வாசிப்பும், யோசிப்பும் 245: 'நானே நானா? யாரோ தானா?'சென்ற வெள்ளிக்கிழமை , 23.06.2017 , எனக்குச் சிறியதொரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே என் கண்களிரண்டும் அவ்வளவு ஆரோக்கியமான நிலையிலில்லை. இரு கண்களிலும் 'கட்ராக்ட்' அதாவது கண் புரை  என்னும் நிலை தோன்றியிருந்தது. அண்மைக்காலமாக இரவில் வாகனம் செலுத்தும்போது , எதிரில் பிரகாசமான வெளிச்சம் தென்படுகையில் , வாகனத்தைச்செலுத்துவது சிரமமாக இருப்பதை அறிந்தேன். எனவே முதலில் என் இடது கண்ணில் அதற்கான சத்திர சிகிச்சையினைச் செய்ய இசைந்தேன்.

சத்திரசிகிச்சைக்கு முதலிரு தினங்களும் கண் துளிகளிட்டேன். சத்திரசிகிச்சை நாளும் ,சத்திரசிகிச்சைக்கு முன் மேலும் சில துளிகள் இடப்பட்டன. Intravenous (IV) முறையில் இடது கை வழியாகத் திரவங்கள் செலுத்தப்பட்டன வலி தெரியாதிருப்பதற்காக. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். படுக்க வைத்தார்கள். கண்களை இன்னுமொரு திரவம் கொண்டு துடைத்தார்கள். சிறு துவாரம் மிக்க துணி கொண்டு இடது கண்ணை மூடினார்கள். என் முன்னே குனிந்திருந்த கண் வைத்தியரும், அவரது உதவியாளர்களும் தெரிந்தார்கள். ஏதோ செயற்படுகின்றார்கள் என்பதை மட்டும் அறிய முடிந்தது. பத்து அல்லது பதினைந்து நிமிடங்களிருக்கும். 'எல்லாம் முடிந்தது' என்றார்கள். கண் மேல் போர்த்தியிருந்த துணியை அகற்றினார்கள். உலகம் கண் முன்னே முன் எப்போதையும் விட அழகாக, பிரகாசமாக, வர்ணங்களுடன் விரிந்தது. மேலுமிரு மணி நேரம் தங்கியிருந்தேன். கண்ணைப் பரிசோதித்தார்கள். நன்றாக இருப்பதாகத் திருப்திப்பட்டார்கள். ஒருவாரம் கழித்து மீண்டும் கண் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதிக்கும்படி கூறினார்கள். முதல் நாள் முழுவதும் கண்ணை மறைத்திருக்கும் வகையில் பிளாஸ்டிக் கண்ணாடியால் மூடி விட்டார்கள். ஒரு வாரம் வரையில் இரவில் படுக்கச்செல்லும்போது அவ்விதமே மூடிப்படுக்கும்படி கூறினார்கள். முதல் 24 மணி நேரம் கவனமாக இருக்கும்படி கூறினார்கள். தொடர்ந்து கண் துளிகளை ஒவ்வொரு நாளும் நான்கு தடவைகள் இட்டு வரும்படி கூறினார்கள். 26ந்திகதியிலிருந்து முகநூலில் பதிவுகள் இடத்தொடங்கினேன். அடுத்த நாளே கண்ணாடியில்லாமல் காரை ஓட்டிப் பார்த்தேன். வலது கண்ணுக்கும் கண்ணாடி தேவை என்பதால், புதுக்கண்கண்ணாடி எடுக்கும் வரையில் , கண்ணாடி அற்றே இன்று வரை வாகனம் ஓட்டுகின்றேன். இப்பொழுதுதான் தெரிகின்றது இது நாள் வரையில் நான் பல வர்ணங்களை இழந்த உலகையே பார்த்து வந்திருக்கின்றேன் என்று.

கடந்த வியாழன் மீண்டும் கண் வைத்தியரைச் சென்று சந்தித்தேன். கண்ணைப்பரிசோதித்தார். மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், எந்தவித நிபந்தனைகளும் இனி இல்லை என்றார். நீ விரும்பியதை நீ செய்யலாம் என்றார். நீந்த விரும்பினாலும் நீந்தலாம் என்றார்.

புதுக்கண்கண்ணாடி எடுக்கும் வரையில் வாசிப்பதற்கும், கணினியைப் பாவிப்பதற்கும் 'சொப்பேர்ஸ் ட்ரக் மார்ட்' மருந்துக்கடையில் வாங்கிய அருகிலிருப்பதைப்பார்ப்பதற்கான கண் கண்ணாடியைப் பாவிக்கின்றேன். முதன் முதலாக என் வாழ்க்கையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை இது. முதலாவது செயற்கை உறுப்பொன்று என் உடம்பில் பொருத்தப்பட்டு விட்டது.

முகநூலுக்கு வருவதற்கு ஒரு வாரமாவது ஆகுமென்று கணக்குப் போட்டிருந்தேன். இரண்டு நாட்களிலேயே முன்புபோல் முகநூலுக்கு வர , வாசிக்க , எழுத முடிந்தது எனக்கே மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

நண்பர்களே! இதுதான் காரணம் இங்கு நான் கண்ணாடி இல்லாமல் காணப்படுவதற்கு. என்னைப்பார்ப்பதற்கு எனக்கே ''நானே நானா? யாரோ தானா?' என்றிருக்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R