நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. 'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள்.நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. 'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள். குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.

பலே பலே வைத்தியர் என்ற கதையில் வரும் அமைச்சரவை வைத்தயர் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவர். சதாவும் சாப்பிட்டுவிட்டு உறங்கும் மன்னன், உடல் பருத்து அலங்கோலமாகிறான். அவன் தனது உடற் கட்டமைப்பை சீராக வைத்துக்கொள்வதற்கான மருந்தை வைத்தியரிடம் கேட்கிறான். அதற்கு உடற்பயிற்சி அவசியம் என்று சொல்கிறான் வைத்தியன். மன்னனுக்கு அதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. இறுதியில் மன்னன் உடற்பயிற்சி செய்வதற்காக என்று கூறி பூங்காவிற்குச் செல்கிறான். பூங்காவில் பெரிய நாய் ஒன்று மன்னனை நோக்கி வருகிறது. பயந்த மன்னன் பூங்காவைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். வழக்கமாக இந்த நாய்த் தொல்லை நிகழ்கிறது. இதற்குக் காரணம் வைத்தியன் என்று அறிந்து மன்னன் கோபப்படுகிறான். ஆனாலும் மன்னனின் உடல் இளைப்பதற்காகவே இவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்று வைத்தியன் கூறியதும் மன்னன் மகிழ்கிறான். அன்று முதல் அளவான சாப்பாடும், உடற் பயிற்சியும் என்று கடைப்பிடித்து அழகாக வாழ்வதுடன் நாடு முழவதும் தேகப்பயிற்சி நிலையங்களையும் நிறுவுகிறான். மனிதனுக்கு ஓய்வு, சாப்பாடு, தூக்கம் போன்றவை எவ்வளவு அவசியமோ அதே போன்று உடற் பயிற்சியும், அளவான ஆகாரமும் அவசியம் என்ற அறிவுரை இந்தக் கதையினூடாக சொல்லப்படுகிறது. இந்த அறிவுரை சிறுவர்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்கும் உரியதாகும்.

பண்டிதரின் பரலோக யாத்திரை என்ற கதை சுவாரஷ்யமானது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்து அலைவோருக்கான சரியான பாடம் இந்தக் கதை. அதில் பண்டிதர் ஒருவரும் படகோட்டியும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தனது அறிவுத்திறனை படகுக்காரனிடம் பீற்றிக் கொள்வதற்காக ஷசாஸ்திரங்கள் படித்திருக்கிறாயா? புராணங்கள் தெரியுமா? எழுதப்படிக்கத் தெரியுமா| என்று கேட்கிறார் பண்டிதர். படகோட்டி எதற்கும் தெரியாது என்கிறான். முகம் சுளித்த பண்டிதர் 'உன் வாழ்க்கையின் முக்கால் பாகமே தொலைந்துவிட்டது' என்;கிறார். காற்று பலமாக அடிக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து படகு கவிழப் பார்க்கிறது. படகோட்டி பண்டிதரைப் பார்த்துக் கேட்கிறான். ஷசாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?| என்று. பண்டிதருக்கு நீச்சல் தெரியாது. படகோட்டி சொல்கிறான் 'ஐயோ சாமி உங்கள் முழு ஆயுசும் இன்றோடு தொலைந்தது'.

இன்பமும் துன்பமும் என்ற கதை படிப்பினைக்குரிய கதையாகும். ஒரு இளைஞனும், வயோதிபரும் காட்டு வழியாக பயணம் செய்கின்றனர். நீண்ட தூரம் அவ்வாறு பயணம் செய்ததால் இருவரும் நண்பர்களாகின்றனர்.  இப்படி சென்று கொண்டிருக்கையில் இளைஞனுக்கு ஒரு பொதி கிடைக்கிறது. அதில் தங்கங்களும் வைரங்களும் காணப்படுகின்றன. எனினும் தனக்கு அவ்வாறானதொரு பொதி கிடைத்ததாக அவன் முதியவரிடம் காட்டிக் கொள்வில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் அது பற்றி முதியவர் விசாரிக்கிறார். இளைஞன் பதில் சொல்லவில்லை. முதியவர் மீண்டும் குடைகிறார். 'நாம் ஒன்றாக பயணிக்கும்போது இன்பமோ துன்பமோ சமமமாகப் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்' என்கிறார். அதைக்கேட்ட இளைஞன் கிழவரை நக்கலாகப் பேசிவிட்டு இந்தப் பையில் என்ன இருந்தால் உங்களுக்கென்ன? அதைக் கண்டெடுத்தவன் நான். எனக்குத்தான் சொந்தம் என்று முகத்திலடித்தாற்போல் சொல்கிறான். முதியவர் எதுவும் பேசவில்லை.

சற்று தூரம் நடந்திருப்பார்கள். திடீரென குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்கிறது. அரண்மனை நகைகள் களவு போய்விட்டன. யாரிடமிருக்கிறதோ அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்ற அறிவித்தலும் கேட்கிறது. கலக்கமடைந்த இளைஞன் முதியரைப் பார்க்கிறான். 'நமக்கு தண்டனை கிடைக்கும்' என்கிறான்.

முதியவர் அதற்கு நிதானமாக, 'நீதான் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் நான் காணவில்லை. நீதான் கண்டாய். எடுத்தாய். அதனால் தண்டனை உனக்கு மட்டும்தான்' என்று பதிலளிக்கிறார்.
திகைத்து நின்ற வாலிபனை அரண்மனை சேவகர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். முதியவர் தனியாகப்  பயணத்தைத் தொடர்ந்தார் என்று நிறைவடைந்திருக்கும் இக்கதையானது தனது சந்தோஷத்தில் சேர்த்துக் கொள்ளாமல், கஷ்டத்தில் மாத்திரம் மாட்டிவிடும் நண்பர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற படிப்பினையையும், மூத்தோர் சொல் கேட்க வேண்டும் என்ற அறிவுரையையும் சொல்லி நிற்கிறது.

இவ்வாறு மாணவர்கள் கட்டாயம் படித்து பயன்பெற வேண்டிய நூலாக அமைந்திருக்கிறது கே.விஜயனின் பலே பலே வைத்தியர் என்ற இந்த சிறுவர் நூல். சிறுவர்களுக்கு கூறப்படும் புத்திமதிகள் வெறும் போதனைகளாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கே. விஜயன் அவர்கள், தான் சொல்லவந்த அறிவுரைகளை சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் பதிய வைக்கும் வண்ணம் கதைகள் அனைத்தையும் சித்திரங்களுடன் சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பம்சமாகும். இன்னுமின்னும் பல நூல்களை கே. விஜயன் அவர்கள் வெளியிட வேண்டுமென்பதே எங்கள் எல்லோரதும் பேரவா. அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - பலே பலே வைத்தியர்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் - கலாபூஷணம் கே. விஜயன்
டிவளியீடு - வீ.ஐ. புறமோ பதிப்பகம்
தொலைபேசி - 011 455 1098
விலை - 200 ரூபாய்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
www.poemrizna.blogspot.com
www.storyrizna.blogspot.com
www.vimarsanamrizna.blogspot.com


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R