ஆய்வு: நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே!முன்னுரை
தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் குறித்த கவிதைகள் விரவிக் கிடக்கின்றன. அறிவியல் வளர்ச்சி விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்து வருகின்றது. அந்நிலையைக் கண்டு பெருமைப்படுகின்றோம். அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு, நீர்நிலைகள், காற்று மண்டலம் அனைத்தும் மாசுபட்டு காணப்படுகின்றது.

இம்மாசினைக் கண்டு சமூக நலனில் அக்கறை கொண்ட கவிஞர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வைகைச் செல்வியின் ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள சூழலோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளைப் பார்ப்போம்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. சுற்றுச்சூழலில் நீர் ஒரு முக்கிய அங்கம். மனிதன் இருக்கும் வரை நீரின் தேவை அவசியம். அதனைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது சமூகத்தின் கடமை, நாகரிகம் வளராத காலத்தில் நீர்நிலைகள் தூய்மையாக இருந்தன. இன்று நாகரிக வளர்ச்சியின் உச்ச நிலையைத் தொட்டு விட்டது. நீர்நிலைகள் நரகமாகக் காட்சியளிக்கின்றன. தொழில் வளர்ச்சி என்ற புரட்சியால் நதிகளின் நிலைமாறியதைக் கவிஞர் வைரமுத்து, “சாயநீர் கலந்த நதிகள்
முதலில் நிறமிழந்தன
பின்பு நீரிழந்தன
சில நதிகளை அகழ்ந்தால்
தண்ணீர் கசிவதில்லை
வெண்ணிறக் குருதி
இன்று
கழிவுநீர் கலந்து
கறுப்பானது”1

காட்டுகின்றார் என்று சுட்டிக். சுhயப்பட்டறைகள் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. கழிவுகளைத் தூய்மை செய்து வெளியேற்றும் பணியை மேற்கொள்வதில்லை. நதிகளில் கழிவுகளைக் கலக்கின்றனர். இதனால் நீரின் நிறம் மாறுகின்றது. கழிவு நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ், குடல் புழுக்கள் மற்ற நோய்க் கிருமிகள் முதலிய பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன.

நீரின் தரம் குறையும் பொழுது கோடிக்கணக்கான நுண் கிருமிகள் உருவாகி அவற்றில் உள்ள உயிர்க்காற்றை உட்கொண்டு நீர்வாழ் உயிரினங்களை அழிக்கின்றன. சாயப்பட்டறைகள் நதிகளிலிருந்து வரம்பின்றி நீரை எடுத்துக்கொள்கின்றன. கவிஞர் இத்தகைய அவலநிலைகளைச் சமூகத்திற்கு உணர்த்துகின்றார்.

எண்ணெய் - கடல்
ஈரான் ஈராக் யுத்தத்தில் மனிதர்களின் அழிவைக் காட்டிலும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியது கடல்வாழ் உயிரினங்கள். எண்ணெய் பரவிக் கடலே எண்ணெயாகக் காட்சியளித்தது. கடல் தன்னைத்தானே சுத்திகரிப்பு செய்து கொள்ளும் திறன் வாய்ந்தது. இப்பணியினைப் பலகோடி பாக்டீரியாக்கள் மேற்கொள்கின்றன. அளவிற்கு அதிகமாக மாசடையும் போது பாக்டீரியாக்களினால் முடியாமல் போகிறது. எண்ணெய் வழவழப்பினாலும் தார் போன்ற மிதவைப் பொருள்களினால், கடலே தீப்பிடித்து எரிந்ததாலும் ஏற்பட்ட அழிவின் கொடுமையை உலகம் இன்னும் அறியவில்லை. சூழல் மாசுபாட்டினை அறியாத மனிதர்களைக் கண்டு குமுறுகிறார் கவிஞர் வைரமுத்து,

“ஈரான் ஈராக் யுத்தத்தில்
மனிதர் மாண்டது கொஞ்சம்
எண்ணெய் பரவிக்
கடல் எரிந்ததில்
மீனினம் அழிந்ததை
மானுடம் அறியுமா?
அன்று
கடல் கொண்ட பிசுக்கைக்
கழுவத்தான் முடியுமா?”2

இனியாவது இயற்கையைத் துன்புறுத்தாது வாழுங்கள் என்று வேண்டுகோள் விடுகின்றார். நீரைத் தெய்வமாகக் கருதினால் மாசிலிருந்துக் காக்கலாம்.

காவிரி
நீர்ப் பெருக்கெடுத்து ஓடிய காவிரியைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகுறச் சித்திரிக்கின்றார். சோழ நாட்டிற்கு வளம் சேர்க்கும் பணியையும் பல ஆண்டுகளாக ஆற்றி வந்தது. இன்று நீரைக் காணவில்லை. மணல் மட்டுமே தெரிகின்றது. காவிரி ஆறாக இல்லை. சிறிய சிறிய ஓடைகளாக மாறிவிட்டது. தேவையில்லாத அனைத்தையும் அதில் கொட்டுகின்றார்கள. அதனைத் தூய்மை செய்வது அனைவரின் கடமை என்பதை ஈரோடு தமிழன்பன்,

“பொன்னியுடல் நஞ்சள்ளித்
தின்னாச்சு,
ஓரழுக்கும் சேராமல்
ஒருகுறையும் நேராமல்
வாருங்கள் காவிரியைக்
காப்போமே!”3
என்கிறார்.

உலகமயமாக்கல்
உலகமயம் என்ற பெயரில் கதவுகளை அகல திறந்துவிட்ட காரணத்தால் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் நம் நாட்டிற்குள் புகுந்துவிட்டன. தண்ணீரைக்கூட பாட்டில்களில் விற்பனை செய்கின்ற நிலை உருவாகிவிட்டது. நாம் அருந்தும் நீர் தூய்மையாக இல்லை என்ற காரணத்தைச் சொல்லி மினரல் வாட்டர் என்ற பெயரில் நீரை விற்பனை செய்தனர். அதற்கு அதிக வரவேற்புக் கிடைத்தது. இதனால் பன்னாட்டு நீர் வியாபாரிகள் நம் நாட்டின் நீர்வளத்தைச் சுரண்டத் தொடங்கினர். அதனால் நமக்கு இப்போது மழைநீர் சேகரிப்பு அவசியமாக உள்ளது. இதனை அறியாதவர்கள் விதையாக இருக்கின்ற நிலத்தடி நீரையும் தனியார் மயமாக்கி வருவது வேதனை அளிக்கக்கூடிய செய்தி என்பதை க்ருஷாங்கினி,

“வேண்டுவதோ மழைநீர்! அறுவடை!
மக்கள் நிகழ்த்துவதோ
விதைநீர்க் கொலை”4

என்று குறிப்பிடுகின்றார்.

காடுகளின் அழிவு
காடுகள் நாட்டிற்குப் பாதுகாப்பு அரண், மழைக்கு ஆதாரமாக விளங்குவது. நமது முன்னோர்கள் காடுகளின் அவசியத்தை உணர்ந்து மரங்களை வழிபாட்டுப் பொருளாக மதித்து வந்தனர். இவ்வாறு தொடங்கிய மரவழிபாடு, மரத்திற்கு அடியில் உருவ வழிபாட்டிற்கும் வழி வகுத்திருக்க வேண்டும். இறைவன் பெயர் சொல்லி மனிதன்  மரத்தை மதிக்கக் கற்றுக் கொண்டான். இதன் நோக்கம் மரத்தை மனிதன் அழித்துவிடக்கூடாது என்பதாகும். அந்த எண்ணத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மரத்தை ஒதுக்கினான். ஆனால் இன்றைய நிலையில் பல்வேறு தேவைகளுக்காக மனித இனம் காடுகளை அழித்து வருகின்றது.

காடுகளை அழித்ததால்  மழை பொய்த்து விட்டது. அதனால் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது வறுமை மேலோங்கியது. இவையெல்லாம் மனிதனுடைய அறிவீனமான செயல்பாடுகளுக்கு இயற்கை வழங்கிய பரிசு. இயற்கை நம்மை வாழ வைக்கின்றது. நாமும் அதை வாழவிட வேண்டும். இல்லையெனில் அது நம்மை அழித்துவிடும் என்பது உறுதி. இதனை ந.மா. முத்துக்கூத்தன்,

“காடு அழிந்ததாலே
நாடு நகரமெல்லாம்
கூடு இல்லாப் பறவை போலாச்சு ஐயோ
பருவமழை குறைந்து
விளைந்த பயிர் அழிந்து
சருகாய் உலர்ந்து நிலம் தரிசாச்சு ஐயோ
உருவாகும் முன் சிதைந்த கருவாச்சு”5

என்று அழுகுற விளக்குகிறார்.   

காடுகள் அழிக்கப்படுவதால் நீரின் இருப்பு வேகமாக வறண்டு வருகின்றது. இந்நிலை நீடிக்குமானால் 2025ஆம் ஆண்டில் உலக நாடுகளில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

காற்று
காற்றின்றி மனிதன் உயிர்வாழ இயலாது. நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல அடுக்குகள் உள்ளன. நமது பூமியின் மேல், வான்வெளி மண்டலத்தில் ஓசோன் எனப்படும் வாயு மண்டலம் அமைந்திருக்கிறது. ஓசோன் வாயு என்பது பூமிக்குமேல் சுமார் 30 கி.மீ உயரத்தில் ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்து, சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நம்மை நெருங்கா வண்ணம் தடுக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவரை ஓசோன் மனித இனத்தைப் பாதுகாத்தது. இயற்கைக்கு எதிரான செயற்கையான செயல்களால் தான் ஓசோன் ஆபத்தை விளைவிக்கத் தொடங்கிவிட்டது. இதனை அப்துல் ரகுமான்,

“என் மேகக் கிண்ணங்களால்
அவனுக்கு நான்
அமுதத்தை வார்த்தேன்
அவனுக்காக
நான் தயாரித்த
கவச உடையை
அவனே கிழித்தான்”6

என்றுரைக்கிறார்.

மனிதன் பயன்படுத்தும் குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளிவரும் குளோரா புளுரோ கார்பன், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் விறகடுப்பிலிருந்து வெளிவரும் புகை போன்றவற்றால் ஓசோன் மண்டலம் மாசுபடுகின்றது.

இதனால் உலக தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும். புறஊதாக்கதிர்கள் மனிதனின் கண் பார்வையைப் பாதிக்கும். தோல் புற்றுநோயையும் உண்டு பண்ணும். நாளைய உலக வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கும். இன்றைய மாசுபாட்டால் எதிர்கால நிலை எவ்வாறு அமையும் என்பதை கவிதை வழியே உணர்த்துகின்றார்.

நெகிழி
நெகிழிகளைப் பயன்படுத்திவிட்டு நிலத்தில் வீசி எறிகின்றனர். அவை நிலங்களில் படிந்து நீரை உட்புகவிடாமல் தடுக்கின்றன. நீர்நிலைகளில் மிதந்து கேடு விளைவிக்கின்றன. நீரோட்டங்களைத் தடுத்து நிறுத்துகின்றன. இதனை உரமாகவும் மாற்ற இயலாது. எரித்தாலும் காற்று மாசுபடும். இவற்றையறியாது உருவாக்கிவிட்டுத் துன்புறுகிறான். ‘பிளாஸ்டிக் பை’ என்ற கவிதையில் கே.ரவிச்சந்திரன்,

“மண்ணுக்குள் மக்காமல் சிக்கி
மழைநீர்க் கசிவை மறித்திடுவாயா?
குப்பையோடு கூடிஎரிந்து
விஷக்காற்றாய் நீ மாறி…….”7

என்று நெகிழியை எந்த விதத்திலும் அழிக்க இயலவில்லை என்றுரைக்கிறார்.

வளர்ச்சிக்கான வழிமுறைகள்
நீரைத் தூய்மைப்படுத்துவதில் அனைவரும் அக்கறை காட்டவேண்டும் மாசுக்கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளாத தொழிற்சாலைகளை உடனடியாக மூடுதல் வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வினைத் தூண்டுதல் வேண்டும். எதிர்காலத் தட்டுப்பாடுகளைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்க வேண்டும்.
காடுகளை மீண்டும் உருவாக்க வேண்டும். காடுகளை அழிப்போருக்குக் கடுமையான தண்டனை தருதல் அவசியம். காடுகளை வளர்ப்போரை ஊக்குவித்தல் வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியக்குழுவினர் மக்களிடையே சூழல் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்வது நலம் பயக்கும்.
இயற்கையைப் பாதுகாப்பது அனைவரின் கடமை. இணைந்து செயல்படுவோம், நன்மை பெறுவோம் என்ற கூட்டு மனப்பான்மையை உருவாக்கினால் சிதைந்த வளங்களை மீண்டும் மறுசீராக்கம் செய்ய இயலும்.

முடிவுரை
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளிலும் இயற்கை மனிதனுக்குச் செய்த கைம்மாறுகளைக் கண்டோம். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம். நாமும் நலம் பெறுவோம். சூழலைக் காக்கும் மாற்று வழிகளுக்கு இசைவோம்.

சான்றெண் விளக்கம்
1.   வைரமுத்து   - சுற்றுச்சூழல் கவிதைகள், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 11
2.  வைரமுத்து   - சுற்றுச்சூழல் கவிதைகள், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 11
3.  ஈரோடு தமிழண்பன்  - சுற்றுச்சூழல் கவிதைகள், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 17
4.  கிருஷாங்கினி -  சுற்றுச்சூழல் கவிதைகள், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 29
5.  ந.மா. முத்துக்கூத்தன்  - சுற்றுச்சூழல் கவிதைகள், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 77
6.  அப்துல் ரகுமான்  - சுற்றுச்சூழல் கவிதைகள், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 75
7.  இரவிச்சந்திரன்   -  சுற்றுச்சூழல் கவிதைகள், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 44

துணை நூல்கள்
1. வைகைச் செல்வி     - நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
சுற்றுச்சுழல் கவிதைகள்
அரும்பு பதிப்பகம்
முதற்பதிப்பு – டிசம்பர் 2003

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R