அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு  செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து  விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு  செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து  விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது. கதை மாந்தர்களை எம்மோடு உலவ விடுகின்ற உறவாக்கி விடுகின்ற திறமை ரவிந்திரனுக்கு  வாய்த்திருக்கிறது.  இது அவரது  படைப்பிற்கு கிடைத்த  வெற்றியெனலாம். வானொலி அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்ட முருகேசு ரவீந்திரன் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். தொழில் காரணமாக இருபது வருடங்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் அவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்தையே களமாக கொண்டு  புனையப்பட்டுள்ளன. யாழ் மண் அதன் பாரம்பரியம் அதற்கே உரிய தனித்தமான சிறப்பியல்புகள் கதைகளில் உயிர் நாதமாக வேரோடி இருப்பதை படிப்பவர்கள் அறிய முடியும். 1990ற்கு பின் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. ரவிந்திரனுடய கதைகளில்    காணப்படுகின்ற  சிறப்பம்சம் அதனுடய எளிமை தன்மை ஆகும் வாழ்வியல் அனுபவங்களை ஆடம்பரமில்லாது இயல்பாக சித்தரித்துள்ளமை வாசகனை பாத்திரங்களின் ஒருவனாக  அவனுக்கு மிகவும் நெருங்கியவனாக உணரச்செய்து விடுகின்றது.  அதாவது எழுத்துக்களோடு  ஓர் அகவயமான தொடர்பை ஏற்ப்படுத்தி விடுகிறது.

எழுத்தின் முலம் சமூகத்தில்   மாற்றமொன்றினை எற்ப்படுத்தி விட வேண்டும்    என்ற முனைப்போ பிரச்சார தன்மையோ உபதேச யுக்தியோ இங்கு காணப்படவில்லை.  ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இவை  அவசியமும் இல்லை  என்கிற எண்ணம் இவரது கதைகளை வாசிக்கிற போது வலுப்படுகிறது.

இந்த எளிமைத்தன்மை தான் பல தரப்பட்ட வாசகர்களையும் கட்டி வைத்திருக்கின்ற  ஆற்றலை அவருக்கு வழங்கி யிருக்கிறது எனலாம்.  கவித்துவ விசாரணை யோடு விமர்சனம் செய்வோர் எளிமை கதையின் தரத்தை குறைத்து விடுகிறதென குறிப்பிடலாம்.  மகாபாரத கதைகள் தொடக்கம் டால்ஸ்டாய் வரை இலக்கிய வரலாற்றில் இத்தகய கதைகள் வெற்றி பெற்றள்ளதென்பதை அவர்கள் மனம் கொள்ள  வேண்டும்.

யாழ்ப்பாணத்து சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்புக்கள்  ஏக்கங்கள் போராட்டங்கள் ஏமாற்றங்கள் என்பன  கதைகளுடாக பேசப்படுகிறது. முப்பது வருடங்க்களுக்கு முற்பட்ட யாழப்பாணத்தின் தனி இயல்புகளை அறிவதற்கு இவரது கதைகள் உதவும் என்பதில் யார்க்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.

பெரும்பாலான கதைகளில் அது  கூறவந்த விடயம் எதுவாக இருப்பினும் விரசமில்லாத காதல் உணர்வு ஓன்று இழையோடி இருப்பதை காணலாம். இது ரவீந்திரனின் கதைகளில் காணப்படுகின்ற  இன்னொரு சிறப்பான அம்சம் ஆகும்..

இவரது பன்னிரு கதைகளுமே ஒவ்வொரு வகையில் தனித்தவம் வாய்நதவை. ஆயினும் அவற்றில் என்னை மிவும் பாதித்த சில கதைகள் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமென நினைக்கிறேன்.

“மாற்றம்” என்கிற கதை  அச்சகத்தில் பணி புரியும் சாதாரண  மனிதனொருவனின் கதையை பேசுவதொடு ஆண் பெண் என்ற ரீதியில் தனிமனித ஓழுக்கங்களை விபரிக்க முயல்கிறது. மாற்றமுறும் மனதின் தேர்வு பற்றிய உளவியல் பார்வையாக அமைகின்ற இக்கதை பலரது வாழ்வில் இடம்பெற்ற சம்பவங்களை மீட்டி பார்கவைக்கும் என்பது என் கருத்து. கதை நாயகன் விமலனுடய தொழில் சூழ் நிலையை கூற வருகின்ற ஆசிரியர் “இப்பொழுதெல்லாம் விமலனுக்கு பத்திரிகையோ புத்தகத்தையோ படிக்கின்றபோது அதில் உள்ள விடயங்கள் மனதில் பதிவதில்லை அதில் உள்ள எழுத்துப்பிழைகளே கண்ணுக்கு தெரிகிறது.” ஓப்பு நோக்குனராக பணிபுரிவருடய அனுபவத்தை இவ்வளவு யதார்தமாக வேறுயாரும் விபரிக்கமுடியுமா . இந்த இடத்தில் ரவீந்திரன் டானியலை நினைவு படுத்துகிறார். களச்சூழலை யதார்தமாக சொல்வதில் டானியலும்   அதிகம் அக்கறை காட்டுவார்.

இத்தொகுதியல் எனை கவர்ந்த கதைகளில்  'மீட்சி' யும் ஒன்று. இந்த கதையை படித்து பல நாட்கள் ஆகியும் இதன் தாக்கத்தில் இருந்து மீள முடியாதிருந்த்து. அநத அளவிற்கு மனதை தொட்ட கதை - யாழ்ப்பாணத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்து அலுவலகமொன்றில் பண்புரியும் இளைஞ்ன் ஒருவனின் வாழ்க்கை போராட்டமெ இங்கு கருவாகிறது. தாயை இழந்து தந்தையுடன் வாழும்போது தங்கையின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்க முடியாத பொருளாதார சூழல். வேலை செய்யும் இடத்தில் முற்பணம் கேட்டும் அது மறுக்கபடும் நிலையில எழும் மன போராட்டம், இவன் மன நிலை அறிந்து உதவுகின்ற அலுவலக தோழி இவற்றை உணர்வுபூர்வமாக சித்தரித்துள்ளமை வாசிப்பவர் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது. இப்படி எழுதுவதன் முலம்  இக் கதைகூறும் உணர்வு வெளிப்பாட்டை முழுமையாக உணர்த்த முடியமென நான் நினைக்கவில்லை. இதை ஒவ்வொருவரும் வாசிக்கின்ற போதே அது சாத்தியமாகும் என நினைக்கிறேன். இக்கதையின் ஓர் இடத்தில் மனைவியின் பிரிவால் வாடுகின்ற தந்தை வீட்டிற்கு வரும் போது கச்சான் வாங்கி வருகிறார். தன்னுடன் சேர்த்து மகன் மகள் ஆகிய முவருமே  உள்ளனர் ஆனால் அவர் அதை நான்காக பங்கிடுகிறார். ஒன்றை மனைவியின் படத்தின் முன் வைத்து கண் கலங்குகிறார். இந்த இடம் எந்த கல்நெஞ்சகாரரையும் கலங்கவைத்து விடுகிறது.  மீட்சியி இருந்து மனம் மீள  மறுக்கிறது. புதுமைபித்தனுக்கு பொன்னகரம் போல் ரவிந்திரனுக்கு மீட்சியும் பேசப்படும் என்பது என் கருத்து .

இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க இன்னுமொரு கதை “அரும்பு”   தன் மகளின் கல்வி வளர்ச்சியில் பாசமுள்ள தந்தைக்கு இருக்கும் அக்கறை, அதனோடு  முரண்படுகின்ற வாழ்வியல் யதார்த்தம் என்பவற்றை கதை சொல்கிறது.  ஆனால் எமது கல்விக்கொள்கை நிர்வாக அமைப்பு  பற்றிய கனமான கேள்வியையும் விமசர்சனத்தையும் இக்கதை முன்வைக்கிறது. பாடசாலை நேரத்தில் நடக்கின்ற  கணனி வகுப்பொன்றிக்கு காசுதரச் சொல்லி பெற்றோரை நிர்ப்பத்திக்கும் நிர்வாகம் அது தரப்படாத விடத்து பிள்ளையை தண்டிக்கிற உளவியற் பார்வையற்ற ஆசிரியத்துவம் மீது  தீவிர விசாரணையை முன்வைக்கின்ற ஆசிரியர் ஒர் இடத்தில் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்:   கன்னங்கரா இந்த நாட்டுக்கு  இலவச கல்வியை அறிமுகப்படுத்தினார்  அதனால் தான் ஏழைகளான  அப்பு காமி ஜயாத்துரை அஸ்லாம் போன்றவர்களது பிள்ளைகளும்  பெரிய படிப்பு படிக்க முடிஞ்சுது . அதனால் தான்  அவர்கள் மக்கள் மனங்களில் இன்றைக்கும் நிற்கிறார்கள் ஆனால் சிலரின்  செயற்பாடுகள்  மனதிற்க்கு வேதனை தருவதாக உள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு கதையும் எமது  வாழ்வு மீது பயணம் நடாத்தி இருக்கிறது வாழ்வியல் பயணத்தில் எற்படும் காதல் ஏமாற்றம்  அந்தஸ்து பாசம்  போன்ற பலநிலைகள் மீதான பயணமாக ரவீந்திரனின் வாழ்க்கை பயணம் அமைகிறது . அவரது பயணங்கள் தொடரவேண்டும். . .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 

 

 

 

 

 


 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R