ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்முன்னுரை:
தமிழர்பண்பாட்டின் கருவூலமாகத் திகழ்வது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகும் பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்களுல் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் இந்நூலின் கடையேழு வள்ளல்களைப் பற்றிய வரலாறு பதிவு செய்யப் பட்டுள்ளது. பேகன் பாரி காரி ஓரி ஆய் அதியமான் நள்ளி எனும் இவ்வள்ளல்களின் வரலாறு கொடைத்திறத்தைக் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மயிலுக்குப் போர்வை தந்த பேகன்:
பேகன் என்பவன் ஆவியர் குடியின்கண் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அப்பேகன் மலை வளம் உலா வரும்போது பருவத்தே பெய்த மழையால் வளம் மிகுந்த பக்கத்தே வாழும் காட்டு மயில் இயல்பாக அகவியது. ஆனால் அது குளிரால் நடுங்கியது என்று எண்ணி தான் அணிந்திருந்த நுட்பமான வேலைப்பாடுகளுடைய விலை உயர்ந்த போர்வையை அதற்குப் போர்த்தி அதன் குளிரை நீக்கினான் இதனை

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய     அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்” (சிறுபாண் 85-87)

எனும் பாடல் வரி விளக்குகிறது.

முல்லைக் கொடி படர தேர் தந்த பாரி:
பறம்பு மலையின் குறுநில மன்னன் பாரிபற்றி புறநானூறு அகநானூறு நற்றிணை குறுந்தொகை போன்ற தொகை நூல்கள் மட்டுமின்றி சிறுபாணாற்றுப்படையும் சிறப்புற எடுத்தியம்புகிறது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளல் பெருமான் போல
கருணை உள்ளம் கொண்டவன் பாரி

வற்றாத அருவியையுடைய பறம்பு மலையின் அருகில் சிறிய மலர்களை உடைய முல்லைக்கொடி படருவதற்கு கொம்பின்றித் தவிப்பதைக் கண்டு தான் ஏறி வந்த பெருந் தேரினையே முல்லைககொடி படர நிறுத்திச் சென்றான் அவ்வள்ளல்

பாரியின் இச்செயலை நினைக்கும் தோறும் வியப்பு மேலோங்குகிறது.ஏனெனில் இன்று மனிதனுக்கு மனிதன் உதவுவதே கடனாகச் செய்யும் நிலையில் தாவரத்தையும் ஓர்உயிர்போல் மதித்த  பாரியின் உயர்ந்த குணம் என்றென்றும் நினைக்கத்தக்க ஒன்றாகும்

குதிரையுடன் நாடு தந்த திருமுடிக்காரி
மலைய மான் நாட்டை ஆண்டவன் திருமுடிக்காரி என்னும் குறுநில மன்னன் தன்னை நாடிவந்தவர்க்கு இல்லை என்று கூறாது வாரி வழங்கும் வள்ளல்.இவன் தனது குதிரையையும் தன் நாட்டையும் அனைவரும் வியக்கும்படி வறியவற்கு கொடையாக நல்கினான் இதனை

“வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த
ஆழல் திகழ்ந்த இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக்கைக்காரியும்” (சிறுபாண் 92-95)

எனும் பாடல் வரி விளக்குகிறது.

நாட்டைப் பரிசாக வழங்கிய ஓரி
ஓரி ஆதன் ஓரி என்றும் வல்வில் ஓரி என்றும் அழைக்கப்பட்டான்.இவன் எய்த அம்பு ஓரே சமயத்தில் பல உயிர்களை மாய்க்கும் ஆற்றல் கொண்டது என்பதை புறநானூறு வாயிலாக அறியலாம்.அத்தகைய ஓரி சுரபுன்னை மரங்கள் நிறைந்த நாட்டைக் கூத்தா;களுக்குப் பரிசாக வழங்கினான்.இதனை

குறும்பொறை,நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை, ஓரியம் என ஆங்கு”    சிறுபாண் 109-117

என்ற வரிகள் விளக்குகிறது

சிவபெருமானுக்கு கலிங்கம் நல்கிய ஆய் அண்டிரன்
ஆய் அண்டிரன் ஆய்குடி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் இவன் நாகம் தந்த நீலமணி பொதித்த விலையுயர்ந்த ஆடையை மர நிழலில் அமர்ந்துள்ள கல்லால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு கொடையாக வழங்கினான் இதனை

“நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர்திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும்” (சிறுபாண் 96-99)

என்ற வரிகள் விளக்குகிறது.

ஓளவைக்கு நெல்லிக்கனி தந்த அதிகமான்
காஞ்சியை ஆண்டவன் தொண்டைமான் அதிகமான் நெடுமான் அஞ்சி ஆவான். ஒருநாள் பெரிய மலையில் கருநெல்லி மரத்தில் கனிந்திருந்த ஒரே ஒரு இனிய நெல்லிக்கனியைத் தன் உயிரையும் பொருட்படுத்தாது பறித்து வந்தான் அமிழ்தினும் இனிய அக்கனியை தான் உண்டு நீண்ட நாள் வாழ விரும்பாமல் தமிழ் மூதாட்டி ஔவைக்குக் கொடுத்து உண்ணச் செய்தான் தன் வாழ்நாளையே ஔவைக்குக் கொடுத்த வள்ளளாகத் திகழ்ந்தான்  அதிகன்

“கமழ் பூஞ்சாரல் கவினிய  நெல்லி
ஆமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும்”(சிறுபாண் 100-103)

நாட்டு மக்களுக்கு வாரி வழங்கிய நள்ளி
தன்னிடம் உள்ள பொருளை மறைக்காமல் தன் மீது அன்பு காட்டும் உறியவர்கள் மகிழும்படி அனைத்து செல்வங்களையும் வழங்குபவன் நள்ளி.இவன் போர்முனையில் வெற்றி பெறும் ஆற்றலுள்ளவன்.நீண்ட கைகளையுடையவன் இடைவிடாத மழைத்துளி எப்பொழுதும் வீசிக் கொண்டிருக்கும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த குளிர்ந்த மலை நாட்டின் தலைவன் நள்ளியாவான் இதனை

“…………………….. கரவாது
நட்டோர்உவப்ப நடைப்பரிகாரம்
முட்டாது கொடுத்த முணை விளங்கு தடக்கை
துளி மழை பொழியும் வளிதுஞ்ச நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும் “(சிறுபாண் 104-107)

கடையேழு வள்ளல்களை விஞ்சிய நல்லியக்கோடன்
நல்லியக்கோடன் தன்னைப்புகழ்ந்து பாடும் பொருநர்க்கும் புலவர்க்கும் அருமறை பயின்ற அந்தணர்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல் தன்மை உடையவன். இமயம்போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவு இவர்களுக்காக எப்பொழுதும் திறந்தே இருக்கும். இதனை

“பொருநர்க்காயினும் புலவர்வர்க்காயினும்
அருமறை நாவின் அந்தணர்க்காயினும்
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன
அடையா வாயிலவன் அருங்கடைகுறுகி”    (சிறுபாண் 203-206)

என்ற அடிகளால் அறியலாம்.

முடிவுரை:
ஆற்றுப்படை நூல்களில் சிறுபாணாற்றுப்படையில் சிறுபாணன் பரிசில் பெறாதோனை பரிசில் பெற வழிப்படுத்துவதாக அமைகிறது. அவ்வாறு சிறுபாண் தனக்குப் பரிசில் கொடுத்த மன்னன் நல்லியக்கோடனைப் புகழ்ந்து கூறும் போது கடையேழு வள்ளல்களுக்குப் பின்பு ஒய்மான் நல்லியக்கோடன் வள்ளலாய்த்திகழ்வதாக சிறப்பாக எடுத்துரைக்கிறது.

 



உசாத்துணை நூல்: சிறுபானாற்றுப்படை

 

*கட்டுரையாளர்: - திரு.சி.திருவேங்கடம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் 641 028.-


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R