செப்டம்பர் கவிதைகள் -1

நண்பர்கள்

மெய்யன் நடராஜ் டோஹா கட்டார்.

பள்ளிக்கூட வாழ்வில்
பத்தாம் வகுப்பை
கடந்தாலும்
பால்ய நட்பை
எப்போதும் மறவா
பசுமையான முதல் நண்பர்கள்

உசுப்பேத்தி உசுப்பேத்தி
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு தடவையும்
சிக்கலில் மாட்டவிட்டு
கழுவுற மீனில்
நழுவுற மீனாய்
சிக்கலில்லாமல்
விலக்கிக்கொண்டாலும்
விளககமுடியாத சில
நண்பர்கள் ,,,!

தோள்மீது கைபோட்டு
துண்டு பீடியில்
பங்குகேட்டு
மாசக் கடைசியில்
கடன்கேட்டு
திருப்பித் தராமல்
அலையவிட்டும்
காலைசுற்றும் பூனைபோல்
கடைசிவரை கூடவரும்
சில நண்பர்கள்....! 

கை ஒடிந்த நிலையினிலும்
கைகொடுக்க நினைக்கின்ற
கைபிடிப்போல்
ஒருசில நண்பர்கள்

தேவைகளுக்காக தேடிவந்து
தீர்ந்துவிட்டால் ஓடிவிடும்
திறமைசாளியாய்
சில நண்பர்கள்..!

கல்யாணம் ஆகிவிட்டால்
நட்பை 
கை கழுவிவிடும்
கை தேர்ந்தவர்களாயும்
சில நண்பர்கள்

கால போக்கில்
நண்பனாய் இருந்த
ஞாபகம் கூட இல்லா
பல நண்பர்கள்....!

இப்படி 
எத்தனை வடிவில்
எதனை எத்தனையோ
நண்பர்கள்!

எல்லோரும்
கால ஓட்டத்தில்
வாழ்க்கை சக்கரத்தின்
பாதைகள் மாறி
பிரிந்து போனாலும்
ஏதோ ஒரு கூடலில்
நட்போடுதான்
கை குலுக்கிக் கொள்கிறோம்
வாசல் படியை கடந்து
ஜன்னல் வழியே சென்றாலும்
ஸ்பரிசத்தை குறைக்காத
தென்றலைபோல !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


 

சுமைகளுடன்...

-செண்பக ஜெகதீசன்...

வாழ்க்கை வழித்தடத்தில்
வழித்தடைகள் ஏராளம்
இருக்கையில்
எதிர்பார்ப்பு பாரத்தை
ஏற்றினால் அதிகமாய்,
தடைபடாமல் பயணம்
தொடர்வதே சிரமம்
எனும்போது,
சீக்கிரம் எப்படிச் செல்வது...!

பாரத்தைக் குறைக்கச்சொல்லும்
பாடங்களின் சுமை
பெருகியபின்னும்
மாறவில்லையே மனிதன்..

சுமைகளுடனே சுற்றிவரும் அவன்
சுகம் பெறுவானா-
காலம்
காட்டட்டும் பாடம்...!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


 

முனைவென்றி நா சுரேஷ்குமார்  கவிதைகள் சில.(பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்)
       
குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் (துளிப்பாக்கள்) - 6

காக்கைகள் மறுதலித்தன
குழந்தையின் கைகளிலிருந்த
வடையைப் பார்த்தபின்பும்

அழுதது குழந்தை
ஆறுதல்சொல்லத் துடித்தான்
கடவுள்

கடையிலிருந்த பொம்மைகள்
குழந்தையைப் பார்த்துக் கத்தின
‘நீ எந்தவூர்ப் பொம்மை’ என்று...


தமிழா... (துளிப்பாக்கள்) - 2

மாணவனுக்கிருக்கும் மதிப்பு
மீனவனுக்கில்லை
தமிழ்நாட்டில்

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் பிழைக்கிறான்
தமிழக மீனவன்

பாஸ்மார்க் பெறவில்லை
டாஸ்மாக் நடத்தும்
தமிழக அரசு

கள்ளச்சாரயத்துக்குத் தடை
டாஸ்மாக்கிற்கு கடை
வாழ்க தமிழ்நாடு(?????)!!!!

ஆறறிவிருந்தும்
பயனில்லாமல்ப் போனது
தமிழனுக்கு மட்டும்

நாதியில்லாத் தமிழனுக்கு
ஆதரவளிக்கின்றன
டாஸ்மாக் கடைகள்


மண்வாசம்!

பகலவன் பார்வைபட்டதும்
பனித்துளிகூட
பணியத்தான் செய்கிறது!
ஆழ்கடல் நீரெல்லாம்
ஆவியாய்தான் போகிறது!
குளத்து நீரெல்லாம்
குன்றத்தான் செய்கிறது!
வாய்க்கால் நீரெல்லாம்
வற்றத்தான் செய்கிறது!
கண்மாய் நீரெல்லாம்
காணமல்தான் போகிறது!
இவையெல்லாம்
இமயந்தொட்ட சிகரமாய்... - பிறர்
இதயந்தொட்ட மனிதனாய்...
வான்தொட்ட முகிலாய்த்தான்
இருக்கிறது!
மேகத்தை மழையாய்
கண்ணீர் வடிக்கச்செய்வது
இயற்கையான காற்று!
மனிதனை மழையாய்
கண்ணீர் சிந்தச்செய்வது
இயற்கையான காலம்! - அதுவே
இயற்கையின் கோலம்!!

மழை

முகில்சிந்தும் கண்ணீராய்
பூமிதொட்டதும்
அகில்சிந்திய தண்ணீராய்
வீசத்தான் செய்கிறது

மண்வாசம்!

இந்த மண்வாசம்!
இதுதானே
ஒவ்வொரு உயிரின் சுவாசம்!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.