- வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. -

யாழ் இந்துக்கல்லூரிச்சங்க வருடாந்த இராப்போசன நிகழ்வினில்..

நேற்று நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரின் வருடாந்த இராப்போசன இரவு  'ஸ்கார்பரோ கொன்வென்சன் சென்ட'ரில் நடைபெற்றது. வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளைத்தவிர்ப்பவன் நான். ஆனால் இம்முறை நண்பர்கள் பிறேமச்சந்திரா, கனகவரதா ஆகியோர் கூடுதலாக யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தில் இணைந்து செயற்பட்டதாலும், நண்பர் கீதானந்தசிவமும் செல்வதற்கு ஆவலுடன் இருந்ததாலும் செல்வதற்கு முடிவெடுத்தேன்.

பாடசாலைக்காலத்து நண்பர்கள் பலரைச் சந்திக்கலாம், எமக்குக்கற்பித்த ஆசிரியர்கள் பலரைச்சந்திக்கலாம் என்பதாலும் செல்வது நல்லதே என்று தோன்றியது.

கூடவே நண்பர் கனகவரதாவின் பரிந்துரையின் பேரில் ஈழத்துத்தமிழ்த்துள்ளிசைப்பாடகரான அமுதன் அண்ணாமலையின் இசைக்கச்சேரியும் நடைபெற ஏற்பாடாகியிருந்ததால், அவரது பாடல்களையும் நேரில் மீண்டுமொருமுறை கேட்டு மகிழலாம் என்ற எண்ணமும் மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆவலைத்தூண்டியது.

கனடாத்தேசிய கீதம், கல்லூரிக்கீதம் மற்று, தமிழ்த்தாய் வணக்கம் ஆகியவற்றை முறையே செல்வி வைசாலி கிருஷ்ணானந்தன், கலாநிதி மைதிலி தயாநிதி மற்றும் சிவை சுபதரன் ஆகியோர் பாடி நிகழ்வினைத்தொடக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மைப்பலிகொடுத்த போராளிகள் அனைவருக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரவேற்புரையினை திரு. ரவீந்திரா கந்தசாமி நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடன நிகழ்வு நடைபெற்றது.  தொடர்ந்து சங்கத்தலைவர் திரு. மோகன் சுந்தரமோகனின் தலைமையுரையும், அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட திரு.பிரபா சந்திரனின் உரை நிகழ்ந்தது.  இவர் அமெரிக்க மத்திய அரசின் பாதுகாப்புத்திணைக்களத்தில் பணிபுரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து Hips Don't Lie Dance அமைப்பினரின் மேனாட்டு நடன நிகழ்வும், யாழ் இந்துக்கல்லூரிச்சங்கத்தினரின்(கனடா) இதுவரை காலச்சாதனைகளை விளக்கும் காணொளி மண்டபத்தின் சுவர்களில் வைக்கப்பட்டிருந்த 'மானிட்டர்'களில் காட்டப்பட்டது.  அதனைத்தொடர்ந்து இதுவரை காலமும் சங்கத்தின் தலைவர்களாக இருந்தவர்களின் சேவையினை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் மேடையில் கெளரவிக்கப்பட்டார்கள். தலைவர்களாக இருந்தவர்களின் விபரம் வருமாறு: திரு.எஸ்.சிற்றம்பலம், திரு.கே.கனகராஜா, திரு.நாதன் சிறீதரன், 'காப்டன்' எஸ்.சந்தியாப்பிள்ளை, திரு.பொன் விவேகானந்தன், திரு.பொன்.பாலேந்திரன் மற்றும் திரு. கதிர் சுப்ரமணியம்.

தொடர்ந்து செல்வி வைசாலி கிருஷ்ணானந்தனின் இசை நிகழ்வும், அதனைத்தொடர்ந்து பல்துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அவர்களது சாதனைகளைக்கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. அவ்விதம் விருது பெற்றவர்கள் விபரங்கள் வருமாறு: பேராசிரியர் சிவா சிவதயாளன் (கல்வித்துறைச்சாதனைகளுக்காக), திரு.சபா குரு (தொழில் முனைவர்), திரு.செல்வா செல்லையா (நிறுவனத்தலைமைத்துவம்), திரு, சிவரூபன் மயிலுப்பிள்ளை (யாழ் இந்துக்கல்லூரிச்சமூகத்துக்கான சேவைப்பங்களிப்பு) மற்றும் திரு.ரூபானந்தசிவம் சிவனடியான் (சர்வதேசத்துடுப்பெடுத்தாட்டச்சபையின் மத்தியஸ்தர்).

விருது வழங்கும் நிகழ்வின் இடையில் Hips Don't Lie Dance அமைப்பினர் மேனாட்டு நடன நிகழ்வினால் சபையினரை மகிழ்வித்தனர்.

அதனைத்தொடர்ந்து இராப்போசனமும், தொடர்ந்து துள்ளிசைப்பாடகர் அமுதன் அண்ணாமலையின் துள்ளிசைப்பாடல்களும், சபையோரின் நடன நிகழ்வும் நடைபெற்றன. அமுதன் அண்ணாமலையின் நிகழ்வின்போது எதற்காக சுவர்களிலுள்ள 'மானிட்டர்களில்' விளம்பரங்களைக்காட்டினார்களோ தெரியவில்லை. இதனால் இராப்போசனம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் அமுதன் அண்ணாமலை பாடிக்கொண்டிருந்ததை அவருக்கு அருகில் இருந்தவர்கள் மட்டுமே கண்டு களிக்கும் நிலை உருவானது. அமுதன் அண்ணாமலையின் நிகழ்வின்போது அனைத்து 'மானிட்டர்'களிலும் அவரது இசை நிகழ்வு காட்டப்பட்டிருக்க வேண்டும். எதிர்வரும் நிகழ்வுகளில் இதுபோன்ற குறைகளைச் சங்கத்தினர் தவிர்ப்பார்களாக. மேலும் நிகழ்ச்சி நிரலின்படி இராப்போசனம் நடைபெற்றிருக்க வேண்டிய நேரம் 9.05 pm. ஆனால் நடைபெற்றபோதோ நேரம் பத்து மணியை நெருங்கி விட்டது. இதுபோன்ற குறைப்பாடுகள் எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்கச் சபையினர் இவற்றைக்கவனத்திலெடுக்க வேண்டும்.

நிகழ்ச்சி நிரலில் இல்லாத சில நிகழ்வுகளும் நடைபெற்றன. ஆசிரியர் புண்ணியமூர்த்தி அவர்களைக் கெளரவித்தது, கனடியப் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரியின் உரை ஆகியவற்றைக்குறிப்பிடலாம்.

இந்த நிகழ்வின் முக்கியமான, ஆரோக்கியமான அம்சங்களாக: இதுவரை சந்தித்திராத ஆசிரியர்கள், அந்நாள் நண்பர்கள் பலரைச்சந்திக்க முடிந்தது,  இலவசமாக நண்பர்களுடன் இணைந்து நின்று புகைப்படம் எடுக்கும் வசதி போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

மேற்படி நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இரண்டினையே இங்கு நீங்கள் பார்க்கின்றீர்கள். முதல் படத்தில் இடமிருந்து வலமாக: நண்பர் சிவகுமார், நான், ஆசிரியர் சந்தியாப்பிள்ளை, அவரது துணைவியார் , நண்பர் கீதானந்த சிவம் மற்றும் நண்பர் குருபரன்.

இரண்டாவது படத்திலுள்ளவர்கள் (இடமிருந்து வலமாக): முதலாவதாக நிற்பவரின் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை, நாராயணமூர்த்தி (கனடா மூர்த்தி), நண்பர் சிவகாந்தன், நண்பர் சிவகுமார், நண்பர் குருபரன், நண்பர் கனகவரதா, நண்பர் பிறேமச்சந்திரா, நண்பர் சுகுமார், நண்பர் பரதன், நான் மற்றும் நண்பர் கீதானந்தசிவம்.

மேற்படி நிகழ்வில் சந்தித்தவர்களில் சிலர்: எழுத்தாள நண்பர் அருண்மொழிவர்மன், 'உதயன்' லோகேந்திரலிங்கம், ஆசிரியர் சோமசேகரசுந்தரம், நண்பர் விமல் ஐயாத்துரை. பரதன் நவரத்தினம், கனடா மூர்த்தி. சங்கத்தினரின் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்தும் வகையில் மண்டபம நிறைந்து காணப்பட்டது.

யாழ் இந்துக்கல்லூரிச்சங்க வருடாந்த இராப்போசன நிகழ்வினில்..

 

ஆசிரியர் சந்தியாப்பிள்ளை அவர்களிடம் எனது ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயின்றிருக்கிறேன். ஒருவருடம்தான் அவரிடம் படித்திருந்தாலும், அவ்வகுப்பில் அவர் எமக்குப் போதித்த பண்புகமிகு நடவடிக்கைகள் காரணமாக அவர் மறக்க முடியாத ஆசிரியர்களிலொருவராக என் மனதில் நிலைத்து நின்றுவிட்டார். எமக்கு  வகுப்புக்கு அண்மையிலிருந்த வீதிவழியாக ஏதாவது மரண ஊர்வலம் செல்லும்போதெல்லாம், இறந்தவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் எம்மையும் எழுந்து நின்று அஞ்சலி செய்யச்சொல்வார்,

'சந்தியாப்பிள்ளை மாஸ்ட்டரின்' மார்க்கண்டேயரைப்போன்ற என்றும் குன்றா இளமையின் இரகசியம் தானென்ன? ஒவ்வொரு தடவை இவரைக்காணும்போதெல்லாம் என்னை வியக்க வைக்கும் வினா இது. அவரைச்சந்தித்ததும், அவருடன் சேர்ந்து புகைப்படமெடுத்ததும் நிகழ்வில் மகிழ்வினைத் தந்த விடயங்கள்..

இந்நிகழ்வில் நான் சந்தித்த நண்பர் சிவகாந்தன் என்னுடன் கல்விப்பொதுத்தராதர (உயர்தர) வகுப்பில் , யாழ் இந்துக்கல்லூரியில் படித்தவர். அவரை அன்று சந்தித்தற்குப் பின்னர் இந்நிகழ்வில்தான் சந்தித்திருக்கின்றேன். பல வருடங்களுக்குப் பின்னர் இவரைச்சந்தித்திருக்கின்றேன்.

என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் நண்பர்கள் சிலர் நிகழ்வுக்குக் கொண்டுவரும்படிகூறி வாங்கினார்கள். அவர்களுக்கும் நன்றி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R