1. மௌனம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மழையை ஏந்திய இலையிலிருந்து

மெதுவாகக்கீழிறங்குகிறது மழைத்துளியொன்று

எண்ணெய்வாசனை கமழும் சமையலறை  தயாராகிறது

நாவின் மொட்டுக்களைத்தூண்டும்

செம்மண் தோட்டத்துக் கத்தரி

கிண்ணங்களில் அடங்குகின்றது

முத்துக்களெனத் திரண்ட மல்லிகை மொட்டுக்களை

நிமிடத்தில் கட்டி முடித்துவிடும் விரல்களின்

களி நடனம் மிளிர்கிறது

இணையின் பெயரை அழகாக உச்சரிக்கும் இதழ்களுக்குள்

உமை விடுபட்டு விடுகிறாள் அவ்வப்போது

அர்த்தநாரி இழந்துபோக

சிவனின் தாண்டவம்

சிந்தையில் செங்கொடி படர்ந்த நாட்களில்

படிந்த நிழல்

சித்தன்ன வாசல் ஓவியமாய்ப் பூத்திருக்கிறது

விழி நோக்கி

உன் பேச்சு அதிகமென்று

வேலியிட்ட மணித்துளிகளில்

பொங்கியெழும் பேரலயென மேலெழுந்து அடங்கும் மனம்

ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக்கொள்கிறது

மௌனத்தினுள் காளியின் நீண்ட நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது

சிந்தும் இரத்தத்துளிகளுடன்.

 

2. ஒழிந்து போனவள்


உக்கிரமாகப் பாய்ந்த சூரியனின் ஒளிக்கதிர்கள்

வேகத்தைக்குறைத்துக்கொள்கின்றன

மதியம் கடந்து கொண்டிருக்கிறது

மெதுவாக

முகடுகளும் நீர்ச்சுழிகளும்

உடலில் மையங்கொள்ளக் கொள்ள

குருதி பாய்கிறது வெளியெங்கும்

அடைகாக்க முடியாத சிறுமி

மஞ்சள் சிவப்பு எனச்சாயம் பாய்ந்து

ஒளியிழந்து நிறங்களுக்குள்

காணாமல் போகிறாள்.

 

3. கூர்வாள்

பொங்கி வருகிறது நதியின் பிரவாகம்

காற்றில் அலைய வரும் கூந்தலில்

நட்சத்திரங்களைச் சூடியிருக்கிறாள்

தோளில் படியும் விரல்களில்

அன்பின் வன்மையை உணர்கிறேன்

எவரும் அறியாத கோடுஒன்றைச் செதுக்கியிருக்கிறாள்

அவளைத்தொட்டுவிட முடியாத

எல்லைக்கோடது

தாண்ட நினைத்த மாத்திரத்தில்

கூர்வாளென உருமாறி நகைக்கிறது.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R