Latha Ramakrishnan(1)
 பார்க்கும்போதெல்லாம் ஆசிரியர் கையில் பிடித்திருக்கும் குச்சி
வெவ்வேறாய் காட்சியளிக்கிறது குழந்தைக்கு….
ஒரு சமயம் பாம்பு _ ஒரு சமயம் சாட்டை _
ஒரு சமயம் ‘பெல்ட்’ _ ஒரு சமயம் முதலை _
ஒரு சமயம் சூட்டுக்கோல் _ இன்னும்…..
கற்பனையும் நிஜமும் கலந்ததோர் வெளியில்
வாழவேண்டியிருப்பதில்
குழந்தையின் உள்ளமெங்கும் ஊமைரணங்கள்.

(2)
”வணக்கம் சொல். பணிவு வேண்டாம்?”
என்று உறுமும் ஆசிரியரின் கண்களிலிருந்து பாய்ந்துவரும் காட்டெருமைக் கொம்புகள்.குத்திக் கிழிக்க
குருதி பெருகும் குழந்தை மனதை
மிச்சம் மீதியில்லாமல் கவ்வுகிறது குகையிருட்டு.

 

(3)
ஆசிரியர் வகுப்பிலில்லாத தருணமொன்றில் குழந்தை
அடிமேலடியெடுத்துவைத்துப் போய்
கையிலெடுத்துக்கொள்கிறது குச்சியை.
முடிவுறா ஆதங்கத்தில் அதன் உதடுகள் பிதுங்கி
வழியும் கண்ணீர் பட்டதும்
அந்தக் குச்சி யோர் மந்திரக்கோலாகிவிடுகிறது!

(4)
ஒரு சுழற்று சுழற்ற
எழுதுகோலாகியதைக் கொண்டு
ஆசிரியருக்கான ‘பிராக்ரஸ் ரிப்போர்ட்’ தயாரித்து
”அன்பும் அர்ப்பணிப்பும் ஆகாயமளாவ பொறுமையையும்
கொண்டோரே இந்தப் பணிக்கு வரவேண்டும்.
பணம்பண்ண விழைவோர் பங்குச்சந்தையில் நுழைந்துவிடவும்”
என்று குறிப்பு வரைகிறது! பின்குறிப்பாய்
”இது பெற்றோருக்கும் பொருந்தும்”
என்ற வரியையும் சேர்த்து நிறைவுசெய்கிறது!

(5)
கையிலுள்ள குச்சியை
இடதுபக்கமாய் ஒரு சுழற்று சுழற்றியதில்
சின்னஞ்சிறு முயலாகிவிடும் ஆசிரியர்
குழந்தையிடம் காட்டுகிறார் காரட்துண்டுகளாய் அன்பை!

(6)
கையிலுள்ள குச்சியை
வலதுபக்கமாய் ஒரு சுழற்று சுழற்ற
அனுராகப் புல்லாங்குழலாகி யிசைத்து
அழைத்துவந்துவிடுகிறது
காணாமல் போன மழையையும்
மரங்களையும்
சிட்டுக்குருவிகளையும்!


(7)
கையிலுள்ள குச்சியை கீழ்நோக்கிச் சுழற்ற
கோடைவெயிலில் நாவறள அலையும் தெருநாய்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் திறந்துகொள்ளும்
சிறுகுட்டைகள் உருவாகிவிடுகின்றன அங்கங்கே!
கல்லடிபட்டதில் விந்தி விந்தி நடக்கும்
“ஸ்வீட்டியின்’ காயங்களும் ஆறிவிடுகின்றன!

(8)
பழைய பல்லாங்குழியொன்றைத் தந்துவிட்டுச்சென்றிருந்தாள் தாய் _
பத்து பாத்திரம் தேய்த்துவிட்டு வர.
வாயில் போட்டுக்கொண்டுவிடுமோ என்ற பயத்தில்
புளியங்கொட்டைகளை ஒளித்துவைத்தவள்
கையால் அபிநயித்துக் காய்களை குழிகளில் விழச்செய்யக்
கற்றுத் தந்திருந்தாள்!
பையப் பைய அவ்வாறே இட்டு முடித்த
இல்லாத புளியங்கொட்டைகளை உள்ளங்கைகளில் திரட்டி
எட்டுத்திக்குகளிலும் வீசி
மந்திரக்கோலை மேல்நோக்கி ஒரு சுழற்று சுழற்றியது குழந்தை.
சீந்துவாரற்றுக் கிடந்த நலிந்தோர் இல்லங்களின்
நுழைவாயில்களைத் தொட்டதும்
அவை வாகாய் மாறிவிட்டன ரூபாய் நாணயங்களாக!

(9)
தனது அன்புக்குரிய ரயிலில்குண்டுவெடித்ததைக் கேட்டு
கோபமுற்ற குழந்தை
மாயக்கோலை ஆட்டிய வேகத்தில்
கள்ளமாய் உள்ளே குண்டுவைத்துவிட்டு இறங்கியோடுபவனின்
பின்னோடு உருண்டோடிச் செல்கிறது குண்டு _
இல்லாமலானவரையெல்லாம் உயிர்பிழைக்கச் செய்துகொண்டு!

(10)
வெளியே போயிருந்த ஆசிரியர் திரும்பிவருவது தெரிந்ததும்
குச்சியை மேசைமீது வைத்துவிட்ட குழந்தை.
தன் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டது.
குச்சி மீதிருந்த வெறுப்பும் பயமும் போய்விட்டது.
’பாவம் குச்சி;என்னைத் தாக்கவேண்டும் என்று அதற்கெந்த இச்சையுமில்லை’
ஆசிரியர் கையையும்அவரன்ன வளர்ந்த மனிதர்களின் கைகளையும்
மந்திரக்கோலாக்கும் மார்க்கம் மட்டும் அறியக் கிடைத்தால்
எத்தனை நன்றாயிருக்கும்’,
என்ற ஏக்கம் நீக்கமற நிறைந்த மனதோடு
உச்சரிக்கத் தொடங்கியது ஆனா ஆவன்னாவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R