செல்வி கார்த்திகா மாகேந்திரனின் புத்தக அறிமுக இசைச் சமர்ப்பணவிழா22/10/26 சனிக்கிழமை அன்று செல்வி. கார்த்திகா மகேந்திரனின் புத்தக அறிமுக, இசைச் சமர்ப்பண விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விழாவே வித்தியாசமான முறையில் எம் சமுதாயத்திற்கு நல்லதோர் பாடம் கற்றுக் கொடுக்கும் முறையில் அமைந்திருந்ததைக் காண்டு வியந்தேன். விழாக்கள் என்றாலே ஆடம்பர மோகம் தாண்டாவமாடுகின்ற இக் காலகட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் தரமான நிகழ்வுகளை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். அவரவர் புகழை பறைசாற்றவே அனேகமானோர் இப்படியான விழாக்களை நடாத்துவது வழக்கம் ஆனால் இவ்விழாவோ இளைய தலைமுறையினரிடம் இலைமறை காயாக மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் தேனுண்ட வண்டுகளாக மயங்கி மகிழ்வுற்றதையும் காணக்கூடியதாக இருந்தது. கார்த்திகாவின் இனிமையான குரலில் நானும் என்னை மறந்து இசையோடு சங்கமித்துவிட்டேன். இந்த நேரத்தில் கார்த்திகாவின் ஆசிரியை இசைக்கலைமணி, கலாவித்தகர் திருமதி. சேய்மணி. சிறிதரன் அவர்களின் அளப்பரிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும் பல்லாயிரம் இசைவல்லுனர்களை உருவாக்குவார் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு. நிகழ்வின் போது கார்த்திகாவிற்கும் ஆசிரியருக்கும் இடையில் இருந்த புன்னகையின் ஊடான தொடர்பு இரசிக்கக்கூடியதாக இருந்தது.

14 வயதிலேயே நூல் எழுதும் வல்லமை கொண்ட கார்த்திகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.  தொடரட்டும் உங்கள் கலைப்பயணம். இந் நிகழ்வில் மிகப் பிரமாதமாக இசைக் கருவிகளை வாசித்தவர்கள், அழகாக நடனமாடிய சிறுவர்கள், அனுபவம்மிக்க சிறந்த அறிவிப்பாளார், உரையாற்றியவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். முக்கியமாக திரு.மகேந்திரன் குடும்பத்தினர் சபையோரை மிகவும் அன்பாகவும் பண்பாகவும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகாட்டும் .

திறமைசாலிகளிடம் இருக்கக்கூடிய பொதுவான பலவீனம் செருக்கு அல்லது தற்பெருமை. இந்நிகழ்வில் மாத்திரமே அது காணப்படவில்லை. மொத்தத்தில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இன ஒற்றுமை எல்லாவற்றின் வெளிபாடாகக்கூட இவ்விழா இருந்தது என்றால் மிகையாகாது.  பூரணத்துமான ஓர் விழாவை மன நிறைவுடன்  கண்டுகளித்தேன்.

செல்வி கார்த்திகா மாகேந்திரனின் புத்தக அறிமுக இசைச் சமர்ப்பணவிழா