சல்லிக்கட்டுக் காளை!கவிதா பதிப்பக வெளியீடாக 'தினமணி: கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)'சல்லிக்கட்டுத்தடையைத்தொடர்ந்து அண்மைக்காலமாகத் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டம் பலரது கவனத்தையும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் பற்றிய விடயங்கள் மீது திருப்பியிருக்கின்றது. ஓரினத்தின் அடையாளங்களில் ஒன்றான அம்சமொன்றின் மீதான ஒருபக்கச்சார்பான தடையென்பது அதுவும் மத்திய அரசின் தடையென்பது நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகத்தையே விளைவிக்கும். சல்லிக்கட்டு விளையாட்டானது மிருக வதையென்றால் அதற்கான காரணங்களை விளக்கி, அதனைத்தடை செய்வதற்கான மக்களின் ஆதரவைப்பெற முயல வேண்டும். அதன் பின்னரே , அதற்கான ஆதரவு கிடைத்தால் மட்டுமே அதனைத்தடை செய்ய வேண்டும்.  இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால்..: சல்லிக்கட்டு என்பது மிருக வதையென்று மட்டும் கூறி விட முடியாது மனித வதையும் கூடத்தான். இவ்விளையாட்டில் மாடும் உயிரிழக்கலாம். அதனை அடக்க முயலும் மனிதரும் உயிரிழக்கலாம். அல்லது மாடும் படு காயமடையலாம். மனிதரும் படு காயமடையலாம். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் காளையை அடக்கப்புறப்படும் காளையர்கள் இவ்விளையாட்டில் தாம் எதிர்நோக்கும் வெற்றி, தோல்விகளை, அபாயங்களை உணர்ந்தே இறங்குகின்றார்கள். ஆனால் காளைகள் (எருதுகள் அல்லது காளைகள்) அவ்விதம் உணர்ந்தே இறங்குகின்றனவா என்பதை ஒருபோதுமே உணர முடியாது. ஆனால் அவை ஆக்ரோசமாகத் தம்மை எதிர்ப்போர் மீது பாய்வதைப்பார்க்கும்போது அவையும் இந்த விளையாட்டில் தீவிரமாகத் தம்மை ஈடுபடுத்துக்கொள்கின்றன என்பதை மட்டும் உணரலாம்.

சல்லிக்கட்டு என்றதும் எனக்கு ஞாபகம் வருபவர் தமிழ்க்கலை, இலக்கியத்துறைகளில் பன்முகத்தளங்களில் ஒளிர்ந்து மறைந்த எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்தாம். அவரது புகழ்பெற்ற நாவல்களிலொன்று 'ராவ்பகதூர் சிங்காரம்'. விகடனில் கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியாகிப்பலத்த ஆதரவினைப்பெற்ற தொடர்கதை அது. பின்னர் திரைப்படமாகவும், ஜெமினி தயாரிப்பாக, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப்பேரொளி பத்மினியின் நடிப்பில் வெளிவந்தது. நான் இத்திரைப்படத்தினைப் பார்த்திருக்கின்றேன். யாழ் வின்சர் திரையரங்கில் பார்த்த திரைப்படங்களில் 'விளையாட்டுப் பிள்ளை'யும் ஒன்று.

கொத்தமங்கலம் சுப்புவின் 'ராவ்பகதூர் சிங்காரம்'திரைப்படத்தின் இறுதியில் சிவாஜிக்கும் , காளை மாட்டுக்குமிடையிலான மோதலொன்று வரும். காளையின் கொம்பில் விடத்தைத்தடவி சிவாஜியைக்கொல்ல எதிரிகள் முயற்சி செய்வார்கள். காளையை அடக்கிச் சிவாஜி வென்று விடுவார். அதன் பிறகே காளையின் கொம்பில் விடம் தடவிய விடயத்தை ஓடிவந்து நாயகி பத்மினி கூறுவார். அச்சமயம் பார்த்து விழுந்திருந்த காளையும் மெல்ல எழும்பும். நான் நினைப்பேன் காளை வந்து சிவாஜியைக் கொம்பினால் குத்தப்போகின்றதோ என்று. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. காளைக்கும், காளைக்கும் (சிவாஜி) இடையில் நடைபெற்ற சண்டையில் மனிதக் காளை வெற்றியடைந்தாலும், மிருகக்காளையும் இறந்து விடவில்லை. தப்பி விடுகின்றது.

மேற்படி திரைப்படத்தில் தமிழர்களின் இன்னுமொரு மரபுவழி விளையாட்டான சிலம்பாட்டமும் வருகின்றது. வாத்தியார் (எம்ஜிஆர்) சிலம்பாட்டம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். ஆனால் சிவாஜியின் சிலம்பாட்டம் பற்றி அறிந்திருக்கின்றீர்களா? இத்திரைப்படத்தில் சிலம்பாட்டம் ஆடும் சிவாஜியைக் காணலாம்.

கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 'மஞ்சிவிரட்டு' என்னும் தலைப்பிலும் சிறுகதையொன்று எழுதியிருக்கின்றார். அதன் பெயரில் அவரது சிறுகதைகளை உள்ளடக்கித்தொகுதியொன்றும் வெளியாகியுள்ளது. இவ்விரு நூல்களும் அண்மையில் மீண்டும் ஆனந்தவிகடன் பிரசுரங்களாக வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 'விளையாட்டுப் பிள்ளை' திரைப்படத்தை யு டியூப்பில் கண்டு களிக்கலாம்.

தமிழின் முக்கிய நாவல்களிலொன்றாகக் கருதப்படும் 'எழுத்து' சி.சு.செல்லப்பாவின் 'வாடி வாசல்' நாவலும் சல்லிக்கட்டு பற்றிக் கூறும் நாவலாகும் என்பதும் இச்சமயத்தில் குறிப்பிடத்தக்கது.

சல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று என்பதைத்தவிர அது பற்றிய பல விபரங்கள் பலருக்குத் தெரியவில்லை என்பதை அறிய முடிந்தது. அவர்களுக்காக சல்லிக்கட்டு பற்றிய விக்கிபீடியாக் கட்டுரைக்கான இணைப்பினை இங்கே தருகின்றேன்.

சல்லிக்கட்டு பற்றிக் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவிலிருந்து....:

"விக்கிபீடியா: ஏறுதழுவல்: ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது."
முழுக்கட்டுரையையும் வாசிக்க: https://ta.wikipedia.org/s/f79


கவிதா பதிப்பக வெளியீடாக 'தினமணி: கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)'

கவிதா பதிப்பக வெளியீடாக 'தினமணி: கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)'கணையாழி சஞ்சிகையில்1995 - 2000 காலப்பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூலொன்று கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளதை அண்மையில் 'தினமணி'யின் 'நூலரங்கம்' பகுதியில் வெளியான செய்திக்குறிப்பின் மூலம் அறிய முடிந்தது. அவற்றில் கணையாழியில் நான் எழுதிய கட்டுரையும் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது மகிழ்ச்சியைத்தந்தது. தமிழகத்திலிருந்து வெளியாகும் சிற்றிதழ்களில் கணையாழி, அம்ருதா ஆகிய சஞ்சிகைகளில் எனது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கணையாழியில் எனது கட்டுரைகள் நான்கும் ( சார்பியற் தத்துவம், சூழற் பாதுகாப்பு, பழந்தமிழர்தம் கட்டடக்கலை, நகர அமைப்பு மற்றும் ஆர்தர் சி.கிளார்க் பற்றிய கட்டுரைகள்), சிறுகதையொன்றும் (கனடாச்சிறப்பிதழில் வெளியான 'சொந்தக்காரன்' சிறுகதை) வெளியாகியுள்ளன.

கணையாழி சஞ்சிகை நீண்ட காலமாக நான் வாசிக்கும், மாதந்தோறும் வாங்கும் சஞ்சிகைகளிலொன்று. என் ஆக்கங்களைப்பிரசுரித்ததோடு எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய நூலுக்குத் தொல்லியற் துறையில் அறிஞரான ராமச்சந்திரனின் மதிப்புரையினையும் பிரசுரித்திருந்தது இத்தருணத்தில் ஞாபகத்துக்கு வருகின்றது.

'தினமணி'யில் வெளியான குறிப்பு இதோ: தினமணி: கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) - தொகுப்பாசிரியர்கள்: ம.ரா., க.முத்துக்கிருஷ்ணன், ஜீவ கரிகாலன் -  

கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) - தொகுப்பாசிரியர்கள்: ம.ரா., க.முத்துக்கிருஷ்ணன், ஜீவ கரிகாலன்; பக்.352; ரூ.260; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044- 2436 4243.

சிறுபத்திரிகை உலகில் தனக்கென தனி இடம் பிடித்த "கணையாழி'யில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ், சமகால இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள், வெளிநாட்டுத் திரைப்படங்கள் பற்றிய அறிமுக, விமர்சனக் கட்டுரைகள், புதிய நாடக முயற்சிகள் பற்றிய கட்டுரைகள், படைப்பாளிகளின் இலக்கியம் சார்ந்த பதிவுகள், பழங்கால வரலாறு தொடர்பான கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் என பல திசைகளிலும் பயணிக்கின்றன இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள். ஒரு சிற்றிதழின் விரிவான எல்லைகள் நம்மை வியக்க வைக்கின்றன.

அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கார்த்திகேசு சிவத்தம்பி, கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, சுஜாதா, தஞ்சை ப்ரகாஷ், தி.க.சி., தமிழ்நாடன், பிரபஞ்சன், புதுமைப்பித்தன், மருதமுத்து, வெங்கட்சாமிநாதன், வண்ணநிலவன், வெளி ரங்கராஜன், வ.ந.கிரிதரன் உள்ளிட்ட தமிழின் முக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் வாசகனை தமிழ் இலக்கிய, பண்பாட்டு, அறிவுவெளிக்கு அழைத்துச் செல்கின்றன. சிறந்த தொகுப்பு.

http://www.dinamani.com/specials/nool-aragam/2017/jan/16/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1995-2000-2632842.html

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R