- ஜூன் 2003 இதழ் 42 பதிவுகள் இணைய இதழில் வெளியான நிகழ்வுக்குறிப்பு ஒரு பதிவுக்காக. -

தமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளதுதமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளது. காற்றின் தழுவலில் நித்தம் சிலிர்த்து அவ்வப்போது சூரியக் குளியலிலும் மறு பொழுது பனியின் போர்வையிலுமாய் - பொழுதொரு மேனியாய், பொழுதின் மேனியாய் - துண்டம் துண்டமாய் சிதறிக் கிடக்கும் நோர்வே. பொழுதுகளின் வார்த்தைகளற்ற உலகை எங்களோடு உறவாட விட்டிருக்கிறார் தமயந்தி. புரட்சி, போராட்டம், அரசியல், ஐனநாயகம், உரிமை என ஒரு புறமும், கலை, அழகு, கவிதை, அறிவியல் இலக்கியம் என இன்னொரு புறமுமாய் அல்லலாடி சிதைந்து - இழப்பு, சோகம், நிச்சயமின்மை, கழிவிரக்கம், பச்சாதாபம், பிரிவாற்றாமை எனத் தோய்ந்து சோர்ந்த போதிலெல்லாம் ”உயிரா போய்விட்டது” என மீண்டு, ”காணுமிடமெல்லாம் நம் வசமே” என நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறார். நானும் நான் சார்ந்ததுமே சமூகம், என் படுக்கை விரிப்பில் இருந்து தொடங்கி மீண்டும் கண்ணயர முனையும் வரையான காட்சிகளே எனது சூழல் என - நேற்றையவை எல்லாம் நெஞ்சில் ஏறி பரிகசிக்க, நாளை நடுத்தெருவுக்கான வாழ்வாய் அச்சுறுத்த - கணமும் கணத்தில் விளையும் கணமுமே வாழ்வின் நிஐம் என களிப்புறும் கலைஞன்.

எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய சாவைப் பற்றிய பயம் - வாழ்வைப்பற்றிய பயம், இவை இரண்டையுமே துணிச்சலுடன் விரட்டிச் செல்வது அல்லது புறக்கணித்துச் செல்வது இவனது விளையாட்டு. அதுவே அவனது கலை - வாழ்வு எல்லாம். அயலவர் ஆயுதம் வந்தபோது தலை குனிந்து, உடன் இருந்தவர் கை ஓங்கியபோது அழுது புலம்பிய ஒரு காலத்தின் மடியில் - புரட்சியாளனாய், போராளியாய் தன் முஷ்டிகளை உயர்த்திக் கொண்டபோது - முதுகெலும்பும் உடைக்கப்பட்ட பிராணியாய் பல பொட்டுகள் பூந்து, ஜரோப்பிய  பற்றைக்குள் பதுங்கி, மொழியும் கழன்று ஊமையாகிப்போன தெருக்களின் ஓர் அகதிப் பாடகனின் மொழியும் இதுதான் - வாழ்வும் இதுதான் போலும்.

இந்தப் பின்னணியில்தான் தமயந்தியின் புகைப்படங்களை நேசிக்க முடிகிறது. கலைஞன்-காட்சி, படைப்பு-படைப்பாளி, இவ்வகையான பிரிப்புகளோடு இவர் புகைப்படங்களைப் பார்க்க முடிவதில்லை. அனைத்திலும் ஓர் பங்காளியாகவே இவர் கலந்து விடுவதைக் காணமுடிகிறது. சாதாரணமாகப் பார்க்கிறபோது அழகியல் சார்ந்த நேர்த்தியாக சிறைப்படுத்தப்பட்ட காட்சியாக தோன்றுகின்ற ஒவ்வொரு புகைப்படத்துக்குள்ளும், உணர்ச்சி பூர்வமான கனத்த உள்ளீடு ஒன்று ஊசலாடி நர்த்தனம் கொள்வதை அடுத்தவர் அனுபவக் கூட்டுக்குள் நுழையத் தெரிந்தவர்கள் இலகுவாக கண்டு கொள்வர். கலை அழகைத் தேடுகிறது. உண்மையைத் தேடுகிறது. அர்த்தத்தைத் தேடுகிறது. அனுபவத்தைத் தேடுகிறது.  ஒரே காட்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வலைகளை எழுப்பி விடலாம். அது அவரவர் அகநிலை சார்ந்த அனுபவங்களையும், அக்கணத்து மன உணர்வையும் பொறுத்த விடயம். தமயந்தியின் வார்த்தைகளற்ற உலகின் - கமரா கவிதையின் இசையை நுகரும்போது, பல சமயங்களில் நெஞ்சின் அலைகள் மேலெழுந்து, அனல் புயல் கக்க, கண்கள் வெடித்து ஊற்றெடுக்க புன்னகைக்கிறேன்.

இந்த உலகுக்கும் எனக்கும் இடையேயான உறவு உக்கிரம் கொண்டு உருவேற, ஓர் உணர்வுப் பிரவாகத்துள் தோய்கிறேன். அது பச்சாதாபமா, பரிகாசமா தெரியாது. ஒன்று மட்டும் நிதர்சனமாய்த் தெரிகிறது. காணுமிடமெல்லாம் நம் வசமே எனக் கொண்ட போதிலும், எதுவும் எமதில்லை எனக் கொண்ட இவ்வுலகின் அகதி. தமயந்தியின் படங்களினு¡டாக வரும் பனிக்காற்றின் சிறகாய் இருந்தாலென்ன - உறை நதியின் அலையாய் இருந்தாலென்ன - மலைகளின் முலைகளாய் இருந்தாலென்ன - மரங்களின் ஓகஸ்ராவாய் இருந்தாலென்ன-  அனைத்தின் அடியிலும் ஓலமிட்டு என் முகத்திலறைவது அகதி! அகதி!! அகதி!!! தமயந்தியின் புகைப்படங்கள் என் இதயக் கபாலங்களில் இப்படித்தான் சாளரங்களைத் திறக்கின்றன. காமரா - தானும் தான் காணும் காட்சிகளுக்குமிடையே தன்னையும் காட்சியையும் சேதப்படுத்தாமல் இரகசிய மெளனம் காத்து செயற்படுகிறது. தனது அகப்புற அனுபவ உணர்ச்சிகளில் தானியங்கி, காட்சிகளின் உயிரை மட்டுமே மெல்லக் கொய்து நம் தரிசனத்துக்கு வைத்துவிடுகிறது. அவரது கலை ஆளுமையின் அழகியல் நரம்புகள், அவர் ஏற்ற வடுக்களின் ரணங்களையும் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன.

வாழ்க்கை வழங்கும் அனுபவம்,  அனுபவம் வழங்கும் வாழ்க்கை - இவை புணரப் பிறந்த வாழ்வின் சாரமே இவர் புகைப்படங்கள். மனிதர்கள் அற்ற அவரின் பெரும்பாலான படங்கள் மனிதவாழ்வின் அவலத்தையும் ஆனந்தத்தையும் பேசுகின்றன. அதே சமயம் காலம் காலமாய் கட்டி வாழ்ந்த இந்த மக்கள் என்னோடு இயற்கையாய் இல்லை என்பதையும், ”நான் தனித்தே இருக்கிறேன்” என்பதை கூட்டுக்குரலாய் வெளிப்படுத்துகின்றன.

- சூரியனைக் கண்டும் நிமிர்ந்தபடி புன்னகைக்கும் பனி உறை மலைகள்

- உள்ளங்கை வெப்பத்தில்  உருகக்கூடிய மென்மையாகினும், சங்கிலியே (சிறை விலங்கு) ஆயினும் கெட்டியாக பற்றிக்கொண்ட பனி.

- உலரப் போய் கொடியில் தூக்கு மாட்டிக்கொண்டு உறைந்துபோன ஆடைகள்

- எத்துணை நம்பிக்கையுடன் நீண்டு பயணித்து பூத்த பூவின் தண்டில் தொடர முடியாது உதிரப்போகும் இறுதி இலையில் தரித்திருக்கும் நத்தை.

- முக்கி எழுந்து, மொட்டுடைத்து பூத்துமாகிவிட்டது. சிலந்தி தன் சிறையை விரித்த போதும் சூரியன் தொடர்ந்தும் விடிவிற்காய் தன் படையணிகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறான்.

- “கொன்சென்றேசன் காம்ப்“ இல் போடப்பட்டனவாய் எல்லாம் பனியின் ஆகிருதியில் அடங்கி மெளனித்துக் கிடக்கிறது. ஆயினும் வாழ்வுக்கு வேண்டி ஒற்றை வள்ளம் கடல் வயலுள் நுழைகிறது.

- பாழடைந்த வீட்டின் உக்கிய கதவாயினும் ஒரு வாசலேனும் திறந்திருக்கிறது. போதும்.

- ஆடுகளை கூட்டுக்குள் விட்டுத் தீனி போடும் கைகள். கூட்டுக்குள் இருந்து வாங்கி உண்பதில் அவர்கள் ஆனந்தம். நாளை உணவுக்கும் அவை உயிரைக் கொடுக்கும். பீரங்கியோடு, நோர்வே தேசியக்கொடி அருகே ஒரு கறுப்பு நாய் காவல் காக்கிறது....? இப்படி இவர் புகைப்படங்களை உள்வாங்கும்போது நமது சமூக, பண்பாட்டு, போராட்ட வடுக்களின் விமர்சன முகங்கள் நமக்கு தோற்றம் தருகின்றன. இழந்ததை ஈடுகட்டும் வகையில் ஒழுங்கு செய்யப்படாத ஒரு மூலசக்தி இப் புகைப்படங்களின் பின்னே மறைந்து செல்வதை உணரமுடியும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R