நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.  எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neghbourhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள கலை - இலக்கிய நிகழ்வுகள் - மற்றும் இதர மாநில நகரங்களில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைக்கலந்துரையாடல் நடைபெறும்.

இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் வெளியான இரண்டு புதிய நாவல்கள் மற்றும் இரண்டு புதிய சிறுகதைத்தொகுதிகள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் இடம்பெறும். வாசிப்பு அனுபவப்பகிர்வில் இடம்பெறும் நூல்கள்

1. பொக்ஸ் -- Box ( நாவல்) ஷோபா சக்தி
2. நிலவு குளிர்ச்சியாக இல்லை - (சிறுகதைத்தொகுதி ) - வடகோவை
வரதராஜன்
3. ஆயுதஎழுத்து -- ( நாவல்)  - சாத்திரி
4. கோமகனின் தனிக்கதை -- ( சிறுகதைத்தொகுதி ) கோமகன்

கருத்துரை -- போருக்குப்பின்பான ஈழத்து இலக்கியவளர்ச்சி -  திரு. சி. வன்னியகுலம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.