இலங்கை நாவல் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் ந.பாலேஸ்வரி.அந் நாட்களில் மித்திரன், ஜோதி, தினகரன், ஈழநாடு, கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவை, சுடர், சிரித்திரன், கவிதை உறவு, தமிழ்மலர், ஒற்றைப்பனை, திருகோணமலை எழுத்தாளர் சங்கம் மலர், சுதந்திரன் போன்ற பல அச்சு ஊடகங்களில் சிறுகதை, நாவல்,கட்டுரை என எழுதிவந்தவர்.இன்றுவரை அவரை நாவல் ஆசிரியராகவே அனைவர்க்கும் தெரியும்.அவர் சிறந்த பேச்சாளர்.சிரித்திரன் ஆசிரியர் கூட அவரின் எழுத்தை சிலாகித்துப் பேசியதை கேட்டிருக்கிறேன்.

இவரின் எழுத்தில் லக்ஸ்மி,ரமணிச்சந்திரன் போன்றோரின் சாயல் இருப்பதாகக் கூறுவர்.ஒருமுறை திரைப்படம் சார்ந்து  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவரின் நாவலைப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசித்தோம்.அப்போது செங்கை ஆழியானின் யானை எனும் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொண்டதாகவும்,வனபரிபாலனச்  சட்டம் இடம் கொடுக்காததால் அது கைவிடபட்டதகவும் சொன்னார்கள்.பிறகு காலம் எம்மை மாற்றிவிட அது முடியாது போயிற்று. எளிமையாக வாழ்ந்தவர்.தனது சேகரிப்புகளெல்லாம் அழிந்துவிட்டதாகவும் சொன்னார்.இவரின் தந்தையின் தமிழ்ப்பற்றும்,தந்தையாரின் தம்பி திருகோணமலையின் பிரபல எழுதாளராகவும் இருந்ததும் இவரையும் அதுறை நாடிச் சென்றதாக இருக்கலாம்.ஆரம்பத்தில் தந்தையாரின் பெயரான பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரையும் இணைத்தே எழுதினார்.பின்னர் திருமணமாகியதும் கணவனின் பெயருடன் இணைத்து தொடர்ந்து எழுதினார்.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் திருகோணமலை சிறி சண்முகவித்தியாலயம்,சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி,உடுவில் மகளிர் கல்லூரி,திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிலும் கல்வியைப் பெற்றார். இவரின்  எழுத்துக்கு  உறுதுணையாக கணவரும், ஆசிரியைத்  தொழிலும் உதவியதாகச்  சொல்வார்.

இவரின்  தொடர்ந்த  இலக்கியப் பயணம்  இவருக்கு  'தமிழ்மணி,சிறுகதைச் சிற்பி, ஆளுனர்  விருது, கலாபூசணவிருது  ஆகியவற்றுடன், 2010இல் மட்டக்களப்பு  எழுத்தாளர்  ஊக்குவிப்பு  மையம் வழங்கிய'தமிழியல் விருது' குறிப்பிடத்தக்க  ஒன்றாகும். திருகோணமலை மனையாவழி கிராமத்தில் 07/12/1929 இல் பிறந்த இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 'அமரர்'நேமிநாதன் அவர்களின் உறவுக்காறர் என்றும் அறியபப்டுகிறது.

அமைதியாகவும்,துணிச்சலாகவும் எழுதிய பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பத்திர்கை, சஞ்சிகைகள் மாதிரமன்றி மலர்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன.இவரின் நூல்களாக சுடர்விளக்கு, பூஜைக்கு வந்த மலர், உறவுக்கப்பால், கோவும் கோயிலும், உள்ளக்கோயிலில்,உள்ளத்தினுள்ளே, பிராயச்சித்தம், மாது என்னை மன்னித்து விடு, எங்கே நீயோ அங்கே நானும் உன்னோடு, அகிலா உனக்காக,தத்தை விடு தூது, நினைவு நீங்காதது, சுமைதாங்கி, தெய்வம் பேசுவதில்லை என வெளிவந்துள்ளன.இதில் பூஜைக்கு வந்த மலர் குறுகிய காலத்துள் மீள்பிரசுரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்துமகேஷின் 'ஒரு விலைமகளைக் காதலித்தேன்' நாவலும் குறுகிய காலத்துள் மீள் பிரசுரம் பெற்ற நாவலுமாகும். சில வருடங்களுக்கு முன் லண்டனிலும் வந்து தங்கி நின்றார். தனது அனுபவ வெளிப்பாடுகளை கதையாகத் தந்திருக்கிறார். வாழ்வின் பல்வேறு கூறுகளை ஜனரஞ்சகமாக எழுதுவதிலும் வெற்றிகளைக் குவித்தவர்.பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வம் காட்டினார்.மொழி ஆர்வமுள்ள மாணவர்களையும் செயல்பாட்டாளர்களாக்கினார்.

இதனால்தானோ என்னவோ பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புக்களில் பெண்கள் பற்றியும்,சிறுகதைகள்,நாவல்கள் பற்றிய ஆய்வை தங்களது பட்டப்படிப்பு ஆய்வு செய்திருக்கின்றனர்.அவைகள் நூலாக வரும் பட்சத்தில் மேலும் ந.பாலேஸ்வரி அவர்களின் படைப்புக்கள் பற்றி முழுமையாக அறிவாய்ப்பாகும் என நம்புகிறோம்.

ஆனால் அவர் பற்றிய நினைவுகளே நமக்கு எஞ்சியிருக்கும்.ஏனெனில் நேற்று(27/02/2014) அவரை நாம் இழந்து விட்டோம். தொடர்ந்து நமக்கு அதிர்வே வந்து கொண்டிருக்கிறது. அன்புமணி, பிறேம்ஜி, பாலுமகேந்திரா, கே.எஸ்.பாலச்சந்திரன், ந.பாலேஸ்வரி என படைப்புலகம் இழப்பைத் தந்துகொண்டிருக்கிறது. கனத்த பொழுதுகளைச் சுமந்து செல்லும் காலம் அவர்கள் விட்டுசென்ற நட்பையும், படைப்பையும் மனங்கள் சுமந்தபடி செல்லவே செய்யும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ந.பாலேஸ்வரி [கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.]

பிறப்பு திசம்பர் 7, 1929(1929-12-07), திருகோணமலை
இறப்பு பெப்ரவரி 27 2014 (அகவை 84), கொழும்பு
பெற்றோர் த.பாலசுப்ரமணியம், பா.கமலாம்பிகை

பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் (7 டிசம்பர் 1929 - 27 பெப்ரவரி 2014) ஈழத்து எழுத்தாளர். இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். 'பாப்பா', 'ராஜி' ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு
திருகோணமலை மாவட்டம் 'மனையாவழி' கிராமத்தைச் சேர்ந்த திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் ‘பெண்மையின் தனித்துவத்தன்மை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எழுதிவரும்’ ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியையாவார். முகாந்திரம் த.பாலசுப்ரமணியம், பா.கமலாம்பிகை தம்பதியினரின் புதல்வியாக திருகோணமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை ஸ்ரீசண்முக வித்தியாலயத்தில் பெற்றார். பின்பு சுன்னாகம் ஸ்ரீஸ்கந்தவரோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, திருக்கோணமலை புனிதமரியாள் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.

தொழில்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர்கல்லூரியில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையான இவர் பெருந்தெரு விக்நேசுவரா மகா வித்தியாலயத்தின் முந்நாள் ஆசிரியரும் பிரதி அதிபருமாவார். ஆசிரிய சேவையில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வுபெற்றார். திருகோணமலை மாவட்ட பெண்கள் நலன்புரிச்சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும் பணியாற்றினார்.

இலக்கிய ஈடுபாடு
தான் கற்கும் காலத்திலிருந்து வாசிப்புத்துறையில் ஈடுபாடு மிக்கவராக இருந்த இவரின் கன்னிக்கதை ‘வாழ்வளித்த தெய்வம்’ எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் 1957ம் ஆண்டு பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், முப்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும்; எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலுள்ள தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ள அதே நேரத்தில் கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவைää கவிதை உறவு போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் ‘உலகம்’(இத்தாலி) ‘ஈழநாடு’(பாரிஸ்) ‘தமிழ்மலர்’(மலேசியா) ஆகிய சர்வதேச சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

நாவல்கள்
பாலேஸ்வரி இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் பெண் எழுத்தாளர் ஒருவர் பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டிருப்பது இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதற்தடவை.

விபரம் வருமாறு
‘சுடர்விளக்கு’ - 1966 (திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடு)
‘பூஜைக்கு வந்த மலர்’ - 1971 (வீரகேசரி வெளியீடு)
‘உறவுக்கப்பால்’ – 1975 (வீரகேசரி வெளியீடு)
‘கோவும் கோயிலும்’ - 1990 ஜனவரி (நரசி வெளியீடு)
‘உள்ளக்கோயில்’ - 1983 நவம்பர் (வீரகேசரி வெளியீடு) -
‘உள்ளத்தினுள்ளே’-1 990 ஏப்ரல் (மட்டக்களப்பு செபஸ்டியர் அச்சகம் வெளியீடு)
‘பிராயச்சித்தம்’ - 1984 ஜூலை (ரஜனி பப்ளிகேஸன்)
‘மாது என்னை மன்னித்துவிடு’ - 1993 ஜனவரி (ஸ்ரீபத்திரகாலி அம்மன் தேவஸ்தால வெளியீடு)
‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ – 1993 ஆகஸ்ட் (காந்தளகம் வெளியீடு இந்தியா)
‘அகிலா உனக்காக’- இந்தியா) - 1993 (மகாராஜ் அச்சகம்
‘தத்தைவிடு தூது’ – 1992 ஜூலை (மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகம்)
‘நினைவு நீங்காதது’ - 2003 (மணிமேகலைப்பிரசுரம் இந்தியா)

சிறுகதை தொகுதிகள்: இவர் இரண்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

சுமைதாங்கி – 1973 (நரசு வெளியீடு)
தெய்வம் பேசுவதில்லை – 2000 (காந்தளகம் வெளியீடு இந்தியா)

ஆய்வு: பாலேஸ்வரியின் இலக்கிய ஆக்கங்களை பல்கலைக்கழக மட்டத்தில் இதுவரை மூன்று மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

*பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை இளங் கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் திருகோணமலையைச் சேர்ந்த செல்வி அப்துல்ரஹீம் சர்மிலா என்பவர் ‘பாலேஸ்வரியின் நாவல்களில் பெண்கள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.

*சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் விசேட துறை சிறப்புக்கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் செல்வி சிவகௌரி சிவராசா என்பவர் ‘பாலேஸ்வரியின் தமிழ் நாவல்கள பற்றிய ஓர்ஆய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.

*தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் விசேட துறை இளங்கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 2001- 2002 கல்வியாண்டில் செல்வி கச்சி முஹம்மது சில்மியா என்பவர் ‘ந.பாலேஸ்வரியின் சமூக சிறுகதைகள் ஒரு நோக்கு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்:
‘தமிழ் மணி’ (1992) - இந்து சமய கலாசார அமைச்சு
‘சிறுகதை சிற்பி’ (1996) - மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம்
'ஆளுனர் விருது' (1999-10-17) - வடக்கு கிழக்கு மாகாணக்கல்வி, பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு
கலாபூசண விருது (2002-12-26) அரச விருது.
இவை தவிர பல்வேறு பட்ட பிரதேச இலக்கிய விழாக்களில் பல்வேறு விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

நன்றி: http://ta.wikipedia.org/s/ycp


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R