இரோம் ஷர்மிளா (ஒரு உண்மை அமைதி போராளி). உண்ணா விரதம் என்பது இன்று அரசியல் ஆதாயத்திற்க்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக தான் பயன்படுகிறது என்பது கசப்பான ஒரு உண்மை, உலக அளவில் எங்கும் காணாத முன்று மணி நேர உண்ணா விரதம், அதுவும் சகல வசதிகளுடன்,....தினம் தினம் ஒரு உண்ணா விரதங்கள் ஆனால் இவை எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்......! ஏழு நாள்கள் உண்ணாவிரதம், பன்னிரண்டு நாள்கள் உண்ணாவிரதம் என்று  ஆரம்பிப்பதும் பின் காலபோக்கில் அவை மறைந்து போவதும் வாடிக்கையாகி விட்டன.......... ஒரு பக்கம் அண்ணா ஹசாரேயின் 12 நாள்கள் உண்ணா விரதத்திற்கு உலக அளவில் அதரவு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளாவின்  12 வருட உண்ணா விரதத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாததும்  வியப்பு அளிக்கிறது...    யார் இந்த இரோம் ஷர்மிளா? எதற்காக இவர் 12 ஆண்டுகளாக போராடுகிறார்?  இவர் அருணாச்சல் பிரதேஷம், அசாம், மணிப்பூர், மேகாலயா,  மிசோரம் ,நாகலாந்து ,திரிபுரா ஆகிய மாநிலங்களில்  நடைமுறையில்  உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958)] திரும்ப பெற வேண்டும் என்பது தான் இவரின் ஒரே கோரிக்கை.... 

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958 ]) என்றால் என்ன ? அவ்வளவு பயங்கர  சட்டமா இது?

கண்டிப்பாக ,இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மத்திய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம். இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது. இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.

‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பது தான் இதன் பொருள். இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையாகிவிட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் என  விடையளிக்கிறது இராணுவம்.

இரோம் ஷர்மிளாவும் உண்ணா விரதமும்..........

1958 அன்று உருவாக்க பட்ட இச்சட்டத்தின் முலம் பலரை கொன்று குவித்தது இராணுவம், அம்மக்களின்  போராட்டங்களுக்கு  ஒரு விடை கிடைத்த  பாடும் இல்லை, நவம்பர் 2 2000 அன்று  மணிப்பூர் மாநிலத்தில் உள்ள  இம்பால் டவுனில் பேருந்து நிலையத்தில் காத்து கொண்டு இருந்த   10 அப்பாவி மக்களை கண்முடித்தனாக  சுட்டு கொன்றது.,அதில் 62 வயது மூதாட்டியும் , 18 வயது Sinam Chandramani, 1988 இல் National Child Bravery Award விருதை பெற்றவர் என்பது கூறிப்பட வேண்டிய ஒன்று .

அப்பொழுது   28 வயது ஆன இரோம் ஷர்மிளா , இச்சட்டத்தை  எதிர்த்து நவம்பர் 4 முதல் உண்ணா விரதத்தை தொடங்கினர்.முன்று நாட்களுக்கு பிறகு (நவம்பர் 7 2000 ) அன்று இவர்  அம்மாநில அரசால் தற்கொலை முயற்சி ("attempt to commit suicide"  under section 309 of the Indian Penal Code) என்று கைதி செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை  இவருக்கு முக்கின்  முலம் திரவ அகாரம் (nasogastric intubation )கொடுக்க பட்டு வருகிறது. இவரை ஒரு வருட காலம் மட்டும் தான்  கைது செய்து சிறையில் வைக்க சட்டம் உள்ளதால் இவரை விடுதலை செய்வதும் மீண்டும் கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது..    மனித உரிமைகள் என்று எல்லாம் இருந்தும் இவரை  பன்னிரண்டு ஆண்டு உண்ணா விரதம் இருக்க வைத்து  தான் பார்த்து கொண்டு இருக்கிறது. இவரும் பன்னிரண்டு ஆண்டுகளாக தன் உடலை மட்டுமே ஆயுதமாக  வைத்து போராடி கொண்டு இருக்கிறார்.    

உண்மையில் உண்மையான போராட்டங்களுக்கு இந்த அரசியல்வாதிகள் என்றும் முக்கியத்துவம் கொடுத்ததும் இல்லை , பத்திரிகை நண்பர்களும் அதை பெரிது படுத்துவதும் இல்லை.......
 
தன் குடும்பம், தன் பிள்ளை என்று இருக்காமல் , தன் மக்கள் என்று   போராடும் இவருக்கு ஏனோ பாதிக்க பட்ட மாநில மக்கள் தவிர வேறு மாநில மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை,
 
தமிழ் இழ பிரச்னை என்றால் தமிழன் மட்டும் தான் போராட வேண்டும்,தெலங்கான   பிரச்னை என்றால் தெலுங்கு  வாழ் மக்கள் மட்டும் தான் போராட வேண்டும் என்று  இருக்கிறதா என்ன....!  இந்தியர்கள் எல்லாம் என் சகோதிர சகோதரிகள்  என்று சொல்லும் நாம் வேறு மாநிலத்தில் உள்ளவர்க்கு ஒரு பிரச்னை என்றால்  ஏன் குரல் கொடுப்பது இல்லை..  இச்சட்டத்தின் முலம் பாதிக்கப்படும் மக்களுக்காகவும், சகோதரி இரோம் ஷர்மிளா விற்கும் என் அதரவு தெரிவித்து கொள்கிறேன்., அங்கு நடக்கும் மனித உரிமை மிரல்களே கடுமையாக கண்டிக்கிறேன்....
 
ஜனநாயக உரிமைகள் , போராடும்  உரிமை ஆகியவற்றில் நமக்கு உண்மையாக அக்கறை இருந்தால் , எந்த ஒரு இந்தியனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறதோ,அங்கே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு இந்தியர்களாகிய  நாம்   குரல் கொடுப்போம்...   

நன்றி: https://www.facebook.com/#!/Irom.Sharmila.Thamizh


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R