பி.பி.சி (தமிழ்): டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர்!11 ஆகஸ்ட், 2012 - மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், யாழ் மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அவை மத அனுட்டானங்கள், இரங்கலுரைகள், பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் என்பவற்றுடன் அவரது சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பொலிசார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது டெல்ருக்ஷன் இரு தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் சிலர் கைகால் முறிந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் கணேசன் நிமலரூபன் மற்றும் மரியதாஸ் நேவிஸ் டெல்ருக்ஷன் ஆகிய இருவரும் வேண்டுமென்றே அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

இது தொடர்பில் சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்குத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றிய பலரும் தெரிவித்துள்ளனர்.

டெல்ருக்ஷனின் இறுதிக்கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய முன்னணி, தமிழர்விடுதலைக்கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/08/120811_dilrukshanfuneral.shtml


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R