- எழுத்தாளர் ப.ஆப்டீன் அக்டோபர் 9, 2015 அன்று காலமானார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களிலொருவர். அவரது நினைவாக அவரைப்பற்றிய தமிழ் விக்கிபீடியாக்குறிப்பினை 'பதிவுகள்' தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றது.

ப. ஆப்டீன்

எழுத்தாளர் ப.ஆப்டீன் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.....
ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகுந்தார். 1960 களில் வேலை காரணமாக நாவலப்பிட்டியில் பணியாற்றிய எழுத்தாளர் நந்தி அவர்களின் ஊக்குவிப்பாலும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தொடர்பாலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பன்முக வடிவங்களின் மூலம் தனது படைப்பிலக்கிய பங்களிப்பினை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்து இலக்கியம் வழியாக பணியாற்றி வந்தவ இவரது பல படைப்புக்கள் ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

வெளிவந்த நூல்கள்
இரவின் ராகங்கள்- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் வெளியீடு, 1987, NCBH, தமிழ்நாடு மீள்பதிப்பு 1990)
கருக்கொண்ட மேகங்கள்- (நாவல், ஆசிரியர் பதிப்பித்தது 1999)
நாம் பயணித்த புகைவண்டி- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் 2003) பரிசுகள், விருதுகள்
1968 ஆம் ஆண்டு இலங்கை Y.M.M.A நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சாந்தமும் சகிப்பும் எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
1975 ஆம் ஆண்டு பண்பாட்டு அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
1980 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது நீந்தத் துடிக்கும் மீன்குஞ்சுகள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
1987 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது இரவின் ராகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசினைப் பெற்றது.
1999 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது கருக்கொண்ட மேகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது.
2002 ஆம் ஆண்டு இலங்கை அரசு இவருக்கு கலாபூஷண விருது வழங்கியது.

நன்றி: விக்கிபீடியா (தமிழ்)


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R