வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பார்கள். கவிதையுலகில் ஹைக்கூக்களும் கடுகைப்போலிருந்தாலும், வாசிப்பவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தில் மிகவும் வலிமையானவை.

ஹைக்கு வகைக்கவிதைகளை இயற்ற விரும்புபவர்கள், இவ்வகைக்கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் எனப்பல்வகைக் கவிதைப்பிரியர்களுக்கும் உறுதுணையாகவிருந்து வழிகாட்டும் நல்லதொரு வழிகாட்டிதான் ' Haiku in English' (ஆங்கிலத்தில் ஹைக்கூ) என்னும் கைக்கடக்கமான இச்சிறு நூலும். இதனை எழுதியவர் ஹரோல்ட் ஜி. ஹென்டெர்சன் ( Hraold G.Henderson. இச்சிறுநூலினை வெளியிட்டிருப்பவர்கள் இச்சிறுநூலினை வெளியிட்டிருப்பவர்கள்: Charles E. Tuttle Co.

நூல் அறிமுகக் குறிப்பு, ஜப்பானியக் ஹைக்கு, ஆங்கிலத்தில் ஹைக்கூ, ஹைக்கூவை எழுதுதலும்,  கற்பித்தலும், அநுபந்தம் ஆகிய பிரிவுகளாக விளங்குகின்றது.

ஹைக்கூவானது ஜப்பானியர்களால் பல நூறு வருடங்களாகப் பாவிக்கப்பட்டுவரும் கவிதை வடிவம். தமிழில் திருக்குறள் ஈரடிகளில் , குறள் வெண்பாவாக , ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அமைந்திருப்பதுபோல் , ஜப்பானியக் ஹைக்கூவும் மூன்று அடிகளில் , சில கட்டுப்பாடுகளுக்கு அமைய எழுதப்படும் குறுங்கவிதை வடிவம். ஜப்பானியக் கவிதையின் பொதுவான அம்சங்களாக அல்லது விதிகளாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:

1. மூன்று அடிகளில் 17 அசைகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். முதல் அடியில் 5 அசைகளையும், இரண்டாவது அடியில் 7 அசைகளையும், மூன்றாவது அடியில் 5 அசைகளையும் கொண்டதாக ஜப்பானியக் ஹைக்கூ இருக்க வேண்டும்.

2. ஹைக்கூவானது இயற்கையுடன் சம்பந்தப்பட்டதாக நிச்சயம் இருக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் (event) பற்றியதாக இருக்க வேண்டும்.

4. அந்தச் சம்பவமானது நிகழ்காலத்தில் நடப்பதாக நிச்சயம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடப்பதாக இருக்கக்கூடாது.

இந்த ஐந்து விதிகளும் முற்று முழுதாகக் கடைப்பிடிக்கப்படுவதென்பதுமில்லை. சில சமயங்களில் சில விதிகளை மீறிய புகழ்பெற்ற ஹைக்கூக்களுமுள்ளன. குறிப்பாக அதிகமாக மீறப்படும் விதியாக முதலாவது விதியினைக் கூறலாம். தமிழில் கூட ஆசிரியப்பாவுக்குரிய ஈரசைச்சீர்களாக (தேமா, புளிமா ஆகிய) இருக்க வேண்டும். ஆனால் ஆசிரியப்பாக்களில் கூட அவ்வப்போது சில சமயங்களில் மூவசைச்சீர்களும் ஈரசைச்சீர்களும் கலந்து பாவிக்கப்படுவதுண்டு. அது போன்றதுதான் இதுவும். பல புகழ்பெற்ற ஜப்பானியக் ஹைக்கூக் கவிஞர்களே அவ்வப்போது இந்த விதியினை மீறியிருக்கின்றார்கள். 5-7-5 ற்குப்பதிலாக 6-7-5 அசைகளில் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஹைக்கூக்களுமுள்ளன,

இரண்டாவது விதி ஹைக்கூவானது இயற்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் இயற்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டுமென்பது எப்பொழுதுமே நேரடியாக வெளிப்படும் அம்சமாக இருக்க வேண்டுமென்பதில்லை. இருப்பதுமில்லை. சில வேளைகளில் பாவிக்கப்படும் சில சொற்கள் குறிப்பிட்ட பருவநிலையுடன் மறைமுகமாகச் சம்பந்தப்பட்டதாகக் கூட இருக்கலாம். உதாரணமாகக் கனடா வாத்துகளின் வருகை இளவேனில் காலத்தைக் குறிப்பதாக இருக்கலாம்.

மூன்றாவது மற்றும் நான்காவது விதிகள் குறிப்பிட்ட சம்பவத்தை, நிகழ்காலத்தில் கூறுவதாக நிச்சயம் அமைந்திருக்க வேண்டும்.

உண்மையில் ஹைக்கூவானது வாசகர் ஒருவருக்கு கவிஞரின் உணர்வினைப் புரிந்துகொள்ளும் அனுபவத்தினைத்தர வேண்டும். அதாவது ஒரு நிகழ்காலத்துச் சம்பவம், இயற்கையுடன் சம்பந்தப்பட்ட சம்பவம், கவிஞர் ஒருவருக்கு ஏற்படுத்தும் பாதிப்பின் விளைவாக அவர் அடையும் உணர்வின் வெளிப்பாடே ஹைக்கூ. அந்தக் கவிஞரின் உணர்வின் வெளிப்பாட்டினை அதனை வாசிக்கும் வாசகர் ஒருவரும் அனுபவித்து உணர்கின்றார். பொதுவாகக் கவிதைகள் அனைத்துமே உணர்வின் வெளிப்பாடே என்றாலும், ஹைக்கூக் கவிதைகள் இயற்கையுடன் சம்பந்தப்பட்ட, ஒரு குறிப்பிட்ட நிகழ்காலத்துச் சம்பவமொன்று கவிஞரிடத்து ஏற்படுத்தும் உணர்வின் வெளிப்பாடுகள் என்ற வகையில் வேறுபடுகின்றன எனலாம்.

J.W. Hackett என்பவர் 'ஹைக்கூக் கவிதை' (Haiku Poetry - Tokyo,  Hokuscido Press, 1964) என்னும் நூலின் ஆசிரியர் ஹைக்கூக் கவிதைகள் எழுத விரும்புவோருக்குக் கூறும் முக்கியமான ஆலோசனைகளில் சிலவற்றையும் நூல் விபரிக்கின்றது. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமானது என்பதால் கீழே பட்டியலிட்டிருக்கின்றேன்.

இயற்கையைக் கூர்ந்து கவனியுங்கள். முன்பு புலப்படாத பல அற்புதங்களை இயற்கை வெளிப்படுத்துவதை அப்பொழுது அவதானிக்கலாம். ஹைக்கூவானது அன்றாட வாழ்வைப்பிரதிபலிக்கும் கவிதை. பொதுவான , அன்றாடம் பாவிக்கப்படும் மொழியினையே பாவித்து ஹைக்கூ எழுதுங்கள்.  எதுகை, மோனைகளைப்பாவிப்பது ஹைக்கூ அனுபவத்தில்ச் சிதைப்பதாக, கவனத்தைத்திசை திருப்புவதாக அமைந்து விடும்.

மேலுமிந்தச் சிறு நூல் ஹைக்கூவைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதிலுள்ள, எழுதுவதிலுள்ள மற்றும் கற்பிப்பதிலுள்ள பல்வகைப் பிரச்சினைகளைப்பற்றியும் விபரிக்கின்றது; அறிவுரைகள் கூறுகின்றது. ஹைக்கூவைப்போல் அளவில் சிறியதானாலும், காரத்தில் அதிகமான ஹைக்கூப்புத்தகம் இந்தப்புத்தகம் நிச்சயம் ஹைக்கூ எழுத விரும்பும் அனைவருக்கும், ஹைக்கூவைப் புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் நல்லதொரு வழிகாட்டி என்று நிச்சயமாகக் கூறலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R