தமிழ் இனி வெல்லும் - 2016புலம் பெயர்ந்த மண்ணான கனடிய மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்ற தெலை நோக்கோடு ரிஈரி (வுநவு) தொலைக்காட்சியின் ‘தமிழ் இனி வெல்லும்’ - தொடர் -2 இன் இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் 2016 ஆம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை , வுநவு தொலைக்காட்சியின் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அமரர் வை. சொக்கலிங்கம் ஞாபகார்த்தமாக, கனேடிய சிறார்களிடையே தமிழ் மொழியை ஊக்குவிக்கும் நோக்குடன் , ஆநனஉநவெசந ஊழnநெஉவ  நிறுவனர் வைத்திய கலாநிதி செந்தில் மோகன் அவர்களின் ஆதரவுடன்  திருமதி ராஜி அரசரட்ணம் அவர்கள் இந்தத் தொடர் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார்.

கீழ்ப்பிரிவுப் போட்டியின் போது, முதலிடத்தை ஜஸ்மிதா சிவரூபன் , இரண்டாமிடத்தை அபிவர்ஷி பாலசுப்ரமணியம் , மூன்றாம் இடத்தை துவாரகா ஜீவனேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேல் பிரிவுப் போட்டியில் முதலிடத்தை குபேரகா குமரேஸ்வரன், இரண்டாமிடத்தை ஆரணி சுகந்தன் , மூன்றாம் இடத்தை அகிலவன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். இறுதிப்போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன . நடிப்புடன் கூடிய இந்தப் போட்டி நிகழ்வில் மாணவர்களை விட அதிகமான மாணவிகளே கலந்து கொண்டதும் கவனிக்கத்தக்கது. இப்போட்டி நிகழ்வின்போது பிரதம நடுவராக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் கடமையாற்றினார். ஏனைய நடுவர்களாக வாசுகி நகுலராஜா, கலைவாணி பாலசுந்தரம், விமலா பாலசுந்தரம் ஆகியோர் கடமையாற்றினார்கள். தமிழினி வெல்லும் தொடரை தயாரிப்பதில் அரும்பணியாற்றிய வுநவு தொலைக்காட்சியின் இயக்குநர் ராஜி அரசரட்ணத்தையும், நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய வைத்திய கலாநிதி செந்தில் மோகன் குடும்பத்தினர், நடுவர்களாக பங்குபற்றிய எழுத்தாளர் குரு அரவிந்தன், வாசுகி நகுலராஜா, கலைவாணி பாலசுந்தரம், விமலா பாலசுந்தரம் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள். மேலும் இப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக இந்தப் போட்டி நிகழ்வை நடத்தி அதிக மாணவர்களை உள்வாங்கிப் பங்குபற்ற வைக்க இருப்பதாக அறிவித்திருந்தார்கள். புலம் பெயர்ந்த இந்தக் கனடிய மண்ணில் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் நிலைத்து நிற்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையை நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்திருந்தனர்.

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள்...

தமிழ் இனி வெல்லும் - 2016



தமிழ் இனி வெல்லும் - 2016

அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R