வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

- எம்.ரிஷான் ஷெரீப் -

அக்டோபர் 2013 கவிதைகள்!

மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்

நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை

உனது கண் பூச்சி
செவி நத்தை
கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன

திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது

தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை
ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென
தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்
கதை பகர்கிறாள் மூதாட்டி
வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர்
அடையாளம் தந்திருக்கும் மரத்தை
வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென
மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை
சமையலறை ஜன்னல் காற்று
உன்னிடம் சேர்க்கிறது

மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் - பிறகும்
கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்


 எஸ்.பாயிஸாஅலி கவிதைகள்!

1. கருமை

அக்டோபர் 2013 கவிதைகள்!

அகல மேசையின்நடுவிலே
பின்புறம் சிவப்புரசம் பூசப்பட்ட வட்டவட்டக்
குழிவாடிகளும்
மெல்லிய குண்டூசிகளுமாய் தொடங்கிற்று
ஒளியியல் தொடர்பான அச்செயற்பாடு.

குற்றுவதும் பிடுங்குவதும்
இடமாற்றி மாற்றி ஆடிகளை நடுவதுமாய்
நட்சத்திரங்களுக்குள் நானுமொன்றாய்..........
பஞ்சுமேகங்களுக்குள் விரைகிற இன்னுமொரு துண்டுமேகமாய்
மாறிப்போகும் பொழுது அது.

ஆடியில் தற்செயலாய் ஒட்டிப்பிரிந்த பெருவிரலின்
பெருப்பிக்கப்பட்டநகவிடுக்கினில்
அப்பிக் கிடந்தஅழுக்கின் கருமை
விழிகளை சட்டென உலுக்கிட
தொப்பென வீழ்கையில்.......
நடுக்கங்களோடுதான் ஞாபகங்கொள்கிறேன்
அவசரஅவசரமாய் சமைக்கக்கழுவிய கறிச்சட்டியை.......
இது வானமல்ல என்பதை.....கூடவே.... நான் யாரென்பதை.

2. பட்டுப்போன்ற சொற்கள்

மரத்துப்போன விழிகளுக்குள் உயிரூற்றினாய்.
இறுகிய செவித்துளைகளை
பட்டுப்போன்ற சொற்களால் துடைத்து விட்டாய்.
தூக்கம் தொலைந்த பொழுதொன்றில்
உன் தோள்களையே
குளிர்ந்த இலைகள் செறிந்த கிளையாக்கினாய்.
இருண்ட காற்றுப் புகாத சிறுஅறைக்குள்
உன் அன்பின் வரிகள்
காற்றாய் கதிராய் பரவிற்று.
இன்னும்,
மண்ணுக்குள் வேரென இறுகித் தொலைந்த
பாதங்களைப் பூஞ்சிறகுகளாய் மாற்றினாய்.
அன்பின் மிகையோடு
அச்சிறு கூழாங்கல்
ஒரு பறவையாகி சிறகசைக்கத் தொடங்குகையில்
அது முட்டிமோதிச் சிதையட்டுமென்றா
கரடுமுரடான சுவரொன்றினை வானளவுக்குமாய்
எழுப்பிவிட முனைகிறாய்,

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


புரிதல்..

- வதிரி.சி.ரவீந்திரன் -

அக்டோபர் 2013 கவிதைகள்!

புரியாத உன் எழுத்து
எனக்கு புரியாமலே இருக்கிறது.
புரிதலுக்காய் ....
உன் எழுத்தோடுவீதிக்கு வந்தேன்
எவரும் புரியவில்லை என்றார்கள்
பார்த்தவர்கள் சொன்னார்கள்
'இதுபடித்தவர்களுக்குதான் புரியும்' என்றனர்.
படித்தவர்களிடம் கேட்டேன்
'தமக்கும் புரியவில்லை' என்றனர்.
எழுதியவனிடம் போனேன்
அவனோ
'எனக்கும் இப்போ புரியவில்லை' என்றான்.
எப்படி எழுதினாய் என்றேன்
எனக்குள் உள்ளதை ஏதோ எழுதினேன்
இதுவும் எழுத்தென்றான்.
 
எழுந்துவெளியே வந்தேன்
மந்தைக்கூட்டம் .......
மேட்டுப்பக்கமாய் போய்க்கொண்டிருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


சிற்பம் சிதைக்கும் உளி

- பிச்சினிக்காடு இளங்கோ -

அக்டோபர் 2013 கவிதைகள்!

அன்று.
இரங்கற்பா படித்து
இதயத்தைப்பிழிந்து
கண்ணீர் கசியவைத்தேன்

வாழ்த்த அழைத்தபோதும்
வளமானச்சொற்களால் வாழ்த்தி
வாழ்த்திடப்பெற்றேன்

கலந்துரையாடும்போதும்
கரைந்துரையாடி
கவனிக்கப்பெற்றேன்

முடிந்ததைச்செய்யும்போதும்
முழுமையாய்ச்செய்தேன்
என
முன்னுரை கிடைக்கப்பெற்றேன்
       
ஆசையே இல்லா
புத்தரைப்போல பேசி
அனைவராலும் கவரப்பெற்றேன்

பெண்களோடும் அப்படித்தான்
பெருமைப்பட நடந்துகொண்டேன்
பெருமைப்பட நடத்தப்பெற்றேன்

எல்லா இடத்திலும்
எனக்குப்பேர் என்றாலும்
எல்லார் இதயத்திலும்
என்பேர் நின்றாலும்
குரங்கு மனசுமட்டும்
குறைபடவைக்கிறது என்னை

(09.09.2013 அன்று விநாயகசதூர்த்தி. எழுத்தாளர் எம் சேகரின் கதையை முடித்து எழுதிய கவிதை. பேருந்து 67இல் எழுதியது. பிற்பகல்

3-30 க்கும் 4-30க்கும் இடையில் நிகழ்ந்தது. 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


என் தாயுமானவனே!

- மட்டுவில் ஞானக்குமாரன். -

அக்டோபர் 2013 கவிதைகள்!

என் தாயுமானவனை
தீயே நீ தின்பாயோ …
இந்த மனிதக் கல்லை
ஞானச் சிலையாக்கியவனை
யார வந்து கூட்டிப்போனது …
சிவன் வேசத்தில் எமன் வந்திருந்தால்
கட்டாயம் போயிருப்பார அவன் பின்னால்…
பத்து தலை முறைக்கு நான் பயிற்சி எடுத்தாலும் கூட
அப்பாவைப் போல ஒருமுறை நடித்தும்
காட்டமுடியாது.
என் நெத்தியில் ஒருவன் கீறிவிட்டான்
என்பதற்காக சித்தம் கலங்கியவன் மேலேயா
தீவைக்கச் சொல்வது
மூத்தவனாய் பிறந்ததற்காக
முதன் முதலாக கவலை கொண்டேன்
உலகப்பிரளயத்தின் மறு நாள்
நான் மட்டும் தனித்திருக்கும் ஒருவன் போல
வெறுமை வெறுமை வெறுமை
அவர நடந்த தெருக்கள்
ஏறிய கோவில்படிகள்
வீதியிலே போகும் வயோதிபர
என எதிலும் தேடிப்பாரக்கிறேன்
காணலியே அவரை
இரங்கல் கவிதையை
எழுதும் கரங்களை
கண்ணீர வந்து
கழுவிச் செல்கிறது.
என்னோடு வாழ்ந்த வரலாற்றை
ஒற்றை வரியிலே
எப்படி எழுதுவது
வெளிநாடு போன மகன்
வெறுங்கையோடு வந்து கதியற்று
நிற்கையிலே
ஆறுதல் சொல்லி சோறு
தந்தவனுக்கு
தீயையா தின்னக்கொடுப்பது
வித்தைகாட்டும் விஞ்ஞானிகளே
என் அப்பாவை கொஞ்சூண்டு
எழுப்பி விடுவீங்களா
ஈரமென்றால் என் தலை துவட்டும்
கைகள்
வெயிலெனில் எனக்கு குடை எடுத்து
ஓடிவரும் கால்கள்
அசைவற்றுக்கிடக்குது.
பட்டினத்தாரைக் கூட்டிவா
அவன் தாயின் இழப்பை தாங்கிய விதமறிய
பரிமேலழகரை வரச்சொல்லி தூதனப்பு
உயிரால் நானெழுதிய கவிதைக்கு
உரைநடை எழுதிவிட
காலமே ஞாலமே அண்டப் பெருவெளியிலே
நிறைந்து போனவனை
கண்டு வந்து சொல்வாயா
ஒத்தயிலே நிற்க்கும் இந்தப்பித்தனுக்கு
ஒருதரம்….

(01.09.2013 இல் மறைந்த என் என் தந்தை ஐ.சோமசுந்தரம் நினைவாக) மட்டுவில் ஞானக்குமாரன்.தந்தை ஐ.சோமசுந்தரம் நினைவாக)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (இலங்கை) கவிதைகள்!

1. ஏனம்மா ?

அக்டோபர் 2013 கவிதைகள்!

இயற்கை அழகு உனக் கிருந்தால்
செயற்கை  'மேக்கப்' ஏனம்மா ?
மானின் விழிகள் உனக் கிருந்தால்
'மை 'யைப் பூசல் ஏனம்மா ?

இயற்கை கூந்தல் அழகிருக்கு
'டிஸ்கோ' வெட்டு ஏனம்மா ?
அன்ன நடையின் அழ கிருந்தால்
அடியுயர்  பாதணிகள் ஏனம்மா ?

பவளச் சொண்டு உனக்கிருந்தால்
பளிச்சிடும் சாயம்  ஏனம்மா ?
அதிசய வாசனை உனக்கிருந்தால்
அத்தர் வாசனை ஏனம்மா ?

2. விளையாட்டுக் கலை வளர்ப்போம்..!

உடலோடு உளத்திற்கும் வலு வளித்து
உறவாடி ஒற்றுமையை வளர வைத்து
திடமான சமுதாயம் வளர்வதற்கு ,
தேவை நல் விளையாட்டுக் கலைகள் என்றும்

சோம்பலோடு சோர்வுதனை மறந்து வாழ
சுறு சுறுப்பால் உடலுளத்தில் நிறைவு தோன்ற
'நாம் 'என்ற நிலை வளர்ந்து நலம்  விளைக்க
நாட்டினிலே விளையாட்டுக் கலை வளர்ப்போம்..!

செகமெங்கும்  சென்று விளையாடி நிற்போம்
சிரித்த முகத்தோடு கை கோர்த்து வைப்போம்
நகத்தோடு தசை போல நல்லுறவை
நாம் செல்லுமிட  மெங்கும் நாட்டி  வைப்போம்
 
வெற்றிக்கு  முதற் படியே தோல்வி என்று
விளையாட்டில்  சளைக்காது  முயன்று வெல்வோம்
கற்றிடுவோம் 'கிறிக்கற்றை' 'காற்பந்தோடு 
கரப்பந்து  வலைப்பந்து  பூப்பந்தெல்லாம்

நற்புறவு  சோதரத்துவம் நல்லிணைப்பு
நல்லபடி  அகிலத்தில் வளர்வதற்கும்
கட்டுப்பா டொழுங்கனைத்தும் நிலைப்பதற்கும்
கனிவோடு  விளையாட்டுக் கலை வளர்ப்போம்..!

3. துணைவன் வேண்டும்..

சீதனம் எதுவுமில்லை
சீர்மைக்கு  பஞ்சமில்லை
ஆதனம் அதுவும் மில்லை
அழகினில் குறைச் சலில்லை
பேதையென்வாழ்வில் ஒன்றாய்
பிணைந்திட வரனும் இல்லை !

கல்வியும் கற்றேன் - நல்ல
கனிவினை உளத்தில் பெற்றேன்
சொல்லினில் தெளிவு கொண்டேன்
சுயநலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் என்னை
நாடியே வரவும் இல்லை

குடிசை தான் வாழ்க்கை - ஆனால்
கோபுரம் என்றன் உள்ளம்
நடிகையாய் வாழ்வில் மாறும்
நரித்தனம் எதுவும் இல்லை
அடிமையாய் என்னை அன்பால்
ஆண்டிட ஆளன் வேண்டும்

அந்நிய நாட்டுக் கென்னை
அனுப்பியே உழைக்கத் தூண்டி
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை - ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமை சேர் துணைவன் வேண்டும்.....!

4. என் வீட்டும் பூனை

ஒரு பூனை
அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டு
கதறித் துடிப்பதாக
கனவு கண்டு
நித்திரையினை தொலைத்தேன்
நிம்மைதியினை  இழந்தேன் ...!

காக்கா கோழிகளின்
சங்கீத ராகம்
என் காதுகளை குடையவே
முற்றத்துப் பக்கம் பாதங்கள்

கோலம் வரைந்தன ..!
கண்ககள் நிஜங்களை
தேடி அழைந்தன ...1

என் இராக் கனவுகள் -
என்னை
ஏமாற்ற வில்லை
துரோகமிழைக்கவுமில்லை .!
சில முக நூல் உறவுகளைப் போல்

மன சந்தோஷத்தால் ...!
என் -
இதய மலர் சிரித்து கொட்டியது
அழகான குட்டிகளின்
பிறப்பினைக் கண்டு ...,
வருகையைக்  கண்டு ....!

நீண்ட தொல்லைகளுக்குப்
பின் இன்று தான்
என் சுவாச  மூச்சுக்கு
மன நிம்மதி கிடைத்தது

இரவு நேர இருளில்
அந்த உடுப்பு பெட்டிக்குள் 
எலிகளின் அட்டகாசமா ....?
அல்லது
விளையாட்டு பொம்மைககளின் ?
குரலோசைகளா ..?.
அல்லது
உணர்வுகளின் சப்தங்களா ....?

உன் சுவாசம் பட்ட
வீட்டு சந்து பொந்துகளில்
மூலை முடுக்குக்குகளில்
சூரியனைக் கண்ட பனி போல
மாறத் தொடங்கியுள்ளன

உடம்பினைப் போர்த்திய
துண்டினைப் பார்த்து
உன் இதயம் -
அழுது வடித்தேன் ..?

அதனால்  தான் போலும்
உன் உள்ளத்துக் கதவுகளை 
அடிக்கடி மூடி
திறந்து எனக்குள் ,
உண்ணாவிரதம்செய்தனவோ ..?
ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

என் ஜீவன் -
எலி ,பல்லி ,கரப்பத்தான் .....,
நுலும்பு கொசு ,எறும்பு
எதுவுமே அற்ற
படுக்கையில் மன நிம்மதி நாடி
உறங்க அழைந்தேன்

உன் குட்டிகளை கண்ட        
சின்ன எலிகலெல்லாம்
உன்னைப் போலவே
மரம் விட்டு மரம் தாவும்
மந்திகளைப் போலவே
இடம்மாறி தடம் மாறிப் போயின
நிலை மாறி ..!

சில கனவுகள் பலிக்கும்
நினைவுகள் நிறைவேறும்
என்ற நம்பிக்கைகள்
எனக்குள் வாழ்கின்றன
என் எதிர்  பார்ப்புகளின்  இலட்சசியங்களில்
ஆரம்பமாகும்
திசைகாட்டும் கப்பலைப் போல் ..!
என் வீட்டும் பூனைகளும் ...!


5. வாழும் வாழ்வில் ஒற்றுமை என்று?

என்றும்  மனதில் வஞ்சக மில்லா.
இனிய நட்புறவு நாம்
தொன்று தொட்டு இவ்வுலகில்
மகிழ்ந்து வாழும் உறவுகள் நாம்

தூய வெள்ளை மனத்  தோடு
பாசநெஞ்சு  கொண்ட நாம்
போட்டி  பொறாமை சாதி பேதங்களுக்கு
வருத்தாது அஞ்சி வாழ்கிறோம் ...

எங்கள் அன்பை பொறாமை கூ ட்டம்
எந்தநாளும்  விரட்டிப் பார்க்கிறது
பெருகும் இந்தஅன்புத் துளியில
புகுந்து எம்மை நனைக்கிறது

பாசத்தைக்  காட்டி  வேசத்தை கூட்டி
உள்ளத்தை வேதனை யாக்குது
உறவில் எம்மை பகையாக்கி
சிரித்து  மனம் குளிர்கிறது

மகிழும் போது துயரம் தந்து
புரியா நட்பு துரத்துது
நேசிக்கும் உறவைக் கூட
நொந்து வேதனைப் பண்ணுது

அன்பு நிறைந்தஉள்ள மின்று
இதயம் நொந்து அழுகிறாள்
வாழும் வாழ்வில் ஒற்றுமை என்று ..?
வேதனை தாங்கி நிற்கிறோம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R