-பிரகாஷ் லக்ஸ்மணன் -சங்ககால நூல்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற புறநானூறு நூலானது அக்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சங்க கால மன்னர்கள் தங்களது சிறப்பகளாக பெரிதும் கொண்டிருந்த கொடைத்தன்மையானது மிக முக்கியமானதாக கருதிவந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக பல இடங்களை ஆய்வு செய்கிறபொழுது அவர்களது கொடைத்தன்மையின் பண்பை சில புலவர்கள் ஏற்றியும் கூறியுள்ளனர். மேலும் கடையெழு வள்ளல்கள் அவர்களது ஈகைப் தன்மை பற்றி இங்கே ஆய்வு செய்யபடுகிறது.

பாண்டியர்:

“தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!”(புறம்-6)
பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைத் தன்மையை புலவர் காரிகிழார் குறிப்பிடுகிறார். மேலும்
“-----------வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த”
(புறம்-9)

என்பதன் மூலம் முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைச்சிறப்பு பற்றி முக்கிய ஆதாரமாக நமக்குகிடைக்கிறது. பாண்டியன் பெருவழுதி பாணர்களுக்கு பரிசாக யானையை தந்தமையை

“பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றுஇது விறல்மாண் குடுமி!”(
புறம்-12) ல் குறிப்பிடப்படுகிறது. சேரர்:
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனின் கொடைக் குணத்தை புலவர் கபிலர் பின்வறுமாறு குறிப்பிடுகிறார்.

“பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை”

என்று பரிசாக பெறுதர்க்கு அரிய பொருளையும் பரிசாக கொடுக்கப் பட்டுள்ளதை இங்கே அறிய முடிகிறது.

சோழர்:

புறாவினது துன்பத்தை தீர்க்க தானே துளாக்கோளின் மீது ஏறி தன் தசையை தானமாகக் கொடுக்க வந்த சிபிமன்னனை பற்றி புநானூறு கூறுவதன் மூலம் கொடைத் தன்மையை பெரிதும் மதிப்பு கொண்டிருந்ததை நம்மால் அறிய முடிகிறது.

“புறாவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக”
(புறம்-39)

இப்பாடலின் மூலம் சோழன் குளமுறத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் மரபினைப் பற்றி பாடுவது சிறப்பு சேர்த்திருக்கிறது.

“தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரைபுக்க
வரையா ஈகை உரவோன் மருக!”(
புறம்-43) ல் சிபி மன்னனின் செயலை இங்கே பதிவு செய்யப்படுகிறது,

சோழர் மரபினைச் சேர்ந்த நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே ஏற்பட்டிருந்த போர் சு10ழ்நிலையை தவிர்க்க கோவூர் கிழார் சோழன் சிபி மன்னனின் சிறப்பை பற்றியும் குறிப்பிட்டு இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுதினார். இதன் மூலம் முன்னோர் செய்த கொடைச்சிறப்பு மாறாமல் பின்பற்றப்பட்டு வந்துள்ளமை நமக்கு விளக்குகிறது.

அதியமான்:
அதியமான் நெடுமானஞ்சயின் கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறும் விதமாக

“ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
புன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
துளைநாள் போன்ற விருப்பானன் மாதோ”(
புறம்-101)

இப்பாடலின் மூலம் அதியமான் அரசவைக்கு பரிசில் பெறவேண்டி வரும் புலவர்க்கு ஒருநாளும் முந்தைய நாள் கொடையை விட அதிகமாகவே தரப்பட்டுள்ளது சிறப்பித்து கூறுவதாக அமைந்திருக்கிறது,

பாரி:
வேள் பாரியின் கொடை பண்பை பற்றி பலவர் கபிலர் மழையைப் போலக் கைம்மாறு ஏதும் கருதாது கொடையை வழங்கபவன் என்று உயர்வுபடுத்தி சிறப்பித்து கூறுகிறார்.

“பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே
”(புறம்-107)

பாரியின் வள்ளல் தன்மையை பாடுவதாக
“ பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்”
(புறம்-108) ல்

பறம்பு மலையை பரிசாக பங்கிட்டு கொடுத்ததை இதன் மூலம் அறிய முடிகிது.

காரி:
மன்;னன் மலையமான் திருமுடிக்காரியின் கொடைகொடுக்கும் அளவு பற்றி குறிப்பிடப்படுகிறது.

“ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை யாயின்
பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!”(
புறம்-121)

இப்பாடலில் தன்னை தேடி வருகின்ற புலவர்க்கு பரிசில் வழங்கும் முன் அவர் தம் தகுதியை நன்கறிந்து அதற்கு ஏற்ப்ப பரிசு வழங்குக என்று கபிலர் அறிவுரை கூறும் விதமாக அமை;நதிரு;பபதன் மூலம் பரிசில் பெறணே;டி வந்த இரவலர்க்கு அளக்காது பரிசு வழங்கியதை அறியமுடிகிறது.

“-------ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளுர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே
”(புறம்-123)

இப்பாடலில் வருகின்ற இரவலர்க்கு பரிசாக தேரையும் கொடுத்தான் திருமுடிக்காரி என்று இதன் மூலம் அவனது கொடைச்சிறப்பு வலியுறுத்தப்படுகிறது.

புலவர்கள் பாடி பரிசில் வாங்கச் செல்லும் முன் நாள் கிழமையும் சரியல்ல என்றும் தீமை தரும் என உணர்த்தும் சகுணங்களைப் பார்த்தும் அன்றைக்கு மலையமான் காரியின் அவைக்கு சென்றாலும் திறன் சொல்லால் பாடினாலும் அவன் பரிசில் தருவான் என்று கூறுவதன் மூலம் புலவர்கள் பரிசில் பெறுவதற்க்கு நாள் கிழமையை பார்த்தனர் என்பதும் தெரிகிறது.

“நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
புதன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் இரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே
”(புறம்-124)

இதன் மூலம் நன்கு அறியலாம்.

ஆய் அண்டிரன்
வுள்ளல் ஆய்அண்டிரனின் கொடைச்சிறப்பினை பற்றி உரையூர் ஏணிச்சேரி முடமோசியார்

“ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்”(புறம்-127)


இதன் மூலம் கொடைக்கு கொடுத்தர்க்கு அரிய என “இழையணி” என்பது குறிக்கப்படுவது தாலி தான் என்று மா.பொ.சி அவர்கள் தம் நூலான “மங்கல அணி” என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும் இதனை தாலி அல்ல என்றும் திரு.அ.தட்சிணாமூர்த்தி தம் நூலான தமிழர் நாகரீகமும் பண்பாடு நூலில் “இழை” என்பதற்கு “அணி” என்ற பொதுப்பொருள் உண்டு என்றும் கூறுகிறார்.

திரு.கே.கே. பிள்ளை அவர்களும் மா.பொ.சியின் கருத்தை ஆதரிப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனினும் தன் மனைவிஅணிந்துள்ள மங்கல அணியை தவிர எல்லாவற்றையும் வழங்கினார் என்று புலவர் பதிவு செய்கிறார்.

மேலும் ஆய்அண்டிரன் இரவலராக வந்தவருக்கு யானைகளையும் பரிசாக வழங்கியுள்ளது கவனிக்கத் தக்கது ஆகும்.

“இரவலர்க்கு ஈத்த யானையின்”(புறம்-129) ன் மூலமு; விளங்குகிறது.
“------------நின்னாட்டு
இளம்பிடி ஒரு சு10ல் பத்து ஈனுமோ?
(புறம்-130) ஏன்றும்

“களிறுமிக உடையஇக் கவினபெறு காடே?” என்று புலவர் முடமோசியார் அண்டிரனின் நாட்டில் கொடையாக கொடுக்க அளவில்லாத யானையை பெற்றுள்ளான் என்பதையும் கூறுகிறார். பரிசில் பெறவேண்டி யான் வரவில்லை ஆயினும் அதை எற்காது பரிசில் வழங்கியதையும் கூறுகிறார்.

“இம்மை;ச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” (புறம்-134)

என்பதன் மூலம் சுயநலம் கருதாது கொடையறம் செய்பவன் அண்டிரன் என புகழப்படுகிறார்.

ஆய் அண்டிரன் கொடையைப் பற்றி ஒளவையர் பின்வருமாறுபாடுகிறார்

“-----------அன்னதோர்
தோற்றா ஈகையும் கொல்?” (புறம்-140) ல்

ஒளவைக்கு யானையை பரிசாக தந்தபொழுது இவ்வாறு பாடுகிறார்.

பேகன்:

பேகனின கொடைக்குணத்தை பற்றி கபிலர் பரனர் அடிசில்கிழார் பெருங்குன்றூர்கிழார் போன்றோர் பாடுகின்றனர்.

“எத்துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே”(புறம்-141) ல் பதிவு செய்கின்றார் புலவர்.

“கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படாண் பிறர் படைமயக் குறினே”(புறம்-142) ன் மூலம் இரந்து நிற்பவர் எத்தகுதியை பெற்றிருந்தாலும் வரையறை இன்றி கொடுக்கும் வண்மனம் படைத்தவன் என கூறுகிறது.

கபிலர் “ கைவள் ஈகைக் கடுமான் பேக!” என்றும் பாடுகிறார்.

பேகனின் கொடைத் தன்மையால் அவனின மனைவி நலிந்தவளாகி கூந்தலிலே நறும்புகையூட்டி தண்மலர் சு10டிட வழி இல்லாமல் இருப்பதாக கொடைக்கு பின் நிலையை பதிவு செய்கிறார்.

“ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய” என்பதன் மூலம் பேகனின் கொடைக்கு பிந்தைய அவனது மனைவியின் நிலையை எடுத்துகாட்டுகிறார்.

நள்ளி:
நள்ளியின் கொடை பற்றி வன்பரனர் என்பார் பாடியுள்ளார்.

“நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலைமருதம பண்ணிக் காணக்
கைவழி மருங்கிற செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அது நீ
புறவுக்கடன் பூண்ட வண்மையானே” (புறம்-149)

என்;று பாணர்களுக்கு பரில் வேண்டி மன்னரிடத்தில் மீண்டும் செல்ல தேவையில்லை என்று எண்ணி மாலைநேரமும் காலைநேரத்திலும் பண்பாடுவதை மறந்தனர் என்று புலவர் ஏற்றிக் கூறியுள்ளார்.

வல்வில் ஓரி:
ஓரியை பற்றியும் வன்பரனர் பாடியுள்ளார்.

“ஓம்பா ஈகை விறல்வெய் யோனே”(புறம்-152) மற்றும்
அளவில்லாத யானையை பரிசாக கொடுத்தனை
“மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்” (புறம்-153)

என்றும் ஓரியின் கொடைச்சிறப்பை கூறுகிறார்.

எழனி:
கொடை வள்ளல் எழுவருள் ஒருவரான எழினியை பற்றிய குறிப்பும் மிக குறைந்த அளவே கிடைக்கிறது.

“வளநீர்  வாட்டாற்று எழினியாதன்
கிணை யேம் பெரும!
கொழுந் தடிய சு10டு என்கோ?”

என்று கேள்வியை எழுப்பியும் அதற்கு அவன் செய்த சிறப்பு பற்றி பின் வருமாறு புலவர் குறிப்பிடுகிறார்.

“வள நனையின் மட்டு என்கோ?
குறுமுயலின் நினம் பெய்தந்த
நறு நெய் சோறு என்கோ?
திறந்து மறந்து கூட்டு முதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ?” (புறம்-396)

இப்பாடலில் அவன் தந்த கள்ளைச் சொல்வேனா? முயற்கறியிலே ஆக்கித் தந்த நெய்ச் சோற்றை சொல்வேனா? நேற்களஞ்சியத்தை திறந்து விட்டு வேண்டுமளவு எடுத்துக்கொள் எனக் கூறியதை சொல்லவா எனக் அவனது கொடைச் சிறப்பை வியந்து போற்றுகிறார். கடையெழு வள்ளல் எழுவரையும் குறிப்பிட்டு பாடும் பாடலாக பெருஞ்சித்திரனார்

“பறம்பின் கோமான் பாரியும்” – பறம்பு மலையை ஆண்ட பாரி

“கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்”- கொல்லி மலையை ஆண்ட ஓரி

“காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையனும்” –மலையமான் திருமுடிக்காரி

“கொடும் பூண் எழினியும்” – தகடூரை ஆண்ட எழினி

“பெருங்கடல் நாடன் பேகனும்” – என பேகன்

“மோசி பாடிய ஆயும்” – மோசியால் பாடப்பெற்ற ஆய்அண்டிரன்

“ஈயும் தகைசால் வண்மைக்
கோள்ளர் ஓட்டிய நள்ளியும்” – என நள்ளியை பற்றியும் (புறம்- 158) ன் மூலம் வழுவான ஆதாரமாக கிடைக்கிறது.

புலவர்கள் மட்டுமல்லாது வறுமையில் வாடிய குடிமக்களுக்கும் மன்னர்கள் பரிசாக ஆநிரைகளையும் எருதுகளையும் வழங்கியுள்ளதை அறியலாம்.

“மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கியோனே”(புறம்- 399) என்று இதன் மூலம் அறிய முடிகிறது.

முடிவுரை:
இவ்வாறாக புறநானூற்றுப் பாடல்களின் வாயிலாக சங்க கால மன்னர்களின் கொடைத் தன்மையும் கொடைத்தன்மை எத்தகைய தன்மை உடையதாக இருந்தன என்பதை மேற்கண்டவற்றின் மூலம் அறியலாம். மேலும் கொடை பண்பு மன்னர்களுக்கு பின்பும் அவர்களுடைய மரபினர் பின்பற்றுவதையும் அதனை பெருமையாக நினைக்கவும் செய்தனர் என்பதையும்; புறநானூற்று நூல் வாயிலாக நாம் தெளிந்து கொள்ளலாம்.

பார்வை நூல்கள்:
1.புறநானூறு மூலமும் உரையும் -புலியூர்க் கேசிகன்
2.தமிழர் நாகரீகமும் பண்பாடும்- அ.தட்சிணாமூர்த்தி
3.மங்கல அணி- மா.பொ.சி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R