முன்னுரை
ஆய்வுக் கட்டுரைகள்!சங்க காலம் முதற்கொண்டே பாலியல் அடிப்படையில் பெண்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். இடைக் காலங்களில் தோற்றமெடுத்த சாதி, சமய பூசல்களும், சமூக மாற்றங்களும் அடிமை முறையைத் தோற்றுவித்தன. அதன் காரணமாகப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய பொதுவான சமூக உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன.
இதுபோன்ற துன்பங்களிலிருந்து பெண் விடுதலை பெறவேண்டும். ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று பெண் விடுதலைக்காகப் பலர் போராடியிருக்கிறார்கள். பெண் விடுதலைக்குத் தேவையான ஆரம்பப்படிகள் சிலவற்றைப் பட்டியலாகப் பாரதியார் தருகிறார். அவை வருமாறு:

பெண்களுக்கு விடுதலைக் கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப்படிகள் எவையென்றால்,

1.    பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக்கூடாது.
2.    அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி   வற்புறுத்தக்கூடாது.
3.    விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமான படுத்தக்கூடாது. 4.    பிது ராஜ்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்குச் சமபாகம் கொடுக்க வேண்டும்.
5.    புருஷன் இறந்த பின்பு ஸ்திரி மறுபடி விவாகம் செய்து கொள்வதைத்   தடுக்கக்கூடாது.
6.    விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜூவிக்க விரும்பும் ஸ்திரிகளை யதேச்சையான தொழில் செய்து  ஜூவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
7.    பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷனுடன் பேச கூடாதென்றும், பழகக் கூடாதென்றும் பயந்தாலும், பொறாமையாலும் ஏற்படுத்தப்பட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.
8.    பெண்களுக்கும் ஆண்களைப் போல உயர்தரக் கல்வியின் எல்லா நிலைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
9.    தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
10.    சீக்கிரத்தில் தமிழருக்குச் சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கு ராஜாங்க உரிமைகளில் அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால் பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுங்கள்.1

இவ்வாறு பாரதியார் எழுத்து மூலம் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். ஆனால் பெரியார் நடைமுறைச் செயல்களின் மூலம் பெண்ணடிமைத் தனத்தை நீக்கப் பாடுபட்டுள்ளார். பலவித எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் பெண்ணடிமைத் தனத்தைப் போக்கப் பாடுபட்டுள்ள நிலையினை அறியமுடிகிறது. பெண்ணடிமைத் தனம், பெண்கல்வி மறுப்பு, வரதட்சணை, எதிர்ப்பினைகளைக் கூறியதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்குக் கல்வி, மணவிலக்கு உரிமை பற்றிய கருத்துகளையும் பெரியார் தெரிவித்துள்ளார். இந்நிலையை எடுத்துக் கூறும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

பெண்கல்வி மறுப்பு
கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என்ற நாவலில் பெண்கல்விக்குத் தடை ஏற்பட்டிருப்பதை, பெண் பருவமடைந்த நிலையில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு, பருவமடைந்த பிறகு சமையல்தான் அவளுக்குத் தகுந்தது என்று எண்ணிக் கீழ்வருமாறு குறிக்கப்பெற்றுள்ளது.

'நான் இண்டர்மீடியேட் வரை வாசித்திருக்கிறேன். அதற்கு மேல் படிக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பந்தான். ஆனால் புஷ்பவதியாகிப் பருவமடைந்த பின்னர் கலாசாலைக்குப் போவது ஜாதீய தருமத்திற்கு ஒத்ததில்லையென்று என் தகப்பனார் தடுத்து விட்டார்'.2 இவ்வாறு பெற்றோர்களே பெண்கள் படிப்பிற்குத் தடையாக இருக்கின்றனர் என்பது இதன் மூலம் புலனாகின்றது. ஆண்களுக்குக் கீழ் நிலையில் தான் பெண்கள் இருக்கவேண்டும் என்பதும், அவர்கள் கல்வி கற்றால் பெண்களுக்குக் கீழ்தான் ஆண்கள் இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் கொண்டு அவர்களுக்குக் கல்வி கற்கத் தடை ஏற்பட்டிருக்கலாம். இதனை உணர்ந்த  பெரியார்,

1.    பெண்களை 30 வயது வரை படிக்க வைக்க வேண்டும்
2.    சாரதா சட்டத்தை அமுல் செய்ய வேண்டும்.
3.    பெண்களை போலீஸ் இலாகாவிலும் இராணுவத்திலும் எடுக்க வேண்டும்.
4.    விதவா விவாகத்தை ஆதரிக்க வேண்டும்.
5.    பெண்களுக்குச் சொத்துரிமையில் சமபங்கு அளிக்க வேண்டும்.
6.    கணவர் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்ய வேண்டும்.
7.    தேவதாசிச் சட்டத்தை உடனே அமுலுக்குக் கொண்டுவர வேண்டும். விபசார விடுதிகளை ஒழிக்க வேண்டும்.
8.    கோவில்களில் பொட்டுக் கட்டுதலைத் தவிர்த்த வேண்டும்.
9.    பெண்களுக்கு எல்லா இரயிவே ஸ்டேஷனிலும் தனித்தங்கும் அறை, பகலிலும் இரவிலும் வேலைக்காரப் பெண்கள் நியமிக்க வேண்டும்.3

என்று தம் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

வரதட்சணை கொடுக்கும் பழக்கம்

திருமணமுறைகள் இல்லாத காலத்தில் பெண்வழிச் சமுதாயத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்குச் சீதனம் கொடுத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டனர். காலப்போக்கில் இந்நிலை தலைகீழாக மாற்றம் பெற்றது. ஆண், பெண்ணை அடிமைப்படுத்தி அடிமைகளாக நடத்தத் தலைப்பட்டார்கள். இதனால் பெண்வீட்டார் மாப்பிள்ளைக்குச் சீதனம் கொடுத்து மணம் முடிக்க வேண்டிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. சங்ககாலத்தில் பெண்வீட்டார் மணமகனுக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இல்லை. ஆனால் பெண்களுக்கு நிலங்களைச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் அந்நாளில் உண்டு. தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. ஆனால் அதன் பின் குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் பணம் கொடுத்துத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரே பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பையனின் படிப்பு, அலுவல், தகுதிக்கு ஏற்பப் பெண் வீட்டாரிடம் விலைபேசி அதிகாரம் செய்து மிரட்டியும் வரதட்சணை வாங்கலாயினர். கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலில் ஆண், பெண்ணுக்குச்  சீதனம் கொடுத்துத் திருமணம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை விலைபேசி பெண்ணை இதுவரை வளர்த்ததற்குக் கூலியாக நிர்ணயம் செய்த தன்மையினைப் பற்றி, இதுவரை அப்பெண்ணை வளர்த்ததற்குக் கூலி கொடுத்தாலும் ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமா? வெனப் பரிகாசமாய்ச் சொல்லிச் சிரித்தார் பெரியவர். சோமசுந்தரம் பிள்ளையும், மாணிக்கவல்லியும் ரூபாய் ஐயாயிரம் கொள்ளையடித்ததிலிருந்து சந்தோஷத்தால் பொங்கி வழிந்ததோடு கமலவல்லியிடத்திலும் கொஞ்சம் கருணையாகவும் வாஞ்சையாகவும் நடந்து வந்தார்கள்.4 எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஆண்வீட்டார் வரதட்சணை கொடுக்கும் முறை எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

மறுமண மறுப்பு
கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவல் பெண் திருமணம் ஆனாலும் கணவன்; சம்மதத்துடன் காதலித்தவனையே திருமணம் செய்ய நினைத்தாலும் பெண்கள்  மறுமணம் செய்வதைத் தவறாகக் கூறும் நிலையினை, ' கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்களில் சிலரோ‚ இதென்ன அநியாயம்‚    இப்படியான அதிசயத்தை நாம் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை, கலிகாலக்கொடுமையென்று சொல்லுவது சரியாயிருக்கின்றது. சந்திரசேகரனோ‚ வெட்கமில்லாதவனென்றும், கமலவல்லியோ‚ மானங்கெட்டவளென்றும்' இகழ்ந்தார்கள்.5  என எடுத்துரைக்கிறது. இவ்வாறு பெண் காதலையும், மறுமணத்தையும் ஏற்க மறுக்கின்றனர்.  பெண் மறுமணத்திற்குச் சம்மதித்தாலும், மற்றவர்கள் ஏளனப்படுத்தும் நிலைதான் உள்ளன. இவற்றைப் பெரியார் பெண் முன்னேற்றத்தில் பெண்களே தடையாய் உள்ளதைப் பற்றி,  
பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கின்றார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழு விடுதலைக்குரியவர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தாங்கள் ஆண் அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதாக அறிவிலிகளாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில் பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண், இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றனர்.6 என்று குறிப்பிடுகின்றார்.

ஆண், பெண் விருப்பமறியாத் திருமணம்
மாப்பிள்ளை வீட்டார்களில் யார் அதிகம் பெண்ணுக்குச் சொத்துக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே பெண் கொடுக்கும் வழக்கம் அன்றிருந்தது. மாப்பிள்ளையின் வயது பற்றிக் கூடக் கவலையில்லை. கிழவனானாலும் சரி சம்மதமே. அந்த மாப்பிள்ளை பற்றிய பெண்ணின் விருப்பம் தேவைப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அன்று திருமணத்தில் மணப்பெண் விற்கப்பட்டாள். இதனைக் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலின், ரூபாய் ஐயாயிரம் பெற்றுக்கொண்ட தன் ‘தாய் தந்தையர்கள்” சந்திரசேகரனை மணப்பதில் தனக்கு இஷ்டந்தானா இல்லையாவென ஒருவார்த்தையாவது கேட்காமல் அவர்களுடைய இஷ்டத்திற்கும், வருவானத்திற்கும், உறவுக்கும் தக்கதான வழியில் நடந்து விட்டதை நினைத்து மனம் நெகிழ்ந்து கண்ணீர் வடித்தாள். தான் நினையாத நேரத்தில் அதிலும் தன் இன்னுயிர்க் காதலன் கண்ணப்பன் ஊரில்லாதபோது தனக்கு நேர்ந்துள்ள துரதிருஷ்டத்தையும், என்னதான் முயற்சித்தாலும் அதிலிருந்து விடுபடமுடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதையும் கல்யாணநாள் வெகு சமீபத்தில் குறிக்கப்பட்டிருப்பதையும் எண்ணும் போதெல்லாம் அவன் தாயை இழந்த கன்றுபோலக் கண்ணீருதிர்த்துக் கலக்க முற்றாள்.7 எனும் பகுதி அறியமுடிகின்றது.

மணவிலக்கு உரிமை
ஒரு ஆண் மணவிலக்கு உரிமை தரும் செய்தி பற்றிக் கருத்துக் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என்ற நாவலில் இடம் பெற்றிருப்பது, கமலவல்லி வெறுக்கத்தக்க குணங்களுள்ளவளல்ல. இன்னும் பார்த்தால் குணவிசேடங்களிலும், மதிநுட்பத்திலும் அவள் மிகமேம்பாடானவள். கல்யாண விஷயத்தில் ஆணாயிருந்தாலும் சரியே, பெண்ணாயிருந்தாலும் சரியே, அவரவர் தத்தம் மனசா¢யின்படி சர்வசுதந்திரமாய் நடக்கவிட்டுவிடுவதே மேன்மையாகும்.  இந்தவிசாலமான நோக்கத்தினாலேயே ‘நான்’ கமலவல்லி மறுபடியும் கண்ணப்பனை விவாகம் செய்து கொள்ள, என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன்.8    

இப்பகுதி வழி மனைவிக்கு விருப்பமில்லாத வாழ்வை வாழ அவசியமில்லாத நிலை உருவாகியுள்ளது என்பதை அறியமுடிகின்றது. இவ்வாறு ஆணுக்கு மணவிலக்கு உரிமையுண்டு. ஆனால் பெண்ணுக்கு மட்டும் இல்லை. பெண், ஆண் எவ்வளவு துன்பம் விளை வித்தாலும் சகித்துக் கொண்டு வாழும் மனநிலையைத் தான் பெற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையினைப் பெரியார் எதிர்கின்ற பாங்கு கீழ்வருமாறு அமைகின்றது.

'ஏதோ கல்யாணம் என்பதாக ஒன்றைச் செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே,  அது எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டு தானே இருக்க வேண்டும்” என்று கருதி, துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும்,  மனிதத் தன்மையும் சுயமரியாதையுமற்ற காரியமாகுமேயல்லாமல் ஒரு நாளும் அறியுடைமையாகாது என்பதே நமது அபிப்பிராயம்'.9 ஆணுக்கு மனைவியை விட்டுப் பிரிய எவ்வளவு உரிமையுண்டோ, பெண்ணுக்கும் கணவனை விட்டுப்பிரிய உரிமையுண்டு. அதேபோல் பெண்ணுக்கும் வாழ்வில் கொடுமைகளைச் சுமந்து வாழ அவசியம் இல்லை என்று மணவிலக்கு உரிமையைப் பற்றி எடுத்துக் கூறுகிறார்.   

தொகுப்புரை
*கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் பெண்கல்வியின் அவசியத்தினை வலியுறுத்தியுள்ளன. பெண் கல்வி கற்கத் தடை ஏற்படுதல் பற்றி இந்நாவல் விளக்கம் அளித்துள்ளது.
*வரதட்சணை, ஆண், பெண் விருப்பம் அறியாமல் திருமணம், மணவிலக்கு உரிமை போன்ற நிலைகளைப்பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

சான்றெண் விளக்கம்
1.    பாரதியார், பாரதியார் கட்டுரைகள், தொகுதி -1 ப. 86
2.    டி.பி. இராஜலட்சுமி, கமலவல்லி அல்லது சந்திரசேகரன், ப. 94
3.    எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, பெரியார்: சுயமரியாதை சமதர்மம், பக். 149-150
4.    டி.பி. இராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், ப. 32
5.    டி.பி. இராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக்.121- 122
6.    பெரியார், பெண் ஏன் அடிமையானாள், ப. 77
7.    டி.பி. இராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், ப. 33-34
8.    டி.பி. இராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்,  ப. 107
9.    பெரியார், பெண் ஏன் அடிமையானாள்?, ப. 35

துணைநூற்பட்டியல்
1.பாரதியார் - பாரதியார் கட்டுரைகள், தொகுதி - 1, கவிதா பப்பிளிகேஸன், தி. நகர், சென்னை - 17.  2007.
2.தந்தை பெரியார் - பெண் ஏன் அடிமையானாள்? பாரதி புத்தகாலயம், சென்னை - 18. 2006.
3.டி.பி. இராஜலட்சுமி    (ஆசி.)
ப. பத்மினி (பதி.ஆசி.) - கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், புலம் வெளியீடு, மதுரவாயல், சென்னை - 95. 2009.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R