- 'பதிவுகளில் அன்று' பகுதியில் திஸ்கி மற்றும் அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகளில் அன்று வெளியான படைப்புகள் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது பிரசுரமாகும். அந்த வகையில் R.P. ராஜநாயஹம் எழுதிய இக்கட்டுரையும் பிரசுரமாகின்றது. - பதிவுகள் -

பகுதி 1
 R.P. ராஜநாயஹம்Criminals are Creative Artists  என்று சொல்லப்படுகிறதல்லவா? அதை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் மெய்யாக்கியுள்ளார்கள். 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார்.  அதை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் 'நாச்சார் மட விவகாரம்' என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். 'ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை.  காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.  அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார்.  ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார்.  புனைபெயரில் அல்ல.  கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. '  என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது 'ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.  ஜெயமோகன் அதன்  நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்.  அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார்.  நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது.  திண்ணைக்கு  அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும்.  என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.'  என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை.  தொடர்ந்து அந்தர் தியானம்.  தேள் கொட்டிய திருடனின் நிலை.

பின்னரும் திண்ணையில் நடந்த காரசார விவாதத்தில் காலச்சுவடு கண்ணன் ஜெயமோகனின் அவதூறுகளுக்கு பதிலளித்தபோது 'ஜெயமோகனுக்கும் ராஜநாயஹத்திற்கும் தொடர்பு இருந்தது என்பதால் அவருடைய பல கடிதங்கள் ஜெயமோகனிடம்  இருக்கும். எனக்கும் ராஜநாயஹத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஒரு விரிவும் அதில் இருக்காது. ஜெயமோகனால் அதன் ஒளிநகலை திண்ணைக்கும் எனக்கும் அனுப்பமுடியுமா?  இது அவருக்கு நான் விடும் சவால், என்று குறிப்பிட்டு 'நாஞ்சில் நாடன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை ஜெயமோகன் திருத்தி வெளியிட்டது பற்றிய ஜெயமோகனின் 'காதைக் பிளக்கும் மெளனம்' நான் கூறுவது உண்மை என்பதற்கான சான்று என்று வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தார்.

திண்ணையின் போலி ஜனநாயகத்தை சாடியிருந்த கண்ணன் தன் விவாதத்தில், திண்ணை ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கி செய்திருந்த கட்டைப் பஞ்சாயத்து பற்றி பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மூத்த எழுத்தாளரை நாயாக உருவகித்து எழுதப்பட்ட கதை தொடர்பாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் இடையீடாக "நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்" என்று திண்ணை ஆசிரியர் குழு கூறுவது ஒரு அபத்த எழுத்தாளரின்நாடகத்தில் பேசப்படும் வசனம் போல உள்ளது என்று வேதனையுடன் அப்போதே குறிப்பிட்டிருக்கிறார்.

மேற்கண்ட விஷயங்கள் யாவற்றையும் திண்ணை இணைய இதழில் 'விலங்கும் நாணி கண்புதைக்கும்' கட்டுரையை பன்முகத்துக்கு அனுப்பிய பின்னர் தான் படித்தறிந்துகொண்டேன். 'விலங்கும் நாணி கண்புதைக்கும்' பன்முகம் இதழில் வெளியாவதற்கு இரண்டு வாரம் முன்னதாக கனடாவிலிருந்து நடத்தப்படும் இணைய இதழ் பதிவுகள் .காம் ஜனவரி இதழில் லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரன் இந்த விஷயம் பற்றி எழுதியிருப்பதாக இலக்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் தெரிவித்திருந்தார்கள் ஜனவரி பன்முகம் இதழ் வெளி வந்தபின் தான் நான் அதை பார்த்தேன். யமுனா ராஜேந்திரன் இவ்வாறு எழுதியிருக்கிறார் 'ஜெயமோ தனது கருத்துக்களை எப்போதும் தன் பெயரில் தான் எழுதி வந்திருப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். தளையசிங்கம் கருத்தரங்கு சம்பந்தமான பிரச்சனையில் ராஜநாயஹம் குறித்து நாஞ்சில் நாடன் பெயரில் ஜெயமோ கட்டுரையை எழுதிப் பிரசுரித்தது தமிழகத்தின் பிரபலமான மாறுவேச விளையாட்டு. அந்தக் கட்டுரையைத் தான் எழுதவில்லை எனப்பொது மேடையில் நாஞ்சில் நாடன் ஒப்புக் கொண்டதும் ஒரு பிரபலமான இலக்கிய வாக்குமூலம் தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் உள்நோக்கம் இருப்பதாகப் பிரமையுடன் குறிப்பிடும் ஜெயமோ தான் உள்நோக்கம் இல்லாமல்தான் பிறர் பெயரில் எழுதிப் பிரசுரித்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. "இதற்கு ஜெயமோகனின் (அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம்) வாய் திறந்து விட்டது. எப்படி? 'அதே கட்டுரை அப்படியே காலச்சுவடில் கைப்பிரதியாக நாஞ்சில் நாடனால் அனுப்பப்பட்டு பிரசுரமாகியுள்ளது. அதில் உள்ள எட்டு சொற்கள் (பொருள் மாற்றம் இல்லாமல்) திண்ணை கட்டுரையில் மாறியுள்ளன என்பதே காலச்சுவடு கண்ணன் முன் வைத்த குற்றச்சாட்டு. அதை டைப் செய்து அனுப்பியது நான் என்பதை அவரது வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டும் உத்தியாக. அதை நான் மறுக்கவுமில்லை. நாஞ்சில் நாடனின் மூலம் என்னிடம் உள்ளது. இம்மாதிரி சில்லறைச்சர்ச்சைகளுக்குள் புக நேரமில்லை என நாஞ்சில் நாடன் ஒதுங்கிக்கொண்டார்."

யப்பா பைரவா! நீ யாருபெத்தபுள்ளையோ உன் உடம்பு பூராவுமே பொய் தானா? சகிக்கலப்பா 'கத்தை கத்தையா ரூபாய் நோட்டு திருடமாட்டேன் சில்லறைக்காசுத் திருடன்தான் நான்' என்பதைக் கூட என்ன நாசுக்காக ஒப்புக்கொள்ள முடிகிறது உன்னால் 'நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளா¢ன் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்' என்று திண்ணை ஆசிரியர் குழு கட்டை பஞ்சாயத்து செய்தபோது கூட நீ அதை மறுக்கவில்லை உன்வாயிலே கொழுக்கட்டை. இப்போது சில்லறைத் திருட்டை மறுக்கவுமில்லை என்று அண்டப்புளுகை அள்ளி விடுகிறாயே Here is the Rub

'2002ல் நடந்து முடிந்த போன விஷயத்தை R.P. ராஜநாயஹம் இப்போது கிளற வேண்டுமா' என்று கேட்கிறவர்கள் 2005 ஜனவரியில் ஜெயமோகன் இந்த விஷயம் பற்றி பேசுவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். கனடாவிலிருந்து ஓர் இணைய இதழ் அதில் லண்டனிலிருக்கிற யமுனா ராஜேந்திரன் பிப்ரவரி 2005ல் "நாஞ்சில் நாடன் இதனைச் சில்லறை விவகாரம் எனக் கருதுவாரானால் அவர் கனவான் என்றோ அல்லது வேலைப் பளு அதிகம் உள்ளவரென்றோ ஜெயமோ கருதலாம். பிறர் அப்படிக் கருத அவசியமில்லை. நாஞ்சில் நாடன் பேசாது தவிக்கிறார் என்று கருதலாம். ராஜநாயஹம் இன்னும் பேசவிருக்கிறார் என்றுதான் விஷயமறிந்த வாசகன் கருதுவான். பிரச்சினையில் ராஜநாயஹத்தின் தரப்பு உண்மைகள் சிற்றிதழொன்றில் விரிவான கட்டுரையாக வரவிருப்பதாக அறிகிறேன். ஜெயமோ காத்திருப்பது நல்லது" என்று 'விலங்கும் நாணிக் கண்புதைக்கும்' கட்டுரை 'பன்முகம்| இதழில் வெளிவர இருப்பதை முன்னறிவிப்பு செய்வது விஷய கனத்தை புரிந்து கொண்டிருப்பதால் தான்.

தமிழ் இலக்கிய உலகுக்கு நான் ஒரு தலைசிறந்த நகைச்சுவை கட்டுரை ஒன்றை விமர்சனம் என்ற சிங்காதனத்தில் ஏறி நின்று அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நானும் விமர்சகராக எப்போது தான் ஆவது? நாச்சார் மட விவகாரம் கதை வெளியான அதே சொல்புதிது 11வது இதழில் 'என்ன ஆயிற்று இந்த எழுத்தாளர்களுக்கு?' (உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் கொடுக்கச் சொல்லு) என்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. சொல்புதிது 9வது இதழில் 'அருண்மொழி நங்கை எழுபத்தெட்டு கம்பைன்ஸ் ஊழல்' இப்போது நாறியிருக்கிற நிலையில் இந்த 'என்ன ஆச்சு இந்த எழுத்தாளர்களுக்கு' என்ற அருண்மொழிநங்கையின் கட்டுரையைப் படித்துப்பார்க்கும் போது ஒவ்வொரு வரிக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி, விலா எலும்பு பிசகிவிடுமோ என்ற பயமே ஏற்பட்டுவிட்டது எனக்கு. எழுத்தாளர்களே, விமர்சகர்களே வாசகர்களே நீங்களும் பரீட்சித்துப்பாருங்கள். ஒரு எச்சரிக்கை தார்மீக கோபம் அதிகமுள்ளவர்களுக்கு அருவருப்பில் குமட்டிக் கொண்டு வாந்தி வரவும் வாய்ப்புண்டு. Here is the Rub. I FIND A FUNNY SIDE TO EVERY THING SERIOUS நேர்மையும் நல்ல உண்மையும் உள்ளவர்கள் இந்த இலக்கிய அரசியல்வாதிகளின் ஆஷாடபூதித் தனத்தையும், வேஷத்தையும், நிஜகோரமுகங்களையும் பார்க்க நேரும் போது சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த சிரிப்பு சுந்தரராமசாமி 'கோவில் மாடும் உழவுக்காளையும்' கதையில் சொல்வது போல 'அந்த சிரிப்பு அழுகைக்குப் பதிலாக வருமே அந்த சிரிப்பு'

I LAUGH. NOT BECAUSE THERE IS LAUGHTER 
IN MY HEART BUT JUST TO PREVENT 
MY TEARS IF I DONT LAUGH 
I MAY START CRYING - NIETSCHE

DISCRIMINATION THY NAME IS NANJIL NADAN!

நாஞ்சில் நாடனின் நடுநிலைமை ஒரு Myth அந்த Myth உடைந்துவிட்டது என்பது தான் உண்மை பரிதாபம் தான்! ஏனென்றால் இவருடைய USP. அதாவது UNIQUE SELLING PROPOSITION  என்பதே இவர் நடுநிலையாளர் என்ற Image தான் ஆனால் இவருடைய நடு நிலைமையின் பக்கசார்புகள்! பற்றி ஒரு ஆராய்ச்சி மாணவர் DOCTORATE செய்யலாம். நாஞ்சில் நாடனின் நடுநிலமை பக்கசார்புகள்! "ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை"க்கு எதிர்வினை உடனே எழுதுவார். தன்னுடைய கடிதத்தை ஜெயமோகன் திருத்தினால் அது பற்றி எதிர் வினை செய்யமாட்டார் இது சில்லறை விவகாரம். 'நாச்சார் மட விவகாரம்' கதைக்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து போட்ட போது இவர் போடமாட்டார். ஜெயமோகனுக்கு அதற்காக ஒரு கடிதம் மட்டும் எழுதுவார். ஜெயமோகன் அடாவடியாக தமிழின் முக்கிய படைப்பாளியான எம்.ஜி.சுரேஷ் படைப்புகளை ஒட்டு மொத்தமாக நிராகா¢த்து விமர்சனம் செய்யும் போது ஏன் என்று கேட்கமாட்டார். ஆனால் அதற்கு எம்.ஜி.சுரேஷ் எதிர்வினையாற்றும் போதுமட்டும் "ஜெயமோகன் உன் மேலே நல்ல அபிப்ராயம் (?!) வைத்திருந்தான் அதை நீ கெடுத்துக் கொண்டாய்'' என்று அபிப்ராயம் சொல்வார், நடுநிலைமையின் ஒரு பக்கசார்பு CALIBER இல்லாத எழுத்தாளன் நாஞ்சில் நாடன் என்று நெருடுவது இங்குதான்.

இலக்கியக் கூட்டத்தில் சுந்தர ராமசாமி பெயரை கவனமாக உச்சரிக்க மறந்து, ஜெயமோகன் பெயரை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்து வேதசகாய குமாரை பெரிய விமர்சகர் என்பதாக அபிப்ராயப்படுகிறார். இதுதான் நடுநிலைமையின் பக்கசார்பு என்பது. இப்படி ஜெயமோகனுக்கு ரகசியமாக ஷேக்ஹேண்ட் கொடுத்து, வாலை பட பட வென்று ஆட்டுவதை இனியும் மறைக்க முடியாது. நாஞ்சில் நாடன் நடுநிலையாளனே அல்ல. ஒரு மோசமான நாலாந்தர அரசியல்வாதி. HE CAN SMILE AND SMILE AND BE A VILLAIN.

காலச்சுவடுக்கு அனுப்பப்பட்ட மூலப்பிரதியிலேயே (தன்படைவெட்டிச்சாதல் வேண்டாம்) என்னைப் பற்றி அவதூறுகள் அதிகம்தான் திண்ணையில் வெளியானதில் கூடுதலாக ஜெயமோகன் கைங்கரியம். "கழுதைப் புணர்ச்சி பற்றிய விரிவான செய்முறை அபிநயம்' இது காலச்சுவடு கூடுதலாக திண்ணையில் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய விரிவுரையும் செய்முறையும்' என்றெல்லாம் எழுதிய கைகள் வினையை விதைத்துவிட்டன. வினையை விதைத்த நாஞ்சில் நாடனும் ஜெயமோகனும் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். காலச்சுவடில் பிரசுரமான விஷயங்களே ஜெயமோகனுக்கான ஆலாபனை, பிர்கா, சங்கதி போட்டு பாடப்பட்டது தான் வினையை விதைத்தவர்களே! வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். கழுதையைப் புணர்ந்த ரவுடியாக நான் நடித்த போது கழுதையாக நடித்தவர் யார்? HERE IS THE RUB!


 பகுதி 2: 'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை!

 R.P. ராஜநாயஹம்முப்பது வருஷத்திற்கும் மேலாக வாசகனாக இருப்பது தவமா, தியாகமா, ஏமாளித்தனமா. சொந்த வாழ்க்கையின் மேடு பள்ளங்களோடு இலக்கியம் சார்ந்தும் எத்தனையொ கலைடாஸ்கோப் காட்சிகள். எனக்கு இலக்கியம் அந்நியமான விஷயம். ஆனால் விட்டகுறை தொட்டகுறை என்று விரட்டிக் கொண்டேதான் வருகிறது.  கடந்த இருபத்தைந்து வருடங்களில் போஸ்டல் க்ளார்க், சினிமா அஸிஸ்டென்ட் டைரக்டர், ட்ரான்ஸ்போர்ட் ஆபரேட்டர், பிராண்டிஷாப் பார்ட்னர், ·புட் ஆயில் ஏஜன்ட், இன்டஸ்ட்ரியலிஸ்ட், த்ரிஸ்டார் ஹோட்டல் ரிஷப்ஷனிஸ்ட், மீண்டும் சினிமா, அப்புறம் ·பைனான்ஸ் பிஸினஸ் என்று எத்தனை அவதாரம் எடுத்துவிட்டேன். சமீபத்தில் கூட மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் மாணவனாக ஒரு வருடம்.  பிறந்தது திருநெல்வேலி செய்துங்கநல்லூர். பள்ளிக்கூடக் காலத்திலிருந்து இன்றுவரை விக்ரமசிங்கபுரம், செய்துங்கநல்லூர், பழனி, சத்திகொடிவோ¢, திருச்சி, நாகை, கரூர், மதுரை, மீண்டும் நாகை, கோவை, பொ¢யகுளம், சென்னை மீண்டும் மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர், மீண்டும் திருச்சி, மீண்டும் பழனி, பாண்டிச்சேரி, மீண்டும் திருச்சி, மீண்டும் சென்னை, மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் இப்போது மீண்டும் திருச்சி என்று பந்தாடுகிறது காலம்.

'நள்ளாத்துக்காரன் (திருநள்ளாறு) உங்களை இப்படி ஊர் ஊராய் விரட்டுகிறானே என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கு, ராஜநாயஹம் இல்லாத புதுவை நல்லாயில்லே" - கி.ரா. 1999ம் ஆண்டு எழுதுகிறார். 

திருமணமான இந்த பத்தொன்பது ஆண்டுகளில் பதினைந்து வீடு மாற்றியருக்கிறேன்.

நானும் ஒரு கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ என்று அந்த முண்டாசுக்காரன் மாதிரி நானும் பெருமூச்சு விட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சா¢க்கை செய்து 'சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளையசிங்கத்தின் 'தொழுகை' கதைதான்.  ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்' என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. 1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலிஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972ம் ஆண்டு 'மெய்யுள்' என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973ம் ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார்.  இது 'தளையசிங்கத்தின் பிரபஞ்சயதார்த்தம்' என்ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல்.  22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடம் நான் நேரில் இதுபற்றிக் கேட்டபோது தளைய சிங்கத்தின் சகோதரர் மு. பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாகக் கூறுகிறார்.  இந்த விவரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன்.  அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன். ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9-ல் விளக்கங்களுடன் பிரசுரிக்கப்பட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.

திருச்சியிலுள்ள சபாரத்தினம் என்ற இலங்கை எழுத்தாளர் 'தளைய சிங்கத்திற்கெதிராக போலீசைத் தூண்டி பணம் கொடுத்தவன் கொழும்பில் பாத்திரக்கடை வைத்திருக்கிறவன்' என்று என்னிடம் தெரிவித்த தகவலை ஜெயமோகனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறேன். மே 4, 5, 6 தேதிகளில் ஊட்டிநாராயணகுரு குலத்தில் நடக்க இருக்கிற தளையசிங்கம் கருத்தரங்கிற்கு ஜெயமோகனிடம் இருந்து அழைப்பு. உணவும் தங்குமிடமும் குருகுல ஏற்பாடு நிபந்தனைகள் மது அருந்தக்கூடாது. தனி நபர் தாக்குதல் கூடாது.  அழைப்பு அனுப்பப் பட்டவர் தவிர வேறு யாரையும் அழைத்து வரக் கூடாது. அரங்க அமர்வுகளில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்.

நான் 12 வயதில் சிகரெட், மது பழகிவிட்டேன்.  18 வயதில் கஞ்சாவையும் சேர்த்துக் கொண்டேன்.  தொடர்ந்து ஐந்து வருடத்திற்கு சிகரெட், கஞ்சா, மது போன்றவற்றை மிக அதிகமாக பயன்படுத்தி அவற்றில் மூழ்கியே இருந்தேன்.  1977 ஏப்ரல் 5ந் தேதி கஞ்சாவை நிறுத்தி விட்டேன்.  சிகரெட்டை 1978 மார்ச் 4ந் தேதி உதறினேன். மதுவை டிசம்பர் 1978ல் கைவிட்டேன். அதன்பிறகு இன்று 2002 வரை 24 வருடங்களாக சிகரெட், கஞ்சா மதுவை விளையாட்டுக்காகக் கூட தொட்டதேயில்லை.  அதனால் முதல் நிபந்தனை எனக்கு சம்பந்தமில்லாதது. மற்ற நிபந்தனைகளுக்கு உடன்பட்டு பதில் எழுதினேன்.

சொல்புதிது 9ல் தளையசிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலையசிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தளையசிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளையசிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பப்பட்டு கிடைக்கிறது.  கதைகள் பேராசிரியர் பூர்ணசந்திரனிடம் 'புது யுகம் பிறக்கிறது' கேட்டு வாங்கிப் பெற்று ஏற்கனவே படித்திருக்கிறேன்.  போர்ப்பறை, மெய்யுள், முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி ஆகிய நூல்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பே  படித்திருக்கிறேன் என்றாலும் அனுப்பப்பட்டவைகளைக் கற்றுத் தேர்கிறேன். ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களில் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளைய சிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருத்தக் கூடிய அளவுக்கு க்ரா·ட் மேன்ஷிப் தளைய சிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி 'இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி' என்றும் 'செயற்கை இறுக்கம் நிறைந்த நடை' என்றும் குறிப்பிடுகிறார். 

கொஞ்சகாலமுன் கூட ஓரளவு வசதியோடுதான் இருந்தேன். இப்போது நிலைமை வேறு உடனடிச் செலவு என்று குடும்பத்தில் பல நிர்ப்பந்தங்கள். சின்னவனின் சைக்கிளை ஒழுங்கு பண்ண ஐநூறு ரூபாய் தேவை. க்ரைண்டர் ஒடவில்லை. ·ப்ரிட்ஜ் அவுட் ஆ·ப் ஆர்டர், டி.வி. கலர் ட்யூபில் கோளாறு. மே மாத கல்யாண அழைப்பிதழ்களுக்கு 300 ரூபாய் தேவை. அடுத்த மாதம் பையன்கள் இருவரின் படிப்புச் செலவுக்கு வேறு பெரிய தொகை தேவை என்ன செய்யப் போகிறேன்? என்றாலும் இலக்கிய தாகம். சுந்தர ராமசாமி அடையாளங் காட்டிய தளைய சிங்கத்திற்கு கருத்தரங்கம். ஊட்டிக்கு போகத்தான் வேண்டும்.

3-ந் தேதி பெரியவனுடன் சைக்கிளில் பஸ் ஸ்டான்ட் வந்து கோவை பஸ்ஸில் ஏறுகிறேன்.  கோவை பஸ்ஸில் ஏறுகிறேன்.  கோவையில் மதியம் சாப்பிட்டப்பின் ஊட்டி பஸ் ஏறுகிறேன்.  மாலை ஊட்டி பஸ் ஸ்டாண்டில் உணவுப் பொட்டலம் வாங்கிக் கொண்டு மஞ்சன கொரெ நாராயண குருகுலத்திற்கு ஆட்டோ 50ரூபாய் சுவாமி அத்வைதானந்தா எனக்கு ஒரு அறை தருகிறார்.  காமன் டாய்லட் பாத்ரூம் வெஸ்டர்ன் டாய்லட் ·ப்ளஷ் சா¢யில்லை. வாளி நிறைய தண்ணீர் பிடிக்க அதிக நேரமாகிறது. தண்ணீர் ஊற்றி சிரமத்துடன் சுத்தம் செய்கிறேன்.  பின் குளிக்கிறேன்.  குளிர் நடுக்குகிறது. வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்துவிட்டேன். ராஜீவ் என்ற குருகுலவாசி  அவருடைய ஸ்வெட்டரை எனக்குத் தருகிறார்.  அவர் வெறும் சட்டை வேட்டியுடன் தான் இருந்தார்.  டாக்டர் தம்பான் அவர்களுடைய கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன். சுவாமி அத்வைதானந்தா ஒரு கதை சொல்கிறார். 'You Know this story?'  என்று என்னை வினவுகிறார். ஒரு விபச்சாரி தன்னிடம் உடலுறவு கொண்ட ஒருவன் பணம் தராததால் அரசனிடம் புகார் செய்கிறாள். ஒரு கண்ணாடியின் முன் பணத்தை வைத்து கண்ணாடிக்குள் பிரதிபலிக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படிக் கூறுகிறான் அரசன்.

என்னுடைய உணவுப் பார்சலை சுவாமி அத்வைதானந்தாவுக்கும் ராஜீவுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு ஆசிரம சப்பாத்தியை சாப்பிடுகிறேன்.  இரவு கடுங்குளிரில் தூக்கம் சிரமமாகத்தான் இருக்கிறது.  காலை 6 மணிக்கு எழுந்தவுடன் காமன் வெஸ்டர்ன் டாய்லட் ஞாபகம். காமன் டாய்லட் எப்போதும் பிஸியாயிருப்பதும் எதிர்பாராத அசுத்தத்தைக் காண வேண்டியிருப்பதும் பொருட்படுத்தாமல் அனுசரித்துப் போக நான் பழகிக் கொள்ள வேண்டும். காலைக்கடன் குளியல் போராட்டம் முடித்து உடை அணிகிறேன். மும்பை சராக்தீன் ஷர்ட் வான்ஹ{ஸன்பேண்ட் சுவாமி அத்வைதானந்தா சமையல் வேலையில் உதவி செய்ய அழைக்கிறார். பப்பாளிகளை கத்தியால் தோலூரித்து சுத்தம் செய்கிறேன்.

காலை உணவு முடித்தவுடன் இங்கே கருத்தரங்க ஏற்பாடுகளைக் கவனிக்கும் நிர்மால்யாவுடன் சந்திப்பு உள்ளுர்க்காரர் நிறைய மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார். ஒரு அம்மணி காரில் வந்து இறங்குகிறார். நிர்மால்யா என்னை அறிமுகப்படுத்துகிறார். என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு இவர் என்ன சீரியஸான ஆளா? இல்ல. சீரியஸ் ரீடிங், சீரியஸ்ரைட்டிங் என்று சொல்றீங்களே. இவர் சீரியஸான ஆளா? என்று கேட்கிறார் (வசீகரக் கோமாளி என்று என்னைப் பற்றி கோணங்கி சொல்வது ஞாபகத்திற்கு வருகிறது)

அந்த அம்மணி தொடர்ந்து பேசுகிறார். ஜெயமோகன் சாருக்கு STD நிறைய இந்த அம்மாள் போட நேருவதால் டெலிபோன் பில் அதிகமாக ஆகிறது. கணவருக்கு இவரை தனியாக அனுப்ப விருப்பமில்லாததால் கூடவே வந்திருக்கிறார்.  இவர் அருகில் இல்லாத போது தான் கணவர் ஆகாசமாக இருப்பார்.  நிர்மால்யா 'நீங்க உங்க வீட்டுக்காரரோடு இருங்கள்' என்று அந்த அம்மணியிடம் சொல்லிவிட்டு என்னிடம் 'வாங்கநாம ஒரு வாக் போவோம்' என்கிறார். நித்ய சைதன்யயதியின் சமாதியைக் காட்டுகிறார். நித்ய சைதன்யயதி கலில்கிப்ரனின் கவிதைகளை PARODY செய்து ஒரு கவிதைத் தொகுதி எழுதியிருந்ததை நிர்மால்யா மொழி பெயர்த்திருக்கிறார். டாக்டர் தம்பான் நேற்று அந்தப் புத்தகத்தை இந்த அம்மணியிடம் காட்டியபோது நிர்மால்யாவிடம் 'நீங்கதான் கலீல் கிப்ரனா?' என்று ஆச்சரியப்பட்டாராம். டாக்டர் தம்பான் அதன்பிறகு நிர்மால்யாவை 'கலீல் கிப்ரன்' என்று அழைத்து கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தாராம்.

குடும்பத்துடன் ஜெயமோகன் வருகிறார். கருத்தரங்கத்தின் முதல் அமர்வு. ஜெயமோகனின் முன்னுரை சரவணன் தன் கட்டுரையை வாசிக்கிறார்.  நான் பேசிய போது 'அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி' என்ற தளைய சிங்கத்தின் கூற்றைப் பற்றி குறிப்பிடுகிறேன்.  வெங்கட் சாமிநாதன் ஆர்வத்துடனும் சிறிது குழப்பத்துடனும் என்னிடம் 'அப்படியே சொல்கிறாரா' 'அப்படியே சொல்கிறாரா' என்று கேட்கிறார். நான் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க கட்சியை ஆரம்பித்த போது பிரான்சில் மார்க்ஸிய தத்துவத்தை தலைகீழாக்கிய புரட்சிகர உபவர்க்கத்துடனும், அமெரிக்காவின் பலாத்காரங்களை எதிர்க்கும் ஹிப்பிஸ{டனும் சீனாவின் புதிய மார்க்ஸீய செங்காவலர்களுடனும் பங்களதேஷின் கொரில்லாக்களோடும், பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த்து கொரில்லாக்களோடும் அண்ணா தி.மு.க அனுதாபிகளை தோளோடு தோள் நிறுத்தி கருணாநிதியின் நவ பாஸிச ஆட்சியை எதிர்ப்பதாக தளைய சிங்கம் எழுதியதையும் அபத்தம் என்று சுட்டிப் பேசினேன். உடனே ஜெயமோகன் இப்படி ஒவ்வொரு வரியாக உருவி தளையசிங்கத்தைப் பார்க்கவேண்டாம் என்றார்.  தொழுகை கதை பற்றி பேச ஆரம்பித்த வேதசகாயகுமார் அவருடைய கிறிஸ்துவ பூசை லத்தீன் மந்திரங்களை இளைஞர்கள் பொருத்தமாக கெட்ட வார்த்தை போட்டு பேசிக் காட்டுவதைப் பற்றியும் பாவ மன்னிப்பு கேட்கும்போது பாதிரியாரிடம் ஆபாசமாக விவா¢த்துப் பேசி பாதிரியார் இளையவராயிருந்தால் அவர் மிகவும் நெளியவேண்டியிருக்கும் என்பதையும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.  'செக்சுவாலிடி பற்றி பேசலாம் தானே. எதும் தடையுண்டா?' என்று நான் கேட்டேன்.  ஜெயமோகன் தன் மனைவி அருண்மொழி நங்கை கலந்து கொண்டுள்ள நிலையினும் பேசலாம் என்பதாக தலையாட்டினார்.

இனி மாலை 6 மணிக்கு அடுத்த அமர்வு. மதியம் சாப்பிட்டுவிட்டு அரட்டை ஜெயமோகன் அவருடைய உத்தியோகம் செய்யும்போது டெலிபோன் உரையாடல்களைதான் ஓட்டுக் கேட்ட கதைகளை கூறுகிறார்.  குற்றாலத்தில் குமார செல்வாவுக்கும் லட்சுமிமணிவண்ணனுக்கும் நாடார் ஜாதியின் உட்பிரிவு பற்றிய சர்ச்சை காரணமாக நடந்த கைகலப்புச் சண்டையைப் பற்றிக் கூறுகிறார். யாரோ ஒரு அரை குறை அமுதா கணேசனையும், குரும்பூர் குப்புசாமியையும் படித்து விட்டு, ஒரு ரொம்பப் பெரிய நாவலை எழுதிக் கொண்டுவந்து ராமஸ்வாமியிடம் (சுந்தர ராமசாமியை ராமஸ்வாமி என்றே ஜெயமோகனும் வேதசகாய குமாரும் குறிப்பிடுகிறார்கள்) படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறான். ஜெயமோகன் இந்த இடத்தில் தான் ராமஸ்வாமியின் பாய்சனைக் கவனிக்கனும் என்கிறார்

சுந்தர ராமசாமி எனக்கு வயதாகி விட்டது. ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறது. நீங்க அவரிடம்  உங்க நாவலைக் காட்டுங்களேன் என்று ஒரு மூன்றாந்தர பேராசிரியரைக் குறிப்பிட்டு அந்த அரைகுறை எழுத்தாளரை சமாளித்ததை பாய்சன் என்று ஜெயமோகன் விவரிக்கிறார். யாராயிருந்தாலும் ஆர்வக்கோளாறுகளை இப்படித்தானே சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதில் என்ன பாய்சன் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திரா பார்த்தசாரதி என்னிடம் இடைவெளி சம்பத் பற்றி சொன்ன விஷயத்தை குறிப்பிட்டேன். சம்பத் ஆயிரம் பக்கத்திற்கு ஒரு நாவல் எழுதிக் கொண்டு வந்து இந்திரா பார்த்தசாரதியிடம் கொடுத்ததையும் அதை படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதி அபிப்ராயமாக 'RAMBLING ஆக இருக்குடா. நாவலை இன்னும் Crisp ஆக edit  செய்தால் நன்றாக வரும்' என்று சொல்லிவிட்டு எதற்கோ வீட்டின் உள் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது சம்பத் வெராண்டாவில் அந்த முழு நாவலையும் கொளுத்திவிட்டு குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனிமேல் எதற்கு? என்று இந்திரா பார்த்தசாரதியிடம் சொன்னதையும் கூறினேன். (இந்த விஷயம் ஜெயமோகனை உறுத்தியிருக்குமோ என்னமோ) என் கல்லூரி வாழ்க்கையின் போது நடந்த சம்பவம் நான் திரைப்பட உதவி இயக்குனராக இருந்த போது அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை ஐந்தாறு முறை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது நடந்த ஒரே மாதிரியான சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.  பாக்யராஜீன் ராசுக்குட்டி படத்தில் நான் நடித்து படத்தில் அந்தக் காட்சி இடம் பெறாமல் போனதைப் பற்றி இப்படி... இப்படி வெங்கட்சாமிநாதனிடம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அசோகமித்திரனை அவர் கடுமையாக தாக்குவது பற்றி கேட்டேன். க.நா.சுவும், சந்தரராமஸ்வாமியும் நகுலனும் கூட அசோகமித்ரன் பற்றி உயர்வாக எழுதியபோது வெ.சா.வும் பிரமிளும் கடுமையாக அவரை விமர்சித்தது ஏன் என்று கேட்டேன்.

நூலகத்தில் மாலை  அமர்வு, கடுங்குளிர், மோகனரங்கனின் கட்டுரை. தளையசிங்கத்தின் பேர் ஞான விடுதலை முழுச் சமூகத்திற்கும் சாத்தியமா? என்ற நியாயமான சந்தேகத்தை முன் வைக்கிறார்.  வெ.சா. அப்போது கூறுகிறார். இது சாத்தியப்படாத விஷயம். இன்டிவிஜுவல் சால்வேஷன் சாத்தியம் பரவச விடுதலை முழுச் சமூகத்திற்கு எப்படி ஏற்படும்.  அப்போது ஸ்தாபனம் ஆகிவிடும். ஸ்தாபனம் என்னும்போது கரப்ட் ஆகிவிடும். வெ.சா.வின் இ;ந்தக் கருத்துடன் எனக்கு முழுக்க உடன்பாடு. இந்திரா பார்த்தசாரதி தன் எழுத்தில் பலமுறை குறிப்பிடுகிற விஷயம். வினோபா ஆசிரமத்திற்குப் போய் அங்கே நடந்த அக்கிரமங்களைக்காண சகியாமல் மிரண்டு போய் திரும்பி ஒடிவந்த தன் நண்பர் ஒருவரைப் பற்றி கி.ராஜ நாராயணன் ஒரு முறை என்னிடம் சொன்னதைப் பற்றிக் கூறினேன்.

அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக, எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல்வாதிகளாகவும் இருக்க வேண்டும் என்கிறார் தளையசிங்கம். அரசியல்வாதிக்கு எதிர் மறை அம்சம் இலக்கியவாதி என்று எனக்குத் தோன்றுகிறது. அதோடு எழுத்தாளர்களுந்தான் எந்த அளவுக்கு நம்பகமானவர்கள்? 1968ம் ஆண்டு நோபல் பா¢சு வாங்கும்போது ஜப்பானிய எழுத்தாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை கண்டித்து உரையாற்றிய யசுநாரிகவபட்டா 1972ம் ஆண்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்று நான் கேட்டேன்.

இந்த இரண்டு அமர்வுகளிலும் நாள் புரிந்து கொண்ட ஒரு முக்கியமான விஷயம். ஜெயமோகன் நிறைய பேசுவார்.  வேதசகாய குமாரும் பேசுவார். அவ்வப்போது ஜெயமோகன் 'நீங்க என்ன சொல்றீங்க' என்று யாரையாவது கேட்பார். அவர் ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடமோ, ஒரு கருத்து அபிப்ராயம் சொன்னதும் தொடர்ந்து ஜெயமோகன் நிறைய பேசுவார். தொடர்ந்து வேத சகாய குமார் பேசுவார். நான் எப்போதும் ஜெயமோகன் கேட்காமலே தான் பேசினேன்.

இரண்டாவது அமர்வு முடியும் போது தொழுகை கதை பற்றி வெ.சா. அருமையான ஒரு கமெண்ட் அடித்தார்.  ஒரு சின்ன லேடி சேட்டர்லீஸ் லவர் நான் அதை உடனே ரசித்து ஆமோதித்தேன். கூட்டம் முடிந்த பிறகும் ஜெயமோகன் பேசிக் கொண்டேயிருந்தார்.

பொதுவாகவே ஜெயமோகன்  தூங்குகிற நேரந்தவிர மற்ற நேரங்களில் பேசிக் கொண்டேயிருக்கிறார். சாப்பிடும்போது கூட பேசிக் கொண்டுதான் இருக்கிறார். எப்படியோ சாப்பிட்டும் விடுகிறார். தூங்குவதற்கு மாத்திரை வேண்டுமா? என்று கேட்டார். எனக்குத் தேவையில்லை என்று சொல்லி விட்டேன். ஜெயமோகன் 1986 ல் மனப்பிளவு நிலை பாதிப்புக்குள்ளாகி இரண்டரை வருட காலத்தில் இரண்டாகப் பகுத்துக் கொண்ட மன ஒத்திசைவும் சிதைந்த போது உச்சக்கட்டத்தில் மூன்று மாதம் மன நல சிகிச்சை பெற்றுக் கொண்டவர்.  சுந்தர ராமசாமிதான் 'எழுதுங்க எழுத்து தான் மருந்து' "It will cure you"  என்று உற்சாக மூட்டி நெறிப்படுத்தியிருக்கிறார்.

இரண்டாம் நாள் மே 5ந் தேதி காலை 6 மணிக்கு அறைக்கு வெளியே உற்சாகமான ஜெயமோகனின் பேச்சு சத்தம்.  எல்லோரும்  வாக் போகிறார்கள். நான் எழுந்து காலைக் கடன் முடித்து குளித்து அறையைவிட்டு வெளியே வருகிறேன்.  தேவகாந்தனுடன் டைனி;ங்-கம்-கிச்சன் கட்டிடத்திற்கு செல்லும்போது வெ.சா. குளித்துவிட்டு அவரும் சேர்ந்துகொள்கிறார்.  கறுப்பு தேநீர் அருந்திவிட்டு எனக்கு பாட்டிலில் நீர் எடுத்துக்கொண்டு வரும்போது வெங்கட் சாமிநாதனுக்கும் அவர் பாட்டிலில் நீர் எடுத்து அவர் அறையில் வைக்கிறேன். வேதசகாயகுமார் வந்து சுயப்பிரதாபத்தை ஆரம்பித்துவிடுவார். இடையில் சிறுதடங்கல் நேற்று என்னை சீரியஸான ஆளா என்று சந்தேகப்பட்ட அம்மாள் வந்து தன்னுடைய சிறுகதைத் தொகுப்பையும் தன் பிள்ளைகளின் புகைப்படத்தையும் எங்களிடம் ஒவ்வொருவராகக் காட்டிப் பேச ஆரம்பித்துவிடுகிறார்.  கவனமாக அவரை நிராகா¢த்து வேத சகாயகுமார் தொடர்ந்து பேசுகிறார். ராமஸ்வாமி (சு.ரா.) இவருக்கு ரொம்ப நெருக்கமாயிருந்தவர். தன்னுடைய படுக்கையில் இவரைப் படுக்கச் சொல்லிவிட்டு அவர் தரையில் படுத்துவிடுவார்.  தொடர்ந்து சு.ரா.வைப் பற்றியும் அவருடைய மகன் கண்ணனைப் பற்றியும் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத படைப்புகளை தொகுத்து காலச்சுவடு பிரசுரம் செய்தது பற்றி கடுமையான அதிர்ச்சியான தகவல் பல லட்சம் பணம் ( 8 லட்சமாம்) கை மாறியது. தமிழவன் தான் மீடியேட்டர். (இன்டர்மீடியட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்) தமிழவனே இதைப் பற்றி இவா¢டம் சொன்னார். புதுமைப்பித்தனின் 'தமிழைப் பற்றி| என்ற முக்கியமான கட்டுரையை சகாயகுமார் தான் கொடுத்தார். கண்ணனை இந்த பல லட்சம் பிரச்னை குறித்து வேதசகாயகுமார் வேறு பலமாதிரி விசாரிக்கிறார். கண்ணன் பிடிகொடுக்கவே யில்லை. ஆனால் யாரிடமோ கண்ணன் இவர் ஏதோ ஒரு லட்சம் ரூபாய் பணம் எதிர்பார்ப்பதாக அவதூறு பேசினார்.  சொல்புதிது ஜெயமோகன் சிரமப்பட்டு நடத்துகிறார். கையைக் கடித்தால் நிறுத்திவிடும்படி இவரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சொல்புதிதுக்கு ஆர்.எஸ்.எஸ் பணம் வருவதாக வதந்தி,சு.ரா விடமும் கண்ணனிடமும் உள்ள நம்பிக்கையில் தான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்ததைப் பற்றி ஜெயமோகன் சொல்லியிருந்திருக்கிறார்.  இப்போது 'அந்த விஷயம்' பற்றி இப்படிப் பிரச்சாரம் செய்வது நியாயமா? கண்ணன் பி.ஜே.பி. ஆதரவாளராக இருந்ததில்லையா? இப்படி..... இப்படி ..... நான் 'ஒரு இலக்கியவாதி ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்க முடியுமோ?' என்கிறேன். மார்க்ஸீயவாதிகள் இலக்கியவாதிகளாக இல்லையா? என்று வெ.சா. கேட்கிறார். ஜெயமோகன் அன் கோ வாக் போய்விட்டு திரும்பி வருகிறார்கள். என்னிடம் 'இப்போதும் சினிமா ஆசை இருக்கிறதா? என்று முகம் கழுவிக் கொண்டே ஜெயமோகன் கேட்கிறார். ·ப்ரேமுக்குள் நடிகனாக வர வேண்டும். ஒரு கலைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற தாகம் ரொம்ப உண்டு என்று பதில் சொல்கிறேன். ஜெயமோகன் இன்றும் குளிக்கவில்லை.

யுவன் இரண்டாம் நாள்தான் வருகிறார்.  சந்திக்கிறேன், கைகுலுக்கல் 'லொயோலா காலேஜா' 'இல்லை. நான் R.P. ராஜநாயஹம் திருச்சி' யுவனும் நானும் மதுரை அமொ¢க்கன் காலேஜ். நான் பி.ஏ. இங்கிலிஷ் லிட்ரேச்சர். ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மிகவும் விசேஷமானவர்கள். வசந்தன் தான் எனக்கு ஹேம்லட். நெடுமாறன்தான் மார்க் ஆண்டனி. ஜான்சகாயம் தான் டாக்டர் ·பாஸ்டஸ். தமிழ. சாலமன் பாப்பையாவின் வகுப்பைவிட வெளியேதான் அவர் பேச்சு சுவாரசியமாயிருக்கும். நான் யுவனைவிட மூத்தவன் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. பார்த்தால் ரொம்ப இளையவனாகத் தெரிகிறேன். 'டை அடிக்கிறீங்களா?' இல்லை கறுப்பு முடி இயற்கைதான். டை அடித்திருந்தால் நான்குநாள் ஷேவ் பண்ணாத முகத்தில் வெள்ளை முடி  தெரியுமே" ஆமாம் ஆச்சரியமாயிருக்கிறது.  ரொம்ப யங்காத் தெரியறீங்க' என்கிறார். யுவன். ஜெயமோகன் 'எனக்கு நரைத்துவிட்டது' என்று கன்னத்தைத் தடவுகிறார். ஹிந்தி நடிகை தேவிகாராணியை கதாபாத்திரமாகக் கொண்ட 'அழியாதமலர்' பற்றி ஜெயமோகனிடம் பேசுகிறேன். 'சவுக்கு' கதை அசோகமித்திரன் பாணி கதை. (அசோகமித்திரனின் சிறுகதைகளில் வரும் பால்ய நண்பர்கள் முனீர், நரசிம்மன் ஆகியோரை சவுக்கு 'சோட்டேலால்' நினைவு படுத்துகிறான்.)  ஆமாம் என்று ஜெயமோகன் ஒத்துக் கொள்கிறார்.  சட்டென்று  நான் தளையசிங்கம் கருத்தரங்கம் பற்றி 'உங்கள் கட்டுரை கனமாக இருக்கிறது என்றாலும் எனக்கு வெ.சா. சொல்வதில்தான் உடன்பாடு' என்கிறேன்.  ஓரிரண்டு விநாடி நிதானித்து ஜெயமோகன் 'அதுசரி இது உங்கள் அபிப்ராயம்' என்கிறார் சிறிது சலனத்துடன்.

மூன்றாவது அமர்வு. வேதசகாயகுமார் முதலில் தன் கட்டுரையை வாசிக்காமல் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார்.  ஒரு கட்டத்தில் கட்டுரையை வாசித்திருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வாசிக்கிறார். வேண்டாம் என்று மீண்டும் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார்.  விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல ஆகிவிட்டது. யுவன் கொஞ்ச நேரத்தில் மோகனரங்கனின் சட்டை கைப் பகுதியை பின்னுக்கு இழுத்து முன்னுக்குத்தள்ளி விளையாட ஆரம்பித்துவிடுகிறார்.  நிர்மால்யாவிடம் 'டீ வருமா' என்று கேட்கிறார்.  நிர்மால்யா டீ ஏற்பாடு செய்கிறார்.  டீ குடித்தவுடன் யுவன் சிகரெட் பிடிக்க வெளியே செல்கிறார்.  'குடிக்க நீர் வேண்டும்' என்கிறார்.  நீர் வந்ததும் எழுந்து போய் குடிக்கிறார்.

திடீரென்று ஜெயமோகன்தான் துப்பறிந்து சாரு நிவேதிதாவின் ஜாதியைக் கண்டுபிடித்ததைப் பற்றி கூறினார்.  சாரு ஒரு முறைதான் மலம் அள்ளுகிற ஜாதி என்று எழுதியபோது ஜெயமோகன் சாருவின் மேலதிகாரியிடம் அவர் ஜாதிபற்றிய சர்ட்டிபிகேட் நகலைக் கேட்டுப் பெற்றுவிட்டார்.  சாருநிவேதிதா தலித் அல்ல,  செங்குந்த முதலியார் ஜாதி, பிறகு ஜெயமோகன் கோவிலுக்குப் போன கோவை ஞானிக்கு தன் கண்டனத்தைத் தெரிவிக்கிறார்.  நாஞ்சில் நாடன் 'தான் தாலிகட்டிய மனைவி தீர்க்க சுமங்கலியாக வாழ, குறிப்பிட்ட ஒரு கோவிலில் மீண்டும் தாலிகட்டினால் நல்லது என்று நம்பும்போது ஞானி தன் மனைவியைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக மனைவியின் நம்பிக்கையை கெளரவித்து கோவிலுக்குப் போனதில் என்ன தவறு| என்கிறார்.  ஜெயமோகன் மீண்டும் ஞானி செய்தகாரியம் எனக்கு முக்கியம்' என்று கோவிலுக்குப் போனதை ஆட்சேபிக்கிறார்.  யுவன் உடனே 'ஞானி கோவிலுக்குப் போனதில் தவறில்லை. நான் கூட வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுக்கிறேன்.   அப்போது பூணூல் போடுகிறேன்' என்கிறார். இந்த இடத்தில் வேதசகாயகுமார் ஒரு செய்தி சொல்கிறார். அ. மார்க்ஸ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ நாடார்கள் கூடிப் பேசுவதைப் பற்றி தற்செயலாக 'ஒரு கிறிஸ்தவ நாடார் பேராசிரியர்' சகாயகுமாரிடம் சொல்லியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாள் என்பது தெரிந்த விஷயம்.

தளையசிங்கத்தின் கதைகள் ரொம்ப சிறப்பானவையாக பாதிக்கக் கூடியவையாக தன்னால் சொல்ல முடியவில்லை என்று நாஞ்சில் நாடன் சொல்கிறார். 'தொழுகை' கதையில் செல்லம்மாள் மேல் கோபம் வருவதில்லை' என்று வேதசகாயகுமார் எழுதியிருப்பதைப் பற்றி நான் கேட்கிறேன்.  தேவாரம் ஓதும் சைவப்பிள்ளையின் மனைவி செல்லம்மாள் அதிகாலையில் தன் வயதுக்குவந்த இரு பெண்பிள்ளைகள் (12, 14 வயது) தூங்கும்  அறையைப் பூட்டி விட்டு கரிய சாணான் தலித் முத்துவுடன் உடலுறவு கொள்ளும்போது கோவிலில் செல்லம்மாளின் கணவர் ஆறுமுகம்பிள்ளை தேவாரம் ஓதுகிறார்.  செல்லம்மாளுககு முத்து 'சிவலிங்கமாக'த் தெரிகிறான்.  முத்துவுக்கு செல்லம்மாள் அம்மனாகத் தோன்றுகிறான். உடலுறவு கொள்வது இது முதல்முறையுமல்ல.  இத்தனைக்கும் பத்துநாள் முன்னதாகத்தான் முத்துவை செல்லம்மா பார்த்து கதைத்திருக்கிறாள்.  நான் கேட்கிறேன் 'வாசிப்பவனுக்கு ஏன் கோபம் வராது?'  அப்போது நான் சீரியஸான ஆளா? என்று அங்கலாய்த்த அம்மாள் (Seriousness is a sickness) 'அவருக்குக் கோபம் வரவில்லை' என்று சொல்கிறார்' என்கிறார்.  'இல்லை எனக்கு என்று இல்லை. வாசிக்கிற எல்லோருக்கும் கோபம் வருவதில்லை என்றுதான் சொல்கிறேன்' என்று மறுக்கிறார் வேதசகாயகுமார்.  'அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாள் மீது கோபம் வராது என்று சொல்ல முடியுமா' என்று நான் கேட்டவுடன் வேதசகாயகுமாரின் முகம் இறுகுகிறது. ('எங்கிட்டேயே கேள்வி கேட்கிறாயா, நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமையை பற்றி உனக்குத் தொ¢யாது' என்று அர்த்தம்|) உடன் ஜெயமோகனின் முகமும் இறுகுகிறது('எங்களுடைய அந்தஸ்தென்ன . . .  யோக்தை என்ன ..... ' என்று அர்த்தம்).

நான் கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.  தத்தனோ¢ டூரிங் தியேட்டரில் தரையில் மணலில் அமர்ந்து 'சிவகெங்கைச் சீமை' பழைய படம் பார்த்துவிட்டு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து புட்டுத் தோப்பில் கரையேறுகிறோம்.  போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன முட்டாள் தாசு ஒரு கழுதையை போகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் சர்ச், இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பள்ளிக்கூட கேட் அருகே இரண்டு பேர் கழுதையைப் பிடித்துக்கொள்ள கழுதையைப் புணரவேண்டி முட்டாள் தாசு பகீரதப் பிரயத்தனம் செய்கிறான்.  முட்டாள் தாசு 'மயக்கமா கலக்கமா'  பாட்டை, அழகாக பாடுவான் 'கோமாதா எங்கள் குலமாதா' பாட்டையும் அனுபவித்துப் பாடுவான்.  தன் வாழ்க்கைத் தோல்வியினால் துவண்டுபோய்விடாமல் ஆப்டிமிஸ்டிக்காக 'முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல முடிவில் கொடைக்கானல்தான்' என்று கவிதை எழுதியவன், குருவி மண்டையன் 'என்ன தாசு . . . கழுதையைப் போய்.....' என்று கேட்கிறான்.  தாசு 'கழுதை இல்லடா கல்யாணிடா .... டேய் எனக்கு பொம்பளை சீக்குடா ...... சத்தமில்லாமப் போங்கடா நீங்க' கழுதையின் குறி ஒரு அடிக்குமேல் நீண்டிருக்கிறது. 'தாசு இது கல்யாணி இல்லராசு. கல்யாண சுந்தரம்' என்கிறான் குருவி மண்டையன். இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் பேபி கேட்டைத் திறந்து வெளியே வந்து 'ஐயய்யோ என்னடா இது அசிங்கம்' என்று கூப்பாடு போட தாசு அவனிடம் 'பேபி யோவ் எனக்கு பொம்பள சீக்குய்யா' என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் போது கழுதையை பிடித்திருந்த இருவரும் அதைவிட்டு விட்டு ஒடுகிறார்கள். கழுதையும் ஓடுகிறது. தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு.  பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான். வாயா¢சம் அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று சொல்லிக்கொண்டிருந்தாளாம்.  இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான்.  பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.  தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது.  இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.

இதைச்  சொல்லிக்கொண்டே வரும்போது இடையிடையே வேதசகாயகுமார் 'என்ன சொல்ல வர்றீங்க', இதுக்கும் தொழுகை கதைக்கும் என்ன சம்பந்தம், 'விஷயத்தை மட்டும் சொல்லுங்க' என்று குறுக்கிட்டுப் பேசிக்கொண்டே வந்தார்.  சொல்லி முடித்ததும் வினயசைத்னயா "This is mere a Gossip" என்றார். இவர் இரண்டாவது அமர்வில் வெ.சா. சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் வெ.சா ஜாதி பற்றி தவறான எண்ணத்தோடு பேசியதாக வீணான சர்ச்சை செய்தவர். முன்னதாக 'You do Dhabas' என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி ரொம்ப நீளமாக ஒரு தத்துவக் கதையை சொன்னவர் (எனக்கு திலீப்குமாரின் திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை கதை ஞாபகத்துக்கு வந்தது. அது நல்ல கதை) நாராயண குரு குல சுவாமி வினய சைதன்யா 'காசிப்' என்று சொன்னவுடனேயே ஜெயமோகன் என்னைப் பார்த்து 'நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள். இதுவரை நடந்த கருத்தரங்கத்தையே நீங்க புரிஞ்சிக்கலை.  நீங்க ஊருக்குக் கிளம்பலாம்' என்றார். 'பத்து பேர் உங்க பேச்சைக் கேட்பதால் நீங்க இஷ்டத்துக்குப் பேசுறீங்க, இப்ப நீங்க பேசியதற்கு என்ன பர்ப்பஸ் இருக்கு' என்று கேட்டார். 'பர்ப்பஸ் இருக்கு என்றேன் ஒரு பர்ப்பஸ{ம் தேவையில்லை. நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள்' என்றார்.  நான் அப்போது என்னை பரதேசியாக உணர்ந்தேன். தி ஜானகிராமனின் பரதேசி வந்தான் கதை. கடைந்த அமுதத்தைக் குடிக்க வந்த ராகுபோல பந்தியில் அமர்ந்துவிட்ட பரதேசி. தரதரவென்று பாதிபந்தியில் இழுத்துத் தள்ளப்பட்டு தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புற விழுந்த பரதேசி.

நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். யாரும் எதுவும் பேசவில்லை. எதுவுமே நடக்காதது போல, கருத்தரங்கம் தொடரும்படியாக ஜெயமோகன் பேச ஆரம்பித்துவிட்டார் எல்லோரும் அதை கவனிப்பதான பாவனை.  இது தூ¢யோதன சபை. தூ¢யோதனனும் சகுனியுமாக இயக்கும் சபை.  எனக்கு ஆதரவுதர யாரும் கிடையாது. பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா எல்லோரும் வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள் பிற இளைஞர்கள் கூட இளம்படைப்பாளிகள் ஜெயமோகனைச் சார்ந்து இருக்க வேண்டியவர்கள். நான் ஒரு சாதாரணவாசகன். முப்பதாண்டு காலமாக வாசித்துக் கொண்டே இருக்கும் அற்பம். Just a nameless face or a faceless name.

எழுந்தேன் அறைக்கு வந்தேன்.  பேக் செய்தேன். ராஜீவைத் தேடி டைனிங் அறைக்கு வந்தேன். சுவாமி வினய சைதன்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தா¡ர். வினயமாக 'That was not a Gossip I agree. But you have taken a long time' ' என்றார். நான் 'If you say 'but' I will say 'yet'. That is discussion that is seminar' என்றேன். ஜெயமோகன் சொன்னதற்காக நான் ஊருக்குப் போகக்கூடாது என்று வினயசைதன்யா பிடிவாதம் பிடித்தார். நான் ஏற்க மறுத்துவிட்டேன். கருத்தரங்கத்தில் நான் பேசியதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடத்திலிருந்து 11 நிமிடத்திற்குள் தான் இருக்கும். மூன்று மணி நேர கருத்தரங்கத்தில் 11 அல்லது 12 நிமிடம் கூட பேசியிருந்தாலும் லாங்டைம் என்று எப்படி சொல்ல முடியம். தொடர்ந்து வினயசைதன்யா 'I will f..k the bloody ezhavas only to avoid ezhavas we have come all the way from Kerala to Ooty bastards' என்றார். நாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்யபதி ஆகிய மூவரும் ஈழவர்கள் எனக்கு நாக்கிலே சனி. கருத்தரங்க அமர்வில் பேசியது போதாதென்று இவா¢டம் நான் தமிழ் ஈழவ இனம் இல்லத்துப் பிள்ளைமார் என்று சொல்லித் தொலைத்துவிட்டேன். அறைக்குப் போய் என்பைகளை எடுத்துக்கொண்டு ராஜீவிடம் ஸ்வட்டரை ஒப்படைப்பதற்காக அங்கிருந்த குருகுல வாசியிடம் ஸ்வட்டரை கொடுத்து ராஜீவிடம் ஒப்படைக்கச் சொன்னேன். வினயசைதன்யா நான் சாப்பிட்டுதான் போக வேண்டும் என்று ரொம்ப பிடிவாதம் பிடித்தார். நான் சாப்பிட மறுத்தால் இவர் என்ன செய்வார் என்று சொல்லமுடியாது. சாப்பிடுவதாகப் பேர் பண்ணிவிட்டு எழும்போது கருத்தரங்கம் முடித்து எல்லோரும் சாப்பிட வந்துவிட்டார்கள். யாருடைய அட்ரஸையம் நான் வாங்கிகொள்;ள முடியவில்லை. தேவதேவன்இ நாஞ்சில்நாடன், யுவன், வெங்கட் சாமிநாதன், தேவகாந்தன் ஆகியோரிடம் விடைபெற்றேன் யுவன் 'ஏன்' என்றார். நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆசிபெறுவதற்காக வெங்கட் சாமிநாதன் காலைத் தொட்டபோது அவர் 'நோ நோ' என்றார். சிரித்துக்கொண்டே வெளியெறினேன். இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான்.

தொழுகை கதை பத்துநாள் சமாச்சாரம். இதுவே சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் ஊருக்கும் தெருவுக்கும் இந்த விஷயம் தொ¢ந்துவிடும் காலப்போக்கில் முத்து மேலும் முன்னேறி செல்லம்மாளின் பெண்பிள்ளைகளின் மீதுகூட கைவைக்கும்படி ஆகலாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம்? விஷயம் ஆறுமுக ஒதுவாருக்குத் தொ¢யவந்து அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம். ஒரு வேளை அவர் அனுசா¢த்துப் போகலாம். அல்லது கொலையோ தற்கொலையோ செய்யம் படி ஆகலாம். செல்லமாள் மீது கோபம் வராது என்றால் எப்படி?

முட்டாள் தாசுவின் மிருகப் புணர்ச்சியில் அவனது நோக்கம் காமமல்ல. மெடிக்கல் க்யூர் கழுதையைப் புணர்ந்தால் பொம்பளை சீக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதுகூட தொழுகைதான். பேபியின் மனைவி வெரோனிக்கா செய்வது செல்லம்மாள் செய்வதுபோல அடல்ட்ரிகூட இல்லை. கலவியைத் தொழுகையாக்கியிருக்கிறாள்.

சும்மா சாருநிவேதிதாவை மிரட்டுவதற்காக 'சாரு தாண்ட வேண்டிய புள்ளி தொழுகைதான் ஆனால் தளையசிங்கம் அவசரமாக அடித்துக்கொல்லப்பட்டார்' என்று அவர் மிகையாகக் கூறிவிட்டபின் நான் தொழுகையை நிர்வாணமாக்கினால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியம். It is a tale told by an idiot full of sound and fury and signifying nothing.

ஊட்டியை விட்டுக் கிளம்பும்போது மதியம் 2மணி திருச்சி வந்து வீடு சேரும்போது இரவு சா¢யாக 12 மணி. ஊட்டிக்குப் போகாமல் சின்னவனின் சைக்கிளை சா¢ பண்ணியிருக்கலாம். There is always trial and error. சுந்தரராமசாமியின் 'அழைப்பு' கதையில் ஒருவரி 'நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்'.


 பகுதி3: விலங்கும் நாணிக் கண் புதைக்கும்!

தி.ஜானகிராமனின் பரம ரசிகன், அசோகமித்தரனின் சீடன், காலச்சுவடின் ஒற்றன் என்று கடந்த காலங்களில் என் மீது முத்திரைகள் குத்தப்பட்டிருக்கிறது.

What a piece of work is a Man

~ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை கட்டுரை திண்ணை.உழஅ-ல் கடுமையாக எடிட் செய்யப்பட்டு வெளியான பின் காலச்சுவடிகள் 42வது இதழில் திண்ணையி;ல் பிரசுரமாகாத பகுதிகள் பிரசுரமானது. Two Different Edited Versions

 R.P. ராஜநாயஹம்என்னுடைய கட்டுரை திண்ணையில் வெளியாவதற்கு முன் ஊட்டி தளைய சிங்கம் கருத்தரங்கம் பற்றி ஏழு கட்டுரைகள் பிரசுரமாகின. அதேநேரத்தில் 'காலம்' ஏ.ஜே.கனகரத்னா சிறப்பிதழிலும் தளைய சிங்கம் கருத்தரங்கம் பற்றி யந்திரத் தனமான கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. திண்ணையில் விரிவாகக் கருத்தரங்க நடவடிக்கை பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளிலும் 'காலம்' இதழில் வந்த கட்டுரையிலும் 'ஆர்.பி.ராஜநாயஹம் சர்ச்சை' பற்றி ஒரு குறிப்புமே கிடையாது. எட்டாவது கட்டுரையாகத் திண்ணையில் 'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' வெளியானது. The Wounded deer leaped highest. எட்டாவது ஆண் வெட்டும் புலி! இந்தக் கட்டுரை முன் வைத்த முக்கிய பிரச்சினை தளையசிங்கம் மரணம் பற்றிய சர்ச்சை 'தளைய சிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்' என்ற ஜெயமோகனின் பொய் இதன் மூலம் அம்பலமானது. திண்ணையில் இந்த பிரச்னைக்கு மு. பொன்னம்பலம் முத்தாய்ப்பாக எழுதிய குறிப்பில் சுந்தர ராமசாமியின் 'தளைய சிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்' கட்டுரையில் தகவல் பிழை எதுவும் இல்லை என்று தெளிவு படுத்தினார். இதன் மூலம் ஜெயமோகன் ஊட்டி கருத்தரங்கம் நடைபெறுவதற்கு முன்னதாக எனக்கு எழுதிய கடிதத்தில் கீழ்கண்டவாறு எழுதியது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகிவிட்டது.

'இவை குறித்துக் கனடா என்.கெ. மகாலிங்கம் (தளைய சிங்கத்தின் இளைய தோழர்) என்னிடம் நிறையப் பேசியுள்ளார். (மு. பொன்னம்பலம் இக்காலத்தில் கொழும்பில் மாணவர்) கைது செய்யப்பட்டு இருநாட்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். காவல் நிலையத்திலேயே உடல்நலம் குன்றி அங்கிருந்தே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டுப் படுத்த படுக்கையாகி மீளாமலேயே மரணமடைந்தார்' இந்தப் பொய்யைப் பற்றி இதை R.P. ராஜநாயஹம் கட்டுரை பேசியதைப் பற்றி ஏன் இந்தக் கூட்டம் மெளனம் சாதிக்கிறது. ஆனால் என்னைப் பற்றி அவதூறு கட்டுரைகள் சரவணன் எழுபத்தெட்டு, நாஞ்சில் நாடன், மோகனரங்கன் மூலமாகப் புறப்பட்டன. 'சொல் புதிது' 10வது இதழில் தலையங்கம் 'காலச்சுவடால் அனுப்பப்பட்ட ஒற்றன் R.P. ராஜநாயஹம்' என்று எழுதப்பட்டது. முற்பகலில் எனக்கு இன்னா செய்ததற்கு ஜெயமோகனுக்கு இன்னா பிற்பகல் பொ, வேல்சாமி மூலமாக விளைந்தது.

'அருண்மொழி நங்கை - 1978 கம்பைன்ஸ்' சொல் புதிது 9வது இதழில் செய்த ஊழல் பின்னர் பொ. வேல்சாமியால் வெளிச்சமாகி கவிதா சரண் மூலமாகச் சந்தி சிரித்து நாறிப்போனது. எப்படி தண்டனை கிடைத்தது பாருங்கள். இப்போது கூட ஜெயமோகன் குழாம் என்ன பேசுகிறது தெரியுமா? 'கோடீஸ்வரன் இரண்டு ரூபாய் பிக்பாக்கெட் அடித்தாகப் பழி போடுகிறார்கள்' என்று நாக்கூசாமல் குழையடிக்கிறார்கள். வெட்கக் கேடு!

'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை வெளியானவுடன் திரு. மாலன் அவர்கள் தளையசிங்கம் மரணச் சர்ச்சையைத் தொட்டு ஒரு கட்டுரை எழுதினார். தொடர்ந்து '1978' என்ற பெயருடையவர் என்னை அவதூறு செய்து, மாலனை அவதூறு கட்டுரை எழுதியதாகத் திட்டி எழுதினார். மாலன் இதற்கு 1978 மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வாதிட்டார். இதே நேரத்தில் பல வாசகர் கடிதங்கள் (!?) வேறு. அப்போது 'திண்ணை என்ன சொல்கிறது?' என்று ஆசிரியர் குழுவின் கட்டுரை வெளியாயிற்று. அதில் தளைய சிங்கம் மரண பிரச்சனை கவனமாக மறைக்கப்பட்டது. 

"ராஜநாயஹத்தின் கட்டுரையை ஆசிரியர் குழு விவாதித்த போது" தொழுகை பற்றி விவாதம் எழுந்தது. எங்கள் விவாதம் செல்லம்மாளின் மீறல் அலங்காரத் தம்மாளின் மீறலோடு ஒப்பிடப்படுவதில் மையம் கொண்டது. இது எழுப்பும் கேள்விகள் பல 'லேடி சேட்டர்லி'ஸ்வருடன் ஒப்பிட்டு ஒரு குறிப்பு விவாதத்தில் வருகிறது. இது ஒரு சரியான புரிதல் என்று கருதினோம். வர்க்கங்களை மீறிய காமமாய் லேடி சேட்டர்லியின் மீறல் சா¢யாகவே புரிந்து கொள்ளப்பட்டதால் தான் இது தடைசெய்யப்பட வேண்டும் என்று இங்கிலாந்தில் கோரிக்கை எழுந்தது. அதுபோலவே சாதீயத்தை மீறியது செல்லம்மாளின் செயல். ஆனால் இந்த ஒப்பீட்டில் கோபம் பற்றியும் ராஜநாயகம் பேசுகிறார். செல்லம்மாளின் குழந்தைகள் எப்படி பாதிக்கப்படும், மீறல்கள் செல்லம் மாவைக் கடந்து குடும்ப நபர்களைக் காயப்படுத்துமா? எனில் இந்தப் பயத்தை முன் வைத்துத் தானே சமூகம் இயல்பான உணர்ச்சிகளுக்கு தடை விதிக்கிறது? குடும்பம், சாதிக்கு விசுவாசமாய் இரு. உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதே என்பது தானே?

மீறல் என்று சொன்னவுடன் ராஜநாயஹத்தின் நினைவிலி மனத்தில் அலங்காரத்தம்மாள் வருவது சிந்தனைக்குரியது. சாதீயத்திற்கான மீறல் என்று வெளிப்படையாய் தி. ஜானகிராமனால் சொல்லப்படாவிட்டாலும் மிக மெல்லிய குறிப்பு சிவசுவின் மீசை வடிவில் வருகிறது. ஆனால் விவாதத்திற்குரிய விஷயம் என்னவென்றால், செல்லம்மாள் உடனடியாக அலங்கதாரத் தம்மாளை நினைவிற்குக் கொண்டு வருமெனில், முத்துவேலரை (ஜெயகாந்தனின் 'சமூகம் என்பது நாலுபேர்') தி. ஜானகிராமனின் மரப்பசுவில் வரும் கோபாலியை ஏன் நினைவுக்குக் கொண்டு வரவில்லை. ஆணாதிக்க மனம் மீறலைப் பார்க்கும் ஒரு பார்வையாகக் கொள்ளலாமா? ஆனால் நாங்கள் எங்களுக்குள் விவாதித்த இவை எதுவுமே விவாதத்தில் முன் வைக்கப்படவில்லை" என்று "திண்ணை என்ன சொல்கிறது?" என்ற கட்டுரையில் எழுதப்பட்டது.

இதற்கு என்பதில் 'அம்மா வந்தாள்; அலங்காரத் தம்மாளை விட அன்பே ஆரமுதே ருக்கு மேலானவர். ஏனென்றால் ருக்கு கற்பில் சிறந்தவள்' என்று முன்னர் திருப்பூர்க் கிருஷ்ணன் எழுதியதற்கு நான் கோபப்பட்டவன். ஒழுக்க வாதம், அறவியல் நோக்கில் பார்க்கிற எண்ணமெல்லாம் எனக்கு அறவே கிடையாது. ஆனால் அலங்காரத்தம்மாளும் செல்லம்மாளும் இப்படி இருக்கிறார்கள். இருப்பு முக்கியமல்ல. காரண இருப்பு இலக்கியத்திற்கு வேண்டும். அந்தக் காரண இருப்பு அலங்காரத்தம்மாளிடமும் செல்லம்மாளிடமும் இருக்கிறதா? செல்லம்மாள் விஷயம் ரொம்ப விசித்திரம். கா¢ய சாணான் முத்துவோடு பத்து நாளாகத் தான் அறிமுகம். அதோடு 'உன்னைப் போல் ஒருவன்' கதையில் வரும் தொப்பையனும் அம்மா வந்தாளில் வரும் அப்புவும் ஆண் பிளளைகள். செல்லம்மாளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். பத்தாவது நாள் தான் கதை என்பதால் அந்தப் பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படப் போகும் விபரீதங்கள் பற்றியும் யோசிக்க வேண்டி நேர்ந்தது. தொழுகை கதை பற்றி விவாதித்தால் நிறையப் பேசவேண்டும். ஆனால் எங்கே விவாதிக்க விட்டார்கள்.

நினைவிலி மனம் எப்போதும் Similarity யான விஷயங்கள் சம்பந்தப்பட்டது. ஒரு வேளை முத்துவேலரை பற்றிய விவாதமாயிருந்திருந்தால் 'மரப்பசு' கோபாலியும் 'அடி' செல்லப்பாவும் ராஜநாயஹத்தின் நினைவிலி மனத்தில் நிச்சயம் வந்திருப்பார்கள்.

'மு. தளைய சிங்கம் விமர்சனக் கூட்டம் பதிவுகள்' என்று ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளில் என் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ள தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டவும் விரும்புகிறேன். 4-5-2002 மாலை 2வது அமர்வு விவாதத்தில் ஆர்.பி. ராஜநாயஹம் பேசியதாக 'புத்தரைப் பற்றிச் சொன்னீர்கள். என் நண்பர் ஒருவர் அவர் ஒரு முஸ்லீம். மதுரைக்கு அருகேயுள்ள ஒரு சங்கிலிக் கருப்பனை பற்றி ஆய்வு செய்தார். ஏழடி உயரமுள்ள சிலை அது. வெள்ளியில் மீசையும் கண்களும் செய்து பதிந்திருப்பார்கள். வருடத்தில் இரண்டாயிரம் ஆடுகளாவது பலிவிழாமல் இருக்காது. தேவர் சாதிக்கு முக்கியமான கோயில். நண்பருக்குச் சிலையின் அமைப்பைப் பார்த்துச் சந்தேகம், பூசாரியைக் கைக்குள் போட்டுக் கொண்டு ஒருநாள் உள்ளே நுழைந்து மீசையையும் கண்களையும் எடுத்துப் பார்த்து விட்டார்.

அவர் சந்தேகப்பட்டது சரிதான். அது ஒரு புத்தர் சிலை! வெளியே சொல்ல முடியுமா? தலை காணாமல் போய் விடும் என்றா' என்று எழுதப்பட்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இந்த விஷயம் நான் பேசியதில்லை. மற்றொருவர் பேசியது. நான் பேசியதாக ஜெயமோகனால் எழுதப்பட்டிருக்கிறது. அதே அமர்வில் நான் பேசியதாக எழுதப்பட்டுள்ள விஷயம். வெங்கட்சாமிநாதன் எப்பேர்பட்ட தத்துவத்தையும் ஸ்தாபனம் என்ற அமைப்பில் கொண்டு வரும் போது மனிதனின் சின்னத்தனம் சேற்றில் புரட்டி எடுத்து விடும். என்று சொன்னபோது நான் கி.ரா.வின் நண்பர் ஒருவருக்கு வினோபா ஆசிரமத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவத்தைச் சுட்டிக் காட்டினேன். வினோபாவே அதிர்ச்சியடைந்து கடைசியில் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டார் என்று கி.ரா.வே என்னிடம் சொன்னார் என்று தெளிவாக நான் பேசிய விஷயம். (வினோபா ஆசிரமக் காமகளியாட்டங்களைப் பேசிக் கொண்டிருந்தார் என்று என் மீது இவர்களால் பின்னால் குற்றச்சாட்டாகவே வைக்கப்பட்டது) இந்த என்பேச்சு இவர்கள் கருத்தரங்க விவாதத்தைச் செழுமைப்படுத்தும்படி நான் பேசியதாக ஜெயமோகனால் (கி.ரா.வின் நண்பர் என்று தெளிவாக நான் குறிப்பிட்ட விஷயம்) 'என் சொந்தக்காரர் ஒருவர் வினோபாவேயின் ஆசிரமத்தில் இருந்தவர்' என்பதாகப் பதிவாகியிருக்கிறது. 

மு.தளைய சிங்கம் விமர்சனக் கூட்டம் பதிவுகள் இரண்டாம் பகுதி என்ற ஜெயமோகனின் கட்டுரையில் அந்தச் சா¢த்திர முக்கியத்துவம் பெற்றுவிட்ட கூட்டம்! அந்த மூன்றாவது அமர்வு. Attentiveness கொஞ்சமும் இல்லாத இநதக் கூட்டத்தில் தான் ஜெயமோகனோடு மோதல் ஏற்பட்டு நான் வெளிநடப்புச் செய்ய நேர்ந்தது. பின்னால் சொல் புதிது தலையங்கத்தில் தொடர்ந்து கருத்தரங்கத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ராஜநாயகம் ஈடுபட்டார் என்று எழுதிய கை இந்தக் கட்டு¨யில் அது பற்றிய கப்... சிப்... மூச் ஒரு வார்த்தை எழுதவில்லை. மாறாக இடது சாரிகள் அவதூறுக்கு அஞ்ச மாட்டார்கள் என்ற ஜெயமோகனின் கருத்தைச் செழுமைப்படுத்த ராஜநாயஹம் பேசியதாக கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறது.

ஆர்.பி. ராஜநாயஹம் சதங்கையில் முருகேச பாண்டியன் ஒரு விஷயம் எழுதியிருக்கிறார். எண்பதுகளில் அவர் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்த சமயவேல் சட்டென்று குரலைத் தாழ்த்தி 'உறுதியான ஆதாரம் கிடைச்சுட்டது. நான் இப்ப கோவில் பட்டியிலிருந்து வாறேன். வெங்கட் சாமிநாதன் சி.ஜ.ஏ. உளவாளி தான்' என்றாராம். அந்தப் பிரச்சாரம் அப்போது மிகப் பலமாக இடது சாரிகளால் முன் வைக்கப்பட்டது.

உண்மையில் இந்த விஷயத்தை இப்படி நான் அந்தச் சர்ச்சைக்குள்ளான கருத்தரங்கக் கூட்டத்தில் பேசவேயில்லை. மாறாகக் கருத்தரங்க அமர்வுக்கு 2மணி நேரத்திற்கு முன் வெங்கட் சாமிநாதன், வேதச் சகாயகுமார் தேவகாந்தன் ஆகியோர் முன்னிலையில் நான் இப்படிப் பேசியதற்கு ஒரு காரணம் உண்டு. ஊட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாள் ஒருவர் தன்னுடைய கணவருக்கு வெ.சா.வை ரொம்பப் பிடித்திருப்பதாகக் கூறினார். வெ.சாவைப் பார்த்தால் C.B.I. Officer போல இருப்பதாகத் தன் கணவர் அபிப்ராயப்பட்டதாக சொன்னார். உடனே நான் C.B.I. Officer என்றும் சொல்வார்கள், C.I.A. Agent  என்றும் கூறுவார்கள்| என்று கூறிச் சதங்கையில் வந்ததைத் தெளிவாக மேற்கோள் காட்டினேன். '1977 -ம் ஆண்டு சமய நல்லூருக்கு முருகேச பாண்டியன் வீட்டுக்கு வந்த சமயவேல் நான் இப்ப திருநெல்வேலியிலிருந்து வாறேன். விஷயம் கன்பார்ம் ஆயிடுச்சு. வெங்கட் சாமிநாதன் சி.ஜ.ஏ. ஏஜென்ட்தானாம்' என்று கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் நான் பேசியதைக் கூட்டத்தில் பேசியதாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த இடத்தில் அப்போது இல்லவே இல்லை. தான் இல்லாத இடத்தில் பேசப்பட்ட விஷயத்தை எப்படி இவரால் கருத்தரங்கத்தில் பேசப்பட்ட கருத்தாக எழுத முடிகிறது.

மேற்கண்ட தவறான பதிவுகள் திண்ணை மே 26, 2002 இதழிலும் திண்ணை ஜ_ன் 2, 2002 இதழிலும் இணையத்தில் பிரசுரமாகியுள்ளது. இப்போதும் திண்ணை இணைய இதழில் 'முந்தைய இலக்கியக் கட்டுரைகள்' பகுதியில் பார்க்க முடியும். 

நான் உண்மைகளைக் கட்டுரையாக வடித்தபின் அவதூறுகள் திண்ணையிலும் காலச்சுவடியிலும் பிரசுரமாகின.  அப்போது எனக்கு வந்த மூன்று ஈமெயில்களை இங்கே கவனப்படுத்த விரும்புகிறேன்.

மாலன் : Express my sympatheies and solidarity to you.  As for the humiliation heapedon you in the Ooty meet, I feel sorry for it.  But this will enable you understand People better than through any of Literary works.

சுந்தர ராமசாமி : Dear R.P. Rajanayaham, I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks.  I am being inflicted with peril and mental Agony For the past fifty years by this type of irresponsible remarks.

இந்திரா பார்த்தசாரதி :: I am not surprised that you were treated badly in Ooty.  You are too honest to get Along with those who succeed in Life

2002-ம் ஆண்டில் திருச்சியில்   விஜயா வேலாயுதம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்தினார். நாஞ்சில் நாடன் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டதால் அந்த நிகழ்ச்சியை நான் புறக்கணித்தேன். ஒரு பொய்யனை நான் நோ¢ல் பார்க்க நேர்ந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.  என்னுடைய நண்பர் அப்போது BSNL  Divisional Engineer ஆக இருந்த திரு. கோவிந்தராஜீவும் 'அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் போக வேண்டாம்' என்று என்னைத் தடுத்தார்.

இந்த நாஞ்சில் நாடன் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். எந்தக் கட்டுரை எழுதினாலும் தமிழ் இலக்கிய உலகைச் சார்ந்தவர்கள் பலா¢ன் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் Good Booksல் இடம் பெறுபவர். ஒருமுறை சாகித்திய அகாதெமி பா¢சு பெறத் தகுதியானவர்கள் என்று தமிழின் அனைத்து விமர்சகர்கள் பெயரையும் குறிப்பிட்டார். இந்த குயுக்தி புரிகிறதா?

திண்ணையில் என் கட்டுரைக்கு எதிர்வினையாக இவர் எழுதிய 'தன்படை வெட்டிச் சாதல் வேண்டாம்' கட்டுரையில் இவர் குறிப்பிட்ட பெயர்கள் எவ்வளவு தொ¢யுமா?  மொத்தம் 24 இலக்கியப் படைப்பாளிகள்! எவ்வளவு விபரம் பாருங்கள். இதுபற்றிச் சென்ற ஆகஸ்ட் மாதம் சேலத்தில் எம்.ஜி. சுரேஷிடம் நான் சொன்ன போது இந்த 'நாஞ்சில் நாடன் தந்திரம்' பற்றி  சுரேஷ் அடித்த கமெண்ட் 'ஒட்டு போடுகிறார்!' 

எம்.எஸ் பற்றி காலச்சுவடில் இவர் எழுதிய கட்டுரையில் கூடச் சிலருக்கு ஓட்டு போட்டிருக்கிறார். உயிர்மை ஆகஸ்ட் இதழில் 'முலை' பற்றி இவர் எழுதிய கட்டுரையில் கூட ஒரு பத்து பேருக்கு ஓட்டு போட்டிருக்கிறார். பார்த்துக் கொள்ளுங்கள்.

நாஞ்சில் நாடனின் 'தன் படை வெட்டிச் சாதல் வேண்டாம்' என்ற தலைப்பில். யாரோ ஒரு ராஜநாயஹத்துக்காக நாமெல்லாம் வெட்டி சாக வேண்டுமா என்ற மேட்டிமை தொனிக்கிறதைக் கவனிக்கவேண்டும்.

சொல் புதிது 10வது இதழின் தலையங்கத்தில் ஜெயமோகன் 'காலச்சுவடு அனுப்பிவைத்த ஒற்றன் தான் ராஜநாயஹம்' என்று எழுதிய கையோடு தன் பூர்வீகப் பார்வையுடன் 'ராஜநாயஹத்தின் கட்டுரையை வாசிக்க இடம் கொடுத்த அமுதன் அடிகளும், (கிறிஸ்துவ பாதிரி) கட்டுரையைப் பிரசூ¢த்த மனுஷ்ய புத்திரனும் (முசல்மான்) தங்களது மதக் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்து நிறுவனமான நாராயண குருகுலத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாகத் துப்பறிந்து எழுதியது ஜெயமோகக் கோமாளியின் உச்சக்கட்ட கொனஸ்டை.

சுந்தர ராமசாமி அப்போது கலிபோர்னியாவிலிருந்து 'திண்ணைக்கு ஒரு குறிப்பு' என்று ஒரு கடிதம் எழுதினார். (தற்போது சு.ராவின் 'இறந்த காலம் பெற்ற உயிர்' நூலில் இந்தக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது) அதில் என் கட்டுரையை மேற்கோள்காட்டி ஆர்.பி. ராஜநாயஹம் பெயரை மூன்று முறை குறிப்பிட்டார். இதற்குப் பதிலாக ஜெயமோகன் 'சுந்தர ராமசாமிக்கு அன்புடன்' என்று அளித்த பதிலிலும் மூன்று முறை ராஜநாயஹம் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். 'நாங்கள் நடத்திய மூன்று நாள் அரங்கு, மற்றும் அதன் பதிவுகளான ஏழு கட்டுரைகளைப் படிக்க மறுக்கிறீர்கள். ஆர்.பி. ராஜநாயஹத்தின் பதிவையே அனைத்து விவாதங்களுக்கும் ஆதாரமாகக் கொள்கிறீர்கள்' என்று எல்லோரிடமும் சீறிவிட்டுப் 'பல கருத்துக்களை அவசரப்பட்டு நான் சொல்லி விடுகிறேன். பலவற்றைக் கவனமில்லாமல் சொல்லியிருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் எக்கச் சக்கமாக மாட்டிக் கொண்டு இருக்கிறேன்' என்று சரணாகதி அடைந்த தமாஷை என்னவென்பது?

சொல் புதிது 10வது இதழ் தலையங்கத்துக்கு எதிர்வினையாக மனுஷ்ய புத்திரன் 'ராஜநாயஹத்தின் கட்டுரை காலச்சுவடிற்கு வந்த ஓரிரு தினங்களில் பல தொலைபேசி அழைப்புகள். வெகு ஜன ஊடகங்களில் ஒரு செய்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் பற்றி எனக்குத் தொ¢யும். என்னுடையப் பத்தாண்டு காலக் காலச்சுவடு ஆசிரியர் பொறுப்பில் ஒரு இலக்கியக் கூட்டம் பற்றிய பதிவு, தபாலில் வந்து சேர்ந்தவுடனேயே அதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி என்பது புது அனுபவம்' என்று எழுதி ஜெயமோகனின் அரசியல் பற்றிக் கட்டுரை முடிவில் 'இவரை ஜெயலலிதாவோடு மட்டுமே ஒப்பிட முடியும்' என்றும் 'ஜெயமோகனுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது ஒருவிதத்தில் இலக்கியத்தில் தார்மீக நியதிகளை மீட்பதற்கான செயல்பாடே ஆகும்' என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 'ஜெயமோகனின் செயல்பாடு ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியின் செயல்பாடுகளை விடக் கீழானது. 50 ஆண்டுகால நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வளவு நேர்மைக் குறைவாக ஒரு நபர் செயல்பட்டதில்லை' என்று கடுமையாக மனுஷ்ய புத்திரன் சாடியிருந்தார்.

காலச்சுவடு 43வது இதழில் காலச்சுவடு கண்ணன் எழுதிய எதிர்வினை ஜெயமோகன் குழாமின் இரட்டை வேட அரசியலைத் தோலூ¢த்துக் காட்டியது. இதற்கெல்லாம் இவர்களிடமிருந்து சா¢யான பதில் வரவேயில்லை.

திருப்பூரில் மத்திய அரிமா சங்கத்தில் 'கனவு' சார்பாக 'நெடுங்குருதி' நாவல் பற்றிய கலந்துரையாடலுக்கு 11-04-2004 அன்று நான் தலைமை தாங்கி நாவல் பற்றிப் பேசினேன். எஸ். ராமகிருஷ்ணன் முன்னதாகத் திருச்சியில் என்னுடைய 'ஊட்டி தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை பற்றி 'உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டிங்க இந்த ஒரு கட்டுரையில் - தளைய சிங்கத்தை நினைத்தால் இனி யாரும் ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது. நீங்கப் பாட்டுக்கு உண்மையெல்லாம் எழுதிட்டீங்க அவன் (ஜெயமோகன்) இன்னமும் உங்களைக் கண்டபடி திட்டி தாறுமாறாக இலங்கை பத்திரிகைகளில் கூடப் பேட்டி தருகிறான்' என்று என்னிடம் சொன்னார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தொ¢யவில்லை.

தொடர்ந்து 11-7-2004 அன்று திருப்பூரில் சாகித்திய அகாதெமி சார்பில் 'கதை அனுபவம்' என்பதாக நடந்தவைபவத்தில் நாஞ்சில் நாடன் நிகழ்ச்சி முடிந்தபின் வலிய வந்து எனக்கு வணக்கம் சொன்னார். குற்றமுள்ள நெஞ்சு. நெஞ்சுவலிக்காரர் என்பதால் நான் அமா¢க்கையாக அவருடைய அவதூறுகள் பற்றிக் கேட்டேன். யார் மீதும் சேறடிக்காத எழுத்துத் தன்னுடையது என்று பிரச்சாரம் செய்பவராயிற்றே என்று ஒரு நான்கைந்து கேள்விகள் கேட்டேன். நாஞ்சில் நாடன் 'என்னை மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம்' என்று கெஞ்சினார்.

'திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான் நான் தர மறுத்துவிட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. நான் ஒண்ணுக்கு போகனும்' என்று தவித்தவிக்க ஆரம்பித்தார். காலச்சுவடில் கண்ணன் இவருடைய கட்டுரையை எடிட் செய்ததற்கும் கோபப்பட்டார். இவர் இருபத்தி நாலுபேருக்கு ஓட்டு போட்ட விஷயத்தை எடிட் செய்தால் இவருக்குக் கோபம் வராதா என்ன? தொடர்ந்து அவர் செய்த பொ¢ய சேவை பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். நாச்சார் மட விவகாரம் போல இன்றும் ஆறு வெர்சன் ஜெயமோகன் குழாமிடம் இருக்கிறது. அதையெல்லாம் வெளியிடக் கூடாது என்று நாஞ்சில் நாடன் தான் தடுத்தாட் கொண்டார். அப்படி மட்டும் தப்பித்தவறி இவர் செய்யலைன்னு வச்சுக்குங்க இவர் தடுத்தாட் கொள்ளலைன்னு வச்சுக்குங்கக்க... எங்கப்பா... அடேங்கப்பா.

ஒரு சீனியர் எழுத்தாளன் தன்னுடைய கட்டுரையை ஒரு ஜூனியர் திருத்தி எழுதிவிட்டான் ஒப்புதல் கடிதமும் கேட்டான் என்று சொல்வதைப் பற்றி இலக்கிய உலகம் சிந்திக்க வேண்டுகிறேன். விலங்கும் நாணிக் கண் புதைக்கும் இந்நிகழ்வைக் கேளுங்கள் நண்பர்களே! நாஞ்சில் நாடன் இதற்கு அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? பகிரங்கப் படுத்தியிருந்தால் யார் மீதும் சேறடிக்காத எழுத்து என்று நிரூபித்திருக்கலாம். பதிலாக என்ன செய்கிறார். ஜெயமோகனோடு ஆறுமாதம் பேசாமலிருக்கிறார். பின்னர் ஜெயமோகன் நூல்கள் வெளியிட்டு விழாவில் ''ஜெயமோகன் என்னய்யா கொலையா செய்துவிட்டார். கூட்டம் சேர்ந்து கிட்டு தாக்குறீங்க" என்று கொக்கரக்கோ கூவல் விடுகிறார் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடன் நெஞ்சில் நஞ்சு!

இப்படி இன்னொருவர் எழுதியதைத் திருத்தி எழுதிவிட்டு ஜெயமோகன் 'என் நேர்மை ஒருபோதும் ஜயத்துக் குள்ளானது இல்லை' என்று துண்டறிக்கையில் பீற்றிக் கொள்ளுவதை என்னவென்று சொல்வது? இதுதான் அறிவார்ந்த கயமையா? படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஜயோவென்று போவான் என்று பாரதி சொல்லியிருக்கிறான். எழுத்தாளனையும் சேர்த்துத் தான்.

ஊட்டி கருத்தரங்கத்தில் நடந்தவைகளை அப்படியே சத்தியமாக நான் எழுதிய பின் இவர்களால் என்ன பதில் தரமுடியும் என்று தான் நினைத்தேன். ஆனால் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய செயல்முறை விளக்கம். எல்லோரிடமும் தான் குறியிருக்கிறது. அதை எப்போது கையிலெடுத்துக் கொஞ்சுவது கிடையாதா' என்று புளுகி அவதூறு செய்தபோது நான் உடைந்து போனேன். அங்கே அந்தக் கூட்டத்தில் எனக்கு 'Alienation' ஏற்பட்டுச் சொல்லேர் உழவர்களின் பகைக்கு நான் ஆளானதோடு இப்படி ஒரு கடுமையான அவதூற்றையும் தாங்கும்படியானதற்கு நாஞ்சில் 'நாடன் நானில்லே ஜெயமோகன் தான் இப்படி இஷ்டத்துக்கு எழுதினான்' என்று சாவகாசமாகச் சொல்வதைப் பாருங்கள். இவர்கள் தரத்திற்கே நான் ஒரு கேள்வி கேட்டால் இவர்களிடம் பதில் என்ன? முட்டாள்தாசாக நான் நடித்தபோது கழுதையாக நடித்தவர் யார்?....

முட்டாள்தாசுக்கு Sexually Transmitted Desease என்ற வார்த்தை தொ¢யாது. அதனால் மதுரை வட்டார வழக்கில் 'பொம்பளைசீக்கு' என்கிறான். வட்டார வழக்கில் ஒரு பாத்திரம் பேசுவதற்கு எழுதுபவன் பொறுப்பா? பெண்ணியத்திற்கு எதிராக ராஜநாயஹம் பேசியதாக எழுதியதாகக் குற்றச்சாட்டு.

முட்டாள்தாசு கழுதைப் புணர்ச்சி ஜெயமோகனை ரொம்பவே பாதித்திருக்கிறது - 'வடக்குமுகம்' நாடகத்திலும் 'காடன் விளி' சிறுகதையிலும் மிருகப் புணர்ச்சியைக் கொண்டு வருகிறார். 'வடக்கு முகம்' நாடகத்தில் ஒரு குதிரை 'என் தசைகளைக் கண்டு காமம் கொள்ளாத பெண்கள் எவருமே இன்னும் பிறக்கவில்லை' என்று சொல்கிறது. இது தான் பெண்ணியத்திற்கு எதிரான வார்த்தை. பீஷ்மரிடம் அம்பைக் காதலுடன் 'குதிரைகளில் குறுஞ்சுழியும் நீள்முகமும் கொண்டது தனது முதுமையிலும் சளைப்பதில்லை' என்று கூறி பீஷ்மருக்கு குதிரை முகமூடி அணிவித்து அணைத்துக் கொள்கிற காட்சி, 'காடன் விளி கதையில் வரும் எருமைப் புணர்ச்சி' - ஜெயமோகனை முட்டாள் தாஸின் கழுதைப் புணர்ச்சி ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சிகள்.

'உங்களைப் பார்த்தால் என் சங்கரன்கோவில் நண்பர் நினைவுக்கு வருகிறார்' என்று அரட்டையின் போது என்னிடம் நெகிழ்ந்து போய் நாஞ்சில் நாடனின் வாய் சொல்கிறது. அதே அரட்டை பற்றித் தாறுமாறாய்க் கை எழுதுகிறது. அது எப்படி?

காலச்சுவடில் சுருக்கப்பட்டு என் கட்டுரை வெளியான போது அ. மார்க்ஸ் அவர்களிடமிருந்து இரண்டு கோபமான போன் மிரட்டல் வந்தது மார்க்ஸ் கோபப்பட வேண்டியது வேதசகாயக்குமாரிடம் தான். வேதசகாயக் குமார் அப்படி அ.மார்க்ஸ் பற்றிக் கூறியபோது அங்கே இருபது பேர் இருந்தார்கள்.  அந்த இருபது பேரும் இதை மறுக்கவே முடியாது.  வேதச் சகாயகுமார் என்பவர் எப்போதுமே சில பொய்களைத் திரும்பத் திரும்ப மற்றவர்களிடம் பேசி, கொஞ்ச நாளில், தானே கூட அவற்றை உண்மையென்றே நம்பி விடும் விசித்திரத் தன்மை கொண்டவர் என்பது அவருடன் பழகியவர்கள் அறிந்து சொல்லும் உண்மை. He cannot explain a Prejudice without Getting Mad. மார்க்ஸின் கோபம் தனக்குப் பிடிக்காத காலச்சுவட்டில் ~ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை| வெளியானது என்கிறதிலும் மையம் கொண்டது.

ஊட்டியில் என்னிடம் 'சிநேகாவின் உதட்டைக் கடிச்ச நடிகர் யார் சார்? என்று கேட்ட ஒரு செக்கு மாட்டு விமர்சகனும் சமீபத்தில் என்னிடம்  'காலச்சுவட்'டில் இது பிரசுரமாகாமல் 'கனவு' பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது என்று அபிப்ராயப்பட்டான்.  வெளவால் போல மிருகங்களுடனும் பறவைகளுடனும் சொந்தம் கொண்டாடும் இந்த ஆள் 'வாசகனாக இருப்பதே துரதிருஷ்டம்' என்ற மேட்டிமை குணம் கொண்டவன்.  நாஞ்சில் நாடன் கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதி, பின் ஒப்புதல் கடிதம் கேட்ட விஷயமும் தனக்குத் தெரியும் என்று என்னிடம் சொன்னான்.

சாப்பிடும் இடத்தில் சிகரெட் பிடித்துக் கொண்டே சப்பாத்தி மாவு பிசையும் இயல்புடைய வினோத மிருகம் வினயசைதன்யா "If you say you are a Tamil Ezhava I will F-- you.  I will F-- the bloody Ezhavas'  என்று என்னிடம் கூப்பாடு போட்ட போது அங்கே சமையல் வேலை செய்து கொண்டிருந்த ஆசிரமவாசி 'அருள்' என்பவரும் மற்றொரு ஆசிரமவாதியும் மட்டுமே இருந்தனர். தர்ம சங்கடத்துடன் நெளிந்தனர்.

இந்த விஷயத்தை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் எப்படி மறுத்து எழுத முடிந்தது என்பதும் வினோதம் தான்.

முழுக்க நான்  சத்தியத்தைச் சார்ந்து நிற்பதால் மேற்சொன்ன விஷயங்களும் காலச்சுவடிலும் திண்ணையிலும் பகுதி பகுதியாக வெளியான விஷயங்களும் 'நீதியான செயல்' தான் என்பதிலும் இதன் வெளியீட்டு நேர்த்தியிலும் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

THE BEAUTY OF A MORAL ACT DEPENDS ON THE BEAUTY OF ITS EXPRESSION,  - JEAN GENET.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


எதிர்வினை : ராஜநாயஹம் கட்டுரை தொடர்பாக.......

- பரிமளம் -

ஜெயமோகன் பிரபலமடைவதற்குச் சற்று முன்பாகவே படைப்பிலக்கியம், திறனாய்வு இவற்றின் மீதான எனது ஆர்வம் பெரும்பாலும் அற்றுப்போய்விட்டது என்பதால் ஜெமோவின் படைப்புகளில் ஒன்றைக்கூட நான் படித்ததில்லை. வலைப்பக்கங்களில் அவரது பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். வாசித்தவரையில் ஜெமோவின் அரசியற் சமூக (இலக்கியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்) தத்துவார்த்த கருத்துகளுக்கு நேரெதிரான நிலைபாடுடையவனாக இருக்கிறேனேயன்றி அவற்றோடு உடன்படும் புள்ளிகள் ஏதுமில்லை. ஆகவே ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயமோகனை எதிர்க்க வேண்டாம் என்று நான் கூறவில்லை; எதிர்ப்பதற்கு ராஜநாயஹத்தின் கட்டுரையை (இப்படிச் சொல்வதே தவறு)ப் பயன்படுத்த வேண்டாம் என்பதும், அப்படிப் பயன்படுத்தி, சிண்டு முடிந்துவிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மட்டமான அவதூறு குப்பைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட வேண்டாம் என்பதுமே என் கவலைகள்.

நாஞ்சில் நாடன் கடித விவகாரத்தில் ஜெயமோகன் தவறு செய்திருக்கிறார் என்றும் அதை மீண்டும் மீண்டும் கிளறுவதைவிடச் ‘சரி விட்டுத்தள்ளு’ என்று போவதே மேல் என்றும் நான் கருதுகிறேன். 

மாலனின் தவறு ஜெயமோகனின் தவறை நியாயப்படுத்திவிடாது. தவறு செய்வது மனித இயற்கை என்பதால் ஒரு சில வேளைகளில் கண்டும் காணாமல் போவதே நல்லது. ஜெமோ, நாஞ்சில் நாடன் விவகாரம் அப்படிப்பட்ட வேளைகளில் ஒன்று. 

-  தமிழ்முரசு இதழில் வெளிவந்த மாலனின் கட்டுரை ஆ.இரா.வேங்கடசலபதியின் அப்பட்டமான காப்பி என்னும் தங்களது குற்றச்சாட்டு பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. பரிமளம் அவர்கள் ராஜநாயஹம் குறிப்பிட்ட பல விடயங்களை  கவனத்திற்கெடுக்காமல் இவ்விவாதத்தில் தேவையற்று மாலனை இழுப்பதாகக் கருதுகின்றோம். மாலனைப் பற்றிக் குற்றஞ்சாட்டும்போது அதற்குரிய சான்றினையும் கூடவே இணைத்து அனுப்பியிருந்தால் பதிவுகள் வாசகர்களுக்கு உதவியாகவிருந்திருக்கும். - ஆசிரியர்-

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மே 2005 இதழ் 65 -மாத இதழ்


எதிர்வினை: ராஜநாயஹத்தின் கட்டுரை பற்றிச் சில கருத்துகள்.... 

 - பகலவன் -

ராஜநாயஹத்தின் 'ஊட்டியில் தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு' பற்றிய கட்டுரை என்னை வியப்படைய வைத்தது. ஜெயமோகனின் பல்வேறு பக்கங்களை மேற்படி கட்டுரையில் ராஜநாயஹம் தன்பார்வையில் அலசுகின்றார். இதற்கான விரிவான பதில் ஏதாவது மறுபக்கத்திலிருந்து வருமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் ஜெயமோகன் பொதுவாக தன் பக்கத்தில் பதிலளிக்க முடியாத விடயங்களிருப்பின் அவ்விடயங்களைப் பற்றிப் பதிலளிப்பதைத் தவிர்த்து விடுவார். அவ்விடயங்களைப் பற்றிக் குறிப்பிடுவதையும் தன்னுடைய கட்டுரைகளில் தவிர்த்து விடுவார். பதிவுகளில் பல விவாதங்களில் கலந்து கொண்டிருக்கின்றார் ஜெயமோகன். ஆனால் அவரது படைப்புகள் பற்றி இணைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் பற்றிய கட்டுரையொன்றினை அண்மையில் எங்கோ வாசித்தபோது அதில் பதிவுகள் பற்றியோ, அதில் நடைபெற்ற விவாதங்கள் பற்றியோ ஒருவரி கூடக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆச்சரியமாகவிருந்தது. எனவே ராஜநாயஹம்  'அப்போது ஜெயமோகன் மூச்சே விடவில்லை. தொடர்ந்து அந்தர் தியானம். தேள் கொட்டிய திருடனின் நிலை' என்று குற்றஞ்சாட்டியபொழுது பெரிதாக ஆச்சரியமேதுமேற்படவில்லை. மேலும் தளையசிங்கத்தை வரிக்கு வரி ஆராய்ந்து விமரிசிக்க வேண்டாமென்று ஜெயமோகன் வலியுறுத்தியதாகவும் ஓரிடத்தில் ராஜநாயஹம் குறிப்பிட்டிருக்கின்றார். நவீனத்துவம் /பின் நவீனத்துவம் பற்றியும், அமைப்பியல்/ பின் அமைப்பியல் பற்றியும், அவற்றில் கூறப்பட்டுள்ள பிரதி, ஆசிரியரின் மரணம், வாசகரின் வாசிப்பு பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கும் ஜெயமோகன இவ்விதம் கூறுவது உபதேசம் ஊருக்கு மட்டும்தான் என்பது போலல்லவா இருக்கிறது. அவ்விதம் கூறுவது வாசகரின் வாசிக்கும் சுதந்திரத்தில் தலையிடுமொரு செயலல்லவா. ஒரு படைப்பை அக்குவேறு ஆணிவேராக வாசிக்கும் வாசகரொருவரின் சுதந்திரத்தை ஜெயமோகன் மறுக்கிறாரா?

மேற்படி கருத்தரங்கில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மாற்றுக் கருத்துகளை மதித்து , உள்வாங்கி, ஆழமாகக் கலந்துரையாடுவதற்கு ஜெயமோகனுக்கு விருப்பமில்லையோ என்றுபடுகிறது. கருத்துகளை விவாதிப்பதும், தவறுகள் கண்டு பிடிக்கப்படும்போது அவற்றை ஏற்றுத் தம் நோக்கைத் திருத்தி முன்னேறுவது மானுட இனத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியகாரணங்களிலொன்று. தளையசிங்கத்தின் மரணம் பற்றிய விடயம் தெளிவு படுத்தப்பட்ட பின்னர் எதற்காகத் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல் பிடிவாதம் பிடிக்க வேண்டும். அதனை ஏற்றுக் கொள்வதொன்றும் கெளரவப் பிரச்சனையல்லவே. தளையசிங்கத்தின் மரணம் என்பது ஒரு தத்துவப் பிரச்சனையல்லவே. ஒரு நிகழ்வு. அதன ஒருவர் தவறாக அறிந்து வைத்திருந்தால், அதனை ஒப்புக்கொண்டு தவறினைத் திருத்துவதுதானே சரியான செயல். அதற்காக இத்தனை பெரிய மோதல்கள் தேவை தானா? ஒரு தத்துவப் பிரச்சனை சம்பந்தமாக இவ்விதம் முட்டி மோதிக் கொண்டிருந்தால் அதனை ஏற்க முடியும்.

ராஜநாயஹத்தின் கட்டுரையில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளதால் அவை பற்றி ஆழமாக மீண்டுமொருமுறை படித்த பின்னர் மீண்டும் வருவேன். ஆனால் மேற்படி மோதல் ஒன்றினை மட்டும் தெளிவாகக் காட்டுகிறது. ஆக்கபூர்வமாக, ஆறுதலாக, நிதானமாக, அறிந்ததைப் புரிவதற்கும் , அறியாததை அறிவதற்கும் , மாற்றுக் கருத்துகளை ஆரோக்கியமாக உள்வாங்குவதற்கும் இன்னும் நமது படைப்பாளிகள் உரிய பக்குவத்தை அடையவில்லையோ என்னும் சந்தேகம்தான் அது.

ராஜநாயஹத்தின் விரிவான கட்டுரையை, அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிதானத்துடன், தர்க்கபூர்வமாக விவாதிக்காமல் பரிமளம் ஒட்டுமொத்தமாக மலிவான உத்திகளென்று நிராகரிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்க வாதமல்ல. வரட்டுவாதம் அல்லது விதண்டாவாதமென்று குறிப்பிடலாம். இத்தகைய முறையற்ற எதிர்வினைகள் ராஜநாயஹத்தின் கூற்றுக்கே மேலும் வலுச்சேர்ப்பதாக அமைகின்றன. ஜெமோவை எதிர்ப்பவர்கள் ராஜநாயஹத்தின் கட்டுரையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் தமிழிலக்கிய உலகுக்குத் தொண்டு புரிந்தவர்கள் என்று கருதுகின்றேனென்று பரிமளம் குறிப்பிட்டுள்ளார். ராஜநாயஹம் தன் பக்க நியாயங்களை எடுத்துரைத்துள்ளார். அவற்றை மறுப்பதாகவிருந்தால் முறையாக ராஜநாயகத்தின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்களைக் குறிப்பிட்டு வாதித்து மறுப்பதைவிட்டு எதற்காக பரிமளம் இவ்விதம் நழுவியோடுகின்றார்? எதற்காக ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்குகின்றார்?

மே 2005 இதழ் 65 -மாத இதழ்


எதிர்வினை : ராஜநாயஹத்தின் கட்டுரை பற்றி....

- பரிமளம் -

‘ஊட்டி அரங்கு’ தொடர்பாக இவர் முதன்முதலில் திண்ணையில் எழுதிய கட்டுரையைப் படித்த போது விவாதங்களை ஆரோக்கிய ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கம் இந்தக் கட்டுரையாசிரியருக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்னும் எண்ணம் ஏற்பட்டது. இப்போது வந்துள்ள கட்டுரை அந்த எண்ணத்தை மறு உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. இக்கட்டுரைகள் விளம்பரம் தேடிக்கொள்ளச் செய்யப்படும் மலிவான உத்திகளே தவிர வேறொன்றுமில்லை.

எழுத்துகள், அதிகாரபூர்வ அரங்குகள் ஆகியவற்றுக்கு அப்பால் தனிப்பட்ட உரையாடல்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை வெளியிடுவது பண்பட்டவர்களுக்கு அழகல்ல. அந்தத் தகவல்கள் உண்மையாக இருந்தால்கூட அவற்றை வைத்துக்கொண்டு விவாதங்களில் இறங்குவது அதைவிடப் பெருந்தவறு. (கனேடியப் பயணம் தொடர்பாக வெ.சா. எழுதிய கட்டுரை இதே பாணியில் அமைந்த அவதூறுதான். வெ.சா வை நியாயமாக எதிர்த்த கண்ணன், ராஜநாயஹத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது விந்தை) 

ஜெ.மோவை எதிர்ப்பவர்கள் ராஜநாயஹத்தின் கட்டுரையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் தமிழிலக்கிய உலகுக்குத்  தொண்டு புரிந்தவர்களாவார்கள் என்று கருதுகிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மே 2005 இதழ் 65 -மாத இதழ்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R