளன. நான் என் வாசிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் வாசிக்கத்தொடங்கிய தொடர்கதைகளிலொன்று ந.பாலேஸ்வரியின் 'எங்கே நீயும் நானும் அங்கே' நாவல்தான். சுதந்திரன் பத்திரிகையில் எழுபதுகளில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தொடர்கதையின் ஓரிரு அத்தியாயங்களை மட்டுமே வாசித்துள்ளேன். என் மாணவப்பருவத்தில் ஓரிரு அத்தியாயங்களை மட்டுமே வாசித்ததாலும், அக்காலகட்டம் என் பால்ய காலத்து அழியாத கோலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குவதாலும் பாலேஸ்வரியின் நூல்களை இணையத்தில் தேடும்போழுது அந்த நாவல் எங்காவது தென்படுகின்றதா என்று பார்ப்பது வழக்கம். அன்று நிறைவேறாத அந்த ஆசை இன்றாவது நிறைவேறுகிறதா என்று ஒரு நப்பாசைதான் :-) . இது போல் மேலுமிரு தொடர்கதைகளை ஓரிரு அத்தியாயங்களை மட்டுமே வாசித்திருந்ததால், அக்காலகட்டத்திலிருந்து இன்று வரை அவையும் என் நிறைவேறாத ஆசைகள்தாம்.

ஆச்சி வீட்டின் பரணைத்தேடினால் பல அக்காலகட்டத்துப் புதையல்கள் கிடைக்கும். அவற்றில் சில இன்னும் ஞாபகத்திலுள்ளன. மறைமலையடிகளின் 'நாகநாட்டரசி குமுதவல்லி', 'கோகிலாம்பாள் கடிதங்கள்' மற்றும் தடித்த அளவிலான 'திப்புசுல்தான்' நாவல் (எழுதியவரின் பெயர் ஞாபகமில்லை), பழைய தினத்தந்தி பத்திரிகைகள், ராணி இதழ்கள் சில... இவ்விதம் ஆச்சி வீட்டுப் பரண் எனக்கொரு புதையல்தான்.

அவ்விதம் கிடைத்த ராணி வார இதழில் வெளிவந்த பேய்க்கதை மன்னன் :-) நாஞ்சில் பி.டி. சாமியின் 'அழகியின் ஆவி', மற்றும் சரித்திரக்கதைச்சிங்கம் கோவி மணி சேகரனின் 'ராஜசிம்மன் காதலி' (தினத்தந்தியில் வெளியானது) ஆகியவற்றின் சில அத்தியாயங்களை மட்டுமே வாசித்திருக்கின்றேன். அதனால் அவையும் பாலேஸ்வரியின் 'எங்கே நீயோ நானும் அங்கே'யுடன் என் நிறைவேறாத பால்ய காலத்து ஆசைகளில் சிலவாக இணைந்து விட்டன.

வாசிப்பு வெறியாகப்பீடித்திருந்த பருவமது. முதன் முதலாக வாசிப்பின் இன்பத்தை அறிந்து, உணர்ந்து அவ்வின்பத்தில் திளைத்திருந்த பருவம் அது. அவ்விதமானதொரு சூழலில் அவ்வப்போது இவ்விதம் அகப்படும் தொடர்களின் ஓரிரு அத்தியாயங்களைப் படித்து விட்டு, முழுத்தொடரையும் படிக்க வேண்டுமென்று தேடித்திரிவது வழக்கம்.

நண்பர்களே! 'அழகியின் ஆவி'யையும் , 'ராஜசிம்மன் காதலி'யையும் இணையத்தில் எங்காவது கண்டால் அறியத்தாருங்கள். நிறைவேறாத என் ஆசையைத்தீர்த்து வையுங்கள் :-)

ந.பாலேஸ்வரி - உறவுக்கப்பால் http://noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D


கவிதை: பாணன் ஒருவனின் கவலை!

- வ.ந.கிரிதரன் -



கவிதை: பாணன் ஒருவனின் கவலை! - வ.ந.கிரிதரன் -

வரலாற்றினைத் திரிப்பது
பற்றிக்கூறினேன்.
அதற்குக் கவிஞர் கூறினார்
'திரிப்பதற்கு வரலாறு ஒன்றும் கயிறல்ல'.
இன்னுமோர் இலக்கியவாதி கூறினார்
'திரிப்பதற்கு வரலாறு ஒன்றும்
உளுத்தம் மாவுமல்ல'.
இடையில் புகுந்து மேலுமொரு
திறனாய்வாளர் செப்பினார்:
"திரிப்பதற்கு
வரலாறு ஒன்றும்
விளக்குத்திரியோ அல்லது
வெடிகுண்டுத்திரியோ ,
வெடிக்கும் பட்டாசுத்திரியோ அல்ல"
இன்று நான்
இம்பர் வானெல்லை
இராமனையே பாடிய
பாணனாக அலைந்து
திரிகின்றேன், மேலுமேதாவது
'திரி'ப்பதற்குக் கிடைக்குமா
என்று.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R