எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறதுஎழுத்தாளர் முருகபூபதிஎல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக -  செடியாக - மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன்.  அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக   அவுஸ்திரேலியா   சிட்னிக்கு வந்தார்.   நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும்   அனுபவித்த    புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி.   சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விசேட அனுமதியுடன் மேற்படிப்பு ஆய்வை முடித்துவிட்டால் திரும்பிச்சென்று அதே பல்கலைக்கழகத்தில் அவர் தனது பணிகளைத்தொடரவேண்டும்.   இங்கேயே குடியுரிமைபெற்று தங்கிவிட்டால்   பல்வேறு   பிரச்சினைகளுக்கு   ஆளாகவேண்டும். இங்குவந்த பிள்ளைகள் மூவரும் ஆங்கிலமொழிமூலம் கல்வியை தொடர்கின்றனர்.    மீண்டும்   திரும்பிச்செல்லும்போது அவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலத்திற்கு என்ன வழி?    ஏதும் சர்வதேச பாடசாலைகளை நாடவேண்டும்.   குடும்பத்திற்காக  -  ஒரு மனைவியின் தாயின் அன்றாடக்கடமைக்காக ஆசிரியப்பணியையும் ஊதியம் அற்ற விடுமுறையில் துறந்துவிட்டு வந்த நேசமும் பரிவும் மிக்க மனைவியின் தொழில்சார் எதிர்காலம்...? இப்படி பல கேள்விகளுடன் அவர் தமது ஆய்வுக்கல்வியை தொடர்ந்தார்.

நான் அறிந்தவரையில் கலாமணியின் முன்னே ஆச்சரியக்குறிகள் இருக்கவில்லை.   தொடர்ந்தும் கேள்விக்குறிகள்தான் பூதாகரமாக தோன்றிக்கொண்டிருந்தன. அந்தக்கேள்விக்குறிகளையெல்லாம் தனது அமைதியாலும் ஆற்றல்களினாலும் கடந்து வந்து ஆச்சரியக்குறிகள் ஆக்கினார். அதனால்தான் இலக்கிய வாசகர்கள் பலருக்கும் தெரியாத கலாமணியின்   இந்தப்பக்கங்களை   அவரது   மணிவிழா  தருணத்தில் இங்கே பதிவுசெய்கின்றேன்.

சிக்கலான முடிச்சுகள் தோன்றினால் பிரச்சினைகள் உருவானால் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் ஒவ்வொருவரும் வேறு வழிமுறைகளை பின்பற்றுவர். நண்பர் கலமணி எவ்வாறு அத்தனை சோதனைகளையும் கடந்தார் என்பது சிதம்பர ரகசியம் அன்று.

உள்ளார்ந்த அவரது கலைத்தாகம் அவரை உளைச்சல்களிலிருந்து மீட்டெடுத்தது.  அவரை உடனிருந்து மீட்டபெருமை அவர் நேசித்த கலை -இலக்கியத்திற்கு மட்டும் உரித்தானதல்ல. உடனிருந்த மனைவி மக்களையும் அந்தப்பெருமை சாரும்.

அதற்கெல்லாம் நானும் ஒரு மௌனசாட்சி.  எமக்கெல்லாம் கலாமணி உதாரணபுருஷர்.  அவுஸ்திரேலியாவில் அருகிருந்து அவரது செயற்பாடுகளை அவதானித்தமையால்தான் அவரை இவ்வாறு என்னால் சித்திரிக்கமுடிகிறது.
திருமதி கலாமணியிடம் நான் இப்படி வேடிக்கையாக சொல்வதுண்டு:- “ உங்களுக்கு மூன்று பிள்ளைகள் இல்லை. கலாமணியுடன் சேர்த்து நான்கு பிள்ளைகள்”

கலாமணிக்கு நல்ல குரல்வளம். அது அவருக்குக் கிடைத்த கொடை. எழுத்தாற்றல் பாடும் திறன் நடிப்பாற்றல் இசைநாடகங்களை இயக்கும் அனுபவம் நிரம்பியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை. இவையெல்லாம்தான் அவரை பல்வேறு புலம்பெயர் மனஉளைச்சல்களையும் கடந்துவரச்செய்தன எனக்கருதுகின்றேன்.

இசைநாடகப்பிரதிகள் எழுதினார்.   ஒரு கதைத்தொகுப்பை வெளியிட்டார். அவருக்கு அவரது கல்விபோன்ற நீண்ட காலமாக மனப்பாடமான பூதத்தம்பி இசைநாடகத்தை சிட்னியிலும் மெல்பனிலும் மேடையேற்றினார். எமது வருடாந்த எழுத்தாளர் விழாக்களில் கலந்துகொண்டு ஆய்வுகள் சமர்ப்பித்தார். இதழ்களுக்கு எழுதினார். அண்ணாவியார் இளையபத்மநாதனின் அன்புக்குப்பாத்திரமாகி அவர் நெறிப்படுத்திய ஒரு பயணத்தின் கதை கூத்து சிட்னியிலும் மெல்பனிலும் மேடையேறியபோது தனது கணீரென்ற குரல்வளத்தினால் அந்தக்கூத்து காலம்கடந்தும் பேசப்படுவதற்கு பக்கத்துணையாக நின்றார்.

மெல்பனில் நாம் முதலாவது எழுத்தாளர் விழாவை ஒழுங்குசெய்தபோது அதுசம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் சிட்னி ஹோம்புஷ்ஷில் கலமாணியின் வாடகை விட்டில்தான் நடந்தது. சிட்னியில் வதியும் பல கலை -இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் சிலர் அந்தவிழாவுக்கு எதிர்வினையாற்றி வரவிருந்த பலரைத்தடுத்தனர்.

இலங்கையில் நாம் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை நடத்துவதற்காக பணிகளை தொடங்கியபோது மாத்திரம்தான் எதிர்வினைகளும் அவதூறுகளும் பரப்பப்பட்டன என எண்ணவேண்டாம். புலன்பெயர்ந்தவர்கள்  எங்கு எந்த நல்ல நோக்கம்  முன்வைக்கப்பட்டாலும் தமது தவறான செயற்பாடுகளினால் மக்களை திசைதிருப்பும் வேலைகளை கச்சிதமாகவே   செய்வார்கள்.   ஆனால் புலம்பெயர்ந்த சுயசிந்தனையுள்ள மக்கள் சரியான தெளிவான தீர்வுடன்தான் இருப்பார்கள். காலம் எதற்கும் பதில் சொல்லும் என்பார்கள். அந்த எதிர்வினைகள் இறுதியில் வினைவிதைத்தவர்கள் பக்கமே திரும்பியது. தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில்   தமிழ் எழுத்தாளர்  விழா வருடந்தோறும் நடந்துவருகிறது.

2001 ஆம் ஆண்டு ஜனவரியில் மெல்பனில் இருநாள் நிகழ்வுகளாக நடந்த எமது முதலாவது எழுத்தாளர் விழாவுக்காக சிட்னியிலிருந்து சுமார் நாற்பது பேர் வந்தனர்.   தமது பூதத்தம்பி இசைநாடகத்தை சிட்னி கலைஞர்களைக்கொண்டு இரவுபகலாக தயாரித்தார்.   தனது ஆய்வுப்பணிகளையும் தொடர்ந்தவாறு ஒத்திகைகளிலும் தீவிர கவனம் செலுத்தினார்.   கறுத்தசெம்மறி ஆடுகளும் தம் பணிகளை முடுக்கிவிட்டன.   ஒத்திகைக்கு வந்தவர்களின் வீடுதேடிச்சென்றும் தொலைபேசி ஊடாகவும் குறிப்பிட்ட இசைநாடகத்திற்கும் மெல்பன் விழாவுக்கும்   ஆதரவோ ஒத்துழைப்போ வழங்கவேண்டாம்   என்று பிரசாரம் செய்தன. குறிப்பிட்ட பூதத்தம்பி இசைநாடகத்தில் ஒரு பெண்பாத்திரம் வருகிறது.  அதனை ஏற்று நடிக்க ஒழுங்காக ஒத்திகைக்கு வந்த அந்த யுவதிக்கும் சில இளைஞர்களுக்கும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

விழாவுக்கு ஐந்து நாட்கள் இருக்கும் தருணத்தில் அந்த யுவதி உட்பட சிலர் அழுத்தம் தாங்காமல் விலகிக்கொண்டனர்.   கலாமணி அதனால் சோர்ந்துவிடவில்லை. மற்றும் ஒரு யுவதிக்கு தீவிர பயிற்சி வழங்கினார்.  புதிய கலைஞர்களை தேர்ந்தெடுத்தார். திட்டமிட்டவாறு விழா மெல்பனில் திறம்பட நடந்தது.  பூதத்தம்பி இசை நாடகத்தில்தான் நான் முதல் முறையாக கலாமணியின் கணீரென்ற குரலையும் அவரது அபாரமான நடிப்பையும் பார்த்தேன்.   அந்த அரங்கத்தில் முன்வரிசையிலிருந்த சிலர் அந்த நாடகத்தின் இறுதிக்காட்சியைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்டதையும் கண்களை கசக்கிக்கொண்டதையும்   அருகிருந்து அவதானித்தேன். அந்த விழாவில் மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பிதழும் வெளியிடப்பட்டது. அதற்கான அட்டைப்படத்தை வரைந்தவர் கலாமணியின் மூத்த புதல்வர் பரணி.   (பரணி தற்போது யாழ். பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளர் - ஜீவநதி இதழின் ஆசிரியர்)  மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரில் அவுஸ்திரேலியா பற்றிய பல தகவல்குறிப்புகளை தந்தவர் கலாமணி;. விழாவில் கலந்துகொண்டு மலரை வெளியிட்டுவைத்தவர் இன்றைய ஞானம் ஆசிரியர் டொக்டர் ஞானசேகரன். இந்தத்தகவல்களைத் தெரியாத பல வாசகர்களுக்காக இங்கு இவற்றைப் பதிவுசெய்கின்றேன். கொழும்பில் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் கலாமணியின் பூதத்தம்பி மேடையேறியது. அவுஸ்திரேலியாவில் எமது விழா இப்பொழுதும் தங்கு தடையின்றி மாநிலங்களில் வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர்பயணத்தில் நாம் சோர்வடையாமல் இயங்குவதற்கு ஆரம்பத்தில் கலாமணியும் பக்கபலமாக இருந்திருக்கிறார் என்பது தற்போது அவரது மணிவிழாக்காலத்தில் திரும்பிப்பார்க்கும்பொழுது புலனாகிறது.

மெல்பனில் எனது வெளிச்சங்கள் (சிறுகதைகள்) சந்திப்பு (நேர்காணல்) ஆகிய நூல்கள் வெளியானபொழுது அந்த நிகழ்வுக்கு தலைமைதாங்கியவர் கலாமணி.   சந்திப்பு நேர்காணல் தொகுப்பு வெளியானவேளையில் அதில் இடம்பெற்ற பிரான்ஸில் வசித்த மூத்த படைப்பாளி அகஸ்தியரும் அவுஸ்திரேலியாவில் வசித்த ஓவியர் செல்லத்துரை ஐயாவும் மறைந்துவிட்டார்கள்.   அதனால் இருவரதும் பெரிய உருவப்படங்களை எனது நூல்வெளியீட்டு விழாவில் திறந்துவைத்துப்பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

அகஸ்தியரின் படத்தை அவருடன் கண்டியில் நன்கு உறவாடிய எனது நண்பரும் சமூக செயற்பாட்டாளருமான கொர்ணேலியஸ் திறந்துவைத்தார். ஓவியர் செல்லத்துரை ஐயாவின் உருவப்படத்தை கலாமணி திறந்துவைத்து ஓவியக்கலை குறித்து சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

கலமணியின் தமிழ் - ஆங்கில கையெழுத்துகள் ரசனைக்குரியவை. முத்துக்களை வரிசையாக கோர்த்தது போல் ஓவியமாக காட்சிதரும். அவரது அமைதி – ஆற்றல் -  ஆர்ப்பாட்டமற்ற ஆளுமை என்பவைதான் என்னை அவரிடம் நெருங்கச்செய்திருக்கும் என நம்புகின்றேன்.
என்னை முதல் முதலில் நீர்கொழும்பில் சந்தித்த நாள் முதலாய் சகோதரவாஞ்சையுடன் உறவாடும் இனிய நண்பர் தெணியானுக்கு மட்டுமல்ல கலாமணிக்கும் அவர் ஒரு உடன்பிறவாச்சகோதரன் என்பதை தெணியானை கலாமணி விளிக்கும்பொழுதெல்லாம் “அண்ணை...அண்ணை..” என்று அன்பொழுக அழைப்பதிலிருந்து புரிந்துகொண்டேன். கலாமணியின் ஆன்ம பலம் அவர் உளமாற நேசிக்கும் கலை இலக்கியத்தில் மட்டும் தங்கியில்லை. அவரது அன்பு மனைவி - அருமை மக்கள் மருமக்களிலும் நல்ல நட்புகளிலும் தங்கியிருக்கிறது.

எனக்கு ஒரு இனிய சம்பவம் இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது. குரும்பசிட்டியில் இரசிகமணி கனகசெந்திநாதனுக்கு மணிவிழா நடந்தபோது அதனை “இரசிகமணிவிழா” என்றே வர்ணித்தார்கள். அதுபோன்று எனது இனிய நண்பர் கலாமணியின் மணிவிழாவை - கலாமணிவிழா என அழைக்க ஆசைப்படுகின்றேன்.

கலாமணி வதியும் வடமராட்சியில் அவரது மணிவிழா பேராசிரியர் சிவலிங்கராஜா தலைமையில் வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியில் விரைவில் வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியிருப்பதாக அறிகின்றேன். இவ்விழாவில் மணிவிழா மலருடன் கலாமணியின் சில நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

மணிவிழா நாயகன் கலாமணிக்கு எமது வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R