முன்னுரை
ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைதொடக்கத்தில் தனி மனிதர் வாழ்வில் இதழியல் துறையை ஆச்சர்யத்துடன் பார்த்தவர்ர்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அவற்றின் மூலம் நாளுக்கு நாள் செய்திகளை அறிய விழைந்தனர். இதழியல் துறையின் முன்னேற்றத்திற்கு அறிவியல் துறை முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. இதன் மூலம் செய்தி பாரிமாற்றமானது எளிதாக மாறியது. அதன் தொடர்ச்சியாக ஒலி, ஒளி (ரேடியோ, தொலைக்காட்சி) மூலமும் பின்பு கணினி தோன்றிய பிறகு அச்சுத்துறையில் மாற்றம் ஏற்பட்டதால் இதழியல் மேலும் பல படிநிலை உருமாற்றம் பெற்றது. இவ்வாறு தோன்றிய இதழ்கள் இணையத்தில் மூலம் உலகத்தினை ஒருகண் சிமிக்கையில் இணைக்கும் இணையம் பாலமாக உள்ளது. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களில் நேரடியாக வெளிவந்த இதழ்களும் இணையத்தில் அரங்கேற்றம் பெற்றன. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களின் தோற்றத்தையும் , வளர்ச்சியையும் இக்கட்டுரையில் காணலாம்.

இணையம் வரையறை:
இணையம் என்பதை உலகில் உள்ள பல கோடிக்கணக்கான கணினிகளை பல ஆயிரக்கணக்கான இணைப்பிழைகள் மூலம் ஒரு கணினியிலிருந்து எண்ணிக்கையிலடங்கா கணினிகளுக்கு தகவல்களை அனுப்பவும் பெறவும் முறையே இணையம் எனப்படும். இதனை வையவிரிவு வலை, வைய விரிவு வலைப்பின்னல், உலக வலைப்பின்னல், உலக இணையப் பின்னல், இராட்ச்ச வலிமைமிக்க சிலந்தி வலை என்று பல்வேறாக அழைப்பா். சைவத்தின் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய என்பதாகும்.  அதுபோல இணையத்திற்கு WWW மந்திரமாகும். இதனை ஆங்கிலத்தில் (World Wide Web) என்றழைப்பா். “இணையம் என்ற சொல்லை தமிழில் கண்டுபிடித்த பெருமை www.tamil.net  இந்த இணைய தளத்திற்கு உண்டு. இதனை ஆஸ்திரேரியாவிலுள்ள பாலா பிள்ளையின் இணையமாகும்’1 (தமிழும் கணிப்பொறியும் - ஆண்டோபீட்டா் ப.77). ‘இணையத்தை பயன்படுத்தாவன் குருடன்’ என்று கூறுமளவிற்கு இணையமானது இன்று பட்டி தொட்டிகளிளெல்லாம் விரிந்துள்ளது.

ஐந்தாம் தமிழ்:
தமிழ் மொழியானது பல்வேறு காலகட்டங்களில் வளர்ந்து வந்துள்ளது. அவ்வாறு வளர்ந்த தமிழ் மொழியை முத்தமிழ்  (இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்) என்று மூன்றாக வகைப்படுத்தினா். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தின் அறிவியலின் வளர்ச்சியால் அதன் தேவை தமிழ் மொழியிலும் ஏற்பட்டது. அவ்வாறு தோன்றியது தான் அறிவியல் தமிழ். அவ்வாறு தோன்றிய அறிவியலில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியலுக்குமி தமிழுக்கும் நெருக்கம் ஏற்பட்டு அறிவியல் தமிழ் என்ற நான்காவது தமிழ் தோன்றியது. இதன் அறிவியல் தமிழ் காலகட்டத்தில் கணினிப் பொறியின் விளைவால் வளர்ச்சி அடைந்து புதிய பரிமாற்றத்தை பெற்றது. “இன்றைய அறிவுலகின் எல்லைகள் எங்கோ இருக்கின்றன. நமது மொழிகள் எங்கோ நிற்கின்றன. இடைவெளி பொரிது என்பது கவலைக்குரியது, அதனினும் கவலைக்குரியது, அந்த இடைவெளி விரிவாகிக் கொண்டே போகிறது என்பது அது விரிவாகும் வேகமும் மிகுகிறது“2 (அறிவியல் தமிழ்-ப-182) என்று ஆசிரியரின் கவலையை போக்கும் விதமாக புதிதாக பூத்துக்குலுங்கும் தமிழ்தான் இணையத்தமிழ். 24 ஆண்டுகளில் தனது பங்களிப்பின் மூலம் ஐந்தாம்தமிழாக வளர்ந்துள்ளது. இதனால் நம் தமிழறிஞர்களின் கனவு நினைவாகிவிட்டது. இதனை “தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்திடல் வேண்டும்” என்று மீசைக்கவிஞனின் வாரிகளை “உலகெங்கும் தமிழ் முழக்கம் செய்திட இணையத்தை அறிந்திடுவோம்” என்று சொல்லுமளவுக்கு இணையமானது வளாந்துள்ளது.

 1. இயற்றமிழ்
 2. இசைத் தமிழ்
 3. நாடகத் தமிழ்
 4. அறிவியல் தமிழ்
 5. இணையத் தமிழ்

தமிழில் மின் இதழ்கள் தோன்றக் காரணம்
 உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை தமிழர்கள் தங்களுக்கென்று தனியொரு பதிவுகளை இப்புவியில் நிகழ்த்தியுள்ளனர்.  அவர்கள் அறியாத துறையே இல்லை என்ற அளவிற்கு அரிய பலவற்றை நிகழ்த்தியுள்ளனர்.  அவ்வகையில் இணையத்தில் தமிழ் இதழ்கள் தோன்றக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்களேயாவர்.  அவர்கள் நாடு இனம் மொழி எனக் கடல்கடந்து சென்றாலும் தங்களுடைய பண்பாடு, நாகரிகம் என்கின்ற அடையாளத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.  அவர்கள் தமிழ்மொழியைப் பேசவும் கேட்கவும் மேலும் அந்நாட்டிலுள்ள மொழிகளிலுள்ள கூறுகளை தமிழ் இணைய இதழ்களின் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி செய்திகளை அறிந்துகொள்ள தமிழ் இணைய இதழ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.  இதுவே தமிழ் இணைய இதழ்கள் தோன்ற காரணமாக அமைந்தது எனலாம்.

இணைய இதழியல்
 இணையத்தில் பொதுவான செய்திகளையும் பொழுது போக்குகளையும் முறையாக நம்பகமான வகையில் பரப்பும் இதழியல் பணிகள் இணையம் எனும் ஊடகத்தின் வழியே நிகழ்த்தப்படும் பொழுது அது இணைய இதழியல் என்று அழைக்கப்படும். இவ்வாறான நவீன இதழியலை இணைய இதழியல் எனலாம். இணையத்தில் மட்டும் வெளியாகக்கூடிய அனைத்து தமிழ் இணைய இதழ்களையும் தமிழில் வெளியாகும் வலைப்பூக்களையும் தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்ற ஒரு வரையறைக்குள் அடக்கலாம். ஏனைய அச்சிலும் இணையத்திலும் வணிக நோக்கில் செயல்படும் ஆங்கிலம் தமிழ் என பிற மொழிகளிலும் வெளிவரும் இதழ்களையும் இணையச் சிற்றிதழ்களின் வாரிசையில் ஏற்றுகொள்ளக் கூடாது. இதழியலுக்கு எவ்வாறு சட்டங்கள் இருக்கிறதோ அதுபோல இணைய இதழியலுக்கும் இயற்றப்பட வேண்டும்.

இணைய இதழ்களின் தோற்றம்:
 இதழியல் துறையானது ஆரம்ப காலகட்டத்தில் ஜூலியர் ஸீஸா் தனது ‘தினசரி நிகழ்வுகள் மற்றும் அலுவலக குறிப்புகள்’ அனைத்தையும் எழுதி வைத்தார்’ என்பதை அறிவோம். காலப்போக்கில் அச்சு இயந்திரம் வந்தபிறகு அவற்றின் மூலம் செய்திகள் வெளியானது. அடுத்தகட்டத்தில் அறிவியல் வளா்ச்சியால் கணினி வருகைக்குப்பிறகு இதழியல் துறைக்கு புத்துணா்ச்சி பெற்றது எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின்னச்சு சாதனங்களில் வளர்ச்சியால் இதழியல் இணையம் என்ற புதியதுறை உருபெற்றது.

 இணையமானது “1969ஆம் ஆண்டில் தோன்றிய தகவல் தொடா்புப் புரட்சியால் உலகம் தகவல் சமுதாயமாகமாற கால் நூற்றாண்டே போதுமானதாவிட்டது. இதனால் உலகின் எல்லாப் பகுதிகளோடும் உடனடித் தொடர்பு கொள்ள முடிகிறது“3(மின் தமிழி ப.68). இதன் மூலம் 1969 ஆம் ஆண்டு இணையம் தோன்றிய ஆண்டாக அறிய முடிகிறது. இவ்வாறு தோன்றிய இணையம் மூலம் உலக தமிழா்களை ஒன்றிணைக்கும் பாலமாக அது செயல்பட தொடங்கியது. இதனால் பாரதி கண்ட கனவு நிறைவேறியது.
 இணைய இதழியல் துறையானது முதன் முதலில் உலக அளவில் 1970 ஆம் ஆண்டுகளில் வேரூன்றத் தொடங்கிளது. ஐசக் அசிமோவ் போன்ற அறிவியல் புனைவுகளை வடிவமைக்க கணினியை பயன்படுத்தத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டில் இரண்டு வகையான இணைய இதழியல் (Online Journalism) சாதனங்கள் வெளியிட்டன. ஆவை தொலைவரி (Tell-Text) மற்றும் காட்சி வழி செய்த (Video text) ஆகும். பின்னர் இது பல்வேறு படிநிலைகளில் வெளிந்து கொண்டிருக்கிறது.
 அமொரிக்காவில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் இணைக்கக் கூடிய பைநெட், இண்டர்நெட் என்ற இரு மின்னணு இணையத் தொடர்புத் திட்டங்கள் உள்ளன. 1985-ல் டெக்சாசில் உள்ள ஹீஸ்டன் பல்கலைகக்கழகத்தின் ரோட்மோர் காக் (Rope More Cock) என்பவரால் ‘பைநெட் சைக்கோலாக்கி நியூஸ் லெட்டர் என்ற முதல் மின்னணு இதழ் வெளியிட்டது. எலக்ட்ரானிக் ஸ்கை நைட்டிங் (Electronic Sky Writing) என்பதே மின்னணு இதழின் அடிப்படையாகும். 1992-ஆம் ஆண்டு 6 மின்னணு இதழ்கள் கணிப்பான் இணைத்தொடர்கள் மூலம் சந்தாதாரா்களுக்கு கிடைத்தன. எலக்ட்ரானிக்ஸ் ஸ்கை ரைட்டிங் அறிமுகமான பின்னர் இணையத்தில் தமிழ் இதழ்கள் தோன்ற ஆரம்பித்தன. இதற்கு நின்றவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களேயாவா்.
 பல்வேறு படிநிலைகளைப்பெற்ற இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி என்ற பெருமை தமிழுக்கு உண்டு. தமிழ் 1986 ஆம் ஆண்டு பிப்வராரி மாதம் இணைத்தில் ஏறியதாக அறியப்படுகிறது. (இண்டா்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு, ப.8) உலக தமிழா்களை ஒன்றினைக்கும் பாலமாக இணையமானது விரைவாக பரவ வகை செய்கிறது. கணினி மூலம் தமிழை இணைத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்தவா்கள் புலம்பெயா்ந்த தமிழா்களே ஆவர். “முதல் கட்டத்தில் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி மின்னஞ்கள் அனுப்பித் தங்களுக்குள் உளவை வளா்த்து வந்தனர். 1992-93 ஆம் ஆண்டுகளில் எஸ்.சி. தமிழ் இலக்கிய மன்றம் ‘அ’ என்று ஒரு தமிழ் இலக்கிய மின்னிதழை நடத்தியது. (ஆசிரியர் குழுவில் இருந்தவா்கள் அருள் சுரேஷ் வைத்தியநாதன் ரமேஷ் எம். சுந்தர மூர்த்தி, சுந்தர பாண்டியனி விக்னேஸ்வரன்). இது தான் முதல் தமிழ் மின்னிதழாக இருக்க வேண்டும் என்றுமி (தமிழில் இணைய இதழ்கள் ப.23) இணையத்தில் முதல் மின் இதழ் எனும் பெயர் ‘தேனி’   (www.tamil.net/theni)” (மின்-தமிழி ப.68) என்று இரண்டு விதமாக இதழ்கள் உள்ளது என்பதை தொரிந்து கொள்ளலாம்.

இணைய இதழ்களை இரண்டு விதமான நிவையில் வகைப்படுத்தலாம். 1. அச்சு வடிவிலிருந்து இணைய இதழ்களாக இயங்குபவை என்றும் 2. நேரடியாக தொடங்கும் போது இணைத்தில் இதழ்களாக வெளிவருபவை என்று பிரிக்கலாம். இவற்றில் இணையத்தில் நேரடியாக தொடங்கப்பட்ட தமிழின் முதல் ‘மின்னிதழ்‘ என்ற பெருமையை ‘தினபூமி.காம்’ ஆகும். இந்த மின்னிதழ் தினச்சாரி செய்திகளுக்கான இதழாக விளங்குகிறது. இதனைத் தொடா்ந்து 1.5.1996 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா.காம் என்ற இதழே உலகின் முதல் தமிழ் இணைய இதழாகும். இதனை தொடங்கியவர் மா. ஆண்டோ பீட்டர் ஆவார். இவ்வாறு தமிழ் இணைய இதழ்கள் இணையத்தில் தோற்றம் பெற்றதெனலாம்.

தமிழ் இணைய இதழ்களின் வளா்ச்சி:
 கணினியில் அடியெடுத்த வைத்த இணையமானது பந்தயக் குதிரை போல தொடங்கிய நாள் முதல் சுழன்றுகொண்டுள்ளது. இணையத்தில் 1996-க்குப் பிறகு இணைய இதழ்களின் அசுர வளா்ச்சி அடைந்துள்ளது. “அச்சில் வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களைப்போலவே இணைத்தில் வெளிவரும் பல தமிழ் இணைய இதழ்களும் உள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் குறைவான வாசகர்களைச் சென்றடையும் சிற்றிதழ்களைப்போல் இணைய இதழ்களுக்கான இணைய எல்லை விரிவாக இருந்தாலும் இணைய இதழ்களைப் படிக்க இணையம் பயன்படுத்தக்கூடிய திறன் இன்றிமையா தேவையாக உள்ளது”4. (தமிழ் இணையச் சிற்றிதழ்கள் ப.15)

தமிழ் இணையச் சிற்றிதழ்கள் அதிகம் தோன்றுவதற்கு மிக முக்கியமானவர்கள் இடம்பெயர்ந்த தமிழ்ர்களே ஆவார். அவர்கள் ஜாதி, மதம், நாடு எல்லாவற்றையும் கடந்து தம் தாய்மொழியின் மீது வைத்திற்கும் பற்றால் தமிழ் இணைய இதழ்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. இவ்வாறு தோன்றிய இதழ்களுக்கு வாசகர்கள் எண்ணிக்கை பாதியாக  உள்ளது. இவ்வாறு தோன்றியவற்றையும் இணையச் சிற்றிதழ்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இணையத்தில் மட்டும் அச்சு வடிவ இணைய இதழ்களும் இணையத்தில் வடிவ இதழ்களும் 200 மேல் வளம் வந்து கொண்டிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து பல்வேறு விதமான மின் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் துறை சார்ந்த இதழ்களும் இலக்கிய இதழ்களும் பல்வேறு இதழ்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. இணைய இதழ்களின் வகைப்பாடானது அதன் வெளியீட்டு முறைகளுக்கு ஏற்றாற் போன்று நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்றெல்லாம் வகைப்படுத்த முடியும். நாளிதழையும், காலைஇதழ், மாலை இதழ் என வகைப்படுத்தலாம். இவ்வறு வளர்ச்சியடைந்த இணைய இதழ்களை விக்கிப்பீடியாவில் பின்வரும் பொருண்மைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

1. ஆன்மீகம் 2. சமூகம் 3. அரசியல் 4. இலக்கியம் 5. ஆய்வு 6.  பகுத்தறிவு 7. பெண்கள் 8. சமையல் 9. நகைச்சுவை 10. திரைப்படங்கள் 11. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 12. வணிகம் 13. சோதிடம் 14. சிறுவர் 15. கவிதை 16. மருத்துவம் 17. நூலகம் 18. திருமணம் 19. பல்சுவை 20. பாலியல் உறவுகள் 21. சங்க அமைப்புகள் 22. தனி மனிதா் கருத்துக்கள் 23. திரட்டிகள்.

1. ஆன்மீகம்

 1.இந்து மதம்
  1. டெம்பிள் டிவைன் சக்சஸ்

 2. கிறித்துவ மதம்
  1. தமிழ் கிறிஸ்டியன்ஸ்
  2. திருமறை தீபம்
  3. இரட்சிப்பின் வழி

 3. இசுலாமிய இதழ்
  1. இஸ்லாம் கல்வி
  2. சத்திய மார்க்கம்
  3. இஸ்லாம் குரல்
  4. தமிழ் இஸ்லாம்
  5. சத்தியப்பாதை
  6. தமிழில் குர் ஆன்
  7. இதுதான் இஸ்லாம்

2. சமூகம்
 மக்கள் சட்டம்
3. அரசியல்
 1. கூடல்
 2. நெருப்பு
 3. தமிழ் அலை
 4. ஈரனல்

4. இலக்கியம்
 1. அப்பால் தமிழ்
 2. தமிழ்க்காவல்
 3. தமிழ்கூடல்
 4. திண்ணை
 5. ஆறாம் திணை
 6. தமிழ் தராமதி

5. ஆய்வு
 1. தமிழ் கூடல்
 2. தமிழ்த்திணை
 3. காந்தீயம்
 4. கணியத்தமிழ் சாஃப்ட்வோ்
 5. தமிழ் மரபு அறக்கட்டளை
6. பகுத்தறிவு
 1. பெரியார் குரல் 2. தந்தைபொரியார் 3. திராவிடா்

7. பெண்கள்
 1. கூடல்
 2. தோழி

8. சமையல்
 அறுசுவை

. நகைச்சுவை
 அப்புசாமி

10. திரைப்படங்கள்
 1. தமிழ் சினிமா
 2. விடுப்பு
 3. சினிமா எக்ஸ்பிரஸ்

11. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. தொழில் நுட்பம்
 2. சீன வானொலி நிலையம்
3. அறிவியல் உலகம்

12. வணிகம்
 1. சென்னை நூலகம்
 2.  கணியத் தமிழ்

13. சோதிடம்
 ஜோதிடம்

14. சிறுவா;
 1. சிரிதரன்
 2. கானவு
 3. நம்நாடி
 4. தமிழ் க்ராஸ் வேடு

15. கவிதை
 1. வார்ப்பு
 2. நிலாச்சாரல்
 3. கவிமலர்
 4. சுபம் விதைகள்
 5. தீபம் விதைகள்

16. மருத்துவம்
 1. ஹாய் நலமா?
 2. ஈகதை-சித்த மருத்துவம்

17. நூலகம்
 1. விருபா
 2. காந்தளம் தமிழ் நூல்
 3. சென்னை நூலகம்
 4. எனி இந்தியன்

18. திருமணம்

19. பல்சுவை
 1. முத்துக்கமலம்
 2. கீற்று
 3. மடழோவியம்
 4. பதிவுகள்
 5. மரத்தடி
 6. தமிழ்சிகரம்
 7. இதய நிலா
 8. தமிழ் விசை
 9. மன ஓசை

20. பாலியல் உறவு
 ஈகரை மன்மத ரகசியம்

21. சங்க அமைப்புகள்
 1. தமிழ் இசைச் சங்கமம்
 2. வாசிங்டன் வட்டாரத் தமிழ் சங்கம்
 3. ரியாத் தமிழ் சங்கம்
 4. சந்நிதியான் ஆச்சிரமம்
 5. மதுக்கூர் இணையம்
 6. உரும்பிராய் இணையம்
 7. சித்தாள் கோட்டை

22. திரட்டிகள்
 1. தமிழ் மணம்
 2. திரட்டி
 3. தேன் கூடு
 4. தமிழ் வெளி
 5. சங்கமம்
 6. தமிழ் பாரதி

இணையத்திலே தோன்றி வெளிவரும் தமிழ் மின்-இதழ்கள்
1. தட்சு தமிழ்
2. பதிவு.காம்
3. தமிழ்சினிமா.காம்
4. தமிழ்ஈ
5. நிதர்சனம்.காம்
6. வீரகேசாரிஆன்லைன்.காம்
7. யாழிணையம்
8. அறுசுவை
9. தமிழன் எக்சுபிரசு
10. தமிழ்நெட்
11. தமிழ்க்கூடல்.காம்
12. சினிமாஎக்ச்பிரசு(ஒருங்குகுறி)
13. தேனி.இலங்கை.காம்
14. தமிழ்மணம்
15. தமிழ்பிலிம்கிளப்
16. புதினம்
17. பதிவுகள்  கனடா மாத இதழ்
18. சங்கதி
19. அதிர்வு
20. சுடரொளி
21. தமிழஆர்
22. சுவிசுமுரசம்
23. மட்டுஈழநாதம்
24. பரபரப்பு
25. முழக்கம்
26. கனடாமுரசு
27. சுதந்திரம்
28. ஈழமுரசு
29. ஈரநாதம்
30. தமிழ்நாதம்
31. லங்காசிறீ
32. தமிழ்தகவல்மையம்
33. சுரதா
34. தமிழ்நியூசு.டிகே
35. சற்றுமுன்
36. வணக்கம்மலேசியா
37. அலைகள்
38. தென்செய்தி
39. நோர்வேதமிழ்
40. ஈழதமிழ்
41. நெருடல்
42. தமிழ்விண்
43. விருபா
44. சோதிடபூமி
45. குவியம்   கனடா மாத இதழ்
46. நாதம்
47. தமிழோவியம்  இந்தியா மாத இதழ்
48. அப்பால்தமிழ்  பிரான்ஸ் இதழ்
49. வார்ப்பு(கவிதைஇதழ்)  இந்தியா மாதைருமுறை இதழ்
50. நெய்தல்
51. கவிமலா்  இந்தியா
52. இளமை
53. தமிழமுதம்
54. நிலாச்சாரல்  இந்தியா வார இதழ்
55. தமிழம்   இந்தியா மாதைருமுறை இதழ்
56. எழில்நிலா
57. வானவில்
58. தமிழ்த்திணை(ஆய்வுஇதழ்)
59. திசைகள்    இந்தியா மாத இதழ்
60. அம்பலம்
61. ஆறாம்திணை
62. மரத்தடி   இந்தியா மாத இதழ்
63. தமிழெழுதி 
64. தமிழ்முரசு(சிங்கப்பூர் ஒருங்குகுறி)
65. அமுரசுரபி
66. கலைமகள்
67. தமிழகம்.காம் 
68. மஞ்சரி
69. ஈழவிசன்
70. தமிழ்ஆசுதிரேலியா
71. எரிமலை
72. இன்தாம்    இந்தியா மாத இதழ்
73. வரலாறு
74. மொழி
75. செம்பருத்தி  மலேசியா
76. தமிழமுதம்
77. தாயகப்பறவைகள்
78. கீற்று
79. சூரியன்
80. திண்ணை    இந்தியா மாத இதழ்
81. புதுச்சேரி.காம்
82. உண்மை
83. புதுவிசை
84. தமிழரங்கம்
85. தமிழ்வாணன்
86. தமிழகம்.நெட்
87. கீற்று வழங்கும் இணைப்புகள்
1.கவிதாசரன்
2. கருஞ்சட்டைத் தமிழா்
3. புதியகாற்று
4. அணி
5. அணங்கு
6. குதிரைவீரன்பயணம்
7. விழிப்புணர்வு
8. தீம்தரிகிட
9. கதைசொல்லி
10. புதுவிசை
11. கூட்டாஞ்சோறு
12. அநிச்ச
13. புதுஎழுத்து
14. உங்கள்நூலகம்
15. புதியதென்றல்
16. வடக்குவாசல்
17. புன்னகை
18. உன்னதம்
19. புரட்சிபெரியார் முழக்கம்
20. தலித்முரசு
88. கருத்து
89. சித்தர்கோட்டை
90. பொய்கை
91. கௌமாரம்
92. தமிழ்வலை
93. மலேசியநண்பன்
94. கணையாழி
95. கணியத்தமிழ்
96. தமிழ்முதுசொம்
100. தென்றல்
101. பதியம்
102. தமிழ்வெப்துணிமா
103. ஊடறு
104. முத்துக்கமலம்
105. தென்னிந்திய ச.வ.ஆ.நிறுவனம்
106. கணித்தமிழ்
107. சத்யம்
108. முதுகுளத்தூர்
109. ஆன்லைன்உதயம்
110. வலம்புரி
111. பாரீஸ்தமிழ்  ஏப்ரல்17 - 2007
112. தேசக்காற்று
113. புகலிடப்புத்தகம்   இந்தியா மாதைருமுறை இதழ்
114. இசங்கமம்   இந்தியா மாத இதழ்
115. வெப்தமிழன்   இந்தியா வார இதழ்
116. உலகத்தமிழோசை   கனடா மூன்றுமாத இதழ்
117. அப்புசாமி  இந்தியா சிரிப்பு இதழ்
118. நுட்பம்    கனடா கலாண்டு இதழ்
119. இன்பிட்   இந்தியா மாத இதழ்
120. நான்காம்தமிழ்   இந்தியா வார இதழ்
121. அமுதசுரபி   இந்தியா மாத இதழ்
122. வாரசுரபி

 இந்தியா வார இதழ்

123. இஸ்லாமிய இணையம்  இந்தியா மாத இதழ்
124. திருமறைத்தீபம்   நியூசிலாந்து காலாண்டு இதழ்
125. அருள்பூமி  இந்தியா மாத இதழ்
126. வலைத்தமிழ்  இந்தியா
127. சிறகு  இந்தியா வார இதழ்
128. தமிழ்மண்   இந்தியா மாத இதழ்
129. அன்னை   இந்தியா மாத இதழ்
130. சக்தி  மாத இதழ்
131. அரும்பு  இந்தியா மாத இதழ்
132. நிலவு

அச்சு வடிவிலிருந்து பிறகு இணையத்தில் ஏறிய இணைய நாளிதழ்கள்
1. தினமலா்
2. தினகரன்
3. தினத்தந்தி
4. தி-இந்து
5. மாலைமலர்
6. தினமணி
7. தினக்குரல்
8. தமிழ்முரசு
9. மாலைச்சுடர்
10. ஒருபேப்பர்
11. முரசொலி
12. தினபூமி
13. தாய்நாடு

அச்சிலும் இணையத்தில் வெளிவரும் இணைய இதழ்கள்
1. குமுதம்
2. ஆனந்தவிகடன்
3. வெப்புலகம்
4. பி.பி.சிதமிழ்
5. சிபிதமிழ்
6. தமிழ்பிலிம் மியூசிக்
7. விடுதலை
8. கல்கி
9. காலச்சுவடு
10. உயிர்மை
11. நக்கீரன்
12. தி.க.பொரியார்
13. திராவிடர்
14. முத்தமிழ்மன்றம்
15. மங்கையா்மலா்
16. முத்தமிழ்ச்சங்கம்
17. புதியதலைமுறை
18. புதியதலைமுறைகல்வி
19. பனுவல்
20. ஆய்தஎழுத்து
21. உலகத் தமிழ்   இந்தியா மாதைருமுறை இதழ

இவ்வாறு பல்வேறு இணைய இதழ்கள் இணையத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றது. இவற்றின் மூலம் தமிழ்மொழியானது பல்வேறு நிலைகளில் வளர்ந்து வருகிறது என்பதை அறியமுடிகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழ் மொழிக்கென தனியொரு இணையதளத்தை உருவாக்க 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் இரண்டும் சோ்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள ஆராய்ச்சிகளை (ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்) இணைக்க முயர்ச்சியினை மேற்கொண்டுள்ளன. இதனால் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்தவித சிரமுமில்லாமலும் காலவிரையமும் தவிர்க்கப்படுவதால் தங்களுக்கு ஆராய்ச்சியினை விரைந்து முடிக்கவும் இவ்விணையதளம் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

முடிவுரை
 ஒவ்வொரு காலச் சூழ்நிலைகளிலும் தகவல்தொடர்பு மிகச் வளர்ச்சி அடைந்தாலும் இன்று இணையத்தின் வழி இத்தகவல்தொடர்பு பணியானது மிகவும் அசுர வேகத்தில் மிகப்பரிய வளர்ச்சி நிலையை அடையும் என்பதே அசைக்க முடியாதை ஆணித்தரமான நம்பிக்கையாகும்.  மேலும் இணையத்தின் வழியில்தான் உலகளாவிய அளவில் உள்ள மக்களின் இலக்கியங்களில் பதிவாகும் பண்பாடு,  நாகரிகம் முதலியவற்றை அறிந்து கொள்ள தகவல் தொடர்பு சாதனமாக உள்ள இணைய இதழ்கள் உதவுகின்றன. எதிர் காலங்களில் தகவல்தொடர்பு துறை பல்வேறு முறைகளில் வலம் வந்து உலக நாடுகளிலுள்ள அனைத்து மக்களின் அனைத்து தேவைகளையும் இணையம் போக்கும் என்கின்ற சட்டத்தினை எடுக்கும் வண்மை படைத்த ஒரு துறையாக மாறி இலக்கியங்களுக்கு மிகப்பொரிய தொண்டினை இணைய இதழ்கள் தொடர்ந்த வண்ணமாக இருக்கும் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. இதற்காக மத்தியை  மாநில அரசுகளும் தங்களுடைய பங்கினை அளித்து வருகின்றன.

துணை நூற்பட்டியல்
1. தமிழும் கணிப்பொறியும் - ஆண்டோபீட்டா்
2. அறிவியல் தமிழ் - டாக்டா் வா.செ.குழந்தைசாமி
3. மின் தமிழ்
4. இண்டா்நெட் உலகில் தமிழ், தமிழன், தமிழ்நாடு - ரிஷபம் பதிப்பகம்.
5. தமிழில் இணைய இதழ்கள் - அண்ணா கண்ணன்
6. தமிழ் இணையச் சிற்றிதழ்கள் - தேனி.எம்.சுப்பிரமணி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R