தேவை அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் முப்பது.

'மனக்கண்' நாவலிலிருந்து..1967இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த , அறிஞர் அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்'. இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களிலொன்று. அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்: சுவையாகப் பின்னப்பட்ட கதை, அ.ந.க.வின் துள்ளுதமிழ் மொழி நடை மற்றும் நாவலில் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தகவல்கள். இந்நாவல் பற்றி விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கின்றேன். அது 'ழகரம்' சிறப்பிதழில் மற்றும் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php…

இந்நாவலுக்கு நாவல் பற்றிச் சிறப்பானதொரு ஆய்வுக் கட்டுரையினையும் அ.ந.க எழுதியுள்ளார்.
அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலைப் 'பதிவுகள்' இணைய இதழிலிலுள்ள அ.ந.க பக்கத்தில் வாசிக்கலாம்: அதற்கான இணைப்பு: http://www.geotamil.com/index.php…

மேற்படி 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் முப்பது இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. அதனை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்நாவல் தொடராகத் தினகரனில் வெளியாகியபோது தொடராக நாவலைச் சேகரித்து யாராவது வைத்திருந்தால் அந்த அத்தியாயத்தை எமக்குத் தந்தால் நன்றியாகவிருப்போம். மே 31, 1967 தினகரன் பத்திரிகையில் 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் 29 வெளியாகியுள்ளது. ஜூன் 13, 1967 தினகரன் பத்திரிகையில் அத்தியாயம் 31 வெளியாகியுள்ளது. ஆக, அத்தியாயம் 30 மே 31 , 1967 - ஜூன் 13, 1967 காலகட்டத்தில் வெளியான தினகரன் பத்திரிகையில் வெளியாகியிருக்க வேண்டும்.

இந்த அத்தியாயத்தை எற்கனவே இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் தேடிப்பார்த்திருக்கின்றோம். ஏனைய அத்தியாயங்களையெல்லாம் அங்கிருந்து பெற முடிந்தது. இதனை மட்டும் பெற முடியவில்லை.

யாராவது இலங்கை லேக் ஹவுஸ் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு , இந்த அத்தியாயத்தைப் பெற்றுத்தந்தால் அவ்வுழைப்புக்குரிய சன்மானம் வழங்கவும் தயாராகவிருக்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..

 


புறம் கூறுதல் பற்றி....

புறம் கூறுதல் பற்றி....

எனக்கு மிகவும் பிடிக்காத விடயமொன்று உண்டென்றால்
அது முதுகுக்குப் பின்னால் ஒருவரைப்பற்றிப் புறம் கூறுவதுதான்.
நான் எப்பொழுதுமே நேரடியாக முகத்துக்கு எதிரில்
என் கருத்துகளைக் கூறத்தயங்காதவன்.
அவ்விதமே மற்றவர்களும் இருக்க வேண்டுமென்று நினைப்பவன்.
முதுகுக்குப் பின்னால் புறம் கூறுபவர்களால் ஏற்படும்
முக்கியமான பிரச்சினை என்னவென்றால்
இவர்களால்தாம் பெரும்பாலும் ஒருவரைப்பற்றி வதந்திகள் உருவாகின்றன.
பெரும்பாலும் இவ்விதமாகப் புறம் கூறுபவர்கள்
எங்களுடன், உங்களுடன் நன்கு பழகுபவர்களாக இருப்பார்கள்.
பிரச்சினை என்னவென்றால்...
இவர்கள் எப்பொழுதுமே முதுகுக்குப் பின்னால் புறம் கூறுபவர்களாதலால்
ஒருபோதுமே நேருக்கு நேர், முகத்துக்கு எதிரில் புறம் கூற மாட்டார்கள்.
இவர்களிடம் காது கொடுத்துக் கேட்பவர்களும் ,
அவற்றை முகத்துக்கு அஞ்சி உங்களிடம் வந்து கூற மாட்டார்கள்.
ஆனால் பதிலுக்குத் தாம் கேள்விப்பட்ட விடயத்துக்குக்
கால், கை வைத்து மேலும்
உயிர்கொடுத்து உலாவிட விடுவார்கள்.
இவ்விதமாக உலாவரும் வதந்திகள் உங்கள் காதுகளை வந்தடையும்போது
அவை நெடுந்தூரம் சென்று , சுற்றி வந்திருக்கும்.
அவ்விதம் வரும்போது நதி மூலம், ரிஷி மூலம் தெரியாதது போல்,
இவ்விதமான வதந்திகளின் மூலங்களும் தெரியாமல் போயிருக்கும்.
ஆனால் இவ்விதமான வதந்திகளின் மூலங்கள்
உங்களுக்கு வெகு அருகிலிருப்பதுதான்
வேடிக்கை மட்டுமல்ல துயரமானதும் கூட.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R