பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 - வ.ந.கிரிதரன் -

greeting_pongal5.jpg - 13.10 Kb கதிரும், உழவும் இன்றேல் இங்கு
 உயிரின் இருப்பும் இல்லை அதனால்
 நன்றி மறப்பது நன்று அன்று
 என்றே நாமும் பொங்கல் செய்வோம்.
 கதிரும் வாழ்க! உழவும் வாழ்க!
 உழவர் வாழ்வில் இன்பம் பொங்க,
 உலகோர் வாழ்வில் மகிழ்ச்சி மலர
 இத்தரை எங்கும் மரங்கள் செழிக்க
 இங்கு இருக்கும் உயிர்களும் களிக்க
 கதிரும் உழவும் எருதும் எண்ணி
 அனைவர் வாழ்வும் களியால் சிறக்க
 இன்பப் பொங்கல் செய்வோம்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 நாளும் பொழுதும் இரத்தம் சிந்தி
 வாழும் வாழ்வு ஒழிந்து நீதி
 ஒளியில் உலகு மூழ்கிக் களிக்க
 அனைத்துப் பிரிவுகள் நீங்கி மானுட
 இனத்தில் ஏற்றம் பிறந்திட எங்கும்
 களியால் நிறைந்து வழிந்திட
பொங்கலொ பொங்கல். பொங்கலோ பொங்கல்
  

  பொங்கலோ பொங்கல்.. 

 - லிங்கேஸ்வரன் (ஜேர்மனி) -

greeting_pongal5.jpg - 13.10 Kb

உழவர் உழுததை
உணர்ந்த மண்ணும்
உழைப்பின் வியர்வையை
அறிந்த மழையும்
எமக்காய் இன்று 
பொங்கலாய்...
பொங்கலோ பொங்கல்..


 பொங்கல் வாழ்த்துக்கள் - 2015

- மீ. ராஜகோபாலன் -

greeting_pongal5.jpg - 13.10 Kb

ஞானமே செந்தீ நம்முடலே நற்பானை
காணுலகம் நம்வீடு காண்பவரேநம்சுற்றம்
நந்நீரே நல்மனது நற்பாலே அறப்பால்
பன்னீர் இனியமொழி பரிமளமே நற்பண்பு
அள்ளிக் கலந்தூட்ட அன்புநெய் பரிமாற
வெள்ளிப் புன்சிரிப்பு விருந்துலக உபசரிப்பு

தைப்பொங்கல் என்பதனால் மனத்
தைப்பொங்கச் செய்யுங்கள்

செயலரிசி பொங்கல் செகமெலாம் பொங்கட்டும்
அயலராம் உறவுஎன அறிவுமணி அடிக்கட்டும்
தாவரமும் ஆவினமும் தரணியிலே  யாவினமும்
மேவியுடன் வாழ்ந்து மேலும் உயரட்டும்

  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


மாட்டுப் பொங்கல்  

- இரா. சீனிவாசன், (தைவான்) -

greeting_pongal5.jpg - 13.10 Kbஅமுதசுரபியாய்
அள்ளித்தந்த
வற்றாத கிணறும்
அதில் ஓங்கி நின்ற
ஏற்றமும் கமலையும்
வண்டிச்சாலையில்
கம்பீரமாய் நின்றிருந்த
இரட்டை மாட்டுவண்டியும்
அதன் முதுகில்
அரவமின்றி அமர்ந்திருந்த
மூங்கில் கோதணையும்
நீர் விழுந்த நிலத்தினில்
நேர்க்கோடுகளாய் உழுத
ஏர்க்கலப்பையும்
அங்கம் செழுமிய
காங்கேயம் காளைகளும்
ஆட்டுப்பட்டியும்
அதன் நடுவில்
அசைவின்றி கிடந்த
கொடாப்பும்
நாட்டுக் கோழியும்
மாட்டைப் பூட்டிய
நல்லெண்ணெய்ச் செக்கும்
கரை ததும்பிய ஏரியும் - அது
காய்ந்த காலத்தில்
உரமாகி - மண்ணிற்குத்
திறம் சேர்த்த
வண்டல் மண்ணும்
வயல்களை
வருடி நின்ற
வேம்பும் கொன்றையும்
எம்குல வாகையும்
கோடையை இதமாக்க
பதமாய் நீர் தந்த
பனையும்
சப்பித் துப்பிய
புளிப்பு இலந்தையும்
கடித்துச் சுவைத்த
கள்ளிப் பழங்களும்
கூடிச்சமைத்த
கூட்டாஞ்சோறும்
கூவித்திரிந்த குயில்களும்
கூடித்தின்ற காகங்களும்
உயரே பறந்த கழுகுகளும்
உரிமையாய் - எம்
வீட்டோரம் வசித்த
சிட்டுக்குருவிகளும் - எம்
கண் முன்னே
கானல் நீராகிக்
காணாமல் போன பின்னே
இங்கே
பொங்கிக் கொண்டிருப்பது
பொங்கல் மட்டுமன்று -
எம் கண்களும்தான்!
பொங்கல் பானைக்குள்
மெல்லக் கரைவது
வெல்லம் மட்டுமன்று - எம்
இளம்பிராயத்து
இனிய நினைவுகளும்தான்!

 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 புதிய வருட 2015 உதய வாழ்த்து

- பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) -

வேதா. இலங்காதிலகம்

எண்ணக் கோலம் எடுப்பாக நாம்
பண்ணும் காரியம் சிறப்பாக வருக!
கிண்ணம் நிறைய வெற்றி நிறைந்து
நண்ண வேண்டும் புத்தாண்டு!

வண்ணக் கோலப் பொடியில் எம்
கண்கள் கவரும் புது மாதிரியில்
மண்ணில் வரவேற்கும் புது வருடம்
விண்ணிலிருந்து இறங்கிடாது பார்!

நாம் முயன்ற நற் காரியங்களிற்கு
நாமே நன்றி கூறி எல்லாத்
தவறுகளையும் உணர்ந்து மன்னிப்புக் கோரி
தந்த ஆதரவிற்கும் நன்றியிடுவோம்.

சனியும் சகலதும் விலகித் தெளிவாக
கனியட்டும் இனிக்கும் 2015 வருடம்.
பனி கூட குறைவாக வந்த
தனி ஆண்டாய் முடிகிறது.
 

பட்டாசுப் பூவாணம்

பட்டாசுப் பூவாணம் தங்க மழையாய்
பல வர்ண மின்சாரப் பூமழையாய்
பத்தாயிரம் மின்மினிகள் ஒளிர்வதாய் வெடிக்கும்
பட்டாசு வேடிக்கை பார்க்கப் பரவசம்!
பரபரப்புடன் மனதில் ஆனந்தப் பதிவு

பச்சைக் கொடியாகப் பெற்றோரை அணைக்கும்
பச்சிளம் பிள்ளைகளிற்குப் பயந்த அனுபவம்
பதுங்கும் கோழிக் குஞ்சாக மடிக்குள் தஞ்சம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R