முன்னுரை
கவிஞர் வெள்ளியங்காட்டான்மனிதன் ஒரு விலங்கு. விலங்கு நிலையிலிருந்த மனிதனின்,   விலங்கு குணத்தை வேரறுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல. குறிப்பாக ஒழுக்கம், அன்பு, பண்பாடு, சத்யம் போன்ற ஒழுகலாறுகள் மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டன. குறிப்பாகச் சத்யம்;  சத்யம் என்றால் உண்மை அல்லது வாய்மை எனலாம். விலங்கு நிலையிலிருந்து மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனை நல்வழிப்படுத்த, மனிதனிடமிருந்து மனிதனைக் காக்க உருவாக்கப்பட்டதே சத்யம். எனவே ஒவ்வொருவரும் சத்யத்தின் படி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தாலே அவன் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடலாம் என்று பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்படும் நிலையில், கவிஞர் வெள்ளியங்காட்டானின் சத்யம் தொடர்பான கருத்தாக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கவிஞர் வெள்ளியங்காட்டான் - ஓர் அறிமுகம்
கவிஞர் வெள்ளியங்காட்டானின் இயற்பெயர் இராமசாமி, பெற்றோர் நாராயணசாமி நாயுடு, காவேரியம்மாள். இவர் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு என்ற கிராமத்தில் 21.08.1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1942 முதல் கவிதை, காவியம், கட்டுரை, சிறுகதை, பொன்மொழிகள், மொழிபெயர்ப்புப் போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார். சில காலம் கோவையிலிருந்து வெளிவந்த  ‘நவஇந்தியா’ இதழில் மெய்ப்புத் திருத்துனராகப் பணியாற்றியுள்ளார். 1960 முதல் கர்நாடகம் சென்று கன்னடம் கற்று கன்னட மொழியிலும் பல படைப்புகளை வெளியிட்டதோடு, கன்னடப் படைப்புகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 1991- இல் தனது 87-வது வயதில் காலமானார்.

இவர் வைதீகத்தின் ஒரு தத்துவப் பிரிவான அத்துவிதச் சிந்தனையை முன்னிறுத்தி, ஆன்மீகத்தின் வழி பொதுவுடைமையை வழியுறுத்தும் சிந்தனையாளர்களுள் ஒருவர். மேலும் இவர் சித்தர்களின், குறிப்பாகத் திருமூலர் வழி சைவ சமயம் மற்றும் சிவனை முன்னிறுத்தும் சிந்தனையாளர்.
சத்தியமே தெய்வம்

 தெய்வத்திற்குப் பல்வேறு வரையறைகள், விளக்கங்கள் கொடுக்கப்படும் நிலையில், கவிஞர் வெள்ளியங்காட்டான் “தெய்வமே ஆன சத்தியமே” (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –1:382) என்ற வரிகளின் மூலம் சத்தியமே தெய்வமானது என்கிறார்.

  “சத்தியம் என்ற பெயர் சாமி என்று மாற்றமடைந்தது”
     (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –1:388)

என்பதன் மூலம் சத்தியம் என்ற சொல்லே சாமியானது என்கிறார்.

கடவுளாக வழி
 எவன் ஒருவன் சத்தியப்படி வாழ்கிறானோ அவனே கடவுளாக மாறுவான். எனவே ஒருவன் கடவுள் நிலைக்கு உயர வேண்டுமானால் சத்தியப்படி வாழ வேண்டும் என்பதை,

“சாமியெனும் சொல்லின் சரியான அர்த்தமது
வோமென் னுணர்ந்தோ ருரைத்தார்மற் -றாமெனவே
சத்தியத்தைச் சார்ந்தொழுகிச் சாமியே நாமாகி
நித்தியத்தில் நிற்க நிலைத்து”
   (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –1:556)

என்ற வரிகளின் மூலம் சாமியென்றச் சொல்லின் சரியான பொருள் ஓம் என்பதை உணர்ந்து சத்தியத்தைச் சார்ந்தொழுகினால் நாமே சாமி நிலைக்கு உயரலாம். அதனால் நமது வாழ்க்கையும் சிறக்கும், நமது வாழ்க்கையும் நிலைக்கும் என்கிறார்.

ஆத்மா ஒளிர சத்யமே வழி
 மனித வாழ்க்கை சிறக்க அவன் உள்ளம் சிறக்க வேண்டும். நமது ஆத்மா சிறக்க வேண்டுமானால் அதற்குச் சத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான். இதனை, “ஆத்மா என்பது கண்ணைப் போல எந்தப் பொருளின் மீது சத்தியத் தன்னையும் நித்தியத் தன்மையும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ, அந்தப் பொருளை ஆத்மாவானது அறிவினால் பற்றிக் கொள்கிறது. அறிந்து கொள்கிறது. அந்த ஆத்மாவே அறிவு மயமாக விளங்குகிறது. பிறப்பு, இறப்பு என்கிற அந்தக் காரணத்தினால் சூழப்பட்ட பொருள்களின் மீது அந்த ஆத்மா நாட்டஞ் செலுத்துமானால், அந்தப் பொருள்கள் மங்கலாகவே அதற்குப்படுகின்றன. அப்பொழுது அதற்கு – ஆத்மாவுக்கு – அபிப்பிராயம் என்பது தான் உண்டே தவிர அறிவு இல்லையென்று ஏற்படுகிறது. இந்த அபிப்பிராயமும் அடிக்கடி மாறுபாடடைகிறது” என்கிறார் சாக்ரடீஸ் (2005:223). எனவே ஆத்மா ஒளிர வேண்டுமானால் சத்தியத்தோடு வாழ வேண்டும் என்கிறார்.

சிவன் நிலை அடைய சத்தியமே வழி
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டத் தெய்வத்தை வழிபடுகின்றார்கள். அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப கடவுளை வழிபடுகின்றனர். கவிஞர் வெள்ளியங்காட்டான் எவன் சத்தியப்படி வாழ்கிறானோ அவன் சிவன் நிலை அடையலாம் என்கிறார்.

 “விந்தை விந்தையென விண்ணில் விரவும்
 யந்திர வுலகம் ஆயினும் என்னே!
 தந்திரத்தில்நம் தலைநிமிராது:
 மந்திரத்தில் மாங்கனியும் விழாது
 சந்திரன் ஒளியும் சுந்தரப் பொழிலும்
 சிந்தைக் கிதமே செய்வது கண்டோம்;
 சத்திய மன்றித் தவம்வே றில்லை;
சித்த சுத்தியே சிவனெனப்படுவதும்!
அழுக்கும் நம் மகத்தை அணுக தகற்றுக!
ஒழுக்கம் உடலுக் குயிரென ஓம்புக!
பழக்கம் பண்பின் பதிவெனப் பயிலுக!
 வழக்கம் வாழ்வின் வடிவென வளர்த்துக!
 கொழிக்கும் செல்வம் கொண்ட வரெனினும்
 இழுக்கம் ஒருதுளி இதயத் திருத்தின்
 குழிக்குள் வீழ்ந்த குஞ்சரம்
 முடிக்கென அழநாம் மகமகவிழ்ந் திடுமே”
              (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி–2:246,7)

என்ற வரிகளில் மந்திரம், தந்திரங்களை நம்பி பயனில்லை, சிந்தையே சிவன், அதுவே சத்தியம் எனவே தவத்தின் மூலம் சிவனை அடையாலாம். அதற்குச் சத்தியத்தைக் கடைபிடித்து நல்லொழுக்கத்தோடு வாழ வேண்டும் என்கிறார் கவிஞர்.

சத்தியம் பின்பற்றப்படாமைக்குக் காரணம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சத்யமே தெய்வம். சத்யப்படி வாழ்ந்தால் மனித வாழ்க்கை உயர்வடையும். அதற்கு அகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டு வந்தாலும், சத்யத்தின் வழியில் மக்கள் வாழ்வதில்லை, அதற்கான காரணத்தை அரிச்சந்திரன் கதை வழி கவிஞர் வெள்ளியங்காட்டான் விளக்குகிறார்.

“நாஸ்தி சத்யா சமன்தப எனினே
சத்தியத் திற்குச் சமன்தவ மன்றாம்!
தவத்தினும் மிக்கது சத்திய மாயின்
வசிட்டன், விசுவா மித்திரனை விடவும்
அரிச்சந்திரனே அரும்பெரும் தவத்தினன் ;
மற்றி வுண்மை மக்களறியாமல்
அரிச்சந் திரனையே அவல மாக்கி
அச்ச உணர்வினை அவனியில் தேக்கிச்
சத்தியம் பேசினால் பத்தினி, புதல்வனை
விற்றுத் தீரும் விதிவந்து நேரும்
சொல்லுக் கடங்காத் தொல்லைகள் விளையும்,
என்னும் கருத்துக ளிதயம் புகவே
சத்தி யத்தினைச் சாகடித்து விட்டுப்
பொய்பு ரட்டுகள் புவியில் மலியக்
கோவிலைக் கட்டித் தேவனைப் படைத்துப்
பாட்டுக ளால் நம்மைப் பணுவித்து
வீட்டைக் கெடுத்தனர் வேதிய ரன்றே”
     (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி–2:275)

என்ற பாடல் வழி சத்தியத்தை வீழ்த்த அரிச்சந்திரன், சத்திய வழி வாழ்ந்ததால் அதிகமான தீமைகள் வந்தன. எனவே சத்திய வழி வாழ்பவர்களுக்கு அதிகமான தீமைகள் வரும் என்ற பய உணர்வை ஏற்படுத்தி, மக்களைப் பலவீனப்படுத்தி வேதியர்கள் சத்தியத்தைப் பின்பற்ற விடாமல் தடுத்தனர் என்கிறார் கவிஞர் அவர்கள்.

சத்தியமே கடவுள் என்பதை உணராமல் காலத்தை வீணாக்கள்
  சத்தியமே கடவுள், சத்தியப்படி வாழ்ந்தால் கடவுளை அடைந்து விடலாம்; கடவுள் நிலையடைந்து விடலாம். ஆனால் மக்கள் சத்தியத்தை அடைவதற்கான வழி தெரியாமல் கடவுளைத் தேடி வாழ்க்கையை வீணாக்குகின்றனர்.

“புத்தமிழ் தாகிய சத்திய மதனை
நித்தியம் பேணி நெஞ்சில் பூணார்
ஐயனே! சுவாமி! ஆண்டவா! என்றே
வையக வாழ்வை வைத்து தொழு பவராய்
முதியர்க ளாகி முனகி
அதியாத் மனசுக மதையிழந் தனரே”
                 (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி–2:270)

என்ற வரிகளில் சத்தியமே கடவுள் என்பதை அறியாமல் சத்தியப்படி வாழாமல், கடவுளைத் தேடியே சத்தியத்தை அடையாமல் வாழ்க்கையை வீணாக்குகின்;றனர் என்கிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான்.

தெய்வம் உனக்குள் வெளியே தேடுகிறோம்
  தெய்வத்தைத் தேடி மக்கள் அழைகின்றனர். பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளைச் செய்கின்றனர். ஆனால் தெய்வத்தை அடைவதில்லை என்று கூறும் கவிஞர் வெள்ளியங்காட்டான் “தேவேந்திரன் சத்யம் எனும் ஆன்மாவை அறிந்து கொள்ளும் இரகசியத்தைப் பிறப்பு, இறப்பு அற்ற உண்மையெனும் ஒளியை மனிதனின் உள்ளே அவன் இதயத்தில் புதைத்து வைத்தான். இதை அறியாத மனிதனும் விண் - மண் - காற்று என ஆராய்ந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்” என்கிறார் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:305) என்ற வரிகளின் மூலம் உன்னில் இருக்கும் உள்ளத்தில்தான் உண்மையாகிய சத்யம் குடி கொண்டுள்ளது, அதுவே கடவுள் என்கிறார்.

தெய்வத்தை அடைய வழி
  மக்கள் தெய்வத்தை அடைய முயன்றும், அடைய முடிவதில்லை. எனவே கவிஞர் வெள்ளியங்காட்டான் தெய்வத்தை அடைவதற்கான வழியைக் கூறுகிறார்.

  “வாழ்நாள் முழுவதும் எச்சரிக்கை வகித்து நல்லனவற்றிலிருந்து அணுவளவும் நழுவ விடாது, தன்னைக் கொண்டு செல்லும் செயல்முறைக்கே ‘தியானம்’ என்று பெயர்’

  சத்தியத்தை உள்ளத்தில் பூணென் பூண்டு கொண்டு வாழ்நாள் முழுவதும் அறவழியிலிருந்து வழுவாதொழுது துயரம், தூரம்=விலகி நிற்க, ஆனந்தம் அகம் பொங்கி வழிய, கண்களில் அறிவொளி சுடர் விட, அரசனும் அஞ்சி நின்று கை கூப்பக் கம்பீரமாக வாழ்வதற்குரிய நேர்மையான நிலைப்பட்டுக்கான உறுதி நிலைதான் தியானம், இதுதான் தன்னைத் தானறிந்து வாழும் நிலை, ‘அகம் பிரம்மாஸ்மி’ எனச் சொல்லும் நிலை; நானே தெய்வமாயுள்ளேன்; எனக்குப் புறம்பாகத் தெய்வமென என்வரையில் வேரோன்றில்லை எனக் கூறும் தகுதியுள்ள நிலை” என்கிறார் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:512,3) என்பதன் மூலம் உம் உள்ளத்தில் உள்ள சத்தியத்தைத் தியானத்தின் மூலம் நேர்மையான வழியில் நடத்தினால் நாமே கடவுள், நாமே சத்தியமாவோம். நாமே கடவுளாவோம் என்கிறார்.

சத்தியத்தைச் செயல்படுத்து வழிபடாதே
சத்தியமே கடவுள், சத்தியத்தைக் கடவுளை வணங்குவதால் எப்பயனும் இல்லை. எவன் ஒருவன் சத்தியவானாக வாழ்கிறானோ அவனே கடவுள் என்கிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான். ‘சத்தியமே வெல்லும்’ என நாம் சொல்லிக் கொள்வதனால் மட்டும் எதையும் நாம் வென்று விட முடியாது. நம்முடைய உள்ளத்தில், உரையில், செயலில் அந்தப் பேருண்மை ஒன்றிருந்ததெனில் வெற்றி நம்முடையதாகவே இருக்கும் ‘தெய்வசக்திக்கு என்றும் தோல்வி இல்லை’ என்பது உலகில் பல ஞானிகள் மூலம் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழர்களாகிய நாம் உண்மையான தெய்வீகத்தை அறவே இழந்து விட்டோமெனச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. வெறும் பணத்தைக் கொண்டு மனிதன் மகோன்னத நிலைக்குச் சென்றுவிட இயலாது. நாட்டில் அமைதியிருக்காது, ஆனந்தமும் இருக்காது” என்கிறார் கவிஞர் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:495) எனவே நமக்குள் இருக்கும் கடவுள் சத்யமே, கடவுளான சத்யம் நமக்குள் இருக்கும் போது வெளியே தேடி பயனில்லை. உனக்குள் இருக்கும் சத்யமான கடவுளைக் கொண்டு மக்களுக்குப் பயனள்ள விதத்தில் பணியாற்று, அப்பொழுதுதான் இவ்வுலகில் இருக்கும் பொய்மை ஒழிந்து, துன்பம் ஒழிந்து உண்மை வெற்றி பெறும். உலகம் அமைதியும், ஆனந்தமும் நிலவும், அதனால் நீயும் அமைதியும் ஆனந்தமும் பெறுவாய் என்கிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான்.

தொகுப்புரை
• மனிதனிடம் உள்ள விலங்குக்குணத்தை அகற்றி, தெய்வ நிலைக்கு உயர்த்தும் உயர்ந்த நோக்கோடு உருவாக்கப்பட்டது தான் சத்யம் என்ற தத்துவம்.
• சத்தியமே சாமி, சத்தியம் என்ற சொல்லே சாமி என்ற சொல்லாக மாற்றமடைந்தது. அதனால் சத்தியம் என்ற சொல்லே சாமி என்று பொருள்படும்.
• எவன் ஒருவன் சத்தியத்தின் படி வாழ்கிறானோ, அவன் கடவுளாவான். எனவே கடவுளாகச் சத்தியத்தின் படி வாழ வேண்டும்.
• மனிதன் கடவுளாக வேண்டுமானால், ஆத்மா ஒளிர வேண்டும். ஆத்மா ஒளிர, சத்யம் ஆத்மாவில் படிந்து, ஆத்மாவே சத்தியமாக மாற வேண்டும். அவ்வாறு ஆத்மா சத்தியமாக மாறினால் உன் ஆத்மா கடவுளாகும். அந்த ஆத்மாவே, சத்தியமே சிவன். எனவே சத்தியத்தின் படி வாழும் நீயும் சிவனை அடைவாய், நீயே சிவனாவாய்.
• பண்டைக்காலம் தொட்டே சத்தியமே சிவன் என்று சொல்லப்பட்டு வந்தும், சத்தியம் பின்பற்றப்படாமைக்குக் காரணம், அரிச்சந்திரன் கதையில் சத்தியத்தின்படி வாழ்பவன் அதிகமான துன்பங்களைச் சந்திப்பான் என்று கூறி, சத்தியப்படி வாழ்பவர்களுக்குப் பயத்தை வேதியர்கள் ஏற்படுத்தியதால், சத்தியம் பின்பற்றப்படவில்லை.
• சத்தியத்தை அடைய வழி தியானமும், தவமும் ஆகும். எனவே தியானம், தவத்தின் மூலம் உன்னிலிருக்கும் சத்தியத்தை வளர்த்தெடுத்தால் நீ கடவுளாவாய்.
• நீ சத்தியவானாக, கடவுளாக மாறி கடவுள் மக்களுக்குச் செய்யும் பணியைச் செய்தால், உலகத்தில் அமைதியும், ஆனந்தமும் நிலவும், அதனால் நீயும் ஆனந்தமும் அமைதியும் பெறுவாய் என்ற கருத்தாக்கங்கள் கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்புகள் மூலம் வெளிப்படுகிறது.

  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R