வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் பெப்ருவரி (2016) மாத இதழ் அதன் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலராக வெளிவந்துள்ளது. இதனை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்விதம் ஈழத்துப் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளரான எஸ்.திருச்செல்வத்தை ஆசிரியராகக்கொண்டு அவரால் வெளியிடப்படுவது.

மாதா மாதம் வெளியாகும் இதழ்கள் கனடாத் தமிழருக்கு, புதிய குடிவரவாளர்களுக்குப்பயனுள்ள விபரங்களை, ஆக்கங்களைத்தாங்கி வெளிவருவன. அவற்றை இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூற முடியாது.. ஆனால் இவ்விதழின் ஆண்டு மலர்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவை நிச்சயம் இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூறலாம். அந்த வகையில் இலக்கியச்சிறப்பு மிக்க மலராக இம்மாத இதழும் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இம்மலர் கனடாத்தமிழர் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் அதே சமயம், உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர் பற்றிய விபரங்களையும் தாங்கி வெளிவந்திருக்கின்றது.  அவ்வகையில் புலம் பெயர் தமிழர் சிறப்பு மலராகவும் இவ்விதழைக்கூறலாம். மலரின் கலை, இலக்கியச்சிறப்பு மிக்க கட்டுரைகளாகப்பின்வரும் கட்டுரைகளைக்குறிப்பிடுவேன்.

1. கனடாவில் தமிழ் ஒலிபரப்பு கால் நூற்றாண்டு வரலாறு - பொன்னையா விவேகானந்தன். கனடாவில் தமிழ் ஒலிபரப்பு வளர்ந்த கதையினை விரிவாக விபரிக்கும் கட்டுரை இது.

2. திரை விலகுகிறது.. மேடை நாடகங்கள் - ப.ஶ்ரீஸ்கந்தன். இக்கட்டுரையும் கனடாத் தமிழரின் நாடக வரலாற்றை விரிவாகப்பேசுகிறது; ஆவணப்படுத்துகிறது.

3.  இது படமல்ல. புலம்பெயர் திரைப்பட கவழிகை. - ரதன்.  திரைப்படங்களைப்பற்றிய பொதுவான கட்டுரை. இறுதியில் கனடாவில் வெளிவந்த திரைப்படங்களைப்பட்டியலிடுகிறது. இதற்குப்பதிலாக கட்டுரை முழுவதுமே கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்களைப்பற்றியதாக இருந்திருக்கும் பட்சத்தில், கனடாத்தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரையாக விளங்கியிருக்கும். கவழிகை என்றால் திரைச்சீலை. 'புலம்பெயர் திரைப்பட கவழிகை' என்ற தலைப்பு 'புலம்பெயர் திரைப்படத்திரைச்சீலை' என்ற பொருளினைத்தருகின்றது. அது பற்றிய குழப்பகரமான சிந்தனையைத்தருகிறது. இன்னும் எளிமையாகத் தலைப்பினை வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.

4. 'கனடாவில் தமிழ் இலக்கியம்! வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள் தொடர்பான சில அவதானிப்புகள்' - கலாநிதி நா.சுப்பிரமணியன். கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய விரிவானதொரு கட்டுரை. கனடாத்தமிழ் இலக்கியம் பற்றிய பல்வேறு பயனுள்ள தகவல்களைத்தரும் நல்லதோர் ஆய்வுக்கட்டுரை. 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகளை அடிப்படையாக வைத்து கனடாவின் முதல் தமிழ் நாவல், ஆரம்ப காலத்துக் கையெழுத்துச்சஞ்சிகைகள் போன்ற விபரங்களையும் கட்டுரை பதிவு செய்திருக்கின்றது. பல்வேறு தமிழ் ஊடகங்களைபற்றி விபரிக்கும் கட்டுரையில் இணைய இதழ்களின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் இல்லாதிருப்பது வியப்பினை அளிக்கிறது. ஏனெனில் கட்டுரையாசிரியர் பல்வேறு இணைய இதழ்களுக்குத் தன் படைப்புகளை அனுப்புபவர். 'பதிவுகள்' இணைய இதழிலும் கூட அவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான விபரங்கள் கூடச்சான்றாகப் பாவிக்கப்பட்டுள்ளன. இணைய இதழ்களின் பங்களிப்பை ஆசிரியர் மறந்திருந்தாலும், கட்டுரை கனடாத்தமிழ் இலக்கியம் பற்றிய பல்வகைத்தகவல்களையும் விமர்சன நோக்கில் வெளிப்படுத்துவதால், சில விபரங்கள் விடுபட்டிருந்தாலும் கூட,  (வ.ந.கிரிதரனின் 'எழுக மானுடா' கவிதைத்தொகுதி , இங்கு வெளியான கவிதை நூல்கள் பற்றிய குறிப்பில் தவற விடப்பட்டுள்ளது.)ஆய்வுச்சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது.

5. 'கனடாவில் தமிழ்ச்சிறுவர் இலக்கியம்' - குரு அரவிந்தன். எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுவர் இலக்கியத்துக்கும் பங்களிப்புச் செய்து வருபவர். கனடாத்தமிழ்ச்சிறுவர் இலக்கியம் பற்றிய விமர்சனத்தை முன் வைக்கும் கட்டுரையாக் இதனைக்கருதலாம். கனடாத்தமிழ்ச்சிறுவர் இலக்கியம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கட்டுரை கேள்வி எழுப்புகிறது. கனடாத்தமிழ்ச்சிறுவர் இலக்கியத்தை வளர்க்கச்செயற்படுபவர்கள் பற்றிய தகவல்கள், வெளியாகிய நூல்கள், ஒலி, ஒளி நாடாக்கள், சிறுவர் பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுகள், மற்றும் இறுவட்டுகள் போன்றவை பற்றிய விரிவான தகவல்களைக் கட்டுரையாளர் தந்திருந்தால் இன்னும் சிறப்பாகக் கட்டுரை அமைந்திருக்கும்.

6. 'கனடாத் தமிழ் இலக்கியங்கள் ஒரு நோக்கு'. - முனைவர் இ.பாலசுந்தரம். கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய நல்லதோர் ஆய்வுக்கட்டுரை. கனடாத் தமிழரின் சிறுகதைகள், நாடகங்கள், ஊடகங்கள், ஆய்வு நூல்கள், திறனாய்வு,  கவிதைகள் மற்றும் ஏனைய கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிக்கூறும் கட்டுரை. எனது சிறுகதைகளிலொன்றான 'பொந்துப்பறவைகள்' பற்றிய குறிப்பில் அதனைத்தவறுதலாக நாவலென்று குறிப்பிட்டிருக்கின்றார். சிங்கப்பூர்க் கல்விச்சபையால் தமிழ் மாணவர்க்குரிய பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட அக்கதை 'சுவடுகள்' சஞ்சிகையில் வெளியான சிறுகதை. பின்னர் வெளியான எனது 'அமெரிக்கா' தொகுதியிலுமுள்ளது.

மலரிலுள்ள கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய முனைவர் இ.பாலசுந்தரம் மற்றும் கலாநிதி நா.சுப்பிரமணியன் ஆகியோரின் இரு கட்டுரைகளுமே இத்துறை பற்றி வெளியான முக்கியமான கட்டுரைகளாகக்கொள்ளத்தக்கக் கட்டுரைகள். எதிர்காலத்தில் இத்துறை பற்றிய ஆய்வுகளுக்கு உசாத்துணையாக விளங்கப்பொகும் கட்டுரைகள்.

7. 'பார்த்ததைச்செய்யும் திறன்' - அ.முத்துலிங்கம். நாடக மற்றும் திரைப்பட நடிகரான , கனடாத்தமிழ் இளைஞர் ஷெல்லி அந்தோனி பற்றிய அறிமுகத்துடன் கூடிய நேர்காணல். அவரைப்பற்றி, அவரது கலைத்துறை முயற்சிகளைப்பற்றி, எதிர்காலத்திட்டங்கள், கனவுகள் பற்றி விரிவாக விபரிக்கும் நேர்காணல்.

8. 'பண்பாட்டு அபகரிப்பு' - க.நவம். எழுத்தாளர் நவத்தின் பண்பாட்டு அபகரிப்பு (Cultural Appropriation) பற்றிய நல்லதோர் அறிமுக மற்றும் ஆய்வுக்கட்டுரை.

9. 'சங்க இலக்கியத்தில் நாள்மீன்களும் கோள்மீன்களும்' - முனைவர் பால சிவகடாட்சம். சங்க இலக்கியங்களில் நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றிய விபரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் ஆசிரியர் அவ்வப்போது தனது தர்க்கரீதியான சந்தேகங்களையும் குறிப்பிடத்தவறவில்லை. அது கட்டுரையின் சிறப்பை இன்னும் அதிகரிக்கிறதெனலாம்.

10. 'வாசிப்போரால் வாழும் தமிழ்' - பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம். தமிழ் வாழ்வதற்கு வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை. அதே சமயம் பேச்சுத்தமிழை படைப்புகள் முழுவதும் , உரையாடல்கள் உட்பட,  பாவிப்பதைக் கடுமையாக விமர்சிக்கும் கட்டுரை. என்னைப்பொறுத்தவரையில் உரையாடல்களில் பேச்சுத்தமிழைப்பாவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே. மேலும் கதை சொல்லியின் ஆளுமையைப்பொறுத்து பேச்சுத்தமிழைக் கதை முழுவதும் பாவிப்பதிலும் உடன்பாடே. ஆனால் கதாசிரியர் கதை சொல்லியாக இருக்கும் பட்சத்தில் உரையாடல்களில் மட்டுமே பேச்சுத்தமிழைப்பாவிப்பது நல்லதாகவிருக்கும் என்பதென் கருத்து.

11. கனவு மெய்ப்பட வேண்டும்.  ஈழத்தமிழருக்கான தேசிய நூலகம். - என்.செல்வராஜா, நூலியலாளர். நூலியலாளர் செல்வராஜா அவர்களின் தேசிய நூலகத்தின் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை. தமிழர்தம் படைப்புகளைத்தனியொருவராக ஆவணப்படுத்தி வரும் செல்வராஜா அவர்களின் கனவு மெய்ப்படுவது தமிழர் அனைவருக்குமே மிகுந்த நன்மை பயப்பது.

இங்கு குறிப்பிட்ட கட்டுரைகள் பல சிறப்பான கட்டுரைகள். அவை இன்னும் சிறப்பானவையாக, ஆய்வுச்சிறப்பு மிக்கவையாக இருந்திருக்கும் அவ்விதமான கட்டுரைகளின் இறுதியில் கட்டுரையாசிரியர்கள் உசாத்துணைப்பட்டியல்களைத்தந்திருந்தால். எழுத்தாளர் க.நவம் ஒருவர் மட்டுமே தன் 'பண்பாட்டு அபகரிப்பு' கட்டுரையின் இறுதியில் சான்றுகளைப்பட்டியலிட்டிருக்கின்றார். இவ்விதமாகக் கட்டுரைகளின் இறுதியில் சான்றுகளைப்பட்டியலிடுவது மிகவும் அவசியமென்று கருதுகின்றேன். ஏனென்றால் இவ்விதமான கட்டுரைகளைத்தம் ஆய்வுகளுக்குப் பயன்படுத்த முனைபவர்களுக்கு மேலதிகப்பயனை அளிக்கக்கூடியவை இவ்விதமான உசாத்துணைப் பட்டியல்களே.

மலரில் வெளியாகியுள்ள ஏனைய ஆக்கங்கள் தமிழர் தம் சமூகப்பிரச்சினைகள், வர்த்தகம், மருத்துவம், வீடு விற்பனை, கடன் சுமை போன்ற பல்வகை விடயங்களைப்பற்றிக்கூறுகின்றன;  அறிவுரைகளை வழங்குகின்ற; அதனாலேயே மிகுந்த  பயன் மிக்கவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R