கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற நூலும், இறுவட்டும் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இந்நூலை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது இரண்டாவது தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கனலாய் எரிகிறது என்ற கவிதைத் தொகுதியை புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியிட்டுள்ளார். 2010 இல் இலங்கை அரசு இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக கலாபூஷண விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற கவிதைத் தொகுப்பு 27 பக்கங்களில் வெளிவந்திருக்கிது. இத்தொகுதியில் 69 பாடல்வரிகள் அமைந்துள்ளன. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிலத்தைப் பிழந்த சுனாமியில் உயிர்நீத்த உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும்... நெஞ்சத்தைப் பிழந்து என்று நூலாசிரியர் தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.

இவர் 1977 இல் இலக்கிய உலகில் அடிபதித்தவர். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது 100க்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள், ஒரு சங்கீத ஆசானால் பாடப்பட்டுள்ளன. நிந்தவூர் அல்-அஷ்ரக் உயர்தரப் பாடசாலையிலும், சாய்ந்தமருது முன்பள்ளி கல்வி நிலையம் ஒன்றிலும் இவரது காலை வந்தனப் பாடல்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன. கே.எம்.ஏ அஸீஸ் இவ்வாறு கவிதைத் துறையில் அகலக் கால்பதித்து நிற்கிறார். ஏழாண்டு சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நினைவஞ்சலி விழாவில் வெளியாகும் இவரது கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியமும், இறுவட்டு;ம் எதிர்கால சந்ததியினரின் ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை என்கிறார் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கும் கலாபூஷணம் யூ.எல் ஆதம்பாவா அவர்கள்.

எரிமலை குமுறும் இதய ஆழியின் சங்கமத்தில் என்ற தனது உரையில் நூலாசிரியர் அஸீஸ் அவர்கள் கீழுள்ளவாறு கூறுகின்றார். ஊழல்களின் உறைவிடமாகிய உலகின் மானிடனாகப் பிறந்த மதிப்பீடு இன்னும்... இதய ஆழியில் எழும் சுனாமி அலையாக என்னுள் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. மானிடனாகப் பிறந்ததை விடவும் கல்லாக, ஏன் புல்லாகவேனும் படைக்கப்பட்டிருந்தால் கூட யாருக்காவது பிரயோசனப் பட்டிருப்பேனே என ஆதங்கப்பட்டு இதயத்தால் அழுதுகொண்ட உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்தியத் தோழர் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் குமுறல் ஆன்மீக வெளிப்பாட்டின் உச்சம் மட்டுமல்ல சமூகப் பார்வையின் உண்மையான சலனம் என்று கூடச் சொல்லலாம். அந்தளவுக்கு அநியாய அரக்கன் கொடிகட்டி அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மாய உலகின் மானிடனாகப் படைக்கப்படும் முன் எழுந்த ஒரு விமர்சனம் இருபத்து நான்கு மணித்தியாலமும் நினைவிலேயே சதா மூழ்கி உனக்காகவே வாழ்ந்துவரும் எங்களைவிடவா இரத்தம் சிந்தி இறுமாப்போடு உன்னை மறந்து வாழும் ஊழல் பேர்வழிகளையா உலகில் படைக்கப் போகிறாய் என்ற வானவரின் யதார்த்தமான கேள்வியில் எவ்வளவு தூரம் உண்மை பொதிந்திருக்கிறது?... என்ற ஆதங்கம் மானிடனாகப் பிறந்து, பாவத்தில் மூழ்கி தம் வாழ்வை சீரழித்துக் கொள்வோருக்கான உபதேசமாக இருக்கிறது என்கிறார்.

பாடலின் முக்கிய சில அடிகள் இவ்வாறு..

இரண்டாயிரத்து நான்கு மார்கழி மாதம்
இருபத்தி ஆறு அதிகாலை, அவ்வேளை
சரமாரியாய் ஆழி அலைமே லெழுந்து
சாதனை புரிந்தஇவ் வரலாறு கேளீர்..  (பக்கம் 12)

என்ற இவ்வரி ஆழிப்பேரலை நடந்த காலத்தை எமக்கெல்லாம் ஞாபகப்படுத்திப் போகிறது. 2004 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தியதை நூலாசிரியர் வெளியிட்ட இந்நூலிலும், இறுவட்டிலும் தரிசிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பச்சிளம் பாலகர் முதல் பெண்கள், வயோதிபர்கள் என்று பால், வயது வேறுபாடின்றி கடலலையின் கோரப் பசிக்கு இரையான காட்சிகள் கல்நெஞ்சத்திலும் ஈரத்தை கசியச் செய்யும். அந்தளவுக்கு கட்டிடங்களின் சிதைவுகளாலும், சுனாமி அலையின் வேகமான வீச்சாலும் உயிரிழந்தோர் பலர். உலகம் விஞ்ஞான வளர்ச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் இயற்கையின் சீற்றத்தை நிறுத்த மனிதனால் முடியாது. பின்வரும் பாடல் வரிகள் அதனை நிதர்சனமாக்குகின்றது.

விஞ்ஞானம் வளர்ந்ததென வீறாப்பு பேசும்
வெகுளிகளை மூக்கின்மேல் விரல் வைக்கச்செய்த
அஞ்சாது, அழையாத விருந்தாளியாகி
அலைவந்து ஓடோட விரட்டியது கேளீர்  (பக்கம் 12)

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் முகாம்களில் வாழ்ந்துவரும் காட்சியும் தத்ரூபமாக இறுவட்டில் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, மாளிகைக்காடு, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில் போன்ற ஊர்களில் நிகழ்ந்த இக்கொடூர காட்சிகள் மக்கள் அனுபவித்த துன்பங்களை படம்பிடித்துக் காட்டுகின்றது.

தாய் தந்தையர் யார் என்று அறிய முடியாத சிறார்களை மரபணு ஆய்வு மூலம் கண்டுபிடித்து சேர்த்த சம்பவங்கள்கூட நடந்தேறியிருக்கின்றன. அதற்கான பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

அம்மணமாய் சிலபேரை அலையடித்துச் செல்ல
அழு குழந்தை இந்நாளில் உயிரோடு மீள
அம்மா யார்? அப்பா யார்? மரபணுவின் ஆய்வில்
அசல் கண்டு சேர்ப்பித்த அதிசயமே கேளீர்  (பக்கம் 13)

நீரிலே மிதந்த உயிரற்ற உடல்களையும், சேதமாகிப் போன ஊர்களையும் ஒருங்கே சுத்தப்படுத்தி உதவியவர்களுக்கும் நூலாசிரியர் இந்நூலினூடு நன்றி தெரிவித்திருக்கிறார். 

அதுபோல கரையோர மக்கள் கதிகலங்கி இருக்கும் போது கடுகளவும்  பாதிப்புறாதோர் குறுக்கு வழியில் முன்னேறவும் சுனாமி உதவிசெய்த பரிதாபமும் கண்கூடு. சுனாமியால் வீடு இழந்தவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்தபோதும் அதை சில சதிகாரர் தமக்காகப் பயன்படுத்திக் கொண்ட சோகக் கதைகளும் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு மக்கள் செய்கின்ற பாவங்களே காரணம் என்கிறார் நூலாசிரியர்.  அவ்வாறு இறைவனை மறந்து செயற்பட்டதால் வந்தவினை தான் சுனாமி என்பதை கீழுள்ள பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

பொய், களவு, காமங்கள், சூது, கொலை, வட்டி
பொறாமை, கோள், வஞ்சகம், போட்டி மனப்பான்மை
வையக வாழ்வினிலே வந்தவினை தானே
வரலாற்றில் நாம் பெற்ற சுனாமியதன் சீற்றம் (பக்கம் 18)

மேற்குறிப்பிட்ட விடயங்களை புத்தக வடிவிலும், இறுவட்டிலும் தந்திருக்கின்ற நூலாசிரியர் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர். அதே போல் மிகவும் சிறப்பாக இக்காவியத்தை பாடியுள்ள இசைவாணர் எம்.எம். அப்துல் கபூர் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள். இந்த அற்புதமான கண்ணீர்க் காவிய நூலை படிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.!!!

நூல் - கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்
நூலாசிரியர் - கலாபூஷணம் கே. எம். ஏ. அஸீஸ்
தொலைபேசி - 067 7913248, 075 2529532
வெளியீடு - சாய்ந்தமருது சமூக நலன்புரி ஒன்றியம்
விலை - 150/=

http://www.rimzapoems.blogspot.com/
http://www.rimzapublication.blogspot.com/
http://rimzavimarsanam.blogspot.com/
http://www.rimzachildrenstory.blogspot.com/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R