இர.மணிமேகலை கவிதைகள்!

1. மழைத்தோழி
கார் காலத்தின் தண்மை
காற்றில்  பரவியே இருக்கிறது
எங்கோ ஒலிகள்
இசைந்து பிரவாகிக்கின்றன
ஒரு தெருப்பாடகனின்
சுதந்திரத்துடன்
மனச்சிறகு விரிகிறது
எதிர் வரும் முகங்களின்
பலவண்ணப் புன்னகை மூடிகளில்
தோட்டத்து ஓந்தி ஒளிந்திருக்கிறது
முதுகை நெருடுகிறது கத்திமுனை
சூழப்பெய்யும்
மழைதோழியின் கரங்கள்
சுற்றிவளைக்கின்றன.

2. முதுகில்
பெண் பார்க்கும்
படலம் ஒன்றிற்காய்
வண்ணப்புடவைகளின் குவியலில்
மறைந்துபோகிறேன்
ஓவியத்திலிருந்து
புலியொன்று
எந்நேரமும் உயிர்பெற்றுவிடலாம்
அச்சத்துடன்
சட்டையணிந்த சிப்பந்தியின் பரிமாறலில்
சில மணித்துளிகள்
மகிழ்வுந்துப்பயணத்திற்காக
கதவு திறந்து நிறைகையில்
ஏக்கத்தில்
துரத்தும் இரு விழிகள்
வீடுபோன பின்பும்
என் முதுகில்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்!

1. நாங்கள் இந்தியர்கள் என்பது இனி
எங்கள் கையிலில்லை

எல்லோர்க்கும்
வணக்கம்
உங்கள்
மனச்சாட்சியைக்கேட்கிறேன்

உங்கள் மனச்சாட்சியை
நீங்களும் கேளுங்கள்

அலசிப்பார்த்து
முடிவுக்கு வருவோம்

நீங்கள்
பொதுவுடமைக்கட்சிக்காரராக
இருக்கிறீர்கள்
அல்லது
தேசியக் கட்சிக்காரராக
இருக்கிறீர்கள்
அல்லது
ஒருமதத்தைச்சார்ந்த
கட்சிக்காரராக இருக்கிறீர்கள்
அல்லது
இவையல்லாத சிந்தனைவாதிகளாகவும்
பகுத்தறிவாளர்களாகவும்
மானுடம் ஒன்றென எண்ணும்
மாமனிதர்களாகவும்
இயற்கை நேசர்களாகவும்
இருக்க்கக்கூடும்

தவிர்த்து
மாநில உணர்வுடையவர்களாகவும்
இருக்கக்கூடும்
இதுதான் சாத்தியம்

இயற்கைதரும் வளத்தை
பொதுப்பங்கீடு செய்யமுடியாதென்றால்
ந்மது நாடு ஒருநாடா?
அல்லது நாம்
வேறுவேறு நாட்டவர்களா?

இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவே
மைய அரசு
பகிர்ந்துகொடுக்கவே
நடுவண் அரசு
இயலாதென்றால்
எதற்குத்தேவை அந்த அரசு?

எந்த மாநிலத்தவர்
எல்லாமாநிலத்திலும்
இருக்கிறார்கள்?
கணக்கெடுத்துப்பாருங்கள்

எந்த மாநிலத்தில்
எல்லாமநிலத்தவரும்
இருக்கிறார்கள்?
மனதோடு உரையாடுங்கள்.

எந்த மாநிலத்தின் வளம்
எந்த மாநிலத்திற்கு போகிறது?
கொஞ்சம் சிந்தனையில் மூழ்குங்கள்

எந்த மாநிலத்தில்
அதிக சுதந்தரம்
எந்த மாநிலத்தில்
நிம்மதி அதிகம்
எந்த மாநிலத்தில்
அந்நியர் நிலம்வாங்கமுடியும்
எந்த மாநிலத்தில்
அடுத்த மாநிலப்படங்கள்
அதிகம் ஓடுகின்றன

எந்த மாநிலத்தில்
அந்நியர் முதல்வரானார்கள்

எந்த மாநிலத்தில்
அடுத்த மாநிலத்தவர்
அதிகம் நடிக்கிறார்கள்
அதிகம் பாடுகிறார்கள்
அதிகம் வீட்டுடன் வாழ்கிறார்கள்

தெருவெல்லாம்
தேநீர் கடை யாருடையது?
மின்னும் நகைக்கடை
சொல்லவேண்டுமா?

இந்தியரே
உங்கள் மனதோடு பேசுங்கள்
மனம் சொல்வதைக்கேளுங்கள்

எல்லாமாநிலத்திலும்
எல்லா மாநிலத்தவரும்
வாழ்கிறார்கள்
காரணம் ..
இந்தியா ஒருநாடு
இந்தியா ஒரே நாடு

நதியை தேசியமயமாக்குங்கள்
அணைகளை
ஒரே அமைப்பு கண்காணிக்கட்டும்

இந்தியவளத்தை
இந்தியர்களுக்குப் பங்கிடுங்கள்

இது முடியாதென்றால்
அந்த முடிச்சை அவிழுங்கள்
கட்டிப்போட்டு
காலத்தை வீணாக்காதீர்கள்

பிறப்பில்தான்
பேதம் வளர்த்தீர்கள்
பேசும்மொழியிலும் அதேதான்
இனத்தால் வேறெனினும்
இந்தியராய் வாழ இணைந்தநாம்
இனியும்
இயற்கை வளத்தைத் தடுத்தால்
வேண்டுவது இந்தியாவா?
அல்லது வேறா?
என்பதே கேள்வி

இதை
முடிவுசெய்யாது
இந்தியா வேண்டுமென்றால்
இந்தியா எப்படி வேண்டும்?
இந்தியா ஏன் வேண்டும்?
இந்தியா எதற்கு வேண்டும்

முல்லை பெரியாறு
அணை
இந்தியாவில் இருக்கிறது
மீண்டும்
நினைவுப்படுத்துகிறேன்
முல்லை பெரியாறு அணை
இந்தியாவில் இருக்கிறது

அது
இந்தியர்களுக்கே பயன்படுகிறது
ஆபத்தென்றால்
அது இந்தியர்க்குரிய ஆபத்து

பராமரிப்பதும்
பாதுகாப்பதும்
இந்திய அரசினுடையது

இடையில்
எவரின் பேச்சுக்கும் இடமில்லை
காவிரியும் பாலாறும்
அப்படியே 

முல்லை பெரியாறு என்பது
தமிழ்ச்சொல்
அதுவே போதுமென்று
வாதாட வரவில்லை

தமிழ் தமிழ் என்றுபேசி
தமிழையும்
தமிழ்நாட்டையும்
இழந்துவிட்டோம்

சகிப்புத்தன்மையின்
மறுபெயர் தமிழர்கள்

நெய்வேலி நிலக்கரிமின்சாரம்
தமிழ்நாட்டுக்கே வெளிச்சம் தரவில்லையே
கூடங்குளம் மின்சாரத்தை
இலங்கைக்குத் தரப்போகிறோம்

எதையும் இந்தியர்க்கு வழங்க
தமிழகம் தயாராக இருக்கிற்து
தமிழகத்திற்கு வழங்க
யாரும் தயாராக இல்லை
இயற்கையைத் தவிர

இறுதியாக
ஒரு கேள்வி

நீங்கள்
மார்க்சிய பொதுவுடமைக்கட்சியா
மாநிலப்பொதுவுடமைக்கட்சியா

நீங்கள்
இந்திய தேசியக்கட்சியா
மாநிலத் தேசிய கட்சியா

நீங்கள்
இந்திய இந்துக்களா
மாநில இந்துக்களா
இசுலாமியர்களுக்கும்
கிறிஸ்துவர்களுக்கும்
அதே கேள்விதான்

கிழக்குக்கடற்கரையில்
இலங்கை தீண்டும்
இந்தியமீனவர்களுக்கு
இதுவரை பாதுகாப்பில்லை
அவர்கள்
இந்தியர்களா? இல்லையா?

உங்களுக்குத்
தேர்தல் முக்கியமா?
தேசம் முக்கியமா

கொஞ்சம்
உங்கள் மனதோடு பேசுங்கள்
மனம் சொல்வதைக்கேளுங்கள்

இனி நாங்கள்
இந்தியர்கள் என்பது
எங்கள் கையிலில்லை


2. இன்னும் புதிதாய்ப் பிறப்பேன்

பிச்சினிக்காடு இளங்கோ

இன்று புதிதாய்ப் பிறந்தேன்
இன்னும் புதிதாய்ப் பிறப்பேன்
நன்றாய்ப் பொழுது புலரும்
நன்றாய் எல்லாம் மலரும்
கவிதை கோடி பிறக்கும்
கவிதையில் உண்மை சிறக்கும்
கவிதைக் கண்களால் விழிப்பேன்
காட்சிக் கவிதைகள் வடிப்பேன்
மனிதம் பாடி களிப்பேன்
மனிதர் வாட துடிப்பேன்
கனியாய் சொற்கள் உதிர்ப்பேன்
கனிவாய் நட்பை வளர்ப்பேன்
உறவில் நட்பில் வேடம்
அறவே இல்லாப் பாடம்
நாளும் நடத்தி வாழ்வேன்
நானும்  வாழ்ந்து வெல்வேன்
எல்லை களில்லாத் தேசம்
இதயந் தோறும் நேசம்
பொங்கும் நாள்வர வேண்டும்
பொலியும்  மாட்சிகள்  வேண்டும்
வானம் போல கடலும்
காற்றைப் போல் நீரும்
பொதுவாய்ப் போகும் காலம்
பூத்தால் வெல்லும் ஞாலம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


காதலித்துப்பார்!

முல்லைஅமுதன்

உன்னையே காதலித்துப்பார்..
உலகம் உன்னுள் சுருண்டு கொள்ளும்...
காதலித்துப்பார்..!
தேசம்  வசப்பட்டிருக்கும்.
காதலித்துப் பார்..!
காதல் இல்லையேல் எதுவும் இல்லை.
காதலித்துப்பார்..!
யாவரும்-
விரல் சொடுக்குக்குக் காத்திருக்கும்.
காதலித்துப் பார்..!!!
ஏவுகணைகள் உனக்கு சேவகம் செய்யும்..
காதலித்துப் பார்..!!
ஈழம் உனக்கு வாய்த்திருக்கும்...!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R