நிகழ்வுகள்: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்! - மூதூரில் கவனயீர்ப்புப்போராட்டம்.காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கால இழுத்தடிப்புகள் இன்றி ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மூதூர் பிரதேச செயலகம் முன்பாக நாளை (11.04.2016) காலை 10.00 மணிக்கு கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.  

மூதூர் பிரதேச பிரஜைகள் குழுவின் தலைவரும், மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தலைவருமாகிய சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கவனவீர்ப்புப் போராட்டத்தில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவினர்களும், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - (FSHKFDR - Tamil Homeland) தலைவி திருமதி ஜெ.நாகேந்திரன் (ஆஷா) தெரிவித்தார்.

கவனவீர்ப்புப்போராட்டத்தை தொடர்ந்து கூடிய விரைவில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சமுகமளிப்புடனும் - மூதூர் பிரதேச பிரஜைகள் குழுவின் பங்களிப்புடனும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் திருகோணமலை மாவட்ட சங்கத்துக்கு (FSHKFDR - Trincomalee District) புதிய நிர்வாகக்குழு தெரிவுகள் இடம்பெற்று மீளக்கட்டமைக்கப்படவுள்ளதாகவும் திருமதி ஜெ.நாகேந்திரன் (ஆஷா) தெரிவித்தார்.

குறித்த மீள்தகவமைவுக்கலந்துரையாடலின் அவசியம் தொடர்பாக, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் (FSHKFDR - Tamil Homeland) தலைமை ஒருங்கிணைப்பாளருமாகிய கோ.ராஜ்குமார் (ராஜா) அவர்களும், மூதூர் பிரதேச பிரஜைகள் குழுவின் தலைவரும், மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தலைவருமாகிய சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்களும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.

தொடர்புகளுக்கு:
சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் 0094 77 371 4020
திருமதி ஜெ.நாகேந்திரன் (ஆஷா) 0094 77 740 5302

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.