மு.வெங்கடசுப்ரமணியன் 10.05.1956இல் பிறந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் மட்டுமே பார்வைத்திறன் கொண்டவராய் பிறந்தவர் பின் படிப்படியாக அடுத்த கண்ணிலும் பார்வையை இழந்துவந்தார். ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோஸா’ எனப்படும் விழித்திரை பாதிப்பின் காரணமாக, மறு கண்ணிலும் முழுமையாக பார்வை பறிபோயிற்று.அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. மற்றவர்களின் உதவியையே எதிர்பார்த்துக்கொண்டிராமல் சுயமாக வாழ வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் அந்த இளம் வயதிலேயே வெங்கடசுப்பிரமணியனின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டன. குடும்பத் தாரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது. தாயார் நாளேடுகள் முதல் இதிகாசங்கள் வரை படித்துக்காண்பிப்பாராம். தந்தை ஆங்கிலம் போதித்தார். உடன்பிறந்தவர்களும் இவருக்கு இப்போதுமே பக்கபலமாக இருந்துவந்தனர்.மு.வெங்கடசுப்ரமணியன் 10.05.1956இல் பிறந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் மட்டுமே பார்வைத்திறன் கொண்டவராய் பிறந்தவர் பின் படிப்படியாக அடுத்த கண்ணிலும் பார்வையை இழந்துவந்தார். ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோஸா’ எனப்படும் விழித்திரை பாதிப்பின் காரணமாக, மறு கண்ணிலும் முழுமையாக பார்வை பறிபோயிற்று.அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. மற்றவர்களின் உதவியையே எதிர்பார்த்துக்கொண்டிராமல் சுயமாக வாழ வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் அந்த இளம் வயதிலேயே வெங்கடசுப்பிரமணியனின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டன. குடும்பத் தாரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது. தாயார் நாளேடுகள் முதல் இதிகாசங்கள் வரை படித்துக்காண்பிப்பாராம். தந்தை ஆங்கிலம் போதித்தார். உடன்பிறந்தவர்களும் இவருக்கு இப்போதுமே பக்கபலமாக இருந்துவந்தனர். 1986ஆம் வருடம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவை யாறு அரசர் தமிழ் மற்றும் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பட்டயப் படிப்பில், விதிவிலக்கின் அடிப்படையில் தனது 29ஆம் வயதில் சேர்ந்தார் வெங்கடசுப்பிர மணியன். இவர் ஒருவர் தான் மாணாக்கர்களில் பார்வையிழந்தவர். ஆரம்பத்தில் இவரை ஒருமாதிரிப் பார்த்த சக மாணவர்கள் நாளாக ஆக இவரை மூத்த சகோதரனைப்போல் நடத்தத் தொடங்கினார்கள். அவர்கள் 8ஆம் வகுப்பு படித்தவர்களே. ஆனால், அவர்கள் வெங்கடசுப்ரமணியனின் கல்வி தொடர பெரிதும் உதவினார்கள். அவருக்கு ஆர்வமாகப் படித்துக்காட்டினார்கள். பள்ளிக் கல்வியையும் முடித்தார் வெங்கடசுப்ரமணியன். மிருதங்கம் கற்கத் தொடங்கியவர் இறுதியில் இந்திய இசையில் கீழ்/மேல் நிலைகளில் தேறினார். 1991இல் டி.டி.ஸி முடித்தார்(இசையாசிரியர் பயிற்சி). 1995இல் வெங்கடசுப்ரமணியனின் மனைவியாக மனம்விரும்பி முன்வந்தவர் சூரியா. பார்வையுள்ளவர். இன்றளவும் வெங்கடசுபரமணியத்தின் வலதுகர மாகத் திகழ்ந்துவருகிறார்!

 

நன்றாகப் புல்லாங்குழல் வாசிக்கக் கூடியவர் வெங்கடசுப்ரமணியன். படிக்கும் காலத்தில் 40 மேடைக் கச்சேரிகள் செய்துள்ளார். இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். தரமான நூல்களை வாசிப்பதிலும், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவர். கல்லூரிக் காலத்திலேயே குழல், யாழ், முழவு என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை ஆண்டுமலரில் வெளியானது. தெய்வத் தமிழிசை என்ற தலைப்பில் கர்நாடக இசை ராகங்களை அடிப்படையாகக்கொண்டு இவரால் எழுதப்பட்ட 18 பாடல்கள் சிறு நூலாக வெளியாகியுள்ளது. ‘எல்லைகளுக்கு உட்பட்ட ஒன்றிலிருந்து எல்லைகளேயில்லாத ஒன்றை நோக்கிய பயணமே கலை என்று உணர்கிறேன்’, என்று கலைகளைப் பற்றிக் குறிப்பிடும் திரு.வெங்கட சுப்ரமணியன் சிறுகதைகள் கணிசமாக எழுதியுள்ளார்.  -


ஒரு மாலை நேரம். சுமார் நாலரை மணிக்கு மேல் ஒரு தம்பதியினர் கண் மருத்துவமனைக்குள் சென்று மருத்துவரைப் பார்த்து தங்கள் மகனின் கண் பரிசோத னைக்குப் பிறகு நிலைமை எப்படியுள்ளது என்று கேட்பதற்காகச் சென்றிருந்தார்கள். மணி ஓடிக்கொண்டிருந்தது. சுமார் ஆறு மணிக்கு மேல் மருத்துவர் தன்னுடைய ‘கன்ஸல்டிங்’ அறைக்குள் வந்தார். வாசலில் உதவியாள் அமர்ந்துகொண்டு நோயாளிகளை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார். குறைந்தது ஒரு நோயாளிக்கு பத்து நிமிடங்களாவது ஆயிற்று. அவசர சிகிச்சைக்காக வந்தி ருந்த நோயாளிகள் சுமார் ஐந்து, ஆறு பேருக்கு மேல் பார்க்கவேண்டியிருந்ததால் அந்த தம்பதியர் மருத்துவரைப் பார்க்க பொறுமை காக்கவேண்டியிருந்தது. ஆனால், அவர்களுடைய மனங்களோ நிமிடங்களை மணிகளாக பாவித்துக் கடத்திக்கொண்டிருந்தன.

கடைசியில், பொறுமையிழந்து அங்கேயிருந்த உதவியாளரிடம் மருத்துவரைப் பார்க்கத் தங்களை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். உதவியாளர் உள்ளே சென்று மருத்துவரிடம் விசாரித்துவிட்டு வந்தார். அடுத்த இருபது நிமிடங்களில் அவர்கள் உள்ளே போய் மருத்துவரைப் பார்க்கலாம் என்று தெரிவித்தார். ஆயிற்று. மணி 7.30. உள்ளேயிருந்த நோயாளியை அனுப்பிவிட்டு, இந்த தம்பதியரை வரச் சொன்னார் மருத்துவர்.

அங்கே இரண்டு இருக்கைகள் இருந்தன. ஒன்றில் கண்ணாயிரமும் மற்றதில் அவர் மனைவி கண்ணம்மாவும் அமர்ந்தார்கள். மருத்துவர் தன் கைக்குட்டையை எடுத்து வியர்த்திருந்த தன் முகத்தைச் சற்றே ஒற்றியெடுத்துக்கொண்டார். அவருடைய முகத்தில் அவர் போட்டிருந்த பவுடர் மற்றும் செண்ட் காரணமாக அவருடைய வியர்வைகூட அந்த அறையில் மணத்தைத் தான் பரப்பியது. இரண்டு மணி நேர மாக ஏ.சி ஓடவில்லை. அதுதான் புழுக்கத்திற்குக் காரணம். இப்பொழுது மருத்துவர் நன்கு நிமிர்ந்து அமர்ந்துகொண்டார். தம்பதியரைப் பார்த்து “சொல்லுங்கள்” என்பது போல் ஒரு பார்வையை செலுத்திவிட்டு அமைதியாகக் காத்திருந்தார். அப்பொழுது கண்ணாயிரமும், கண்ணம்மாவும் ஏக காலத்தில் அவரிடம், “சார், எங்கள் பையன் ஞானத்தின் நிலை இப்போது எப்படியுள்ளது?” என்று கேட்டார்கள்.

மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியளிக்கும் எந்த அறிகுறியும் இல்லை. நிதானமான குரலில் ”நேற்றைக்கு அட்மிட் செய்தீர்கள். எல்லாவிதப் பரிசோதனைகளும் முடிந்து விட்டன. இரண்டு கண்களிலும் உள்ள ‘கார்னியா’க்களும் அமிலம் பட்டதால் அநேகமாக முற்றிலும் செயலிழந்துவிட்டன. இதற்கு வேறு எந்த சிகிச்சையும் செய்ய முடியாது. மாற்றுக்கண் வைப்பது ஒன்றுதான் தீர்வு” என்று சொன்னார்.

தம்பதியர் முகங்களில் கவலை உச்சக்கட்டத்திற்குச் சென்று முகத்தை இருளடை யச் செய்துவிட்டது. அவர்களது நிலையைப் பார்த்த மருத்துவருக்கு அனுதாபப்படு வதைத் தவிர அந்த நேரத்தில் வேறொன்றும் செய்ய முடியவில்லை.  தம்பதியர் மருத்துவரைப் பார்த்து “அப்படியானால், மாற்றுவிழிக்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டார்கள்.

மருத்துவர், “கண் வங்கிகள் இருக்கின்றன. அவற்றில் கண் தானம் செய்வோர் பெயர்களைப் பதிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், கண்கள் தேவைப் படும் அளவுக்கு கண்களின் வரத்து இல்லை. பிற உறுப்புகளைப் போல உயிரோடு இருக்கும்போதே தானம் செய்யக்கூடிய உறுப்பு அல்ல கண்கள். சிறுநீரகமோ அல்லது நுரையீரலோ கூட ஒருவர் ஒன்றைத் தானம் செய்து உயிர்வாழ முடியும். ஆனால், கண்கள் அப்படி அல்லவே. ஒற்றைக்கண்ணால் பார்ப்பது கொடுமை. ஒரு கண்ணை தானம் செய்துவிட்டு யாரும் தொழில்கள் பலவற்றைச் செய்யவியலாது. உதாரணமாக, ஒரு வண்டி ஓட்டுனர் ஒற்றைக் கண் பார்வையோடு இருந்தால் அவருக்கு நிச்சயமாக ஓட்டுனர் உரிமம் கிடைக்காது. இதில்  கண் தானம் செய்தி ருந்தால் நிச்சயமாகக் கிடைக்காது. ஆகவே, நாம் உயிரோடு உள்ளவர்களி டமிருந்து தானமாகக் கண்களை நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. சிவனாருக்குக் கண்ணை தானம் செய்த தின்னனாரை[கண்ணப்பர்]ப் போன்றவர்கள் இன்னமும் இருக்கிறார் கள். மனமிருந்தாலும் மார்க்கமில்லை. இதுதான் இன்றைய யதார்த்த நிலை. ஆகவே, நீங்கள் உங்கள் மகனுக்குப் பொருத்த தானமாக கண்கள் கிடைக்கும் வரை காத்திருக்கவேண்டியதுதான்”, என்று கூறினார்.

கண்ணாயிரம் மீண்டும் கேட்டார். “எவ்வளவு நாள் ஆகலாம் சார்?”

மருத்துவர் இதற்கு என்ன பதில் சொல்வார்? சற்றே அனுதாபமான பார்வை தான் பதிலாக வந்தது. எனினும் தொடர்ந்தார். “ஐயா, கண்களை தானமாகப் பெற விழை வோர் பட்டியல் நீண்டதாக உள்ளது. அதிலும், முதலில் பதிவு செய்தவர்களுக்குத் தான் முதலில் கண் பொருத்தப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே, எவ்வளவு நிறைய கண்கள் வருகின்றனவோ, அதைப் பொறுத்துத் தான் உங்கள் மகனுக்குக் கண் பொருத்த முடியும். நீங்கள் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்,” என்று நிறுத்தினார்.

தம்பதியர் பரிதாபப் பார்வையை மருத்துவர் மேல் பதித்தார்கள்.

இப்போது அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்: “பொதுவாக கண் தானம் பற்றி எத்தனையோ விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், விளைவுகள் வரவேற்கத்தக்கதாக இல்லை. இதிலும் கொடுமை என்னவென்றால், தானம் செய்வதாகப் பதிவுசெய்தவர்களின் கண்களைக் கூட அவர்களுடைய உறவினர்கள் எடுக்க விடுவதில்லை. சில சமயம் அவர்கள் இந்த செய்தியையே மறந்துவிடுகிறார் கள். மருத்துவர்களால் அவற்றை உரிய நேரத்தில் சேகரித்துப் பயன்படுத்த முடியா மல் போய்விடுகிறது. ஏனென்றால், இறந்து ஆறுமணிநேரங்களுக்குள் எடுக்கப்படும் கண்ணைத் தான் பொருத்த முடியும்.[ அதுவும், உடனடியாகப் பொருத்தப்படவேண் டும்]. மேற்கண்ட சூழ்நிலை நிலவுவதாலேயே என்னால் உங்களுக்கு சாதகமாக எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.”, என்று தன் பேச்சை முடித்துக்கொண்டு எழுந்தார் மருத்துவர். தம்பதியரும் சோகம் சூழ்ந்த முகத்துடன் வெளியே வந்தார்கள்.

கண்ணாயிரம், கண்ணம்மா தம்பதியருக்கு ஞானசுந்தரம் ஒரே மகன். அவனுக்கு முன்பும் பின்பும் சில குழந்தைகள் பிறந்து இறந்துபோயின. கண்ணாயிரத்தின் குலக் கொழுந்தான ஞானசுந்தரம் அறிவில் மட்டுமல்ல, அழகிலும் சுந்தரம் தான்! அவன் படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் முதன்மையாகத் திகழ்ந்தான். அவனுடைய +2 மதிப்பெண்கள் தரமான ஒரு கல்லூரியில் B.E வேதியியல் பொறியியல் பட்டப் படிப்புக்கு [B.E, CHEMICAL ENGINEERING]இடம் கிடைக்கச் செய்தது. அவன் ‘ஃபார்மஸி’ RND [RESEARCH AND DEVELOPMENT] துறையில் ஒரு விஞ்ஞானியாக இருந்தான். அப்போது தான் அந்த துரதிருஷ்ட சம்பவம் நடந்தது. கைபேசியில் வந்த ஓர் அழைப்பை ஏற்க கைபேசியை எடுத்தபோது தவறுதலாகக் கை தட்டிவிட்டதில் மேலேயிருந்த ரசாயனக் குப்பி ஒன்று கீழே விழுந்தது. அது உடைய, அதிலிருந்த அமில ரசாயனம் அவன் முகத்தில் பட்டுவிட்டது. அதே நேரத்தில் கண்களிலும் பட்டுவிட்டது. கைக்குட்டையால் முகத்தை அவசரமாக ஒற்றியெடுத்துவிட்டு, குளிர்ந்த நீரில் முகத்தையும், கண்களையும் கழுவிவிட்டும் கூட கண்கள் பாதிக்கப் பட்டுவிட்டன. அடுத்த 24 மணிநேரத்திற்குள் எழும்பூர் கண் மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டான். அதன்பின் நடந்ததை நாம் பார்த்தோம்.

தற்போது அந்த தம்பதியர் பெரும் மனச்சோர்வுடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களுக்கு பசியோ, தாகமோ இல்லை. அன்று காலை அவர்கள் உணவருந்தியதோடு சரி. இப்போது அவர்களுடைய மனங்கள் பாறாங் கற்களை விடக் கனத்துக்கொண்டிருந்தன. ஒரு நிமிடம் இருவரும் ஒருவரையொரு வர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். கண்ணம்மாள் தான் சொன்னாள்: “நாம் இரு வரும் மயிலை கற்பகாம்பாள் கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டு வருவோம். நடப்பதை அவள் பார்த்துக்கொள்ளட்டும். நம் கையில் ஒன்றுமில்லையே”, என்று விரக்தியோடு சொன்னாள்.

அதன்பின் இருவரும் கோயிலுக்கு வந்தார்கள். சாமியை தரிசித்துவிட்டு அம்மன் சன்னிதியில் வந்து நின்றார்க்ள். அப்போது அர்ச்சகர் தீபாராதனை காட்டிவிட்டு தட்டை அவர்களிடம் கொண்டுவந்தார். அவர்களிருவரும் ஆரத்தி எடுத்துக்கொள்ளக் கையை நீட்டினார்கள். அப்போது அவர்கள் இருவர் மனங்களிலும் ஒரே சிந்தனை பளிச்சிட்டது. அவர்களுடைய முகங்களில் ஒரு விநாடி பிரகாசம் சுடர்விட்டது. பிரசாதம் பெற்றுக்கொண்டு பிராகாரத்தில் வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்போது கண்ணம்மா ஏதோ சொல்ல வாய் திறந்தாள். கண்ணாயிரம் அவளைக் கையமர்த்தி விட்டு பேசத் தொடங்கினார்:

“கண்ணம்மா, இன்று டாக்டர் நம்மிடம் சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த் தாயா? விபத்தால் பாதிக்கப்பட்டு பார்வையிழப்போர் பலர். ஆனால், இறப்புக் குப் பிறகும் தங்கள் விழிகளால் உலகத்துக்குப் பார்வை கொடுக்க விரும்புவோர் சிலர். இத்தனை வித்தியாசம் இருக்கும்போது எப்படி எல்லோருக்கும் உடனடி சிகிச்சை கிடைக்கும்? நாம் எப்போது நம் பையனுக்கு தானமாகக் கண்கள் கிடைக்கும் என்று கேட்டோமே தவிர, நாம் இறப்புக்குப் பிறகாவது நம் கண்களை தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றவில்லையே. நாம் எத்தனை பத்திரிகை கள் படிக்கிறோம்… சில ஆண்டுகளாக, மூளைச்சாவு நிகழ்ந்துவிட்டவர்க ளின் உடல் உறுப்புகள் ஏக காலத்தில் தானம் செய்யப்பட்டதைக் கூடப் படித்தோமே…. கண்கள், இதயம், சிறுநீரகம், மஜ்ஜை போன்ற பல உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைப் படித்தோமே… இன்று இந்த கற்பகாம்பாள் சின்னிதியில் நாம் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். நம் மகனுக்குக் கண்கள் கிடைக்கட்டும். ஆனால், அதற்காக இல்லாமல், நாம் இறக்க நேர்ந்தால் உடனடியாக நம் கண்களை கண்வங்கிகளுக்கு தானம் செய்வோம் என்று நாம் பதிவு செய்துவைப்போம். நம் மகன் படித்தவன். உடனடியாக நம் கண்கள் மற்றவர்களுக்குப் பயன்பட கட்டாயம் உதவிசெய்வான். முன் கை நீண்டால் தானே முழங்கை நீளும்? இப்போது கூட நாம் பாதிக்கப்பட்டதால் தான் நமக்கு இந்த எண்ணம் வந்திருக்கிறது. ஆகையால் நாம் இரண்டாந்தரம் தான். ஆனாலும், கண்கள் கெடுவதற்கு முன் சூரிய நமஸ் காரம் செய்தோம் என்று மகிழ்ச்சியடைவோம். சிவன் கேட்காமலேயே கண்ணப்பன் கண் தானம் செய்தான். இன்று நாம் மகனை முன்னிட்டு கண் தானம் செய்ய முன்வந்திருக்கிறோம். எப்படியும் இறையருள் கிடைக்கும்”, என்று சொன்னார்.

கண்ணம்மா வியப்போடு கண்ணாயிரத்தைப் பார்த்து “இதே செய்தியைத் தான் நானும் உங்களிடம் சொல்ல விரும்பினேன்”, என்று கூறினாள்.

அந்த வயதான காதலர்கள் இருவரும் கருத்தொருமித்து எடுத்த முடிவு இறைவன் செவிகளுக்கு எட்டியிருக்கவேண்டும்….! சோர்வு மிகுதியானதாலும், பிரார்த்தனை யால் மனம் இலேசானதாலும் பக்கத்திலுள்ள ஒரு உணவு விடுதிக்குச் சென்று சிற்றுண்டி அருந்திவிட்டு வெளியே வந்தார்கள். அங்கே நின்றிருந்த ஆட்டோவில் ஏறி, செல்லுமிடத்தைச் சொல்லிவிட்டு அமர, அதே நேரம் அவர்களுடைய கைப் பேசி ஒலித்தது. எதிர்முனையில் மருத்துவரின் குரலும் வந்தது. “ஐயா, எதிர்பாராத விதமாக இன்று இரண்டு ஜோடிக் கண்கள் மருத்துவமனைக்கு வந்தன. பதிந்து வைத்த நோயாளிகளைப் பிடிக்க முடியவில்லை. ஆகவே, இரண்டு கண்கள் இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தியது போக, எஞ்சிய இரண்டு கண்கள் உங்கள் மகனுக் குப் பொருத்தமாக உள்ளன. அவை இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் பையனுக்குப் பொருத்தப்படும். இன்னும் சில நாட்களில் உங்கள் பையனின் கண்கள் ஒளிவிடும்!” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.

தம்பதியரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ‘நாம் கொடுக்க முடிவு செய்த உட னேயே இறைவன் கொடுத்தேவிட்டான். இதுபோல, நாம் ஒவ்வொருவரும் சமுதாய நலனை மனதில் கொண்டு சிந்திக்க இதை நாம் ஒரு பிரச்சார இயக்கமாக மேற் கொள்வோம்’ என்று முடிவு செய்துகொண்டார்கள். மறுநாள் முதல் அவர்கள் பணி முனைப்பாகத் தொடங்கியது.

இருள் அகலட்டும் ; ஒளி பிறக்கட்டும்!

பதிவுகளுக்கு அனுப்பியவர்: லதா ராமகிருஷ்ணன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R