'தம்மிஷ்ட்டர்' ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.மகிந்த ராஜபக்சஇலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களில் மிகவும் கீழ்த்தரமான அல்லது மோசமான தலைவர்களாக நான் கருதும் இருவர்:

1. ஜே.ஆர்.ஜெயவர்த்தனே
2. மகிந்த ராஜபக்ச


ஏன் ஜே,ஆர்?

1. ஜே.ஆர். ஐம்பதுகளின் இறுதியில் கண்டிக்குப்பாத யாத்திரை சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக்கிழிக்கக் காரணமாகவிருந்தவர்.

2. 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும், நடைபெற்ற இனக்கலவரத்தின் போது 'போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்' என்று முழங்கிக் கலவரத்தைப்பற்றியெரிய வைத்தவர்.

3. 'தர்மிஷ்ட்டர்' என்று தன்னை அழைத்துக்கொள்வதை விரும்பும் இவர் தம்மிஷ்ட்டராகி, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகத்தன்னைப்பிரகடனப்படுத்தி, தன் ஆட்சிக்காலத்தை அதிகரித்தவர்.

4. சிறிலங்காவின் முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர். தன் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தன் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் பலரின் ஆதரவுடன் ( குறிப்பாக சிறில் மத்தியூ வெளிப்படையாகவே தமிழர்களுக்கெதிராக இனவாதத்தை நிகழ்த்தி வந்தார்) தமிழர்களுக்கெதிராக மிகப்பெரிய இனக்கலவரத்தை 1983இல் ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கெதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டம் சர்வதேசப்பரிமாணங்கள் பெற்று வெடிக்கக்காரணமாகவிருந்தவர்.

5. தன் முதலாவது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை அமுல்படுத்தி, அடுத்த முப்பதாண்டு காலகட்டத்தில் , ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படவும், சிறைகளில் கைதிகளாக வாடவும், ஆயிரக்கணக்கில் தமிழர்கள், சிங்களவர்கள் (ஜே.வி.பி.க்கெதிரான அடக்குமுறைகளில்)  காணாமல் போகவும் காரணமாகவிருந்தவர் ஜே.ஆர்.

6. காமினி திசாநாயக்க போன்றோர் அவரது அரசில் அமைச்சர்களாக இருந்த வேளையில் யாழ் நகரம் எரியூண்டு போகவும், குறிப்பாக யாழ் பொது சன நூலகம் எரிபடவும் காரணமாக இருந்தவர் ஜே.ஆர்.7. 83 கலவரத்தைச்சாக்காக வைத்து, தென்னிலங்கையின் இடதுசாரி அமைப்புகளை, குறிப்பாக ஜே.வி.பி.யினரைத்தடை செய்தவர் ஜே.ஆர்.

8. 83 கலவரத்தைத்தொடர்ந்து வன்னியில் காந்தியப்பண்ணைகளில் குடியேறியிருந்த அகதிகளின் குடியிருப்புகளை நிர்மூலமாக்கியவர்..

9. பயங்கரவாதத்தடைச்சட்டத்தை அமுல்படுத்திய கையோடு, தமிழ் இளைஞர்கள் பலரைக்கைது செய்து , சித்திரவதைகளுக்குள்ளாக்கிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஜே.ஆர்.

ஜே.ஆர். ஆட்சிக்காலத்தில் இவ்விதம் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைகள்தாம் ஈழத்தமிழர்களை மிகப்பெரிய அளவில் ஆயுதப்போராட்டத்தை நோக்கித்தள்ளின. அவரைப்போல்  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் காலத்தில்  இவ்விதம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஏனைய தலைவர்கள் செய்வதற்கு முனைய மாட்டார்கள். ஆனால் ஜே.ஆர். தமிழர்கள் தனி நாடு கேட்டு, கூட்டணியினரைப்பாராளுமன்றத்துக்கு அனுப்பிய காரணத்தினால், தமிழர்களின் தனி நாட்டுப்போராட்டத்தை நசுக்க வேண்டுமென்ற காரணத்தினால், மிகப்பெரிய அளவில் இனக்கலவரங்களை, படையினரின் அடக்குமுறைகளை, பயங்கரவாதச்சட்டத்தினைத் தமிழர்கள் மேல் பிரயோகித்தார்.

ஜே.ஆர்.ஆரசியலிலும் மிகப்பெரிய குள்ளநரி. ராஜிவ் காந்தி இலங்கைக்கு இந்தியபடையினரை அனுப்பியபொழுது , வேறு வழியற்று அனுமதித்தவர். அதன் பின்னர் இந்தியாவையும், விடுதலைப்புலிகளையும் மோதவிட்டு , ராஜிவ் காந்தியைப்பழி வாங்கினார். அக்காலகட்டத்தில் அவர் கூறியது இன்னும் ஞாபகத்திலுள்ளது. 'எனக்கு நாற்பது வருட அரசியல் அனுபவம் உள்ளது. அவருக்கு , ராஜிவ் காந்திக்கு நான்கு வருட அனுபவமேயுண்டு. நான் சிறந்த குத்துச்சண்டை வீரன். முகத்தில் குத்துவதுபோல் , வயிற்றில் குத்துவதில் வல்லவன்'

இவ்விதம் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வளவுதூரம் தமிழர்களுக்கெதிராக அடக்குமுறைகளைக்கட்டவிழ்த்து விட்ட ஜே.ஆர். ஜெயவர்த்தனே மீது எந்தவொரு தாக்குதலையும் தமிழர்தம் ஆயுதப்போராட்ட அமைப்புகளும் சரி, சிங்கள அமைப்புகளும் சரி (ஜே.வி.பி. போன்ற) புரிந்ததாகத்தெரியவில்லை. ஆச்சரியம்தான்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனேயைப்பற்றி பல வேடிக்கைக்கதைகளுள்ளன. அவற்றில் இன்னும் நினைவிலுள்ளது ஜே.ஆர். அங்கொடை மனநல வைத்தியசாலைக்குச்சென்ற கதைதான்.

ஒரு முறை ஜனாதிபதியான ஜே.ஆர். அங்கொடை வைத்தியசாலைக்குச் சென்றிருக்கின்றார். அவ்விதம் சென்றவரை அங்கிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரவேற்றிருக்கின்றார்கள். அப்பொழுது அவர்களிலொருவர் ஜே.ஆரிடம் "நீங்கள் யார்?" என்று கேட்டிருக்கின்றார்.

அதற்கு ஜே.ஆர் கூறிய பதில்: நான் இந்த நாட்டின், சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி.

அதைக்கேட்டதும் அந்தக்கைதி விழுந்து , விழுந்து சிரித்தாராம். அவ்விதம் சிரித்து விட்டு, ஜே.ஆரின் காதினில் மெதுவாகக்கூறினாராம்" "இதை வேறு யாருக்கும் கூறி விடாதே. பிறகு உனக்கும் என் நிலைதான். நானும் முதலில் இங்கு வந்தபோது இவ்விதம் தான் கூறினேன். உடனேயே என்னைப்பிடித்து உள்ளே போட்டு விட்டார்கள்."


ஏன் மகிந்த ராஜபக்ச?

மகிந்த ராஜபக்சமுள்ளிவாய்க்காலில் யுத்தத்தினை முடிவுக்குக்கொண்டு வருவதற்காக ஜனாதிபதியான அவரும், பாதுகாப்பு அமைச்சரான அவரது தம்பி கோத்தபாயாவும் புரிந்த தமிழ் மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்களும், யுத்தக்குற்றங்களும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் உருவாக்கிய தடுப்பு முகாம்களும், தமிழ்ப்பெண்கள் மீது அவரது கட்டுப்பாட்டின் கீழிருந்த படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளும், சரணடைந்த போராளிகளைப்படுகொலை செய்த யுத்தக்குற்றங்களும்,  போதுமானவை சுதந்திரமடைந்த சிறிலங்காவின் மிகவும் மோசமான தலைவர்களின் வரிசையில் அவரைக்கொண்டுவந்து சேர்ப்பதற்கு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R