நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!தமிழ் ஸ்டுடியோ இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு லெனின் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆவணப்பட இயக்குனர் தீபா தன்ராஜ் லெனின் விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் விழா நடைபெறவிருக்கிறது. ஒவ்வொருமுறையும் லெனின் விருது நடைபெறும்போது நன்கொடை கேட்டு எழுதுவேன். ஆனால் சென்ற ஆண்டே இனி நன்கொடை கேட்கக்கூடாது என்று முடிவு செய்தேன். அத்தனை கசப்பான சம்பவங்கள். அதன்படியே தொடர்ந்து ஓராண்டாக எவ்வித நன்கொடையும் இல்லாமல் தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை, செயல்பாடுகளை நிகழ்த்தி வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு லெனின் விருது மிக பிரம்மாண்டமாக தானாகவே உருவெடுத்துவிட்டது. குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செல்வமாகும். ஆனால் அவ்வளவு பணம் நல்ல சினிமா சார்ந்து இயங்கும் இயக்கத்திற்கு எப்படி கிடைக்கும். எனவே நண்பர்கள் தங்களால் இயன்ற தொகையை தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்கொடையாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. அனுராக் காஷ்யப் போன்ற உலகப் புகழ் பெட்ரா இயக்குனர் இந்த நிகழ்விற்கு வரவிருப்பதால் இதற்கென ஒரு சிறப்பும் தானாகவே சேர்ந்துவிடுகிறது. எனவே நண்பர்கள் நன்கொடை கொடுக்க தயங்கினால், ஸ்பான்சர் செய்யலாம். உங்கள் நிறுவனம் அல்லது தொழில் கொஞ்சம் பிரபலமடைய இந்த ஸ்பான்சர்ஷிப் உதவலாம். இதுவரை இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. நண்பர்கள் ஆயிரக்கணக்கில் கொடுக்க இயலாவிடிலும் தங்களால் இயன்ற வகையில் 500, 1000 என்று கூட நன்கொடை செலுத்தலாம். தொகையைவிட உங்களது பங்களிப்பு மிக முக்கியம்.

நன்கொடை கொடுக்கவிரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு மின்னஞ்சல் செய்யவும். ஐந்தாயிரத்திற்கு மேல் நன்கொடை கொடுக்கும் நண்பர்களுக்கு மேடையில் சிறப்பு செய்யப்படும். நன்கொடை செலுத்த வேண்டிய வாங்கி கணக்கு விபரங்கள்:

வங்கிக் கணக்கு எண் விபரங்கள்:

கணக்கு வைத்திருப்பவர் பெயர்: PADACHURUL
வங்கிக்கணக்கு எண்: 035005500700
வங்கி பெயர் & கிளை: ICICI Bank, Adyar Branch
IFSC Code: ICIC0000350


பணம் செலுத்திய பிறகு, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.m என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை அனுப்பி விடவும்.

தொடர்புக்கு: 9840698236

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R