அருண். விஜயராணிஎழுதிச்  செல்லும்  விதியின்  கை
எழுதி  எழுதி  மேற்செல்லும்
தொழுது  கெஞ்சி  நின்றாலும்
சூழ்ச்சி  பலவும்  செய்தாலும்
வழுவிப்  பின்னாய்  நீங்கியொரு
வார்த்தை யேனும்  மாற்றிடுமோ,
அழுத  கண்ணீர்   ஆறெல்லாம்
அதிலோர்  எழுத்தை  அழித்திடுமோ

--- உமர்கய்யாம்  ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு ) -

ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, 13-12-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். இலங்கை வானொலியிலும்  அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும்  நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான  அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் - தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர். இவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது. இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1970 களில் ஈழத்து இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அறிமுகமான இவர் - பின்னாளில்;  மத்திய கிழக்கிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருப்பவர்.    1989  இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தொடர்ந்து கலை - இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்டவர். மெல்பன் வானமுதம் வானொலியின் சார்பில் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தினால்  அருண். விஜயராணி இதுவரைகாலமும் மேற்கொண்ட வானொலி ஊடகசேவைக்காக   அண்மையில்  பாராட்டி கௌரவிக்கப்பட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமதி  அருண்.விஜயராணிக்கு  எதிர்வரும்  18-12-2015  ஆம்  திகதி    வெள்ளிக்கிழமை  மாலை     6.30  (P.M)  மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் Greensborough Road Le Pine  மண்டபத்தில்  (513, Greensborough Road ,  Greensborough )    மலர்   அஞ்சலி    நிகழ்வு  நடைபெறும். 20-12-2015    ஞாயிற்றுக்கிழமை  மதியம்  12   மணிக்கு    Fawkner Memorial Park இல் ( 1187, Sydney Road, Fawkner  )  இறுதிச்சடங்குகள்  நடைபெறும். அவருடைய   வீட்டு   முகவரி:   No. 65, Beatty Street, Ivanhoe , Vic - 3079. AUSTRALIA.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R