வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்!  - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துத் தெருக்களில் 'டபுள் டெக்கர் பஸ்'கள் ஓடித்திரிந்தன. எழுபதுகளின் இறுதிவரையில் ஓடியதாக ஞாபகம். கே.கே.ஸ். வீதிவழியாக மானிப்பாய் வரையில் அவ்விதமோடிய 'டபுள் டெக்கரில்' சில தடவைகள் பயணித்திருக்கின்றேன். 'டபுள் டெக்கரில்' பயணிக்கையில் எனக்கு எப்பொழுதுமே மேற்தட்டில் பயணிப்பதுதான் விருப்பம். 'டிக்கற்' எடுத்ததுமே மேலுக்கு ஓடிவிடுவேன். மேல் தட்டிலிருந்தபடி இருபுறமும் விரியும் காட்சிகளைப்பார்த்தபடி, அவ்வப்போது பஸ்ஸுடன் உராயும் இலைகளை இரசித்தபடி செல்வதில் அப்பொழுது ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்தது.

'டொராண்டோ'வில் உல்லாசப்பிரயாணிகள் நகரைச்சுற்றிப்பார்ப்பதற்காக இவ்விதமான 'டபுள் டெக்கர்' பஸ்களை இன்னும் பாவிக்கின்றார்கள். அவற்றைப்பார்க்கும் சமயங்களிலெல்லாம் அன்று யாழ்ப்பாணத்தில் 'டபுள் டெக்கரி'ல் பயணித்த பால்ய காலத்து அனுபவங்கள்தாம் நினைவுப் புற்றிலிருந்து படம் விரிக்கும். 'டபுள் டெக்கரில்' பயணிப்பதைப்பற்றி ஏன் துள்ளிசைப்பாடகர்கள் 'டபுள் டெக்கரில்' பஸ்ஸில் போனேனடி!' என்று  பாடல்கள் எதுவும் எழுதவில்லை என்று இவ்விதமான சமயங்களில் தோன்றுவதுண்டு.

'டபுள் டெக்கர்' பஸ் என்றதும் ஞாபகத்துக்கு வரும் இன்னொரு விடயம். நண்பரொருவர் மானிப்பாய்ப்பக்கமிருந்து வருபவர். அவரது High school sweet heart' ஒருவர் யாழ் வேம்படியில் படித்துக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்வாரென்றால் பாடசாலை முடிந்து அந்தப்பஸ்ஸில் பயணிக்கும் அந்தப்பெண்ணைப்பார்ப்பதற்காக, அவரது கவனத்தைக் கவர்வதற்காக யாழ் பொது சனநூலகத்துக்குச் சென்று , காத்திருந்து, பாடசாலை முடிந்து அந்த  பஸ்ஸில் பயணிப்பார். ஒருபோதுமே நூலகப்பக்கமே செல்லாத நண்பன் இவ்விதம் நூலகம் சென்றது அக்காலத்தில் எமக்கு வியப்பினைத்தந்தது. பின்னர்தான் உண்மை புரிந்தது. ஆனால் அவரது முயற்சி அவருக்கு வெற்றியளிக்கவில்லை.  இவ்விதம் யாழ்ப்பாணத்து 'டபுள் டெக்கர்'களில் பல காதல் காவியங்களும் நிகழ்ந்ததுண்டு :-) காதல் காவியங்கள் எல்லாமே தோல்வியில் முடிபவைதாமே. :-) அந்த வகையில் நண்பரின் காதலும் காவியமாகிவிட்டது. :-)

இந்த டபுள் டெக்கர் பஸ்ஸென்றதும் இன்னுமொரு விடயமும் ஞாபகமும் வருகின்றது. அண்மையில் கனடா வந்திருந்த நித்தி கனகரத்தினம் தனது 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே' பாடலைபற்றிக் குறிப்பிடும்போது கூறியவற்றை அவர் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அது வருமாறு:

"ஒருமுறை 'டபிள் டெக்கர்' பஸ்ஸில் மேற்தட்டில் பயணித்துக் கொண்டிருந்தபொழுது அங்கே ஒரு கிழவரும் பேரனும் பயணித்துக்கொண்டிருந்ததாகவும், நல்ல நிறைவெறியிலிருந்த கிழவர் பேரனுக்கு கள்ளுக்குடிக்கக்கூடாதென்பதை வலியுறுத்தி அறிவுரைகள் கூறிக்கொண்டிருந்ததாகவும், அவர் அப்போது கூறிய வார்த்தைகளின் தாக்கமே பின்னர் அவரை இந்தப்பாடலை எழுத வைத்ததாகவும்" குறிப்பிட்டார்.//

ஆக, நித்தியின் 'கள்ளுக்கடைப்பக்கம் போகாதே' என்னும் பாடலுக்கும் ஒருவிதத்தில் இந்த 'டபுள் டெக்கர்' பஸ் காரணமாகவிருந்திருக்கின்றது என்பது புரிகிறது. :-)

முகநூல் எதிர்வினைகள்:


1. Sara Sivam 1972 க்குப்பின்னர் யாழப்பாணத்திலும் 1974க்குப்பின்னர் கொழும்பிலும் இரட்டைத் தட்டு பஸ் ஓடியதாக எனக்குத் தெரியவில்லை, அதன் பின்னரான காலத்தில் நான் காணவுமில்லை,,

2. Mohan Balasundaram கோப்பாய் - யாழ்ப்பாணம், கச்சேரி - யாழ்ப்பாணம் ஆகிய வீதிகளிலும் டபுள் டெக்கர் பயணித்தது அதில் கோப்பாய் யாழ்ப்பாணம் பயணம் எனது நாளாந்த பயணமானது மறக்கமுடியாத நினைவுகள்

3. Naresh Newton இடையில் ஒரு சிறிது காலம் இல்லாமல் இருந்து மீண்டும் 80களில் இந்த பஸ்கள் யாழில் பாவனைக்கு வந்தது. பின்னா் மீண்டும் இல்லாமல் பேயிற்று. கொழும்பில் தற்போதும் உண்டு சில தனியாா் கம்பனிகள் அவற்றை வாங்கி உல்லாசப் பயணிகள் நகா் உலா வருவதற்கு பயன்படுத்துகிறாா்கள். நான் லண்டன் சென்றபோது இதேபோன்ற பஸ்ஸில் நகா் உலா வந்திருக்கிறேன். லண்டனில் பயன்படுத்தப்படும் டபுள்டெக்கா் பஸ்களைபோன்று கொழும்பில் இவா்களும் மேற்பகுதியை அரைவாசியாக வெட்டி அழகாக வடிவமைத்துள்ளாா்கள்.

4. Chinniah Rajeshkumar 764 டபிள் டெக்கர் நான் தினமும் போய் வந்தது . கூலிங் கிளாஸ் எண்ட ரைவர் பேவரிட் . இல்லா பஸ்ஸையும் முந்துவார். கூலிங் கிளாஸ் இல்லாமல் அவரை கண்டதில்லை

5. Sinnakuddy Mithu சிறு வயதில் எப்பாவாது எனது பெற்றோரோடு யாழ் நகரம் செல்லும் பொழுது கொழும்பை மாதிரி டபுள் டக்கெர் ஓடுது என்று வியந்து அப்பரிடம் சொல்வதுண்டு.( சிறு வயதில் யாழ் நகரம் செல்வதிலும் பார்க்க அப்ப கொழும்பு செல்வது அடிக்கடி -வாறண்ட் கலாச்சாரம்). இந்த டபுள் டெக்கர் பஸ் நெல்லியடி தாண்டி பருத்தித்துறை போகாதா என்று ஏங்கியதுண்டு

எங்கள் ஆசைகளுக்கு தடையாக இருப்பது மாலிசந்திக்கும் மந்திகை ஆஸ்பத்திரி இடையிலை ஒரு பழங்கால தெருமூடி மடம் இருக்கு அதை எடுத்தால் தான் டபுள் டெக்கர் விடலாம் என்றும் ,,அதற்கு பலர் விருப்பமில்லை என்றும் கூறப்பட்டது.

மற்ற ஒரு காரணம் சொல்லப்பட்டது வடமாரட்சி பகுதிக்கு டபுள் டெக்கர் விட்டால் சாலையோரம் இருக்கும் பனக்காடுகளை வெட்ட வேண்டி வரும் என்று சாக்கு சொல்லி எங்கள் ஆசைகளை அடக்க பல கதைகள் அந்த நேரம் உலாவியது என்னவோ உண்மை தான்.

6. Sara Sivam இது எனக்குப் புதிய விடயம் எனது மிகச்சிறுவயதில் நெல்லியடிக்கு இரட்டைத்தட்டு பஸ் வந்திருக்கின்றதென்பது, அப்போது நான் நெல்லியடியில் வசிக்கவில்லை. 1967 க்குப்பின்னர் நெல்லியடிக்கு அந்தப் பஸ் ஓடவில்லை, ( எனது வீடு நெல்லியடியில் Petrol station அருகில் பிரதான வீதியுடனே இருந்தது)

7. Sinnakuddy Mithu சார் ..ரொம்ப குழப்பிறீங்க..டபுள் பஸ் நெல்லியடியால பஸ் ஓடணும் என்று நாம ஆசைப்பட்டம் ஆனால் ஒருக்காலும் ஓடவில்லை..அது கோப்பாய் இங்காலை ஒரு கோல்ட்டுக்கும் வரவில்லை. நீங்க நெல்லியடி டவுண் காரங்க இருக்கட்டும். .நாம நெல்லியடியிலை பஸ் எடுக்கிறவங்க என்றதாலை நியாயத்தை பேச கூடாதா

8. ajaji Rajagopalan இந்த பஸ்ஸை மேலாலை போற பஸ் என்று அழைத்தவர்களும் இருந்தனர். இந்த பஸ்ஸின் மேல் பாதியை வெட்டி அகற்றிவிட்டுக் கீழ்ப் பகுதியை மட்டுமே சேவையில் விட்டிருந்தார்கள். கொழும்பில் அது ஒரு காலம்.

 


பிரடெரிக் எங்கெல்ஸின் 'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்'.

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்!  - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!மார்க்சியம் பற்றி அறிய வேண்டும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்களிலொன்று பிரடெரிக் எங்கெல்ஸின் 'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்'. வரலாற்றுப்பொருள்முதல்வாத அடிப்படையில் மானுடரின் ஆதிக்குழு சமுதாயத்திலிருந்து, எங்கெல்ஸின் காலகட்டம் வரையிலான மானுடரின் வரலாற்றை அணுகி ஆராய்ந்து குறிப்பாக 'குடும்பம், தனிச்சொத்து, அரசு' என்பவை எவ்விதம் பல்வேறு சமுதாய அமைப்புகளினூடு தோன்றி , பரிணாமமடைந்தன என்பது பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூல். 'படிப்பகம்' தளத்தில் இந்த நூலை வாசிக்கலாம். பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

http://padippakam.com/document/M_Books/m000017.pdf

இப்புத்தகத்தை நான் முதன் முதலில் வாசித்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். கொம்பனித்தெருவிலிருந்த மாஸ்கோ பதிப்பக நூல்களை விற்பனை செய்து வந்த புத்தக்கடையில் வாங்கி வாசித்த நூல்களிலொன்று. ஏனைய நூல்கள் எங்கெல்ஸின் 'டூரிங்கிற்கு மறுப்பு', 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை', 'இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப்பொருள்முதல்வாதமும் (மார்க்சிய அறிஞர்கள் சிலர் சேர்ந்து எழுதியிருந்த தொகுப்பு நூல்), டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு'.

முகநூல் எதிர்வினைகள்::

1. Jenney Jeyachandran நன்றி கிரிதரன்! கண்டிப்பாக ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.எனது இருபதாவது வயதில் வாசித்தது. இதுவே எமது சமூக அறிவியல் அறிதலுக்கான அடிப்படை புத்தகம் .ஆயினும் இதனை எழுதில் விளங்கிக் கொள்வது கடினம்.எனவே இதற்கு முதல் *வோல்காவிலிருந்து கங்கை வரை * என்ற புத்தகத்தை வாசிப்பதானது ஏங்கெல்ஸின் புத்தகத்தை வாசித்து புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும். இது எனது அனுபவத்தின் உண்மை.முடிந்தால் முதலில் இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள் .மிக பிரயோசனமாக இருக்கும் . நன்றி !

2. Jenney Jeyachandran *குணா*வின் இயக்கவியல் பொருள்முதல் வாதமும் வரலாற்று பொருள்முதல் வாதமும்*என்ற புத்தகம் படிப்பதற்கு மிக எளிமையான மொழியில்இருக்கும்.இதனை எங்கெல்ஸின் ,குடும்பம் .....புத்தகத்தை வாசித்த பின் படித்தால் இவற்றின் ஒன்றுக்கொன்றான தொடர்பினை இலகுவாக தெளிவாக புரிந்து கொள்ளலாம். காலத்திற்கும் எமது எண்ணத்தில் நிற்கும்.இதுவும் எனது அனுபவ குறிப்பே.நன்றி.



வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்!  - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!
எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்' எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற மலையாள நாவலை மிகவும் திறமையாக மொழிபெயர்த்திருக்கிறார் மணவை முஸ்தபா என்பதை நாவலை வாசிக்கையில் உணர முடிகிறது. சாகித்திய அக்காதெமி வெளியீடாக வந்த இந்த நாவல் இவ்வாறு தொடங்குகின்றது:

"இரவு. ஈர வயல் வரப்பின் புது மழைக்கு உயிர் பிடித்திருந்த அருகம் புல்மீது உறங்கிக் கிடந்த சின்னஞ்சிறு பச்சை வெட்டுக்கிளிகள் காலடி ஓசை கேட்டு உறக்கம் கலைந்தது. குதிகாலை ஊன்றி அப்பால் எம்பித் தாண்டிச்செல்லும்போது அவை மெல்லிய ஓசை எழுப்பின. அது எதையோ நினைவூட்டுவதாக இருந்தது. எது எனச்சொல்லத்தெரியவில்லை. காரணம் மனம் ஒரு நிலையில் இல்லாததுதான். வழக்கமாக மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் இவ்வோசையை எப்போது கேட்டேன்? இருட்டில் ஈர மண்ணின் வாடை. .. இருட்டுக்கும் இரவுக்கும் மணம் உண்டென்பது தெரியாமல் ஒரு நிமிஷம் நினைத்துப்பார்க்கும்படியாயிற்று. மீன்பிடி வலைகளை மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக எடுத்துச்சென்றபோது வழியில் உள்ள கலங்கள் நீர் பாதைபோல் இருந்தது. மழை நின்றபோதும் வான் இருண்டிருந்தது. அவ்வானத்தில் வெள்ளைக்கோடுகள் ஆங்காங்கே தென்பட்டன.

ஓலைத்தீப்பந்தம் வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது..."

இவ்விதம் நாவல் ஆரம்பமாகின்றது. நாவலின் முதல் வரிகளைப்படித்ததுமே நாவல் என்னை ஆட்கொண்டுவிட்டது. இவ்விதம் சில சிறந்த படைப்புகள் முதல் வரிகளிலேயே வாசகர்களைக்கவர்ந்து விடுகின்றன.

இவ்விதம் முதல் வரிகளிலேயே என்னை ஆகர்சித்த இன்னுமொரு நாவல் வங்க நாவலாசிரியர் அதீன் பந்த்யோபாத்யாயவின் 'நீல கண்டப்பறவையைத் தேடி'. இதுவும் சாகித்திய அக்காதெமி வெளியீடுதான். எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் அற்புதமான மொழிபெயர்ப்பில் வெளியாகியிருந்த நாவல். நாவல் கீழ்க்கண்டவாறு ஆரம்பமாகின்றது:

"சோனாலி பாலி ஆற்றின் மணலில் வெயில் சாய்ந்து விழுந்து கொன்டிருந்தது. ஈசம் ஷேக் படகின் மேல் நிழலில் உட்கார்ந்துகொண்டு புகை பிடித்துக்கொண்டிருந்தான். பின் பனிக்காலத்து மாலை. சந்தையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த கிராமவாசிகள் கரையோரமாக நடந்துகொண்டிருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் கிராமங்களும் திறந்த வெளிகளும் தெரியும். தர்மூஜ் கொடிகள் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தன. புகை பிடித்துக்கொண்டே ஈசம் ஷேக் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். பூச்சிகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. எங்கும் பொன்னிறத் தானியத்தின் மணம். அக்ராண் மாதத்தின் கடைசி நாட்கள். பள்ளங்களிலிருந்தும் தாழ்ந்த நிலங்களிலிருந்தும் தண்ணீர் வடிந்து ஆற்றில் விழுந்து கொண்டிருந்தது. தண்ணீர் விழும் ஒலி காதில் விழுந்தது,

மைதானத்தின் மறு ஓரத்தில் சூரியன் இறங்கிவிட்டான. மேல் பறக்கும் பூச்சிகளின் ரீங்காரம். தென்பக்கத்து மைதானத்திலிருந்து பறந்து வந்துகொண்டிருந்த பறவைகளின் நிழல் நீரின் மேல் விழுந்தது. .."


தமிழில் இவ்விதம் வர்ணனைகளால் என்னைக் கவர்ந்தவர் தி.ஜானகிராமன்.அவர்களின் நாவல்களில் இவ்வகையில் முக்கியமான நாவல் 'செம்பருத்தி'.

முகநூல் எதிர்வினைகள்:

1. Jeyaruban Mike Philip எஸ்.கிருஷ்ணமூர்த்தி என வந்திருக்கவேண்டும். அவரது மொழிபெயர்ப்பு அற்புதம். அத்துடன் "நீலகண்டப் பறவையைத் தேடி" இந்திய நாவல்களிலேயே ஒரு சிகரம் என்று கணிக்கிறேன். மதங்களைக் கடந்த உறவுகளை ஈசம்,மாலதி,ஜோட்டன்,மணீந்திரநாத், பெரியமாமி என என்ன அழகாகச் சொல்கிறார். நன்றி கிரி! இன்று அந்த நாவலோடு மனங் கிளர்த்த வைத்ததற்கு....
***
நன்று, தி.ஜா.வின் "அம்மா வந்தாள்", "மோகமுள்" இந்த இரண்டு நாவல்களும் பேசப்பட்டதுபோல அவரது "உயிர்த்தேன்", "செம்பருத்தி", "நளபாகம்", "கமலம்"போன்ற நாவல்கள் கவனிக்கப்படவில்லை. அவரது எல்லா நாவல்களிலுமே காவிரியை உயிர்ப்பித்து விட்டிருப்பார். இன்று காவிரி இல்லை. "அமிர்தம்" அவரது முதல் நாவல். அதிலும் தஞ்சையின் மண்மணம் கமழும்.
Like · Reply · 3 · Yesterday at 7:24pm

2. Giritharan Navaratnam //எஸ்.கிருஷ்ணமூர்த்தி என வந்திருக்கவேண்டும்// தவறினைச்சுட்டிக்காட்டியதற்கு நன்றி மைக்கல். திருத்தி விட்டேன். 'நீலகண்டப் பறவையைத் தேடி' எனக்குப்பிடித்த நாவல்களிலொன்று. இந்து, முஸ்லீம் முரண்பாடுகள், அவை எவ்விதம் மக்களைப்பாதிக்கின்றன, மானுடரின் பாலியல் உணர்வுகள் எவ்விதம் மானுடரை ஆட்டிப்படைக்கின்றன, மானுடரின் காதல் உணர்வுகள் எவ்விதம் மானுடரைப்பாதிக்கின்றன ... இவ்விதம் இந்நாவல் பல்வேறு தளங்களினூடு பயணிக்கின்றது. நாவலின் தலைப்பும் நல்லதொரு குறியீடு. இயற்கையின் பேரெழில் நாவல் முழுவதும் வியாபித்துக்கிடக்கின்றது. இவை போன்ற நாவல்களை நெருங்கிய தமிழ் எழுத்தாளர் தி.ஜா. என்பது என் கருத்து. ஆனால் அவர் மானுடரின் பாலியல் உணர்வுகளை, இயற்கையை வெளிப்படுத்திய அளவுக்கு, மானுடரின் சமூக, அரசியல் முரண்பாடுகளை அணுகவில்லையென்பதும் என் கருத்தே. ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்' இவ்வகையான நாவல்களுடன் வைத்து எண்ணத்தக்கது என்பதும் என் கருத்து. ஜெயகாந்தனின் நாவல்களிலேயே மிகச்சிறந்த நாவல் என்பது அதனை வாசிக்கும் எவருக்கும் நிச்சயம் புரியும். நீங்கள் கூறியதைப்போல் தி.ஜா.வின் தஞ்சை மண்மணம் கமழும் எழுத்து எவரையும் கவரும் தன்மை மிக்கது. அவரது 'மோகமுள்' அவரது படைப்புகளிலேயே மிகச்சிறந்த படைப்பு என்பதும் என் கருத்து. யமுனா, பாபு மறக்க முடியாத பாத்திரங்கள். அதுபோல் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்' நாவலில் வரும் ஹென்றி, தேவராஜன் , லாரி டிரைவர் துரைக்கண்ணு, அந்தக் கிளீனர் பையன் எல்லாருமே மறக்க முடியாத பாத்திரங்கள்.

3. Jeyaruban Mike Philip கிரியண்ணா!(நான் அப்படி அழைப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லை அல்லவா?) ஜெயகாந்தனுக்கும் ஜானகிராமனுக்கும் உள்ள வேறுபாடே சுயம்/சமுகம் பற்றிய வெளிப்பாடுதான். தி.ஜா.விடம் தனிமனித உளவியலின் சமூகத்தாக்கம், ஜெயகாந்தனிடம் சமூக உளவியலின் தனிமனுஷச்செயற்பாடு என்று பிரிகை அடைகிறது. இலக்கிய அழகியலில் தி.ஜாவை முன்னிறுத்தினாலும், ஜெயகாந்தனிடமுள்ள கூர்மை சமூகத்திற்கு தேவையானதுதான்.
Like · Reply · 2 · Yesterday at 9:06pm

4. Giritharan Navaratnam //கிரியண்ணா! (நான் அப்படி அழைப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லை அல்லவா?)// ஆட்சேபணை உண்டு.. :-) வழக்கம் போல் கிரி என்றே அழைக்கலாம் மைக்கல்.//தி.ஜா.விடம் தனிமனித உளவியலின் சமூகத்தாக்கம், ஜெயகாந்தனிடம் சமூக உளவியலின் தனிமனுஷச்செயற்பாடு என்று பிரிகை அடைகிறது.
இலக்கிய அழகியலில் தி.ஜாவை முன்னிறுத்தினாலும், ஜெயகாந்தனிடமுள்ள கூர்மை சமூகத்திற்கு தேவையானதுதான்.// அழகாகக் கூறியிருக்கின்றீர்கள் மைக்கல். நல்ல அவதானிப்பு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R