" சிங்கப்பூர்    இளையர்கள்  அரசியலில்  பிரதிநிதித்துவம்  ஏற்று  தமிழ் மொழியின்  முக்கியத்துவத்தை     தமிழ் பேசும்  மக்களிடம்  கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் " -  சிங்கை  இளம்  தலைமுறையின் குரல்

ஊஞ்சல் கொண்டுபோய் எறிந்த எங்கள் உலகம்
சிவந்த  தும்பிகளின்
கண்ணாடிச் சிறகைப்போல்
எதிலெதிலோ   மோதிச்சிதைந்தது -   அனார்
         
இலங்கைப்பயணத்தின் வழியில் சில காட்சிகள்
          
முருகபூபதிதாயகத்தில்  -  இல்லை...  இல்லை ....இரவல்    தாய்   நாட்டில் மீண்டும் ஒரு  தொடர்ச்சியான   பயணத்துக்கு  தயாரானேன்.    நான்   நீண்ட காலமாக   அங்கம்  வகிக்கும்  அவுஸ்திரேலியாவில்  இயங்கும் இலங்கை   மாணவர்  கல்வி   நிதியத்தின்  சில முக்கிய பணிகளுக்காக   என்னை இந்த  அமைப்பு  அனுப்பிவைத்தது. 2015    முற்பகுதியில்,  அதாவது  கடந்த  ஜனவரி  மாதம் செல்லவேண்டும்  என்றுதான்  முதலில்  தீர்மானம்  இருந்தது. ஆனால்,  ஜனவரி  8  ஆம்   திகதி  இலங்கையில்  ஜனாதிபதித்தேர்தல்.    இலங்கையில் ,  குறிப்பாக  தென்கிழக்கு ஆசியாவில்    தேர்தல்  வருகிறது  என்றால்  அக்காலப்பகுதியில் அங்கு   பயணிப்பவர்கள்  முன்னெச்சரிக்கையுடன்  இருத்தல் வேண்டும்    என்பது  எழுதப்படாத  விதியல்லவா...? அரசும்   அதிகார  பீடமும்  மாறுவது  வீடு   மாறுவதற்கு  ஒப்பானதாக என்றைக்கு   நடைபெறும்   என்பது  வெறும்  கனவுதான் அவுஸ்திரேலியாவில்   அரசு  தேர்தலில்  மாறும்பொழுது  வீடு மாறிச்செல்லும்    உணர்வுதான்    வருகிறது.   இலங்கையில்   இம்முறை    ஜனநாயகம்  பாதுகாக்கப்பட்டதுதான்    பெரிய  நிம்மதி. இல்லையேல்....   வழக்கம்போன்று    சிறுபான்மை    இனத்தவரின் தலையில்தான்    விடிந்திருக்கும்.  முன்பெல்லாம்   எனது   சொந்தச்செலவில்  விமான  டிக்கட் பெற்றுச்சென்றேன்.   ஆனால்,  தற்பொழுது  தொழிலும்  இல்லாமல் மருந்து  மாத்திரைகளுடனும்  இன்சுலினுடனும் அல்லாடிக்கொண்டிருக்கையில்   வழங்கப்பட்ட  பொறுப்பை நிறைவேற்றவேண்டும்    என்ற  கடமை  உணர்வே   முன்னின்றது.

எமது   கல்வி  நிதியம்  பல  கைகொடுத்த  தெய்வங்களின் தயவில்தான்    இயங்குகிறது.   அந்த  அன்பர்களின்  உதவியை   பெறும் மாணவர்களின்    சத்திய  வாக்குமூலம்  அவர்களின்  கடிதங்களில் அதனை    ஊர்ஜிதப்படுத்துகிறது. நிதியத்தின்    நீண்டகால  உறுப்பினர்கள்  டொக்டர்  நடேசனும்  பல் மருத்துவர்    ரவீந்திரராஜாவும்  விமான    டிக்கட்டுக்கு  உதவிசெய்ய முன்வந்தனர்.    இவர்களின்  நோக்கத்தை    புரிந்துகொண்ட    ட்ரவல் ஏஜன்ட்,    தானும்  தன்  பங்கிற்கு  உதவும்  முகமாக  விமான டிக்கட்டை    குறைந்த  விலையில்  பெற்றுத்தந்தார். இவர்களுக்கு    நிதியத்தின்  சார்பிலும்  எனது  சார்பிலும்  நன்றியை தெரிவிக்கவேண்டும். யாழ்ப்பாணம்,    வவுனியா,  கிளிநொச்சி , திருகோணமலை  ஆகிய  மாவட்டங்களில்    நாம்    பராமரிக்கும்    மாணவர்கள் வேறு  வேறு    ஊர்களில்    இருந்து வந்து   நாம்   நடத்தவுள்ள  நிதிக்கொடுப்பனவு  தகவல்  அமர்வுகளில்  தமது   தாய்மாருடன்  அல்லது  பாதுகாவலர்களுடன் கலந்துகொள்ளவேண்டியிருந்தமையினால்    அவர்கள்  அனைவருக்குமான    மதிய  போசன  விருந்துக்கான    செலவுகளுக்கும்    எமது    கல்வி    நிதிய  அன்பர்கள்  உதவ  முன்வந்தனர்.  மாணவர்களின்   கல்விக்காக   ஒதுக்கப்பட்ட  நிதியிலிருந்து  ஒரு சதமேனும்   இந்தச்செலவுகளுக்கு  பயன்படுத்தக்கூடாது  என்பது  நிரந்தர    விதிமுறை. இலங்கை    செல்லும்  வழியில்  சிங்கப்பூரிலும்  சில   அன்பர்களுடன் கலந்துரையாடி    உதவும்  அன்பர்களை    திரட்டுவது  என்பதும் இந்தப்பயணத்தின்    நோக்கமாக  இருந்தது.

சிங்கப்பூர்
தமிழ்,   ஆங்கிலம்,   சீனம்,   மலாய்  ஆகிய  மொழிகளுக்கு  அரச அங்கீகாரம்    வழங்கப்பட்ட  நாடு.    இரண்டாம்  உலக  மகா  யுத்தத்தின்    பின்னர்  துரிதமாக  வளர்ச்சியடைந்த  தேசம்.   ஒரு காலத்தில்   சிங்கப்பூரிலும்  மலேசியாவிலும்  பணியாற்றிவிட்டு ஓய்வூதியம்   பெறுபவர்களை  எங்கள்  ஊரில்  சிங்கப்பூர்  பென்ஷனியர்,    மலேசியா   பென்ஷனியர்  என்று  பெருமையுடன் பார்ப்பார்கள்.    அவர்களுக்கு  ஊரில்  தனி   மரியாதையும்  தொடரும்.

2015   இல்  சிங்கப்பூர்  தனது  50   ஆவது    பிறந்த  நாளை கொண்டாடும்   வேளையில்    சென்றிருக்கிறேன்  என்பது  அங்கு சென்ற    பின்னர்தான்  தெரியும்.    எனக்கு  1990  முதல்   இந்த நாட்டுடன்    தொடர்பு  நட்பு  ரீதியாகவும்  உறவு ரீதியாகவும் தொடங்கிவிட்டது.
முதல்    முதலில்  சிங்கப்பூரைப்பார்த்தது  1990   இல்தான். அதன் பின்னர்    பல தடவைகள்    அங்கு   சென்றிருந்தாலும்  ஒவ்வொரு தடவை    செல்லும்பொழுதும்  புதிய  நாட்டுக்குள்  பிரவேசிக்கும் உணர்வுதான்   வருகிறது.

1990   இல்  சென்றபொழுது  நான்   அங்கு  வழக்கம்போல்    தேடியது இலக்கியவாதிகளையும்    பத்திரிகையாளர்களையும்தான்.    சிரங்கூன் வீதியில்    சென்றபொழுது  உமறுப்புலவர்  கல்வி  நிலையம் தென்பட்டது.    அத்துடன்  சில    கோயில்களும்தான்.    ஆனால்,  நான் முதலில்    சென்றது  அந்த  கல்வி    நிலையத்திற்கும்  அதன்பிறகு தமிழ் முரசு   வெளியான   அலுவலகத்திற்கும்தான்.

கல்வி   நிலையத்தின்  நூலகத்தில்  வைப்பதற்காக  எனது   இரண்டு நூல்களை    கொடுத்தேன்.    ஒன்று  சமாந்தரங்கள்   சிறுகதைத்தொகுதி   மற்றது    சமதர்மப்பூங்காவில்    (சோவியத் பயணக்கதை).    சிறுகதைத்தொகுதியை   மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.   ஆனால்,  சோவியத்  பயணக்கதை   நூலை தயக்கத்துடன்    ஏற்றுக்கொண்டு  இவ்வாறு  சொன்னார்கள்.

" அய்யா... இதனை  பெற்றுக்கொள்கின்றோம்.    ஆனால்... உடனடியாக  நூலகத்தில்    வைக்கமாட்டோம்.   எமது  சபை    இதனைப்படித்துவிட்டு   இதனை   நூலகத்தில்  வைக்கலாமா...? என்று  தீவிரமாக   ஆலோசித்துவிட்டு   முடிவு  எடுப்போம்." 

தமிழ்  முரசு   காரியாலயம்  சென்று  அதன்  பிரதம  ஆசிரியர் திருநாவுக்கரசு    அவர்களுடன்   ( தற்பொழுது  அவர்  அமரர்) உரையாடினேன்.    தமிழ் முரசு  இதழும்  பெற்று  படித்தேன்.   எனக்கு பல  விடயங்கள்  புரிந்தன. சிங்கப்பூரின்   கொள்கைகள்,  வளர்ச்சி,  மொழிக்கொள்கை,  மத நல்லிணக்கம்    என்பன    புரியலாயிற்று.

அன்று  1990  இல்   சோவியத்  பயணக்கதை   நூலை   ஏற்கத்தயங்கிய சிங்கப்பூரில்  -  இன்று  தேசிய  நூலகத்தில்  கார்ல்மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,  மா ஓ சேதுங்,  உட்பட  பல உலகப்பொதுவுடமைச்சிந்தனைத் தலைவர்களின்     நூல்கள் காணக்கிடைக்கின்றன.   ஆனால் , அவற்றை   வெளியே  எடுத்துச்செல்ல முடியாது.    ஆய்வுகளுக்கு  மாத்திரம்  உசாத்துணையாக  அவற்றை அந்த    நூலகக்கட்டிடத்துக்குள்  இருந்து  குறிப்பெடுக்க பயன்படுத்தலாம்.

1990   இல்  இணையம்  இல்லை.   இன்று  இணையத்தில்  யாவும் இருக்கின்றன.

கியூபாவுக்கு  நண்பர்களுடன்  சென்றபொழுது  நாம்   தங்கியிருந்த விடுதியில்   உணவு  மேசையில் Tomato sauce  கேட்டோம்.        "இல்லை " என்றுதான்   பதில்  வந்தது.   அன்று   அமெரிக்க உற்பத்திகளுக்கு   அங்கு  இடமிருக்கவில்லை.   ஆனால்,  இன்று   சில மாற்றங்கள்   நேர்ந்துள்ளன.

காலங்கள்  மாறும்.
"  mk;ghs;  எந்தக்காலத்திலே   பேசினாள்...? "  என்று   63  ஆண்டுகளுக்கு   முன்னர்  (பராசக்தியில்)   கேட்ட   கலைஞர்   கருணாநிதி   சாயிபாபாவை    சந்திக்கவில்லையா...?  ராமானுஜர்   தொலைக்காட்சித்தொடருக்கு  கதை, வசனம்  எழுதவில்லையா...?  எழுதுவதற்கு    நியாயம்  சொல்லவில்லையா...?

1990  களில்  நான் சிங்கப்பூரில்  நின்ற  சமயம்  முதலில் தொலைபேசியில்    தொடர்புகொண்டு  உரையாடியது  ஜே.எம். சாலி என்ற  எழுத்தாளருடன்தான்.  அவர் ஆனந்தவிகடனில்   அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தார்.  பின்னர் நேரில் சந்தித்தது அங்கு  நீண்ட காலமாக    வசிக்கும் இராம. கண்ணபிரான்  அவர்களை.

கால்நூற்றாண்டு  காலமாகிவிட்டது.   இன்றும்  அவர் எனது நேசத்துக்குரிய நண்பராகவே  விளங்குகின்றார்.  அதன்  பின்னர் எனது   மனைவியின்  தம்பி  கவிஞர்  காவ்யன்  விக்னேஸ்வரன் சிங்கப்பூர் பிரஜையாகியது  முதல் அவருடனும்  உறவும்  இலக்கிய நட்புணர்வும்   தொடர்கிறது.   செல்வி கனகலதா நீர்கொழும்பில் குழந்தைப்பருவத்தில் இருந்தே  எனக்கு  நன்கு  தெரிந்தவர். தற்பொழுது   சிங்கப்பூர்  தமிழ் முரசுவில்  சிரேஷ்ட பத்திரிகையாளராக பணியாற்றுகிறார்.

சிங்கப்பூர்  தேசிய  நூலகத்தில்  முன்னர்  பணியாற்றிய நண்பர் கனடா  மூர்த்தி  தற்பொழுது கனடாவிலேயே வசிக்கின்றார். பிச்சினிக்காடு    இளங்கோவை   கண்ணபிரான்  முன்னர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்  கடற்கரைச்சாலை கவியரங்கு நிகழ்ச்சியொன்றுக்கும்  2006  இல் அங்கு  சென்றிருந்தபொழுது  அழைத்து  பேசவைத்தார்.

அன்பழகன்   என்பவர்   இயக்குநர்  பாலச்சந்தரிடம்  துணை இயக்குநராக    பல   படங்களில்  பணியாற்றியவர்.   ஜெயாந்தனின் புதுச்செருப்பு  கடிக்கும்  படத்தை   எடுத்தவரும்  இந்த அன்பழகன்தான்.    ஜெயலலிதாவை    வைத்தும்  ஒரு  படம்  எடுத்து அது   பாதியில்   நின்றுவிட்டது.
புஸ்பலதா  நாயுடு   சிங்கப்பூர்   தேசிய  நூலகத்தில்  தமிழ்ப்பிரிவில் முக்கிய   பொறுப்பில்   இருக்கிறார்.

ஈழநாதன்   என்ற    இலக்கிய  நண்பர்  நூலகம் நெற்  என்ற இணையத்தளம்   நடத்தியவர்.   அண்டை   நாடொன்றிற்கு சென்றிருந்தவேளையில்   துர்ப்பாக்கிய  வசமாக  அற்பாயுளில் மறைந்தார்.    அவரது  திடீர்  மறைவு  புரியாத  புதிராகவே  இன்னும் இருக்கிறது.

விக்னேஸ்வரனுடன்  தங்கியிருந்து    சிங்கப்பூரில்  பணியாற்றும் மாறன்   என்பவர்    தமிழகத்திரைத்துறையில்  படத்தொகுப்பாளர் சுரேஸ்  அர்ஸிடம்  முன்னர்    பணியாற்றியவர்.    இப்படிப்பலருடன் தொடர்பிருக்கிறது.

[ தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R