நூல் அறிமுகம்: “வேதாவின் கவிதைகள்!” ஒரு மதிப்பீடு!ஆழ வேரூன்றி, அகலக் கிளைகள் பரப்பி, வானோக்கி உயர்ந்து, விரிந்து விருட்சமாகி, விழுதுகள் பல இறக்கி, எங்குமாய் வியாபித்து நின்று நிழல் கொடுக்கும் இந்த ஆலமரத்தின் அடி முடி தேடுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. சிற்றெறும்பாகிய நான் என் சிறு கைகளால் முழம் போடுகின்றேன். குருவி தலையில் பனங்காய் சுமக்க முயல்வதைப் போன்றது எனது முயற்சி. சொல்லோடு பொருளெடுத்து, சுவையோடு தமிழ் எடுத்து, நில்லாது ஓடுகின்ற நினைவுகளை நெஞ்சேற்றி, நற்சுவையும் நற்பொருளும் நயமோடு எடுத்துரைக்கும் நல்ல பல கவிதைகளை நாம் காணமுடிகிறது! இந்த விருட்சத்தை நாம் வியந்து நோக்குமுன்னர்.. இதன் ரிஷி மூலத்தை நாம் கண்டறியவேண்டும்! தமிழும், சைவமும், சமூக சேவையும் நிறைந்தது இவரது குடும்பம். இவரின் தந்தையார் திரு.முருகேசு சுவாமிநாதன் அவர்கள் மலேசியாவிலும்  இலங்கையிலும் பல கல்லூரிகளை நிறுவியும், கடமையாற்றியும் வந்துள்ளார். இவை எல்லாம் இன்று பிரசித்தி பெற்ற கல்லூரிகளாக யாழில் திகழ்கின்றன. இத்தகைய பின்னணிகளோடு களத்தில் நிற்கும் வேதா இலங்காதிலகம் அவர்கள் அரிய பல படைப்புக்களை தந்து கொண்டிருக்கின்றார் என்பதில் வியப்பேதுமில்லை!   

தாய்ப் பாலோடு பாசத்தை மட்டுமல்ல வீரத்தையும் விளையவைக்கும் ஒரு வீரத்தாலாட்டு கேட்கிறதே!

“ஆராரோ தாலாட்டு அன்னையின் தாலாட்டு
அறிதுயில் போன்றது அன்னையின் தாலாட்டு

ஆசைத் தாலாட்டு பிள்ளைக்கு சீராட்டு
மங்காத வீரம் முளைவிடும் தாலாட்டு

தங்கத் தமிழனின் தொன்மைத் தாலாட்டு
துஞ்சிடும் விழி தூங்கிட தாலாட்டு!”

பக்குவமாய் வளர்த்தெடுத்த ஒரு விண்ணின் நிலவை விடியும் வேளையில்   திருமணப்பந்தலிலே மிக அழகாக அமர வைக்கிறார்!

“பஞ்சில் பொதித்து பக்குவமாய் வளர்த்து
மிஞ்சும் அறிவு சிறக்க வைத்து
கொஞ்சும் சிரிப்பு குலுங்க காத்து
விண்ணின் நிலவாய் மின்ன வைத்து
கண்ணின் இமையாய் கருத்துடன் காத்து
பெண்ணிற்கு விடியலென்று திருமணம்”
  
மிக அற்புதமான கவிதை ஒன்று! மகரந்தம் தேடும் வண்டினங்கள் தேன் அருந்தியதும் திசை மாறிப் போகின்றனவே! என வண்டைத் திட்டுவது போல் ஆண் வர்க்கத்தையே ஜாடை காட்டி சாடுகிறார் மிக அற்புதமாக! 

“பூவிதழ் விரித்து
பூந்தாது மகரந்தம் ஏந்தி
பழகும் வண்டின் வரவிற்காய்
மகிழ்ந்து ஏங்கி
தேன் பரிமாறியதும்
மலர் நன்றியை பெறுவதில்லையே!
வண்டின் நன்றி நவிலா நழுவல்
ஆணாதிக்கமோ?”

பெண்ணடிமை பற்றி ஒரு கவிதை! பெண் விடுதலை பற்றி மிக நேர்மையாக பேசுகிறார்!

“பெண் பயம் விடுத்தாலும்
பெண் நேர்மை பேசினாலும்
பெண் கேள்வி கேட்டாலும்
ஏன் பொங்குகிறது ஆணினம்?”

கவிதை பற்றி ஒரு கவிதை.... வண்ண ஆரம்! சொல்லோவியம்!! சுகராகம்!! மிக அற்புதமான சொல்லாட்சி!

“ஏற்றதை இணைத்து எளிய சாரமாய்
வார்த்தையால் வளைக்கும் வண்ண ஆரம்
உள்ளுணர்வுச் சொல்லோவியம்
உயிரின் சுகராகம் கவிதை”

தன்னை வளர்த்தெடுத்த ஒரு தமிழ் வானொலிக்கு காணிக்கை செய்கின்றார்

“கடல் அலை கால்கள் தழுவிட இன்பம்
மடல் விழி குளுமையில் மலர்ந்திட இன்பம்
தமிழ் அலை மனதை தழுவிட இன்பம்
அமிழ்ந்து இனி உலகை மறந்திட எண்ணம்!”
    
இவ்வாறாக இவரது கவிதைகளில், ஆன்மீகம், அரசியல், சமூகம், பெண்விடுதலை, காதல், வீரம், ஆகிய எல்லா துறைகளையும் மிகவும் அழகாகவும் கவிதை நயத்தோடும் பதிவு செய்திருக்கின்றார்! இந்த கவிதை நூல் “நூலகம்” என்னும் தளத்தில் பதிவேற்றம் செய்யபட்டிருகின்றது என்பதிலிருந்து இதன் சிறப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது. “கவிதை” என்ற தளத்திலிருந்து மேலும் விரிவாகி, பயணக் கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள், வானொலி நிகழ்ச்சிகள் என்று இவர் தன்னை  வளர்த்து கொள்ளுகிறார். இணையத்தில் இவரது படைப்புகளை பார்க்கும்போது ஆச்சரியம் மேலிடுகிறது! தமிழன்னைக்கு இவர் சூட்டியிருக்கும் அணிகலன்கள் யாவும் மிகவும் அற்புதமானவை! இன்னும் பல படைப்புக்களை இவர் தருவார், தரவேண்டுமென வேண்டி நிற்கிறேன்! வாழ்க தமிழ்! வளரட்டும் இவர் தமிழ்த் தொண்டு!
  
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R